Monday, March 22, 2021

ஒளி வீசும் ஒரு பரிந்துரை ஜெபம்

  வாசிக்க: உபாகமம் 9, 10; சங்கீதம் 81,  மாற்கு 13:1-23

வேதவசனம்: உபாகமம் 8: 18. கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
19. கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.

கவனித்தல்: இஸ்ரவேலர்கள் ”தங்க கன்றுகுட்டி” சிலை செய்து தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தபின், அவர்களுக்காக பரிந்துரை ஜெபம் செய்ததை மோசே இங்கு நினைவுகூருகிறார். இரண்டாவது முறையாக அவர் நாற்பது நாள் இரவும் பகலும் அவர் உபவாசம் இருந்து ஜெபித்தார். முதல் முறை அவர் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தபோது, அவர் தேவனுடன் இருந்தார், அப்போது தேவன் அவரிடம் அந்நாட்களில் நியாயப்பிரமாணம் குறித்தும், ஆசரிப்பு கூடார வேலை குறித்தும், மற்றும் பல காரியங்களைக் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இரண்டாவது முறை நாற்பது நாட்கள் மோசே உபவாசம் இருந்த போது, அவர் தேவனுக்கு முன்பாகச் சென்று, இஸ்ரவேலர்கள் தேவனுக்கு விரோதமாகச் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டும் என மன்றாடினார். உபாகமம் 9:26-28 ல் மோசே செய்த வல்லமையான ஜெபத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம். இஸ்ரவேலர்கள் பாவம் செய்து தேவனைக் கோபப்படுத்தியபோது, தேவன் மோசேயைப் பெரிய ஜாதியாக்குகிறேன் என்று வாக்குப் பண்ணினபோது அவர் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, அவர்களுடைய பாவத்தை நிவிர்த்தி செய்யும்படி ஜெபித்து, “தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்” என்றான் (யாத்.32:30-32). நாம் உபாகமம் 9ல் வாசிப்பது போல, அவன் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து கிடந்தான். இஸ்ரவேலரின் மகாபெரிய பாவத்தினிமித்தம் கர்த்தருக்கு முன்பாக மோசே தன்னத்தானே தாழ்த்தினான். இஸ்ரவேலருக்காக மோசே செய்த ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்டு பதிலளித்தார். இதில் கர்த்தருடைய சமூகம் இஸ்ரவேலர்களுடன் வரவேண்டும் என்பதற்கான ஜெபமும் அடங்கும். நிச்சயமாகவே, தேவன் நம் ஜெபங்களைக் கேட்டுப் பதிலளிக்கிறார்! மோசேயின் பரிந்துரை ஜெபத்தைப் பற்றிய குறிப்பில் ஆச்சரியமான மற்றும் சுவராசியமான ஒரு விஷயம் என்னவெனில், மோசே தேவனோடே பேசினதினாலே அவனுடைய முகம் பிரகாசமடைந்திருந்தது. மோசேயோ அதை அறியாதிருந்தான் (யாத்.34:29). பரிந்துரை ஜெபமானது பதில்களைப் பெற்றுத்தருவதுடன், ஜெபிக்கிற நபரையும் பிரகாசமான நபராக மாற்றிவிடுகிறது. 
 
பயன்பாடு:  எனக்காக எப்போதும் பரிந்து பேசும் இயேசு இருக்கிறார் (எபி.7.25). ஆண்டவராகிய தேவனிடத்தில் நான் நம்பிக்கையுடன் உறுதியாக இருப்பதற்கு என்னை இது உற்சாகப்படுத்துகிறது. ஆயினும், நான் மோசேயின் இடத்தில் வைக்கப்பட்டால், நான் என்ன செய்வேன்/என்ன செய்ய வேண்டும்? சபையில், கிறிஸ்தவ நிறுவனங்களில், மற்றும் தனிநபர்களிடத்தில் தவறுகள், ஆன்மீக வீழ்ச்சி, கீழ்ப்படியாமை, மற்றும் பாவங்களை நான் பார்க்கும்போது, நான் என்ன செய்கிறேன்? அது என்னவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பெரிதோ சிறிதோ, அவர்களுக்காக, அக்காரியங்களுக்காக நான் ஜெபிக்க வேண்டும். 
 
ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, எங்கள் ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்டு பதிலளிப்பதற்காக உமக்கு நன்றி. மற்றவர்களுக்காக பரிந்து பேசி ஜெபிக்கும் ஒரு இருதயத்தை எனக்குத் தாரும். என் ஆண்டவராகிய இயேசுவே, மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, சிலுவையில் நீர் பாவ நிவிர்த்திக்காக உம் ஜீவனையே பலியாகக் கொடுத்ததை நினைவுகூர்ந்து, மனதுருக்கத்துடன் மற்றவர்களுக்காக ஜெபிக்க எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

A shining intercessory prayer

 READ: Deuteronomy 9, 10; Psalm 81; Mark 13:1-23

SCRIPTURE: Deuteronomy 9: 18 Then once again I fell prostrate before the Lord for forty days and forty nights; I ate no bread and drank no water, because of all the sin you had committed, doing what was evil in the Lord’s sight and so arousing his anger.
19 I feared the anger and wrath of the Lord, for he was angry enough with you to destroy you. But again the Lord listened to me. 
 

