Wednesday, January 5, 2022

A sin cleansing fountain

READ: Zechariah 13-14; Proverbs 30; Revelation 20

SCRIPTURE:  Zechariah 13: 1 On that day a fountain will be opened to the house of David and the inhabitants of Jerusalem, to cleanse them from sin and impurity.

OBSERVATION: Visiting famous pilgrim sites and taking sacred bathing is known as punya teerth yatra in India. Traditionally people believe such religious bathing would help them expiate their sins and blemishes. However, experts warn about the water quality in holy places and say they can cause diseases. Here in Zecharia 13:1, we see a fountain that is kept open for the inhabitants of Jerusalem “to cleanse them from sin and impurity.” People who refused to obey the prophets who warned them to get rid of idolatry and sinful practices will come to the Messiah and mourn for him with weeping. The Spirit of God will lead them to come to the Messiah. They need to be cleansed from their sins. But what can wash away them? Bathing in the water would clean external impurities. But such bathing cannot wash away our sins. Here, we see God’s provision for the people who come to him in repentance.

This fountain metaphorically alludes to Jesus the Messiah. Mathew Henry says, “This fountain opened is the pierced side of Jesus Christ, for thence came there out blood and water (John 19:34), and both for cleansing.”  Spurgeon says it is God’s “inexhaustible” fountain for us to receive God’s forgiveness. God’s promise to remove his people’s sins will be fulfilled at the “opened up” fountain of God (Zech.3:9). A promise under the New Covenant is that God will forgive his people and cleanse them from all impurities and idolatry Jer.31:34; Eze.36:25; Rom.11:27; Heb.10:16-18). When Jesus died on the Cross, on that day, the fountain of cleansing and forgiveness was opened up for all. When we confess our sins, “the blood of Jesus, his Son, purifies us from all [every] sin” (1 Jn.1:7,9). Inspired by Zechariah 13:1, William Cowper wrote the following meaningful song in 1772 AD:
There is a fountain filled with blood,
Drawn from Immanuel’s veins,
And sinners plunged beneath that flood
Lose all their guilty stains:

APPLICATION: I find God’s grace, mercy, and salvation when I come near the cross where Jesus died for my sins. There is no other shortcut to come before God. When I confess my sins, I receive forgiveness of sins and begin a loving relationship with God. I was dead in my transgressions and sins and far away from God. But by the blood of Jesus Christ, I come near to God. I am a sinner saved by God’s grace. “It is the gift of God” (Eph. 2:8,9). I should always remain in Christ and obey the voice of the Good Sheperd Jesus Every day. In Christ, I have everything I need.

PRAYER: Father God, thank you for your loving provision to cleanse your people from sin and impurity. Jesus, thank you for love that saves us. Holy Spirit, give me your wisdom to follow your guidance to cleanse and protect me from sins.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 363

(Tamil version of this devotion is posted here)

பாவங்களை கழுவி சுத்திகரிக்கும் ஊற்று

வாசிக்க:  சகரியா 13-14; நீதிமொழிகள் 30; வெளிப்படுத்தின விசேஷம் 20

வேத வசனம்:  சகரியா 13: 1. அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.

