Wednesday, December 1, 2021

கடினமான தருணங்களில் ஜெபித்தல்

வாசிக்க: தானியேல் 5,6; சங்கீதம் 149; 1 பேதுரு 5

வேத வசனம்:  தானியேல் 6: 10. தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

கவனித்தல்: வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கும்போது, நாம் வழக்கமாக செய்யும் வேலைகளை குறைவின்றி செய்வது எளிதானதாக இருக்கும். ஆயினும், ஒரு பிரச்சனை வரும்போது அப்படி செய்வது சவாலானதாக மாறுகிறது. ஒரு காரியத்தை நாம் தொடர்ந்து செய்யும்போது, அது பழக்கமாக மாறிவிடுகிறது. அதன்பின், அந்த குறிப்பிட்ட காரியத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்வது எளிதானதாக இருக்கும். தானியேல் 6:10 இல், தானியேலின் வழக்கமான ஜெபப் பழக்கத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம். தானியேல் 5:29-30 இல் நாம் வாசிப்பது போல, பாபிலோன்ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரி”யாக தானியேல் இருந்தான். தேசாதிபதிகள் அனைவரும் தானியேலின் நேர்மை மற்றும் வேலையில் உண்மையுள்ளவனாக இருந்ததை அறிந்திருந்தார்கள்.  அவனிடத்திலே அவர்களால் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க இயலவில்லை (வ.4). தானியேல் அந்த சமயத்தில் சுமர் 80 வயது நிறைந்தவனாக இருந்தான் என வேத அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படியானால், தாவீது சுமார் 65 ஆண்டுகள் பாபிலோனில் வேலை செய்திருக்கிறான். இங்கே தேசாதிபதிகள் தானியேலுக்கு எதிராக அவனை பதவியில் இருந்து அகற்றுவதற்காக அவனைச் சிக்க வைக்க ஒரு அரச சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். நம்மை சிக்கவைப்பதற்காக அல்லது அழிப்பதற்காக ஒரு சட்டம் அமல் செய்யப்பட்டால், நாம் எப்படி நடந்துகொள்வோம்? நாம் நம்மை ஒளித்துக் கொண்டு அல்லது நம் செயல்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைத்துக் கொண்டு சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளாதபடி இருக்க முயற்சி செய்வோம். தானியேலைப் பொறுத்தவரையில், அந்தப் புதிய சட்டமானது தானியேலின் பக்தியுள்ள ஜெப வாழ்வில் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண வில்லை.

அந்த புதிய சட்டத்திற்கு தானியேல் கொடுத்த பதில் என்னவெனில், “தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க,” ஜெபித்தான். அதன் பின்விளைவுகளை அறிந்திருந்த போதிலும், தன் ஜெப வாழ்க்கையை மறைத்து வைக்க அவன் முயற்சி செய்யவில்லை.  அனுதினமும் மூன்றுவேளை முழங்கால் படியிட்டு ஜெபிக்கும் பழக்கத்தை உடையவனாக தானியேல் இருந்தான். தானியேல் ஜெபித்தபோது, அவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான் என வாசிக்கிறோம். அதுவே அவனுடைய ஜெப வாழ்வின் இரகசியம். நம்மில் பலர் ஜெபிக்கும்போது, நம் தேவைகளையே சொல்லிச் சொல்லி தேவனிடம் ஜெபிக்கிறோம். நம் வாழ்வில் நாம் சந்திக்கிற பிரச்சனைகளுக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்கிறோமா? ஜெபிக்கும் கிறிஸ்தவர்கள் எல்லாவற்றிற்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவார்கள். ஏனெனில், அவர்கள் தேவனுடைய மாட்சிமையான ஆளுகை அதிகாரத்தை விசுவாசிக்கிறார்கள். தானியேலின் எதிர்கள் தங்கள் திட்டத்தில் வெற்றி பெற்றதாக நினைத்து, தானியேலைக் கொல்ல விரைந்தார்கள்.  ராஜாவாகிய தரியு கூட தானியேலைக் காப்பாற்ற முடியவில்லை. ஆயினும், இந்தக் கதையானது இத்துடன் முடிந்து விடவில்லை.

