Friday, July 2, 2021

குணசாலியான பெண் யார்?

வாசிக்க: 2 நாளாகமம் 1, 2; நீதிமொழிகள் 31; அப்போஸ்தலர் 3

வேத வசனம்: நீதிமொழிகள் 31: 10. குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

கவனித்தல்: விலையேறப் பெற்ற முத்துக்கள் அல்லது இரத்தினங்கள்(gems) மிகவும் அரிதானவை; அவை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை, அவற்றின் விலையோ மிகவும் அதிகம். ஆகவே, எல்லாராலும் அதிக விலை உள்ள இரத்தின கற்களை வாங்க முடியாது. குணசாலியான பெண்ணைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினம் என்ற புரிதலுடன் நீதிமொழிகள் 31:10 இல் உள்ள கேள்வியானது அனைவருக்கும் பதில் தெரிந்த ஒரு கேள்விதான் என சிலர் கருதுகின்றனர். விலையேறப்பெற்ற முத்துக்களை கண்டு பிடிப்பதைக் காட்டிலும் குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பது அருமையானது என்று வேறு சிலர் விளக்கம் தருகின்றனர். விளக்கம் எதுவாக இருந்தாலும், ஒரு சிறந்த பெண்ணின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய ஒரு அழகான குறிப்பை நீதிமொழிகள் 31:10-31 தருகிறது. நீதிமொழிகள் 31ல் குறிப்பிடப்பட்டிருக்கிற குணசாலியான பெண்ணின்  கடின உழைப்பு மற்றும் முயற்சிகளைப் பார்க்கும்போது, யார் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என அனேகர் நினைக்கின்றனர். ஆயினும், “கர்த்தருக்குப் பயப்படுகிற” பெண்ணே அந்த குணசாலியான, சிறந்த மற்றும் உயர்ந்த மனதுடைய பெண் என நீதிமொழிகள் 31:30 கூறுகிறது.  இப்படிப்பட்ட தேவ பயம் நிறைந்த பெண்களை நாம் எல்லா இடங்களிலும் காண முடியும். அவர்கள் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றவர்கள். குணசாலியான பெண்கள் அவர்களுடைய குடும்பத்திற்கு உண்மையிலேயே ஒரு கிரீடமாக இருக்கிறார்கள் (நீதி.12:4). அப்படிப்பட்ட சிறப்பான/ குணசாலியான பெண்கள் நம் புகழ்ச்சிக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். 

 பயன்பாடு: அழகும், சவுந்தரியமும் ஒரு பெண்ணுக்கு மதிப்பைக் கொடுக்கிறதாக நவீன உலகம் சித்தரிக்கிறது. நம் ஊடகங்கள் பெண்மையைப் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை முன் வைக்கின்றன. “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” என்று வேதம் சொல்கிறது. மனிதர் பார்க்கிற படி தேவன் பார்ப்பதில்லை, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் (1 சாமு.16:7). தேவ பயம் உள்ள என் இருதயத்தை தேவன் பார்க்கிறார். தேவன் பார்ப்பது போல நான் மற்றவர்களைப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். வேதம் சொல்வது போல, “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” கர்த்தருக்குப் பயப்படுதலானது தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையைத் துவங்க அல்லது/மற்றும் தொடர தேவையான ஞானத்தைத் தருகிறது. 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் குடும்பத்தில், சபையில், சமுதாயத்தில், மற்றும் தேசத்தில் இருக்கிற தேவ பக்தியுள்ள அனைத்து பெண்களுக்காகவும் உமக்கு நன்றி.  சொல்கிறேன்.ஆண்டவரே, இப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட பெண்கள் அனேகரை எங்கள் மத்தியில் எழுப்புங்கள். இயேசுவே, ஒவ்வொரு பெண்ணிலும் தேவனுடைய சாயலைக் காண எனக்கு உதவுங்கள். தகப்பனே, கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு என் கண்களையும் இருதயத்தையும் திறந்தருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 182

Who is the woman of noble character?

READ: 2 Chronicles 1, 2; Proverbs 31; Acts. 3

SCRIPTURE: Proverbs 31: 10 A wife of noble character who can find? She is worth far more than rubies.

OBSERVATION: Precious stones or gemstones are rare; they are not available everywhere, and they are costly. So, everyone cannot afford to buy high-priced gemstones. Some consider Proverb 31:10 as a rhetorical question with an understanding that it is hard to find a woman of noble character. Some explain that finding a woman of noble character is more precious than any precious stone. In any case, Proverbs 31:10-31 presents a beautiful description of the characteristics and lifestyle of an ideal woman. Looking at the hard work and efforts of the virtuous woman described in Proverbs 31, many think that who could ever live like that? However, Proverbs 31: 30 alludes that “a woman who fears the Lord” is that ideal, virtuous, noble, and excellent woman. We can find such god-fearing women everywhere. They are precious in the sight of God. A woman of noble character is indeed a crown to her family (Pro.12:4). Such noble women deserve our praise and honor.

