Friday, April 2, 2021

Be strong and courageous

READ: Deuteronomy 31, 32; Psalm 92; Luke 2: 25-52

SCRIPTURE: Deuteronomy 31: 6 Be strong and courageous. Do not be afraid or terrified because of them, for the Lord your God goes with you; he will never leave you nor forsake you.”

OBSERVATION: In Deuteronomy chapter 31, when Moses was giving his final instruction to Joshua to lead the Israelites, we see the repeated occurrence of this phrase "Be strong and courageous" (v. 7,8, 23). Moses would not be there to lead the people in to the promised land, Moses was aware that his earthly life would come to an end in soon. But God is always available to lead his people. When leaders change or when God's people face an attack or threats from enemies, God encourages his people by saying "be strong and courageous" (Josh.1, 1 Ch.22:13, 2 Ch. 32:7). Godly people need not to worry or afraid about the future. Because, as we see here, God always goes with his people. God never leaves his people, nor forsake them. No matter what challenges or dangers ahead of us, for God comes with us, he wants us to be confident to face them without any fear. With God's ever presence with us, we can "be strong and courageous."

APPLICATION: When I face difficult times of my life, when I fear about the changes that are taking place in my life, when i encounter great challenges in my life, and when I am about to enter a new place or start a new thing, I should remember that God is with me and he would never forsake me. Instead of worrying and fearing about the future, I need to "be strong and courageous" by remembering God's ever presence with me. My fears and worries do not help me, they could collapse my strength and peace. God comes with me, and he is the source of my strength and courageousness. 

PRAYER: Father God, thank you for you unchanging love in the changing world. As I enter a new day or a new phase of my life, help me to remember that you are with me. My God, irrespective of the situation I face, to "be strong and courageous," give me the required strength to walk with you in all of my life. Amen.


- Arputharaj Samuel

+91 9538328573

பலங்கொண்டு திடமனதாயிருங்கள்

வாசிக்க: உபாகமம் 31, 32; சங்கீதம் 92, லூக்கா 2:25-52

வேதவசனம்: உபாகமம் 31: 6. நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.

கவனித்தல்: உபாகமம் 31ம் அதிகாரத்தில், இஸ்ரவேலர்களை வழிநடத்தும்படி தனது இறுதி ஆலோசனையைக் கொடுத்த போது, ”பலங்கொண்டு திடமனதாயிரு” என்று சொற்றொடர் திரும்பத் திரும்ப வருவதை நாம் காண்கிறோம் (வ.7,8,23). வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் அழைத்துச் செல்ல மோசே இருக்கப் போவதில்லை. தன் மரணம் சீக்கிரத்தில் நிகழும் என்பதை மோசே அறிந்திருந்தார். ஆனால்,  தம் ஜனங்களை எல்லாக் காலங்களிலும் வழிநடத்துவதற்கு தேவன் இருக்கிறார். தலைவர்கள் மாறும்போது, அல்லது தேவனுடைய ஜனங்கள் எதிரிகளிடம் இருந்து ஒரு அச்சுறுத்தலையோ அல்லது தாக்குதலையோ எதிர்கொள்ளும்போது, ”பலங்கொண்டு திடமனதாயிரு” என்று சொல்லி தேவன் தம் ஜனங்களை உற்சாகப்படுத்துகிறார்.  (யோசுவா.1, 1 நாளா.22:13, 2 நாளா. 32:7). தேவ பக்தியுள்ளவர்கள் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. ஏனெனில், நாம் இங்கு காண்கிறது போல, தேவன் தம் ஜனங்களுடன் எப்பொழுதும் வருகிறார். தேவன் தம் ஜனங்களை விட்டு ஒருபோதும் விலகுவதுமில்லை, அவர்களைக் கைவிடுவதுமில்லை. நம்மை எதிர்கொள்கிற சவால்கள் அல்லது ஆபத்துகள் என்னவாக இருந்தாலும், நாம்  பயமின்றி நம்பிக்கையுடன் அவைகளை எதிர்கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார். தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறபடியால், நாம் ”பலங்கொண்டு திடமனதாயிரு”க்க முடியும்.  