தானியேலை சிங்கங்களின் வாய்க்கு இரையாகாமல் தேவன் பாதுகாத்தார். அதன்பின் ராஜாவாகிய தரியு தன் ஆளுகையின் கீழ் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட முடியாத ஒரு சட்டத்தை இயற்றி, ”யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தார் (வ.26). தேவன் சூழ்நிலையையும் அந்த 120 தேசாதிபதிகளின் திட்டத்தையும்  மாற்றினார். அவர்கள் அழிந்து போனார்கள். ”தேவன் இன்னமும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், நாம் அவருடைய பாதப்படியில் நாம் இருக்கிறோம். அவருக்கும் நமக்கும் இடையில் உள்ள தூரம் முழங்காலளவு தூரமே” என ஜிம் எலியட் என்ற மிஷனெரி கூறுகிறார். நாம் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் செய்ய வேண்டும் என நம் ஆண்டவராகிஅய் இயேசு நமக்குப் போதித்திருக்கிறார் (லூக்கா 18:1). ”இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (1தெச.5:17). நம் ஜெபங்கள் வல்லமையுள்ளவையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. காரியங்கள் மிகவும் மோசமாகும்போது, நாம் ஜெபத்தில் தேவனிடம் சென்று, அவரில் நாம் நம்பிக்கை கண்டு கொள்ளலாம். ஏனெனில், ”அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்” (தானி.6:26).

பயன்பாடு:  என் ஜெபங்களுக்கு பதிலளிக்கிற தேவனை நான் ஆராதிக்கிறேன். அவர் என் தேவைகளையும் என் இருதயத்தையும் அறிந்திருக்கிறார். நான் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போதும் கூட ஜெபிக்கும்படி வேதம் எனக்கு போதிக்கிறது. நான் ஜெபிக்கும்போது, தேவனை சார்ந்து நான் இருப்பதையும், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் அனைத்தும் இருக்கிறது என்ற என் விசுவாசத்தையும் நான் வெளிப்படுத்துகிறேன்.  சில வேளைகளில் நான் ஜெபித்து முடித்ததும் உடனடி மாற்றங்களை நான் காணாமல் போகலாம். ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்கிறதற்கும், எல்லாவற்றிற்கும் தேவனை நம்புவதற்கும் தேவையான வலிமையை ஜெபம் எனக்குத் தருகிறது. அரசாங்கங்கள், ஆட்சியாளர்கள் மாறலாம்; “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1 பேதுரு 1:25). தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. தேவனையும் அவருடைய வல்லமையையும் நம்பி, நான் ஜெபத்தில் அவரிடம் சென்று, எல்லாவற்றிற்கும் நான் அவரை ஸ்தோத்தரிக்க முடியும்.

ஜெபம்: அப்பா பிதாவே, என் ஜெபங்கள் எல்லாவற்றிற்கும் பதில் தருகிறதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் ஜெப முன்மாதிரியைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, என் பலவீனங்களில் எனக்கு உதவி செய்து, “வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு” எனக்காக வேண்டுதல் செய்கிறதற்காக உமக்கு நன்றி. என் தேவனே, என் வாழ்க்கையை உம் கரங்களில் அர்ப்பணிக்கிறேன். உம் விருப்பப்படி, உம் சித்தத்தின்படி எனக்கு செய்தருளும். இயேசுவின் நாமத்தில், ஜெபம் கேளும் நல்ல பிதாவே. ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 332

Praying in tough times

READ: Daniel 5,6; Psalms 149; 1 Peter 5

SCRIPTURE: Daniel 6: 10 Now when Daniel learned that the decree had been published, he went home to his upstairs room where the windows opened toward Jerusalem. Three times a day he got down on his knees and prayed, giving thanks to his God, just as he had done before.