கவனித்தல்: புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று புனித நீராடுதல் இந்தியாவில் புண்ணிய தீர்த்த யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. மத ரீதியான இப்படிப்பட்ட புனித நீராடுதல் தங்கள் பாவங்களையும் கறைகளையும் நீக்க உதவும் பரிகாரமாக இருக்கிறது என மக்கள் பாரம்பரியமாக நம்புகின்றனர். ஆயினும், புண்ணிய ஸ்தலங்களில் இருக்கும் தண்ணீரின் தன்மை பற்றி நிபுணர்கள் எச்சரித்து, அவை நோய்களை உண்டாக்கக் கூடும் எனக் கூறுகின்றனர். இங்கு சகரியா 13:1 இல், எருசலேமில் உள்ளவர்கள் தங்கள் பாவத்தையும் அழுக்கையும் நீக்குவதற்காக திறக்கப்பட்ட ஊற்று ஒன்றை நாம் பார்க்கிறோம். விக்கிரகாராதனை மற்றும் பாவ பழக்க வழக்கங்களை விட்டுவிடும்படி எச்சரித்த தீர்க்கதரிசிகளுக்கு செவி கொடாமல் இருந்த மக்கள் மேசியாவிடம் வந்து அவருக்காக அழுது புலம்புவார்கள். தேவனுடைய ஆவியானவர் தாமே அவர்களை மேசியாவிடம் வரவழைப்பார். அவர்கள் தங்களுடைய பாவங்களில் இருந்து கழுவப்பட வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் அவர்களின் பாவங்களை எது கழுவி நீக்க முடியும்? தண்ணீரில் குளித்தல் வெளிப்பிரகாரமான அசுத்தங்களைக் கழுவி சுத்தப்படுத்தும். ஆனால் அது நம் பாவங்களற கழுவி சுத்திகரிக்க முடியாது. இங்கே, மனம் திரும்பி தன்னிடம் வரும் மக்களுக்கு தேவன் வைத்திருக்கும் முன்னேற்பாட்டை நாம் காண்கிறோம்.

இந்த ஊற்று மேசியாவாகிய இயேசுவைக் குறிக்கும் உருவகமாக இருக்கிறது. மேத்யு ஹென்றி என்பவர் சொல்வது என்னவெனில், “இயேசுவின் உருவக் குத்தப்பட்ட விலா பகுதியே இந்த ஊற்று  ஆகும், அங்கிருந்துதான் தண்ணீரும் இரத்தமும் வந்தது (யோவான் 19:34), அவை இரண்டுமே சுத்திகரிப்புக்கானவை.” நாம் தேவனின் மன்னிப்பைப் பெறுவதற்கான தேவனுடைய “ஒரு போதும் வற்றாத” ஜீவ ஊற்று என ஸ்பர்ஜன் கூறுகிறார். தன் மக்களின் பாவங்களை நீக்குவதற்கான தேவனுடைய வாக்குத்தத்தமானது இந்த திறக்கப்பட்ட ஊற்றில் நிறைவேற்றப்படும் (சகரியா 3:9). தேவன் தன் ஜனங்களை மன்னித்து, எல்லா அசுத்தங்கள் மற்றும் விக்கிரக வணக்கத்தில் இருந்து அவர்களை சுத்திகரிப்பார் என்பது புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் ஆகும் (எரே.31:34; எசேக்.36:25; ரோமர் 11:27; எபி.10:16-18). இயேசு சிலுவையில் மரித்தபோது, அந்நாளிலே, சுத்திகரிப்பின் மற்றும் மன்னிப்பின் ஊற்று அனைவருக்காகவும் திறக்கப்பட்டது. நாம் நம் பாவங்களை அறிக்கை செய்யும்போது, ”அவருடைய குமாரனாகிய  இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7,9). சகரியா 13:1ஆம் வசனத்தினால் ஈர்க்கப்பட்டு, வில்லியம் கௌபர் என்பவர் கி.பி 1772 இல் பின்வரும் அர்த்தமுள்ள பாடலை எழுதினார்.  “இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே
எப்பாவத் தீங்கும் அதினால்
நிவிர்த்தியாகுமே.”