APPLICATION: The modern world portrays that charm and beauty add value to a woman. Our media gives a distorted image of womanhood. But the Bible says, “Charm is deceptive, and beauty is fleeting; but a woman who fears the Lord is to be praised.” I should remember, “The Lord does not look at the things people look at. People look at the outward appearance, but the Lord looks at the heart” (1 Sam.16:7). My God sees my heart that fears him. I should learn to see others, like God sees. As the Bible says, “the fear of the Lord is the beginning of wisdom.” The fear of the Lord gives me the wisdom to start or/and to continue to live a life that pleases him.

PRAYER: Father God, thank you for all the godly women in my family, church, society, and country. Lord, raise more such blessed women among us. Jesus, help me to see the image of God in each woman. Father, open my eyes and heart to fear the Lord. Amen.

 - Arputharaj Samuel

+91 9538328573

Day - 182

Thursday, July 1, 2021

நீங்கள் இயேசுவுக்கு சாட்சிகள்

வாசிக்க: 1 நாளாகமம் 27-29; நீதிமொழிகள் 30; அப்போஸ்தலர் 2:14-47

வேத வசனம்: அப்போஸ்தலர் 2: 32. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

கவனித்தல்: இயேசுவின் சிலுவை மரணத்திற்கு முன்பு, இயேசுவைப் பின்பற்றும் ஒரு உறுதியான விசுவாசி என்று தன்னைப் பற்றி பேதுரு நினைத்தான்; இயேசுவுக்காக சாகவும் தயாராக இருப்பதாக சொன்னான். ஆயினும், ஒரு முக்கியமான வேளையில், இயேசுவைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி, பேதுரு அவரை மறுதலித்தான் (மத்.26:33, 69-75; மாற்கு.14:29, 66:72; லூக்கா.22:33, 54-62; யோவான்.13:37; 18:15-27) என வாசிக்கிறோம். அப்போஸ்தல நடபடிகள் 2ம் அதிகாரத்தில், இயேசுவின் நற்செய்தி மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி தைரியமாக பேசுகிற, வித்தியாசமான மற்றும் மாற்றமடைந்த பேதுருவை நாம் காண்கிறோம். யூதர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை தேவன் மரித்தோரில் இருந்து உயிரோடெழுப்பினார் என்று பயமின்றி பிரசங்கித்தார். பயந்து இயேசுவை மறுதலித்த அதே பேதுரு, “அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது” என்றும், “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்” என்றும் தைரியமாகக் கூறினார். சில நாட்களுக்குப் பின், “ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்” என்றும் பிரசங்கித்தார் (3:15). இந்த இரு முறையும், இயேசுவுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, நான் இயேசுவைச் சேர்ந்தவன் என்று சொல்ல அவர் தயங்க வில்லை. மாறாக, நாங்கள் இயேசுவுக்கு சாட்சிகளாயிருக்கிறோம் என்று பகிரங்கமாக அறிவித்தார். 

கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுத்தல் அல்லது சாட்சியாக இருத்தல் என்பது அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தின் ஒரு முக்கியமான கருப்பொருள் ஆகும். அப்போஸ்தலர்களும் ஆதித்திருச்சபையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எப்படி சாட்சி கொடுத்தனர் என்பதைப் பற்றி ஒவ்வொரு அதிகாரத்திலும் நாம் பார்க்கலாம். பேதுருவின் வார்த்தையிலும், மற்றவர்களின் வாழ்க்கையிலும் இந்த அதிரடி மாற்றம் உண்டாக காரணம் என்ன? அப்போஸ்தலர் 2:1-4, மேல்வீட்டறையில் கூடியிருந்த பேதுருவும் மற்ற சீடர்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். தம் பரமேறுதலுக்கு முன், பிதாவின் வாக்குத்தத்தத்தைப் பெற எருசலேமில் காத்திருக்கும்படி தம் சீடர்களுக்கு இயேசு சொல்லியிருந்தார். மேலும், அவர்கள் பரிசுத்த ஆவியின் பலத்தைப் பெறுவார்கள் என்றும் எருசலேம் துவங்கி உலகத்தின் கடைசி பரியந்தம் தனக்கு சாட்சிகளாக இருப்பார்கள் என்றும் சொல்லி இருந்தார் (அப். 1:4-8). ஒரு வார காலத்திற்கும் அதிகமாக, இயேசு பரமேறிய நாளில் இருந்து பெந்தெகோஸ்தே நாள் மட்டும், பேதுருவும் மற்ற சீடர்களும் (மொத்தத்தில் 120 பேர்) ஜெபத்தில் தரித்திருந்தார்கள். காத்திருந்த அவர்கள் அனைவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் பலத்தைப் பெற்று இயேசு கிறிஸ்துவின் வல்லமையான சாட்சிகளாக மாறினார்கள். கடந்த காலத்தில், நாம் விரும்பியபடி கர்த்தருக்காக வாழ முடியாமல் நாம் தவறி இருக்கலாம். ஆயினும், நாம் உன்னதத்தில் இருந்து வரும் பலத்தைப் பெறும்போது, தேவன் நம் மூலமாக செய்ய விரும்புகிறதைச் செய்வதற்கான பலத்தை, பரிசுத்த ஆவியானவர் நமக்கு தருகிறார். நாமும் கூட இயேசுவுக்கு சாட்சிகளாக இருக்கிறோம். “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார்.  நாம் இயேசுவுக்கு சாட்சிகளாக இருக்கிறோமா? நாம் இன்னமும் கூட பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட வேண்டியவர்களாக இருக்கக் கூடும். பேதுருவும் மற்ற சீடர்களும் பெற்றது போல, கர்த்தருக்காக காத்திருக்கும் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பெற்றுக் கொள்கிறார்கள். 