OBSERVATION: When everything goes well, we find it easier to do our regular works without any lack. However, it becomes challenging when a crisis comes. We know that when we do something regularly, it becomes a habit. Then it would be easy to do that particular thing anywhere and anytime. In Dan.6:10, we read about Daniel’s praying habit. As we read in Daniel 5: 29-30, Daniel was “the third highest ruler in the kingdom” of Babylonia. Every satrap knew that Daniel was a man of integrity and diligent in his works. They could find “no corruption in him” (v.4).  Bible experts say that Daniel was about 80 years at this time. If so, Daniel served in Babylon for almost 65 years. Here, the satraps tried to ensnare Daniel with the royal decree specifically aimed at him and remove him from his position. How will we behave if a particular law is enacted to trap and destroy us! We may try to hide ourselves or our activities to escape from being caught up. For Daniel, the new law made no changes in his godly and prayer life.

Daniel’s response to the enactment of the new law was, “he went home to his upstairs room where the windows opened toward Jerusalem” and prayed.  Despite knowing the outcomes, he did nothing to hide his prayer life. Daniel had the habit of praying regularly on his knees three times a day. When Daniel prayed, he gave thanks to God. It is the secret of his prayer life. Many of us, when we pray, we always ask God our needs. Do we thank God for the crises we face in our lives? Praying Christians will always thank God for everything, for they believe in the sovereignty of God. Daniel’s enemies thought they were successful in their plan and hurried to execute it. Even King Darius could do nothing to save Daniel. Nevertheless the story does not end here.

God protected Daniel from the mouths of lions, and then King Darius issued an irrevocable decree to all the people under his rule that they “must fear and reverence the God of Daniel” (v.26). God changed the situation, and all the 120 satraps’s plans and their lives perished. Jim Eliot said, “God is still on His throne, we’re still His footstool, and there’s only a knee’s distance between!” Our Lord Jesus teaches that we “should always pray and not give up” (Luke 18:1). The Bible encourages us to “pray continually” (1 Thes.5:17). Our prayers are powerful and effective. When things become worst and hard to pray, we can still go to God in prayer and find hope in him.  “For he is the living God and he endures forever; his kingdom will not be destroyed, his dominion will never end” (Dan.6:26).

APPLICATION: I worship the God who answers my prayers. He knows my needs and my heart. The bible teaches me to pray to God even when I face difficult times. When I pray, I express my dependency on God and faith in him that everything is under his control. Sometimes I may not see immediate changes after praying, but it gives me the strength to face any situation and trust God for everything. Governments and rulers will come and go, “but the word of the Lord endures forever” (1 Pet.1:25). God never changes. Trusting God and his power, I can go to him in prayer and “give thanks in all circumstances.”

PRAYER: Abba Father, thank you for answering all my prayers. Jesus, help me to follow your example of prayer. Holy Spirit, thank you for your help in my weaknesses and interceding for me “through wordless groans.” My God, I submit my life in your hands, do as you please, according to your will. In Jesus' name, I pray. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 332

Tuesday, November 30, 2021

தீமிதித்தலும் மற்றும் விசுவாசத்தில் நடப்பதும்

வாசிக்க: தானியேல் 3,4; சங்கீதம் 148; 1 பேதுரு 4

வேத வசனம்:  தானியேல் 3: 16. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
17. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
18. விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

கவனித்தல்:  தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பெண் தெய்வங்களை வணங்குபவர்கள் தீமிதி திருவிழாவை வருடந்தோறும் நடத்துகிறார்கள். எவ்வித பாதிப்புமின்றி நெருப்புக்கனலின் மேல் நடப்பதற்கு தங்கள் தெய்வங்கள் உதவுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.  தீமிதித்தல் பயம் மற்றும் நெருப்பு மீது வெற்றிபெறுகிற உணர்வையும், சுயநம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை பற்றிய உறுதியையும் பக்தர்களுக்குக் கொடுப்பதாக மக்கள் நம்பினாலும், தீக்கதிர்களின் வெப்பத்தைக் கடத்தும் திறன் மிகக் குறைவு என்பதால், தீமிதித்தல் என்பது எவரும் செய்யக் கூடிய ஒன்றே என்று அறிவியலார் கூறுகின்றனர். தீ மிதிக்கும்போது பொதுவாக பக்தர்கள் வேகமாக நடப்பதை அல்லது ஓடுவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