பயன்பாடு:  என் பாவங்களுக்காக இயேசு மரித்த சிலுவையின் அருகில் வரும்போது தேவனுடைய கிருபை, இரக்கம், மற்றும் இரட்சிப்பை நான் கண்டடைகிறேன். தேவனுக்கு முன்பாக வருவதற்கு வேறு குறுக்கு வழி எதுவும் கிடையாது. என் பாவங்களை நான் அறிக்கை செய்யும்போது, நான் பாவமன்னிப்பைப் பெற்று, தேவனுடன் ஒரு அன்பின் உறவைத் துவங்குகிறேன். நான் என் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் தேவனுக்கு மிகவும் தூரமாக இருந்தேன். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக, நான் தேவனுக்கு அருகில் வருகிறேன். நான் தேவ கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி.  ”இது தேவனுடைய ஈவு”  (எபேசியர் 2:8,9). நான் கிறிஸ்துவில் எப்பொழுதும் நிலைத்திருந்து, நல்ல மேய்ப்பராம் இயேசுவின் குரலுக்கு அனுதினமும் செவிகொடுத்துக் கீழ்ப்படிய வேண்டும். கிறிஸ்துவில் நான் எனக்குத் தேவையான அனைத்தையும் உடையவனாக இருக்கிறேன்.

 ஜெபம் தந்தையாகிய தெய்வமே, உம் ஜனங்களின் பாவக் கறை நீங்க நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற ஏற்பாட்டிற்காக உமக்கு நன்றி. இயேசுவேம் என்னை இரட்சிக்கும் உம் அன்பிற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, உம் வழிநடத்துதலைப் பின்பற்றவும், பாவங்களில் இருந்து என்னைக் கழுவி சுத்திகரிக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் உம் ஞானத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 363

Tuesday, January 4, 2022

தேவனுக்கு பயப்படுங்கள், வேறு எதற்கும் பயப்படத் தேவை இல்லை

வாசிக்க:  சகரியா 11-12; நீதிமொழிகள் 29; வெளிப்படுத்தின விசேஷம் 19

வேத வசனம்:  நீதிமொழிகள் 29: 25. மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

கவனித்தல்:   ஆபத்துகளை அல்லது பயமுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது மனிதர்கள் பயத்தை வெளிப்படுத்துகிறார்கள். மனிதன் பிறக்கும்போதே பயத்துடன் பிறக்கிறான் என்று சிலர் சொல்கிறார்கள். இன்றைய உலகில்,  நோய்கள், நிதி நிலைமைகள், அரசியல் காரணங்கள், தீவிரவாதம் போன்ற பல காரணங்களுக்காக நம் சமுதாயமானது பயத்தினால் பீடிக்கப்பட்டிருக்கிறது. நவீன விஞ்ஞானம் பலவிதமான பயங்களையும், பயத்தினால் உண்டாகும் நோய்களையும் பற்றி  நமக்குக் கூறுகிறது. பரிசுத்த வேதாகமம் இரண்டு விதமான பயங்களைப் பற்றிக் கூறுகிறது: மனிதனுக்கு பயப்படும் பயம் மற்றும் தேவனுக்குப் பயப்படுதல். நம் சமூகத்தில், குறிப்பாக இந்தியாவில், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது என்ன சொல்வார்களோ என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களுக்காக பல பழக்க வழக்கங்களை  மற்றும் நடைமுறைகளை மக்கள் பின்பற்றுகிறதை  நாம் பார்க்கிறோம். ஆனால் வேதாகமமோ, “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” என்று கூறுகிறது.

அனேக சபைகளில், மனிதரைப் பற்றிய பயமானது பிரசங்கங்களையும், கிறிஸ்தவ நற்பண்புகள் மற்றும் நடைமுறைகளையும் எப்படி பாதிக்கிறது என்பதை நாம்  காண்பது மிகவும் வருந்தக் தக்க விஷயம் ஆகும்.  மனிதரைப் பற்றிய பயமானது நம் கிறிஸ்தவ கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள வழிநடத்தக் கூடும். தேவனுடைய வார்த்தை மற்றும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, மனிதருக்குப் பயப்படுகிறவர்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த முயற்சிப்பார்கள். மனிதரைப் பற்றிய பயத்தை உடையவர்களாக இருந்து, தவறான காரியங்களைச் செய்த பலரைப் பற்றி வேதாகமம்  சொல்கிறது. உதாரணமான, சவுல் ராஜா சாமுவேலிடம் சொன்னதைப் பாருங்கள், ”நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்” (1 சாமுவே.15:24). இப்படியாக, மனிதரைப் பற்றிய பயமானது அனேகருக்கு, தேவபக்தியுள்ளவர்களுக்கும் கூட ஒரு கண்ணியாக மாறிவிடுகிறது. பலரும் நினைப்பது போல, தேவனுக்குப் பயப்படுதல் என்பது தேவனுக்குப் பயந்து பயந்து பயத்தில் காரியங்களைச் செய்வது அல்ல; அது எல்லாவற்றிற்கும் தேவனை நம்பி, அன்பில் அவருக்குக் கீழ்ப்படிவது ஆகும். நீதிமொழிகள் புத்தகத்தில், கர்த்தருக்குப் பயப்படுதலினால் வரும் பல நன்மைகளைப் பற்றி நாம் வாசிக்கிறோம் (1:7; 9:10; 10:27; 14:27; 15:33; 18:10; 19:23; 22:4; 28:26).

