Tuesday, January 5, 2021

பாதைகாட்டும், மா யெகோவா

வாசிக்க: ஆதியாகமம் 9, 10: சங்கீதம் 5; மத்தேயு 3:1-12

வேதவசனம்: சங்கீதம் 5: 7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 8. கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.

கவனித்தல்: சங்கீதம் 5ல், தேவனே, நீர் பாவத்தை வெறுக்கும் பரிசுத்தர், ஆனால் பாவியாகிய நானோ உம் கிருபையால் உம் முன்பாக வருகிறேன் என்று தாவீது கூறுகிறார். தேவனுடைய கிருபையால் மட்டுமே நாம் அவர் முன்பாக வர முடியும். அவருடைய கிருபைப் பேரன்பு, நாம் அவர் சமூகத்தில் அவர் முன் வந்து நிற்க நமக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. தேவனுடைய வழியில் நடப்பதற்கு, தேவ வழிகாட்டுதல் தனக்கு தேவை என தேவனுடைய இரக்கத்தை நம்பி தாவீது ஜெபிக்கிறார்.

பயன்பாடு: தேவனுடைய கிருபையால், நான் எங்கே இருந்தாலும் தேவனுக்கு முன்பாக வந்து, அவர் சமூகத்தில் நிற்க முடியும். கிருபையால் இரட்சிப்பின் வாழ்வை பெற்றனுபவிக்கிற, முன்பு பாவியாக வாழ்ந்த எனக்கு, தேவனுடைய நீதியின் பாதையில் நடக்க அவருடைய வழிகாட்டுதலும், மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட முடியாதபடி ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழ அவருடைய பாதுகாப்பும் எனக்குத் தேவை.  தேவனுக்கு முன்பாக நான் வந்து நிற்கும்  இந்நாளில், நான் அவருடைய சமூகத்தை மகிழ்வுடன் அனுபவிக்கவும், அவருடைய அன்பை நாள் முழுதும் ருசிக்கவும், மற்றும் ஒரு பரிசுத்தமான வாழ்வை வாழவும், நான் தேவனுடன் நடக்க வேண்டியது அவசியம்.

ஜெபம்: பிதாவே, எனக்கு நீர் காண்பித்து வருகிற உம் கிருபைப் பேரன்புக்காக நன்றி. என் வாழ்க்கையை உமக்குப் பிரியமானபடி வாழ, என்னை உம் நீதியின் வழியில் நடத்தும். ஆமென்.

-அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

5 ஜனவரி 2021

Guide Me, O Thou Great Jehovah

 READ: Genesis 9, 10; Psalm 5; Matthew 3:1-12

SCRIPTURE: Psalm 5: 7 But I, by your great love, can come into your house; in reverence I bow down toward your holy temple. 8 Lead me, Lord, in your righteousness because of my enemies—make your way straight before me.

OBSERVATION: In Psalm 5, David exclaims that LORD you are the Holy One who hates any form of evil. But I, a sinner comes to you, because of your loving kindness. We can come to God only by his grace. His loving kindness gives us a courage to enter into his presence. Then, trusting God's mercy, David prays for God's guidance to walk in His way. 

APPLICATION: By God's Grace, I can come to him, and can enter into his presence wherever I may live. As a sinner saved by His grace, I need God's guidance to walk in his righteous way and protection in order to live a blameless life. As I come to God today, If I want to enjoy his presence and his love throughout the day, and to live a holy life,  I need to walk with God. 

PRAYER: Father, thank you for your loving kindness for me. "Lead me," to live my life in your way. Amen.

- Arputharaj Samuel

+91 9538328573
5 January 2021

Monday, January 4, 2021

எல்லாவற்றிலும்....

