Thursday, September 21, 2017

இயேசுவுக்காக....விரைவில்


அன்பு நண்பர்களே கடந்த சில ஆண்டுகளாக தேவன் அதிகமதிகமாக புதிய பாடல்களைக் கொடுத்த போது எனக்கு ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. பல நண்பர்கள் அவைகளை ஒரு சிடி ஆக வெளியிட கேட்டு உற்சாகப்படுத்தினர். நீண்ட கால தயக்கத்திற்குப் பின் இந்த வருட துவக்கத்தில் ஒரு பாடல் சிடி வெளியிட ஜெபத்துடன் முடிவெடுத்தோம்.  இதற்கான தேவைகளுக்கு என்ன செய்வது என்று யோசித்தேன். கடன் வாங்கக் கூடாது. கர்த்தருக்குச் சித்தமானால் அவரே இதை வாய்க்கச் செய்வார் என்று தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தோம். நண்பர்கள் சிலர் இதற்கென அவர்களால் இயன்ற தொகையைக் கொடுத்து தாங்க முன் வந்தனர். எவ்வளவு செலவு ஆகும் என்று எனக்கு முழுமையாக தெரியாவிடினும், கர்த்தரை நம்பி இருந்த மூவாயிரம் ரூபாயைக் கொண்டு ஒலிப்பதிவு நிலையம் சென்றோம். இசைத் துறையில் உள்ள நண்பர்கள் சிலர் மிகவும் குறைந்த தொகையில் ஊழியமாக இசை அமைக்க முன் வந்தனர். சிலர் எதுவும் வாங்காமல் உற்சாகமாக ஈடுபட்டு, இந்த பாடல் சிடி மிகவும் தரமாக வரவேண்டும் என்று பிரயாசப்பட்டனர். என் நண்பர் ஜான் பிரகாஷ் மற்றும் கிங்ஸ்லி போன்றவர்கள் என்னை விட அதிகமாக இந்த பாடல் சிடி உருவாக்கத்தில் நேரம் செலவழித்தனர். தேவனுடைய கிருபையால் ஒலிப்பதிவு, மிக்ஸிங் எல்லாம் முடிந்து இப்போது ஒலிப்பதிவு பிரதிகள் எடுக்கப்படுவதற்காக மாஸ்டர் சிடி மும்பைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தேவனுடைய பிள்ளைகளுக்கு அனுப்ப முடியும் என்று நம்புகிறேன். இந்தப் பாடல்கள் சபைக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள்.

இப்பாடல் சிடி உருவாக்கத்தில் எனக்குதவிய நண்பர்களின் பெயர்களை எல்லாம் இங்கே எழுது இடம் போதாது. அனைவரின் உதவி, ஜெபம் மற்றும் உற்சாகப்படுத்துதல்களுக்காக தேவனை துதிக்கிறேன். ஆயினும் நான் முன்பே சொன்னது போல, இப்பாடல் சிடிக்கு நான் இதுவரை பெற்ற வரவு செலவு கணக்கை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.  அதை இப்பதிவில் இணைத்திருக்கிறேன்.  மீதம் இன்னும் ஆகவேண்டிய செலவினங்களுக்கும் கர்த்தரையே நம்பி இருக்கிறேன்.

சிடி வெளிவருமளவும் தினமும் ஒரு பதிவு எழுதவும், ஒவ்வொரு பாடல்களும் எழுதப்பட்ட சூழ்நிலையையும் விளக்க விரும்புகிறேன். தேவன் மகிமைப் படுவாராக.


Saturday, September 2, 2017

மூன்று தோட்டங்கள் ( Where are you today?)