பயன்பாடு: உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு இன்றும் கூட அனேகரின் வாழ்க்கையைத் தொட்டு, மாற்றத்தை உண்டு பண்ணுகிறார். அவர் ஒருபோதும் மாறாத ஆண்டவர். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ள அவர் என்னைப் பலப்படுத்துகிறார். நான் இயேசுவுக்கு சாட்சியாக இருக்கிறேன்; என்னுடைய பலத்தில் அல்ல, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால். உயிர்த்தெழுந்த இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார்; அவரே என் ஜீவனின் அதிபதியானவர். 

ஜெபம்: இயேசுவே, என் பலவீனங்களை மேற்கொள்ளவும் நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் நீர் தருகிற பரிசுத்த ஆவியின் வரத்திற்காக உமக்கு நன்றி. உம் கிருபைக்கு ஒரு சாட்சியாக இருக்க என்னை அழைத்ததற்கு நன்றி.  தேவனே, நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், ஜனங்கள் உம் மன்னிப்பு மற்றும் இரட்சிப்பையும் பெறும்படி வழிநடத்தவும் உம் ஆவியினால் என்னை நிரப்பியருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 181

You are witnesses to Jesus

READ:  1 Chronicles 27-29; Proverbs 30; Acts. 2:14-47

SCRIPTURE: Acts. 2: 32 God has raised this Jesus to life, and we are all witnesses of it

OBSERVATION: Before Jesus’ crucifixion, Peter thought of himself that he was a strong follower of Jesus; and he was ready even to die for Jesus. However, at a crucial juncture, Peter disowned, denied the Lord that he knew nothing about Jesus Christ (Mt.26:33, 69-75; Mk.14:29, 66:72; Lk.22:33, 54-62; Jn.13:37; 18:15-27).  In Acts 2, we see a different and transformed Peter who confidently proclaims the Gospel of Jesus and his resurrection. He fearlessly preached that God raised Jesus, who was crucified by the Jews, from the dead. The same Peter who denied Jesus out of fear was boldly saying that “it was impossible for death to keep its hold on him” and “God has raised this Jesus to life”; After a few days, he preached, “You killed the author of life, but God raised him from the dead” (3:15). On both of these occasions, he was not reluctant to identify himself with Jesus. Instead, he declares, “we are all witnesses.” 

Witnessing Christ is a major theme in Acts; each chapter testifies how the apostles and the early church gave witness to the Lord Jesus Christ. What brought this dramatic change in Peter’s words and others’ life. As we read in Acts 2:1-4, apostle Peter, other disciples, and all who gathered in the upper room were filled with the Holy Spirit. Before his ascension, Jesus asked his disciples to wait in Jerusalem to receive the promised gift of the Father and said that they would receive the power of the Holy Spirit and would become his witnesses, from Jerusalem to the ends of the earth (Acts 1:4-8). For more than a week, from the day of Jesus’ ascension to the day of Pentecost, Peter and others (a group of 120 people ) spent their time in prayer. They all received the power of the promised Holy Spirit and became mighty witnesses of Jesus Christ. In the past, we may have failed to stand and live for the Lord as we desired. However, when we receive the strength from above, the Holy Spirit gives us his anointing to do what God wants to do through us. We, too, are witnesses to Jesus Christ. Our Lord Jesus said, “you will receive power when the Holy Spirit comes on you; and you will be my witnesses in Jerusalem, and in all Judea and Samaria, and to the ends of the earth.” Are we witnesses to Jesus?  We may still need to be filled with the Holy Spirit. Like Peter and other disciples received, all who wait for the Lord receive the power of the Holy Spirit.