பயன்பாடு: என் வாழ்வின் கடினமான தருணங்களை நான் எதிர்கொள்ளும் போது,  என் வாழ்வில் நடைபெறுகிற மாற்றங்களைக் குறித்து நான் பயப்படும்போது, என் வாழ்வில் கடும் சவால்களைச் சந்திக்கும்போது, மற்றும் ஒரு புதிய இடத்திற்குள் நுழையும்போது அல்லது ஒரு புதிய காரியத்தைத் துவங்கும்போது, தேவன் என்னுடன் இருக்கிறார் என்பதையும் அவர் என்னைக் கைவிடவே மாட்டார் என்பதையும் நான் நினைவுகூர வேண்டும். எதிர்காலத்தைக் குறித்து கவலைப்பட்டு பயப்படுவதற்குப் பதிலாக, தேவன் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதை நினைவுகூர்ந்து, பலங்கொண்டு திடமனதாயிருக்க வேண்டும். என் பயங்களும் கவலைகளும் எனக்கு எவ்விதத்திலும் உதவியாயிருப்பதில்லை. அவை என் பலத்தையும் சமதானத்தையும் குலைத்துப் போடக் கூடும். தேவனோ என்னுடன் வருகிறார். அவரே என் பலம் மற்றும் தைரியத்திற்கு ஆதாரமாக இருக்கிறார்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, மாறும் இவ்வுலகில் மாறாத உம் அன்பிற்காக உமக்கு நன்றி. நான் ஒரு புதிய நாளில் அல்லது என் வாழ்வில் ஒரு புதிய கட்டத்தில் பிரவேசிக்கும்போது, நீர் என்னுடன் இருக்கிறீர் என்பதை நினைவுகூர எனக்கு உதவுங்கள். என் தேவனே, நான் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும் பலங்கொண்டு திடமனதாயிருக்கவும், என் வாழ்நாள் முழுதும் உம்முடன் நடக்கவும் தேவையான வலிமையை எனக்குத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Thursday, April 1, 2021

The Lord is my refuge

READ: Deuteronomy 29, 30; Psalm 91; Luke 2:1-24

SCRIPTURE: Psalm 91: 9 If you say, “The Lord is my refuge,” and you make the Most High your dwelling,
10 no harm will overtake you, no disaster will come near your tent.

OBSERVATION:  Psalm 91 is one of the most used psalms by a believer who trusts and seeks God's protection.  God's place is a safe haven. However, a person starts to experience God's protection  when s/he proclaims openly his/her trust in God . Those who make God as their refuge live a protected life from the attacks of enemies and diseases. Whether it is a day or a night,  a person protected by God will not be affected by enemies and diseases, like a wicked person.  When we say God is our safe haven, we experience both spiritual and physical protection. How much protected we are! Seeking God's protection, the protection that God gives us,  they both are acts of LOVE.

APPLICATION: When I say I trust God, it is not an expression of my weaknesses or incompetence . Rather, I express my love and trust on God. When the most high God is ready to offer his shelter to me, I can find no better place to live than it. For he gives me the best protection that goes beyond any human comprehension. Some times, I may not be able to explain how he protects me. But I can experience his protection everyday, with the peace he gives. 

PRAYER: Father God, thank you for being my refuge and my fortress. Nothing can harm me when I am under your protection. Even if I have to go through any tough times, you will help me to come out victoriously. Because you love me. Help me to love and trust you better everyday. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

கர்த்தர் என் அடைக்கலம்

வாசிக்க: உபாகமம் 29, 30; சங்கீதம் 91, லூக்கா 2:1-24

வேதவசனம்: சங்கீதம் 91: 9. எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய் (தங்கும் இடமாக ஆக்கிக் கொண்டாய்). 
10. ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

கவனித்தல்: தேவனை நம்புகிற, தேவனுடைய பாதுகாப்பைத் தேடுகிற ஒரு விசுவாசியால் அதிகம் பயன்படுத்தப்படும் சங்கீதங்களில் ஒன்றாக சங்கீதம் 91 இருக்கின்றது. தேவன் இருக்கின்ற இடம் ஒரு பாதுகாப்பான புகலிடம் ஆகும். ஆயினும், ஒருவர் வெளிப்படையாக தேவன் மேல் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்போது, அவர் தேவனுடைய பாதுகாப்பை பெற்றனுபவிக்க ஆரம்பிக்கிறார். தேவனைத் தங்கள் புகலிடமாக்கிக் கொண்டு வாழ்பவர்கள் எதிரிகளின் மற்றும் (கொள்ளை)நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அது பகலாயிருந்தாலும் சரி, இரவு நேரமாக இருந்தாலும் சரி, தேவனால் பாதுகாக்கப்படுகிற ஒருவர் துன்மார்க்கரைப் போல எதிரிகளாலும், நோய்களாலும் பாதிக்கப்பட மாட்டார். தேவனே நீரே எங்கள் புகலிடம், தஞ்சம் என்று நாம் சொல்லும்போது நாம் ஆன்மீக மற்றும் சரீர பாதுகாப்பு என இரண்டையுமே பெற்றனுபவிக்கிறோம். நாம் எந்தளவுக்கு பாதுகாக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் பாருங்கள்! தேவனுடைய பாதுகாப்பைத் தேடுதல், மற்றும் தேவன் நமக்குத் தரும் பாதுகாப்பு, இவை இரண்டுமே அன்பின் செயல்கள் ஆகும்.
 