 வாசிக்க: ஆதியாகமம் 7,8; சங்கீதம் 4; மத்தேயு 2:16-23

வேதவசனம்: ஆதியாகமம் 7:5 நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

கவனித்தல்: நோவாவின் காலத்தில், ஒரு பேழையைக் (பெரிய மிதவை அல்லது கப்பல்) கட்டுவதும், பேரழிவு வெள்ளத்தைப் பற்றி எச்சரிக்கைச் செய்தியை ஜனங்களிடம் சொல்வதும், அவரைச் சுற்றியிருந்த மக்களுக்கு நூதனமானதாக, இதுவரைக் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்திருக்கும்.  “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” உண்மைதான் என்றாலும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் செய்து முடிப்பதில் நோவா கவனமுள்ளவராக இருந்தார். “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா” என நோவாவைப் பற்றி புதிய ஏற்ப்பாட்டில் வாசிக்கிறோம். அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த காலத்தில், ஜனங்கள் அவரைப் பார்த்து பரியாசம் பண்ணி சிரித்திருப்பார்கள். மேலும், ஒருவரும் அவர் சொன்ன எச்சரிக்கை செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படிவதில் அவர் உண்மையுள்ளவராக இருந்தார். அவருடைய கீழ்ப்படிதல் அவருடைய முழு குடும்பத்தையும், பேழையில் நுழைந்த அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றியது.

பயன்பாடு: நான் தேவனுக்கும், அவருடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய விரும்புகிறேன். ஆயினும், எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, என் வசதிக்கேற்றபடி நான் தெரிந்து கொள்ளும் குறிப்பிட்ட காரியங்களில் மட்டுமே கீழ்ப்படிதலுள்ளவனாக நான் இருக்கக் கூடும். காலப்போக்கில், என்னைச் சுற்றியுள்ளவர்கள் தேவனுக்கு செவிகொடுக்காமல் அசட்டையாக இருப்பதைப் பார்த்து, நானும் கூட தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு உற்சாகம் குறைந்து காணப்படலாம். நான் நினைத்ததை விட அதிகமாக, வாக்குத்தத்தம் நிறைவேற அல்லது நான் எதிர்பார்த்த காரியம் நடைபெற காலம் தாமதித்தல் என்னை விரக்தியடையச் செய்து, நான் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் சோர்வடையப் பண்ணக் கூடும். நான் தேவனுக்காகக் காத்திருப்பதிலும், அவருடைய வார்த்தை நிறைவேறவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

ஜெபம்: பிதாவே, இந்த நாளுக்கான புத்துணர்ச்சி அளிக்கும் கிருபைக்காக நன்றி. உதட்டளவில் மட்டுமல்ல, என் வாழ்க்கை மற்றும் நான் செய்யும் எல்லா காரியங்களிலும் உம்மை கனப்படுத்த விரும்புகிறேன். இதைச் செய்ய உம் பெலன் எனக்குத் தேவை.  எங்களுக்கு நினைப்பூட்டி, கீழ்ப்படிய உதவுகிற உம் பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573
4 ஜனவரி 2021

Through it ALL

Read: Genesis 7,8; Psalm 4; Matthew 2:16-23

SCRIPTURE: Genesis 7: 5  And Noah did all that the Lord commanded him.

OBSERVATION: In Noah's time, building an ark and warning people about the destructive flood must had been something unusual for the people around him. Although "Noah found favor in the eyes of the LORD", he was sincere in completing "ALL" the tasks that he was commanded. In the New Testament, Noah is called as "a preacher of righteousness."  While he did all these, people may have laughed at him,  and evidently none listened to him. But he was faithful in his obedience to the LORD. His obedience saved his whole family and all creatures that entered the ark.

APPLICATION: I want to obey God and his commandments. However, instead of obeying him in everything, I may obey him only in selected things, according to my convenience. Over a period of time, I may get discouraged to obey God, as people around me least bothered about it. A delay in fulfillment of promise or what I expected may push to frustration and stopping me to obey God as the waiting period becomes seemingly longer than I expected. I need to be patient in waiting for God and to see the fulfillment of his words. 