வெளிப்படுத்தல் 22:1-14

பரிசுத்த வேதாகமத்தின் ஆரம்பத்தின் ஒரு தோட்டத்தைக் காண்கிறோம். முடிவிலும் ஒரு தோட்டத்தைக் காண்கிறோம். முதலாவது நாம் காண்பது மனிதன் இழந்துபோன பரதீசு ஆகும். கடைசியாக நாம் காண்பது மனிதன் திரும்பப் பெற்றுக் கொண்ட பரதீசு ஆகும். இந்த இரண்டு தோட்டங்களுக்கும் நடுவே, மூன்றாவதொரு தோட்டம் வருகிறது, கெத்சமனே தோட்டம். கெத்சமனே தோட்டத்தின் சொல்ல முடியாத கசப்பு மற்றும் பாழான நிலையின் மூலமாகவே நாம் ”ஜீவத் தண்ணீருள்ள சுத்தமான நதி” பாய்ந்தோடும் மகிமையான தோட்டத்தை மறுபடியும் கண்டு கொள்கிறோம். கெத்சமனே இல்லையெனில், புதிய எருசலேம் இல்லை. கெத்சமனே தோட்டத்தின் மறைவான மற்றும் புரிந்துகொள்ள முடியாத அந்த இரவு இல்லையெனில், நித்தியமான நம்பிக்கைக்கையின் ஆசீர்வாதமான அருணோதயம் இல்லை. நாம் தேவனுடைய குமாரனுடைய மரணத்தினாலே அவருடனே நாம் ஒப்புரவாக்கப்பட்டோம்.

நாம் நம் மீட்பைக் குறித்து சாதாரணமானதாகக் கருதும் அபாயத்தில் எப்பொழுதும் இருக்கிறோம். அதை அற்பமானதாகக் கருதுகிறோம். பாக்கியமானவைகள் மிக எளிதாக நமக்கு வரவேண்டிய உரிமைகளாகக் கருதப்படும் இடத்திற்கு வந்து, நமக்கு வரவேண்டியவை எனக் கருதப்பட்டு பெறப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. “கெத்சமனேயை நான் மறக்க முடியுமா?” ஆம், நான் மறக்கக் கூடும். அந்த மறதியில் நான் என் மீட்பின் பரிசுத்தமான பயபக்தியை இழந்துவிடுகிறேன். மேலும் “திரும்பப் பெற்ற பரதீசின்” உண்மையான மகிமையை நான் தவற விட்டுவிடுகிறேன். ”நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே.” இவ்வசனம் நாம் மனத்தாழ்மையுடன் இருக்கவும், “நான் யாருடையவன்,” நான் யாரைச் சேவிக்க வேண்டும் என்ற நினைவுடன் அவரைப் பற்றிய அன்பினால் நம் மனதை நிரப்பவும் உதவுகிறது.

(Taken and translated from John Henry Jowett's daily meditation"

Thursday, August 31, 2017

வாக்குத்தத்தம் - நமது சொந்தம் ( The hope for living today)


இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். (மத்தேயு 28:20).


டேவிட் லிவிங்ஸ்டன் தன் தாய் நாடான ஸ்காட்லாந்துக்கு கடினமான பதினாறு வருட மிஷனெரிப் பணி மற்றும் புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிப் பணிக்குப் பின் திரும்பின போது, அந்த ஊழிய நாட்களில் அவருடைய சரீரமானது ஏறக்குறைய 27 விதமான காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு மிகவும் இளைத்து, மெலிந்து போயிருந்தார்.  சிங்கம் ஒரு முறை அவரைத் தாக்கினபடியால், அவருடைய இடது கை பயன்படுத்த முடியாமல் வெறுமனே தொங்கிக் கொண்டிருந்தது.

கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடம் அவர் உரையாற்றும் போது, “ நான் தூர தேசத்தில் தனிமையில் மிகவும் கடினமான ஒரு வாழ்க்கை வாழந்த காலத்தில் என்னைத் தளரச் செய்யாமல் தாங்கினது என்ன என்று உங்களிடம் சொல்லட்டுமா?” அது கிறிஸ்துவின் வாக்குத்தத்தமே, “ இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.”

இந்த வாக்குத்தத்தமானது நமக்கும் சொந்தமானதே. நாம் எவ்வளவுதான் கடினமான சூழ்நிலைகளினூடாகக் கடந்துச் சென்றாலும், கிறிஸ்து நம்மை விட்டு விலகுவதில்லை. நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியிலும் அவர் நம்முடனே கூட இருக்கிறார்.  இந்த வாக்குத்தத்தத்தை இன்று உங்கள் முன் நிறுத்திக் கொள்ளுங்கள். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும்!
- பில்லி கிரகாம்

(Taken and translated from Billy Graham's "Hope for Each Day"

Wednesday, August 30, 2017

அடுத்தது என்ன?



மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் அறியத் தீர்மானி.


நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். யோவான் 13:17

உன்னுடைய நங்கூரத்தை நீ தகர்க்காவிட்டால், தேவன் கொடுங்காற்று அனுப்பு அதைத் தகர்த்து உன்னை வெளியாக்குவார். தேவனோடு கடலுக்குள் குதித்து, அவருடைய திட்டமாகிய உயர்ந்த அலைகளின்மீது செல்லும்போது உன்னுடைய கண்கள் திறக்கப்படும். நீ இயேசுவில் விசுவாசித்தால் அமைதலான நீரில் நிறைந்த மகிழ்ச்சியோடு உன்னுடைய நேரத்தை எப்போதும் செலவிடக் கூடாது. ஆழத்திற்குள் பிரவேசித்து, ஆவிக்குரிய அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எதையாவது ஒன்றைச் செய்யவேண்டுமென்று அறியும்போது, நீ அதைச் செய்தால், உடனே நீ அதிகம் அறிந்துகொள்வாய். ஆவிக்குரிய மந்த நிலை உன்னில் உண்டாகும்போது, அதின் காரணத்தை திரும்பிப் பார்த்தால், நீ செய்ய வேண்டும்மென்று அறிந்த ஒன்றை செய்யாது விட்டு விட்டாய் என்பதைக் கண்டுகொள்வாய். எனவே இப்போது நீ ஆவிக்குரிய பகுத்தறிவை இழந்தாய்; ஆபத்தான வேளைகளில் நிலைநிற்க முடியாமல் போகிறது. கற்றுக்கொண்டே இருக்க மறுப்பது ஆபத்தாகும்.

உன்னை தியாகஞ்செய்வதற்கான சந்தர்ப்பங்களை நீ உருவாக்குவது போலியான கீழ்ப்படிதலாகும். ரோமர் 12:1-3ல் கூறியுள்ள ஆவிக்குரிய செயல்களைச் செய்வதைக் காட்டிலும் தியாகம் எளிதானது. தன்னையே தியாகஞ்செய்யும் பெரிய செயலைக் காட்டிலும், தேவனுடைய சித்தத்தை உணர்ந்து, அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதே மிகச் சிறந்ததாகும். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம். இதுவரையிலும் நீ கண்டிராத புதிய அனுபவத்திற்குள் தேவன் உன்னை நடத்திச் செல்ல விரும்பும்போது, உன் பழைய அனுபவங்களையே திரும்பத் திரும்ப பறைசாற்றாதே.

-    ஆஸ்வால்டு சேம்பர்ஸ்


(“அவருடைய மேன்மைக்கு என்னுடைய முழுமை” என்ற தினதியான நூலில் இருந்து எடுக்கப்பட்டது).
My Utmost for His Highest by Oswald Champers

Sunday, August 27, 2017

அ முதல் அவரே எனக்கும் எவருக்கும்

அண்ட சராசரம் அனைத்தையும்
அன்பினால் அணைத்து
அமுதமாம் இணையில்லா வார்த்தைகளால்
அற்புதமாய் படைத்து
அடியேனை உம் சாயல்போல் மாற
அளவெடுத்து மண் பிசைந்து
அழகாக ஆணும் பெண்ணுமாக
அதிசய உரு கொடுத்து
அவர்களே ஆளட்டுமென
அதிகாரத்தையும் கொடுத்து பின்
அனுதினமும் அன்புறவு
அலகின் சூழ்ச்சியினால்
அதில் வீழ்ச்சி வந்தும்
அவதரித்து மரித்து மீட்டீர்
அகோர பாவத்தின் சாபம்
அதற்கான கிரயம் உம் ஜீவன்
அறிய முடியவில்லை
அன்பின் ஆழம் அகலம் உயரம்
அண்டினால் தீருமென் துயரம்
அன்பரின் சொல் மதுரம்
அவர் சிந்தின உதிரம்
அறிக்கையிட்டால் கழுவும் இதயம்
அவரிடமே அடிபணிகிறேன்
அனைத்தையும் நான் படைக்கிறேன்
அணுவளவும் பயமில்லையே!

 - by Arputharaj