பயன்பாடு: நான் தேவனை நம்புகிறேன் என்று சொல்லும்போது, அது என் பலவீனங்களின் வெளிப்பாடோ அல்லது திறமையின்மையின் வெளிப்பாடோ அல்ல. மாறாக, நான் தேவன் மேல் கொண்டிருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு செயல் ஆகும். உன்னதமான தேவன் தான் தங்கும் இடத்தை எனக்கு புகலிடமாகக் கொடுக்க தயாராக இருக்கும்போது, அதை விட சிறந்த இடத்தை வாழ்வதற்கு என்னால் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், அவர் மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்ட மிகச் சிறந்த பாதுகாப்பை எனக்குத் தருகிறார். சில நேரங்களில், அவர் என்னை எவ்விதம் பாதுகாக்கிறார் என்பதை என்னால் விளக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர் தரும் சமாதானத்துடன் நான் அவருடைய பாதுகாப்பை அனுதினமும் அனுபவிக்க முடியும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நீர் என் புகலிடமாகவும், என்னைப் பாதுகாக்கும் கோட்டையாகவும் இருப்பதற்காக நன்றி. நான் உம் பாதுகாப்பின் கீழ் இருக்கும்போது எதுவும் என்னைச் சேதப்படுத்த முடியாது. நான் ஏதேனும் கடினமான தருணங்களைக் கடந்து செல்ல வேண்டியதாயிருந்தாலும், நான் வெற்றி பெற்று அதிலிருந்து வெளிவர நீர் உதவி செய்வீர். ஏனெனில், நீர் என்னை நேசிக்கிறீர். ஒவ்வொரு நாளும் உம் மீது கொண்ட அன்பிலும், நம்பிக்கையிலும் பெருக எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Wednesday, March 31, 2021

ஆசீர்வாதம் அல்லது சாபம் - உங்கள் விருப்பம்!

வாசிக்க: உபாகமம் 27, 28; சங்கீதம் 90, லூக்கா 1:39-80

வேதவசனம்: உபாகமம் 27:9. பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.
10. ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.

கவனித்தல்: உபாகமம் 27, 28ம் அதிகாரங்களில் தேவனுக்கும், அவருடைய கற்பனைகளுக்கும் கீழ்ப்படிதலின் அடிப்படையில் இஸ்ரவேலர்கள் மேல் வரும் ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் பற்றிய ஒரு பட்டியலை நாம் காண்கிறோம். இந்த இரண்டு அத்தியாயத்திலும் தேவனுடைய ஆசீர்வாதங்களை விட சாபங்களைப் பற்றிய வசனங்களே மிக அதிகமாக இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். இந்த அத்தியாயங்களைப் படிக்கும்போது,  இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள் முறையே கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையின் விளைவாக வருபவையாக இருக்கும் என்பதை புரிந்துகொள்கிறோம். இந்த அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் அனைத்தும் உபாகமம் 27:10 ல் சொல்லப்பட்டிருக்கிற கீழ்ப்படிதலுடன் தொடர்புடையது என்பதை நாம் கண்டறிய முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பே, இஸ்ரவேலர்கள் தேவனுடைய ஜனங்களாகி விட்டனர் என்பது உண்மைதான் என்றாலும்,  “இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்” என்றும், ”இன்று ....அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக” என்றும் வருகிறதை நாம் காண்கிறோம். இந்த நிகழ்வு உடன்படிக்கையின் புதுப்பித்த மற்றும் இஸ்ரவேலர்கள் தேவன் மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பை திரும்பவும் உறுதிப்படுத்திக் கொண்ட ஒரு நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். இந்த உலகத்தின் இரைச்சலான சூழலில், ஆண்டவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் கேட்க முடியாமல் போகலாம். என் ஆத்துமாவே, அமைதலாக அமர்ந்திருந்து, ஆண்டவர் இன்று உன்னிடம் என்ன பேசுகிறார் என்பதைக் கவனித்துக் கேள். 
 
பயன்பாடு: கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் மற்றும் அவருடைய கற்பனைகளின் படி வாழ்தல் ஆகியவை எப்பொழுதுமே பரலோக மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களை கொண்டுவருகிறது. நான் என்ன செய்கிறேன் என்பது தான் என் வாழ்வின் நான் எதைப் பெற்றுக்கொள்வேன் என்பதை தீர்மானிக்கிறது. நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்தால், நான் என் வாழ்வில் எல்லா ஆசீர்வாதங்களையும் காண்பேன். ஆயினும், நான் தேவனுக்குச் சொந்தமானவன் என்பதே மிகப்பெரிய ஆசீர்வாதம் ஆகும். என் தேவனுடைய ஜனங்களில் ஒருவராக நான் இருக்கிறேன். அனுதினமும் நான் இதை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டு, இன்று நான் எந்தெந்த பகுதிகளில் கீழ்ப்படிதலுள்ளவராக இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ள நான் அவரை நோக்கிப் பார்க்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளில் ஒருவராகிய நான் அவருக்குக் கீழ்ப்படிந்து, என் வாழ்வில் அனுதினமும் அவருடைய கற்பனைகளைப் பின்பற்றுவேன். இதுவே என் விருப்பம்! 
 
ஜெபம்:  பிதாவாகிய தேவனே, என்னை நினைவுகூர்ந்து, அனுதினமும் உம் அன்பின் உறவை புதுப்பித்துக் கொண்டிருப்பதற்காக நன்றி. என் அனுதின வாழ்வில் அக்கறை உள்ளவராக நீர் இருக்கிறீர். இன்று நான் உமக்குக் கீழ்ப்படியவும், உம் கற்பனைகளைப் பின்பற்றவும் உதவி செய்யும். ஆமென். 


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573