APPLICATION: The risen Lord Jesus Christ continues to touch and transforms the lives of many people even today. He is the unchanging Lord. He empowers me with his Holy Spirit to proclaim the Gospel of Jesus to others. I am a witness to Jesus Christ, not by my strength but by the power of the Holy Spirit. Jesus is alive; he is the author of my life.

PRAYER: Jesus, thank you for the gift of the Holy Spirit to overcome my weaknesses and to proclaim the Gospel. Thank you for calling me to be a witness to your grace. God, fill me with your Spirit to preach the Gospel and lead people to receive your forgiveness and salvation. Amen.

 - Arputharaj Samuel

+91 9538328573

Day - 181

Wednesday, June 30, 2021

அன்பின் ஒழுங்கு

வாசிக்க: 1 நாளாகமம் 25, 26; நீதிமொழிகள் 29; அப்போஸ்தலர் 2:1-13

வேத வசனம்: நீதிமொழிகள் 29: 15. பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
17. உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

கவனித்தல்: சமீப காலங்களில், நம் சமுதாய மற்றும் குடும்ப வாழ்வில் பல மாற்றங்களை நாம் காண்கிறோம். பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுப்பதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக தங்கள் வேலையில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அதுபோல, குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், மற்றும் மொபைல் போன் என  பொழுதுபோக்கு சாதனங்களுடன் செலவிடுகிறார்கள். ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்வது ஒரு தனி நபரின் பொறுப்பு என நவீன உலகம் கூறுகிறது. ஆயினும், நாம் உலகில் காணும் ஒழுக்கம் சார்ந்த பல பிரச்சனைகள் மற்றும் சீர்கேடுகளுக்கு அது எவ்வித தீர்வதையும் தருவதில்லை. மறுபுறம், தேவ ஞானத்துடன் நம் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது. “ பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்” என நீதிமொழிகள் 29:15 கூறுகிறது. அப்படியெனில், நம் கோபத்தை வெளிப்படுத்த, நம் குழந்தைகளை கடுமையாக தண்டிக்கலாம் அல்லது திட்டலாம் என்றோ வேதாகமம் நம்மை அனுமதிக்கிறது என்று அர்த்தம் அல்ல. மாறாக, ஞானத்தை அளிக்கும்படி நம் குழந்தைகளை முறையாக சிட்சிப்பது பற்றி வேதம் போதிக்கிறது. அன்பான பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிட்சித்து, உலகத்தின் ஆபத்துகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்கள் என வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 13:24; 19:18; 22:15; 23:13, 14). குழந்தை வளர்ப்புடன் தொடர்புடைய பெற்றோருக்கான இந்த ஒழுங்கு அன்பின் அடிப்படையில் ஆனது என்பது நினைவில் இருக்கட்டும் (நீதிமொழிகள் 3:11,12; எபிரெயர்.12:5-11). முறையாக சிட்சிக்கப்பட்ட ஒரு பிள்ளையானது தன் பெற்றோருக்கு கனத்தையும், அமைதியையும், மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று நீதிமொழிகள் 22:6 கூறுகிறது. தற்காலத்தில் பெற்றோரிடம் காணப்படுகிற முக்கியமான பிரச்சனை என்னவெனில், பலர் தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளத் தயாராக இல்லை; ஆனால் தங்கள் பிள்ளைகள் மட்டும் எல்லாவற்றிலும் மிகவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எந்த சாக்குப்போக்குகளையும் சொல்லாமல், நாம் யாராக இருந்தாலும், வேதாகம ஒழுங்கையும் போதனைகளையும் பின்பற்றி, நம் இளைய/ எதிர்கால தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் இருக்க வேண்டும். அது நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அனேகருக்கு ஞானத்தையும், சமாதானத்தையும், மற்றும் மகிழ்ச்சியையும் அளிக்கும். 

பயன்பாடு: என் வாழ்க்கையை தேவன் ஒழுங்குபடுத்தும்படி/சிட்சிக்கும்படி நான் அவரை அனுமதிக்க வேண்டும். அவருடைய கோலும் தடியும் என்னை சரிப்படுத்தி/திருத்தி, என்னை தேற்றுகிறது. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் தேவனுடைய வார்த்தையானது எனக்கு வழி (ஒளி) காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவில், பிதாவாகிய என் தேவன் அவருடைய சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், மற்றும் ஞானத்தையும் கண்டு கொள்ளவும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவுகிறார். 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, என்னை சிட்சிக்கும் உம் அன்பிற்காக நன்றி. பரிசுத்தத்திலும், அன்பிலும், மற்றும் நீதியிலும் நான் உம்மைப் போல மாற/வாழ வேண்டும் என நீர் விரும்புகிறீர். அன்பின் ஆண்டவரே, உம் ஞானமுள்ள வார்த்தைகளை தவறாமல் கேட்டு, கீழ்ப்படிய எனக்கு உதவியருளும். ஆமென். 

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 180