சாத்ராக், மேஷாக், மற்றும் ஆபேத்நேகோ என்பவர்களின் கதை மிகவும் உற்சாகமளிக்கிறதும், தேவனை மட்டுமே ஆராதித்து உபத்திரவங்களுக்கு எதிராக தைரியமாக நிற்க மன உந்துதலைத் தருகிற ஒரு சம்பவம் ஆகும். இங்கு, ராஜாவின் கோபத்தின் நிமித்தமாக, அந்த அக்கினிச் சூளையானது ஏழுமடங்குஅதிக சூடாக்கும்படி உத்தரவிடப்பட்டது. மிகவும் வலிமை வாய்ந்த இராணுவ வீரர்கள் கூட அந்த அக்கினியின் உஷ்ணத்திற்கு தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை; அந்த இளம் வாலிபர்களை நெருப்பில் போட அவர்கள் தூக்கிக் கொண்டு வந்தபோது, வலிமையான அந்த ராணுவ வீரர்கள் அனைவரும் மரித்துப் போயினர். ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று பேரோ, ”விடுதலையாய் அக்கினியின் நடுவிலே” உலாவிக் (நடந்து) கொண்டிருந்தார்கள். அவர்களுடனே நடந்து கொண்டிருந்த நான்காவது ஆளைக் கண்டபோது ராஜா ஆச்சரியமடைந்தான். அவர்கள் கட்டப்பட்டவர்களாக எரிகிற அக்கினியில் தூக்கி  போடப்பட்டார்கள். அவர்களைக் கட்டியிருந்த கயிறுகள் தான் அக்கினிச் சூளையில் அகற்றப்பட்டது; அவர்களோ அக்கினிச் சூளையில் நடந்து கொண்டிருந்தனர். ஆயினும், நெருப்பானது அவர்களுடைய சரீரத்திற்கோ, உடைகளுக்கோ எவ்வித சேதத்தையும் உண்டுபண்ணவில்லை.  இது எப்படி சாத்தியம்? என்று நாம் கேட்கக் கூடும். அவர்கள் தேவனோடே நடந்தார்கள். அவர்கள் அக்கினியில் இருந்து வெளியே வரும்படி, ராஜா அவர்களை கூப்பிட வேண்டியதாயிருந்தது.

 ராஜாவின் உணவினால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் எடுத்த தீர்மானத்தில் இருந்து அவர்களின் கதை துவங்குகிறது. இங்கே, ராஜாவுக்கு முன்பாக, அவர்கள் தங்கள் விசுவாசத்தையும், தேவன் மீதான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார்கள். ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு அ வர்கள் பயப்படாமல், தேவனுக்கு பயந்து, தேவனுடைய பிரமாணத்தைப் பின்பற்றுவதற்கு கவனமுள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள். தேவன் விடுவிக்க வல்லவர் என்பதை அவர்கள் விசுவாசித்தார்கள்.  ”விடுவிக்காமற்போனாலும்ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது” என்று அவர்கள் சொன்ன போது, ராஜாவின் கடவுளுடைய சிலைக்கு முன்பதாக வணங்குவதற்குப் பதிலாக தேவனை ஆராதிப்பதற்கு அவர்கள் மிகவும் தீர்மானமுள்ளவர்களாக இருந்ததை  வெளிப்படுத்தினார்கள். ”அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று பவுல் கூறுகிறார் (2 தீமோ.3:12; பிலி.1:29).  தன்னைப் பின்பற்றுகிறவர்கள் பிரச்சனையில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்வார்கள் என்று இயேசு ஒருபோதும் வாக்குக் கொடுக்கவில்லை.  “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என்று சொல்லி, “மகிழ்ந்து களிகூருங்கள்” என இயேசு நமக்குப் போதித்திருக்கிறார் (மத்.5:11-12). அப்போஸ்தலர்கள் தாங்கள் பட்ட பாடுகளில் மகிழ்ந்து, கிறிஸ்துவினிமித்தம் பாடுபட நேர்ந்தால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என சபைக்குப் போதித்தார்கள் (அப்.5:40-41; ரோமர் 5:3, 1 பேதுரு 4: 12-14). சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியில் நடக்கும்போது தேவனைப் பாடித் துதித்துக் கொண்டிருந்தார்கள் என்று செப்துவஜிந்த் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   “நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசாயா 43:1-2) என்று வாக்குப் பண்ணின தேவன், இம்மூவருடனே நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த எரிகிற அக்கினிச் சூளையானது தேவனை ஆராதிக்கிற இடமாக மாறியது. நாம் விசுவாசத்தில் நடக்கும்போது, தேவன் நம்முடனே நடப்பதை நாம் காண முடியும்.