கர்த்தருக்குப் பயப்படுதலை உடையவர்கள் தேவனுடைய பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் கண்டடைகிறார்கள். மனிதரைப் பற்றிய பயம் உடையவர்கள் தங்களைத் தாங்களே ஒரு கண்ணியில் சிக்க வைத்து விடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று தங்களைப் பயமுறுத்தின யூதர்களிடம் அப்போஸ்தலர்கள் சொன்னதை நாம் நினைவுகொள்ள வேண்டும் (அப்.5:29). நாம் தேவனை நம்பத் துவங்கும்போது, நாம் ஒரு ஆண்டின் எந்த நாளில் இருந்தாலும் சரி, அல்லது நம் வயது என்னவாக இருந்தாலும் சரி, நாம் நம் வாழ்வில் பெரிய காரியங்களைக் காணத் துவங்குவோம்.

பயன்பாடு:  நான் யாருக்குப் பயப்பட வேண்டும் என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்குக் கற்பித்திருக்கிறார் ( மத்.10:28; லூக்கா 12:4,5). நான் தேவனுக்குப் பயப்படும்போது, நான் வேறு எதற்கும் பயப்படத் தேவை இல்லை. ”இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்?” என்று நான் அவ்வப்போது என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது போல, “நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே” (கலா.1:10).  கர்த்தருக்குப் பயப்படும் பயமானது என்னை மனிதரைப் பற்றிய பயத்தில் இருந்து விடுவிக்கிறது. தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். (2 தீமோ.1:7).

 ஜெபம்தந்தையாகிய தெய்வமே, என்னை உம் பிள்ளையாக மாற்றுகிற, எந்த பயத்தையும் அகற்றுகிற உம் அன்பிற்காக உமக்கு நன்றி. இயேசுவே, நீர் எனக்கு தருகிற சமாதானத்திற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, எந்த பயத்தையும் ஜெயிக்கவும், தேவனுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 362

Fear God, Fear Nothing

READ: Zechariah 11-12; Proverbs 29; Revelation 19

SCRIPTURE:  Proverbs 29: 25 Fear of man will prove to be a snare, but whoever trusts in the Lord is kept safe.

OBSERVATION: Humans express fear when facing dangers or threats. Some say that humans are born with fear at the time of birth itself. In today's world, we see our society gripped by fear for various reasons such as diseases, financial situations, political factors, terrorism, etc. Modern science tells us about various types of fear and diseases caused by fear. The Bible tells us of two types of fear: fear of man and fear of God. In our society, especially in India, we see that people are following various customs and practices for the sake of others, fearing what others might say or think. But the Bible says, “Fear of man will prove to be a snare.”