Prayer: Father, thank you for your refreshing grace for this day. I want to honor you in my life and works, not just in words. I need your strength to do this. Thank you for your Holy Spirit who reminds and helps us to obey you always. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573
4 January 2021

Sunday, January 3, 2021

உங்களுடன் இருக்கும் ஒருவர்

 வாசிக்க: ஆதியாகமம் 5,6; சங்கீதம் 3; மத்தேயு 2:1-15

வேதவசனம்: சங்கீதம் 3: 6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.

கவனித்தல்: தாவீது அனேக யுத்தங்களில் வெற்றி பெற்ற நன்கறியப்பட்ட ஒரு போர்வீரன். ஒரு தைரியமான, வலிமையான ஒருவர் இது போல உறுதியான வார்த்தைகளை வெளிப்படுத்துவது இயல்பு என சிலர் நினைக்கலாம். ஆனால், தாவீது தனக்கு விரோதமக எழும்பின தன் சொந்த மகனிடம் இருந்து தப்பியோட வேண்டிய வருந்தத்தக்க நிலையில் இருந்தார் என வேதம் சொல்கிறது. தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பித்து செல்வதை தவிர வேறு வழி எதுவும் இல்லாத நிலையில் தாவீது இருந்தார் என 2 சாமுவேல் 15:14 கூறுகிறது. அவருடைய நெருங்கிய உறவுகள் கூட அவருக்கு எதிராக திரும்பின சிறுமைப் படுத்தப் பட்ட ஒரு நிலையில் தாவீது இருந்தார். ஆயினும் தன்னுடைய எதிரிகளின் எண்ணிக்கையைக் குறித்தோ அவர்களது கேலியான நிந்தனைகளை குறித்தோ தாவீது கவலைப்படவில்லை. ஏனெனில் எந்த நிலையிலும் தன்னை தாங்கி நடத்துகின்ற சர்வ வல்லமையுள்ள தேவனை தாவீது அறிந்திருந்தார். அவர் தன் ராஜ்யத்தை இழந்தார், குடும்பத்தினரிடம் இருந்து பிரிய நேர்ந்தது, மற்றும் உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டிய நிலை இருந்தது. கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தாவீது தன் இருதய சமாதானத்தையும், தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார் (வ.5,6). ஏனெனில், தேவன் தன்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதில் தாவீது உறுதியாக இருந்தார்.

பயன்பாடு: தாவீதைப் போல, நானும் இது போன்ற சூழ்நிலைகளை சில சமயங்களில் எதிர்கொள்ள நேரிடலாம். சில நேரங்களில், என் சூழ்நிலை அல்லது நான் இருக்கக் கூடிய இடங்கள், என்னைச் சுற்றி இருப்பவர்கள் எனக்கு எதிராக எழும்பும் நிலை வரலாம். எப்பக்கத்திலும் எதிர்ப்புகளை சந்திக்கக் கூடிய ஒரு நிலை உண்டாகலாம்.  ஆயினும், அவை நான் தேவனைப் பற்றி பாடுவதையோ, தேவ சமாதானத்தை என் இருதயத்தில் பெற்று அனுபவிப்பதையோ தடுத்து நிறுத்திட முடியாது. ஏனெனில், மனிதர்கள் நிறம் மாறலாம், ஆனால், என் அன்பின் ஆண்டவர் எப்பொழுதும் என்னுடனே இருக்கிறார். ”தேவன் ஒருவருடன் இருக்கையில் அவர் இருக்கும் பக்கமே பெரும்பான்மை” (யாரோ).

ஜெபம்: பிதாவே, நான் தனிமையை உணரும் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் நீர் என்னுடன் இருப்பதற்காக நன்றி.  உம் அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக நன்றி. உம்மைப் பற்றிய என் நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் தைரியமாகவும் உறுதியாகவும்  இருக்க எனக்கு உதவும். ஆமென்.