பயன்பாடு:  ”என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்” என்று தேவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் (யாத்.20:3). தேவனைத் தவிர வேறு எதையாகிலும் நான் வணங்கும்படி பிசாசானவன் என் முன் சோதனையைக் கொண்டு வரும்போது, நான் அவனுக்கு எதிர்த்து நின்று, ”அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று இயேசுவைப் போல நான் பேசவேண்டும் (மத்.4:10, உபா.6:13-15).  என் அன்பு, ஆராதனை, என் வாழ்க்கை மற்றும் என் அனைத்தும் தேவன் ஒருவருக்கே உரியவை; மற்ற எதுவும் எனக்கு முக்கியமானவை அல்ல. விசுவாசத்தினாலே, நான் தேவனுடன் நடந்துகொண்டிருக்கிறேன். நான் தேவனுடைய வழிகளில் நடப்பதற்கான பலத்தை தேவன் எனக்குத் தருகிறார். அவர் என்னை விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உமக்கும் உம் வார்த்தைக்கும் உண்மையுடன் இருக்கும்படி நினைவுபடுத்துகிறதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, பிசாசை எதிர்த்து நிற்க உம் வல்லமையைத் தந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, என் விசுவாசம் சோதிக்கப்படும்போது, நீர் தரும் வார்த்தைகளைப் பேசவும் கிறிஸ்துவுக்காக நிற்கவும் உம் ஞானத்தையும் சக்தியையும் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 331

Firewalking and Faith walking

READ: Daniel 3,4; Psalms 148; 1 Peter 4

SCRIPTURE: Daniel 3: 16 Shadrach, Meshach and Abednego replied to him, “King Nebuchadnezzar, we do not need to defend ourselves before you in this matter.
17 If we are thrown into the blazing furnace, the God we serve is able to deliver us from it, and he will deliver us from Your Majesty’s hand.
18 But even if he does not, we want you to know, Your Majesty, that we will not serve your gods or worship the image of gold you have set up.”

OBSERVATION: In Tamilnadu, a South Indian state, people who worship some goddesses conduct firewalking ceremonies every year. Devotees think that their gods help them to walk on the hot coals without any hurt. Although people believe firewalking gives a feeling of victory over fear and fire, confidence about their faith and themselves, scientists say that anyone can participate in firewalking because the embers have low thermal conductivity. You may have noticed that people run or take brisk walks during the firewalking.  

The story of Shadrach, Meshach, and Abednego is an exciting and inspiring one that encourages us to worship only God and boldly stand against any trials. Here, because of the king’s anger, it was commanded that the fiery furnace should be seven times hotter than usual. Even the strongest soldiers could not endure the blazing fire of the furnace; they all died when they brought the three young men to throw in the fire. But these three men were “walking around in the fire, unbound and unharmed.” The king was amazed and surprised by seeing the fourth man who walked with the three men. They were tied up before they were thrown into the blazing furnace. It seems only the cords that bound them were removed in the furnace. They were walking inside the burning furnace, yet the fire did not harm their body and even their dresses. We may ask, how is it possible! They walked with God. The king had to call them to come out of the fire.