Sadly, in many churches, we see how "fear of man" affects sermons and Christian characteristics and practices. Fear of man may lead us to compromise our Christian ideals. Instead of obeying God’s word and guidance, those who have “fear of man” would try to please people. The Bible says of many men who had “fear of man” and did wrong things. For example, see what King Saul said to Samuel, “I have sinned. I violated the Lord’s command and your instructions. I was afraid of the men and so I gave in to them” (1 Sam.15:24). Thus, “fear of man” becomes a snare for many, even godly people. As many people think, fear of God is not fearing God and doing things in fear; it is trusting him for everything and obeying him in love. In Proverbs, we see many benefits of the fear of the LORD (1:7; 9:10; 10:27; 14:27; 15:33; 18:10; 19:23; 22:4; 28:26).

Those who have “fear of the Lord” find God’s protection and provision; those who have "fear of man" entangle themselves in a snare. We should not allow any worldly and social fears or peer pressures to impact us on making decisions or doing something in our lives. In any situation, we must remember what the apostles said to the intimidating Jews, “We must obey God rather than human beings!” (Acts 5:29). When we begin to trust God,  no matter what day of a year or whatever our age may be, we will start to see great things in our lives.

APPLICATION: Lord Jesus Christ has taught me about whom I should fear (Mt.10:28; Luke:12:4,5). When I fear God, I need not fear for anything. Periodically I must ask myself that  “Am I now trying to win the approval of human beings, or of God? Or am I trying to please people?" As apostle Paul writes,  "If I were still trying to please people, I would not be a servant of Christ” (Gal.1:10).  The fear of the Lord delivers me from “fear of man.” The Spirit that God gives me does not “make me timid,” but gives me “power, love and self-discipline” (2 Tim.1:7).

 PRAYER: Father God, thank you for your love that makes me your child and dispels any fear. Jesus, thank you for the peace that you give me. Holy Spirit, help me to overcome any fear and obey God always. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 362

(Tamil version of this devotion is posted here)

Saturday, January 1, 2022

கர்த்தரின் இரட்டிப்பான ஆசீர்வாதம் பெற வாருங்கள்

வாசிக்க:  சகரியா 9-10; நீதிமொழிகள் 28; வெளிப்படுத்தின விசேஷம் 18

வேத வசனம்:  சகரியா 9: 12. நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

கவனித்தல்: பண்டைய காலத்தில், மக்கள் தங்கள் எதிரிகளையும் மற்றும் திரும்பத் திரும்ப தவறு செய்கிறவர்களையும் தண்ணீரற்ற வறண்ட மற்றும் பாழான கிணற்றில் அல்லது குழியில் வீசி  (உதாரணம்: யோசேப்பு, எரேமியா) தண்டிப்பார்கள். தண்ணீரற்ற குழிக்கொப்பான நிலையில் வாழும்படி கட்டாயப்படுத்தப் பட்ட நிலையில் தேவ ஜனங்கள் சிறைக்கைதிகளாக  இருந்த நிலைமையைப் பற்றி நாம் இங்கு வாசிக்கிறோம். அவர்கள் நம்பிக்கையின்றி, தேசத்தில் உயிர்தப்பி வாழ்வதற்கான உதவியின்றி இருந்தனர். ஆனால், தேவன் அவர்களை விடுவிப்பேன் என வாக்குப் பண்ணினார். தேவன் தம் ஜனங்களுடனான இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையை (யாத்.24:6-8) நினைவு கூர்கிறார்.  தேவன் தம் ஜனங்களை விடுவிக்கும்போது, அவர்கள் தன்னிடம் திரும்ப வேண்டும் என தேவன் அழைக்கிறார். நம் தேவன் தம் ஜனங்களுக்கான உறுதியான கோட்டை ஆவார். அவர் நம்பிக்கையில்லாத சிறையிருப்புவாசிகளை நம்பிக்கையுடைய சிறைகளே என அழைக்கிறார். ”எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம்” என இஸ்ரவேலர்கள் கூறினர் (எசேக்.37:!1). அவர்கள் தம்மிடம் திரும்ப வரும்போது தன்னிடம் நம்பிக்கையை மக்கள் கண்டு கொள்ள முடியும் என தேவன் சொல்கிறார்.  தன்னிடம் வருகிறவர்களுக்கு இரட்டிப்பான நன்மையைத் தருவதாக தேவன் வாக்குப் பண்ணி இருக்கிறார். தன் ஜனங்கள் எதிரியிடம் இழந்தவைகளை இரண்டத்தனையாக தருவேன் என்று தேவன் வாக்குப் பண்ணுகிறார்.