Their story starts from their decision of not defiling themselves with the royal food. Here, in front of the king, they expressed their faith and devotion to God. They were not afraid of King Nebuchadnezzar but feared God and were devoted to following God’s law. They believed, “GOD IS ABLE” to deliver them. When they said, “But even if he does not, we want you to know,” they expressed their determination to serve God instead of bowing before the statue of the god of the king. Apostle Paul says, “In fact, everyone who wants to live a godly life in Christ Jesus will be persecuted” (2 Tim.3:12, Phil.1:29). Jesus never promised that his followers would have a problem-free life. He has taught us “rejoice and be glad” by saying, “Blessed are you when people insult you, persecute you and falsely say all kinds of evil against you because of me” (Mt.5:11-12). Apostles rejoiced in their suffering and taught the church to be happy when facing any persecution for the sake of Christ (Acts 5:40,41; Rom.5:3; 1 Pet.4:12-14). Some translations say that Shadrach, Meshach, and Abednego praised God with songs while walking around in the fire. The God who promised, “when you walk through the fire, you will not be burned; the flames will not set you ablaze” (Isa 43:1, 2), was walking with these three men. Then, the fiery furnace became a place of worship. We can see God walking with us when we walk by faith.

APPLICATION: God commanded, “You shall have no other gods before[besides] me” (Exo.20:3). When the devil tempts to worship other than God, I must stand against him and say as Jesus said, “Away from me, Satan! For it is written: Worship the Lord your God, and serve him only” (Mt.4:10; Deut.6:13-15). My love, my worship, my life, and my all are for God alone; nothing else matters to me. By faith, I am walking with God. God gives me the strength to walk in his ways. He is able!

PRAYER: Father God, thank you for reminding me to be faithful to you and your words. Jesus, give me your power to resist the devil. Holy Spirit, give me your wisdom and power to speak your words and stand for Christ when my faith is tested. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 331

Monday, November 29, 2021

தேவனுக்காக வாழ ஒரு தீர்மானம்

வாசிக்க: தானியேல் 1,2; சங்கீதம் 147; 1 பேதுரு 3

வேத வசனம்:  தானியேல் 1:  தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

கவனித்தல்: ”ஊரோடு ஒத்து வாழ்” என்று ஒரு பழமொழி சொல்கிறது. ஆங்கிலத்தில், “ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனை போல வாழு” என்று இதே பழமொழி வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. எவராகிலும் ஒருவர் வித்தியாசமாக வாழ முயற்சித்தால், மற்றவர்கள் அவரை குறை கூறி விமர்சித்து அல்லது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையை ஏற்றுக் கொண்டு பின்பற்றுமாறு அறிவுரை கூறுவார்கள். ஒருவர் தன் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்து மற்றவர்களில் இருந்து வேறுபட்டு செயல்பட்டால், அவரை வாழத்தெரியாத பைத்தியம் என்று மக்கள் சொல்வர். பாபிலோன் ராஜாவின் உணவினால் தன்னைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு தானியேல் தீர்மானித்த போது, அவனைச் சுற்றி இருந்தவர்கள் தானியேலைப் பற்றி இவ்வாறு சொல்லி இருக்கக் கூடும்.  ராஜாவுக்கு வேலை செய்யும்படி மூன்று வருட பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தானியேலும் அவனுடைய நண்பர்களும் இருந்தனர். இந்த இளம் வாலிபர்கள் யூத அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களாகவும் எவ்வித அதிகாரமும் இல்லாதவர்களாகவும் இருந்தனர். ஆயினும், பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் உணவினாலே, “தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி” தானியேல் தன் இருதயத்திலே தீர்மானம் எடுத்தான். இந்த தைரியமான முடிவு ஒரே ஒரு நாளுக்கானது அல்ல என்பதை நாம் பார்க்க வேண்டும். ஆகவே, ”பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனசின்” பயம் புரிந்து கொள்ளத்தக்கது ஆகும்.  ஆனால், ”தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்” (வ.9). நாம் தேவனுக்காக தீர்மானங்களை எடுத்து, பயம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ளும்போது, தேவன் நம் தீர்மானங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க நமக்கு உதவுகிறார்.

உலகத்தினால் தங்களைக் கறைப்படுத்தாதபடிக்கு/தீட்டுப்படுத்தாதபடிக்கு தீர்மானமாக இருந்த பல தேவ மனிதர்களைப் பற்றி வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். அவர்கள் தங்கள் தேவபக்தியுள்ள வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ள மறுத்து, தங்கள் வாழ்வின் சோதனைகள் எல்லாவற்றையும் ஜெயிப்பதற்கான வல்லமையையும் தேவ தயவையும் பெற்றுக் கொண்டார்கள். உதாரணமாக, ”நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று யோசேப்பு சொன்னார் (ஆதி.39:9). எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில், ஒரு விசுவாச வீரர்களின் பட்டியலை நாம் காண்கிறோம். ”தேவனுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்த ஒரு மனிதனைக் கொண்டு தேவன் என்ன செய்வார் என்பது இன்னும் இந்த உலகம் பார்க்கவில்லை” என்று டி.எல்.மூடியிடம் ஒரு நண்பர் சொன்னபோது, தேவனுக்காக அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும் மனிதனாக நான் இருப்பேன் என மூடி தீர்மானம் செய்து கொண்டார். டி.எல். மூடி மூலமாக  தேவன் என்னவெல்லாம் செய்தார் என்பதை வரலாறு நமக்குக் கூறுகிறது. நம் வாழ்வில், நம் கிறிஸ்தவ நெறிகளை சமரசம் செய்யப்பண்ணுகிற  பலவித சோதனைகள் மற்றும் சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். அப்படிப்பட்ட சமயங்களில், வேத பண்டிதரும் போதகருமான ஜான் மெக்ஆர்தர் சொல்வது போல, “சமரசம் செய்து கொள்ளாமல், தேவன் அவர் விரும்புகிறபடி நீங்கள் வாழ உங்களை அவருடைய கட்டுப்பாட்டில் விட்டுக் கொடுத்து விடுங்கள். அது இந்த உலகத்தில் வாழ்கிற எவருடைய வாழ்க்கையைக் காட்டிலும் பத்து மடங்கு சிறப்பான வாழ்வாக இருக்கும்.” தானியேலையும் அவனுடைய நண்பர்களையும் தேவன் கைவிட்டுவிடவில்லை. அவர்கள் மற்ற எல்லா வாலிபர்களைக் காட்டிலும் முகத்தில்  அதிக களையுள்ளவர்களாகவும் சரீர புஷ்டியுள்ளவர்களாகவும் இருந்தார்கள் (தானி.1:15). நாம் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கக் கூடாது (ரோமர் 12:2). நாம் தேவனையும், அவருடைய வார்த்தையையும் கனப்படுத்துவதற்கு ஒரு தீர்மானம் எடுக்கும்போது, அதைச் செய்வதற்கான பலத்தை அவர் நமக்குத் தருகிறார். ”மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்” என்று இயேசு சொல்கிறார் (லூக்கா 18:27).

பயன்பாடு:  நான் தேவனுக்காக, எதிர்ப்புகள் இருக்கும் இடத்திலும் தேவபக்தியுள்ள ஒருவாழ்க்கையை வாழ முடியும்.   உலகத்தில் இருப்பவனிலும் எனக்குள் இருப்பவர் மிகவும் பெரியவர் (1யோவான் 4:4). நான் கிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தைகள் எனக்குள்ளும் இருக்கும்போது, நான் கனிகொடுக்கும்படி அவர் என்னைப் பலப்படுத்துகிறார் (யோவான் 15:7-8). உலகத்திலிருந்து வரும் சோதனைகளை ஜெயிக்க பரிசுத்த ஆவியானவர் எனக்கு வல்லமையைத் தருகிறார் (கலா.5:16).  ”நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா.2:20).

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உமக்காக வாழ்வதற்கு நீர் தருகிற கிருபை மற்றும் வல்லமைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, எங்களுக்காக நீர் உலகத்தை ஜெயித்தடஹ்ற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவின் சாட்சியாக எல்லா இடங்களிலும் எல்லா நாட்களிலும் வாழ்வதற்கு உம் வல்லமையால் என்னை நிரப்பியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 330