மேசியாவே இஸ்ரவேலரனைத்திற்கும், எல்லா மக்களுக்கும் நம்பிக்கையாக இருக்கிறார். சிலுவையில் தம் தியாக பலியின் மூலமாக, கர்த்தராகிய இயேசு அனைவரையும் இரட்சிப்பதற்கு இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையை செய்திருக்கிறார். அவர் அனைவரையும் தன்னிடம் வரும்படி அழைத்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கொடுக்கிறார் (மத்.11:28-30). ”உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்” என மேசியாவாகிய இயேசு வாக்குப் பண்ணுகிறார் (ஏசாயா 61:7).  நம் தற்போதையை சூழ்நிலை, காரியங்கள், மற்றும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்கள் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தராமல் போகலாம். இஸ்ரவேலர்கள் அப்படிப்பட்ட ஒரு நிலையிலேயே இருந்தனர். ஆனால், நம் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், “இன்றைக்கே” நன்மையை தருவேன் என தேவன் சொல்கிறார்.  தாகமுள்ள அனைவரும் தம்மிடம் வந்து தாகத்தையும் பசியையும் “பணமுமின்றி விலையுமின்றி” தீர்த்துக் கொள்ளும்படி தேவன் அழைக்கிறார் (ஏசாயா 55:1-3). ”நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” என்று இயேசு தன்னிடம் வந்த சமாரியப் பெண்ணிடம் கூறினார் (யோவான் 4:14). தேவனுடைய விடுதலை, அவருக்குள் பாதுகாப்பாக வாழ்வதற்கான அழைப்பு, மற்றும் இழந்து போனவைகளை திரும்பவும் பெறுவதற்கான தேவனுடைய வாக்குத்தத்தம் ஆகியவை நம் முன்பாக இருக்கின்றன. நாம் விசுவாசித்து தேவனிடம் வரும்போது, அவர் தம் வார்த்தையை நிறைவேற்றுகிறார். தேவனின் இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை  யார் தான் அசட்டை செய்ய முடியும்!

பயன்பாடு:  நான் சரீர மற்றும் ஆவிக்குரிய வறட்சியை எதிர்கொள்ள நேரிடும்போது, நான் தேவனிடம் வர முடியும். அவரே என் தேவைகள் அனைத்தையும் திருப்திப்படுத்த முடியும்.  நான் என் முன் இருக்கிற பிரச்சனைகள் அல்லது கவலைகள் எவ்வளவு பெரிது என்று பார்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக, என் தேவன் எவ்வளவு பெரியவர், வல்லமையுள்ளவர் என்பதை நான் பார்க்க வேண்டும்.  நான் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமல்ல, ஒரு அன்பின் உடன்படிக்கை உறவுக்காக நான் தேவனிடம் வருகிறேன்.  நான் தொடர்ந்து அவருடன் உறவாடுகையில் அவரைப் பற்றி நான் ஒவ்வொருநாளும் அதிகமதிகமாக அறிந்து கொள்கிறேன். நம்புகிறதற்கு ஏதுவில்லாத சூழ்நிலையிலும் தேவன் எனக்கு நம்பிக்கையளிக்கிறார். அவர் தன் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு போதும் தவறுவதில்லை.

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, இன்று நீர் தருகிற நம்பிக்கை மற்றும் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, என் மீதான உம் அன்பிற்காகவும் நீர் எனக்குத் தந்திருக்கிற வாக்குத்தத்தங்களை   நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராக இருப்பதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, இன்று நான் தேவனுடைய வார்த்தையை நினைவு கூரவும், என்றென்றைக்கும் தேவ அன்பில் நிலைத்திருக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 361