OBSERVATION: Here Moses recalls his intercessory prayer that he made for the Israelites, after they sinned against the Lord in the matter of "The Golden Calf." He fasted for forty days and forty nights for the second time. In the first time,  he was with the Lord, and the Lord spoke to Moses regarding the Law, the work of the tent of meeting and so on. In the second time, when he went before the Lord, Moses was pleading for the sin Israelites committed against the Lord. We read his powerful interceding prayer in Deut. 9: 26-28. When the Israelites sinned and angered the Lord, Moses could had accepted the promising offer of the Lord to make him great. But, Moses prayed for the atonement of their sin and said that " please forgive their sin—but if not, then blot me out of the book you have written" (Exo.32:30-32).  As we read in Deut.9, he prostrated before the Lord.  Moses humbled himself before the Lord with fasting for the Israelites' great sin. God answered his every prayer for the Israelites, this includes his prayer for God's presence to come with them. Surely, God answers our prayers. An amazing and interesting event in this intercessory prayer narrative is Moses's "face was radiant because he had spoken with the Lord"  and he was not aware of it (Exo.34:29). An intercessory prayer not only brings answers, it changes the praying person to be a radiant person as well. 

APPLICATION: I have Jesus who intercedes for me always (Heb.7:25). This encourages me to be confident in the Lord God. However, what would/should I do, if I am placed in Moses's place.  When I see mistakes, spiritual fall, disobedience, and sins in the church, Christian organizations, and in individuals, what I do? Whoever it may be, whatever it is, whether great or small, I need to pray for those people/things. 

PRAYER: Father God, thank you for answering our every prayer. Give me a heart to pray and to intercede for others. O Jesus my Lord, instead of accusing  people, help me to pray for them compassionately, by remembering your atonement sacrifice on the cross.  Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Saturday, March 20, 2021

எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பாடம்

 வாசிக்க: உபாகமம் 7, 8; சங்கீதம் 80,  மாற்கு 12:28-44

வேதவசனம்: உபாகமம் 8: 2. உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 
3. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். 
4. இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.
5. ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.


கவனித்தல்: எகிப்தில் இருந்து ஏராளமான செல்வங்களையும் உடைமைகளையும் இஸ்ரவேலர்கள் எடுத்துச் சென்றனர் (யாத்.12:35-38) தங்கள் விடுதலைப் பயணத்தின் ஆரம்பத்தில் வாக்குதத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை சுதந்தரித்துக் கொள்வதற்காக ஒரு குறுகிய காலத்தில் சீக்கிரத்தில் சென்று சேர்ந்து விடுவோம் என அவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால், தேவன் அவர்களைப் பற்றி வேறு திட்டங்கள் வைத்திருந்தார். அவர்கள் அடிமைகளாக இருந்தபடியால், அவர்களுடைய அடிமை வேலையைத் தவிர வேறு எதற்கும் அவர்களுக்கு பயிற்சி கிடைத்திருக்க வாய்ப்புகள் குறைவு. இஸ்ரவேலர்களுடைய பயணத்தில், அவர்கள் இருதயத்தில் உள்ளதை அறிய தேவன் அவர்களைத் தாழ்த்தி, அன்பான கீழ்ப்படிதலுடன் வாழவும், எப்பொழுதும் அவர்கள் தேவனை நம்பவும் அவர்களுக்குப் கற்றுக் கொடுத்தார். இஸ்ரவேலர்களுக்கு அது ஒரு கற்றுக் கொள்ள கடினமான  ஒரு காலமாக இருந்தது என்பது உண்மைதான். ஆயினும், தேவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த, சிட்சித்த அந்த ஆண்டுகள் அவருடைய அற்புதப் பாதுகாப்பு மற்றும் இஸ்ரவேலருக்குத் தேவையானவைகளை கிடைக்கச் செய்த காலங்களாக இருந்தன.  “கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தை”யையும் கனப்படுத்த இஸ்ரவேலர்கள் கற்பிக்கப்பட்டனர். ஒரு தகப்பன் தன் குழந்தையை நேசிப்பது போல, தேவன் தன் ஜனங்களை நேசிக்கிறார் என்பதை தம் பிள்ளைகளாகிய ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புகிறார்.எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கும்படி ஒரு தகப்பனுடைய அன்பு தன் பிள்ளைக்கு பயிற்சி அளிக்கிறது. “தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?” என்று எபிரேயர் 12:7ல் நாம் வாசிக்கிறோம்.
 
பயன்பாடு: தேவன் என்னை பரீட்சித்துப் பார்க்கும்போது, அதில் உள்ள கஷ்டங்களையும், சிரமங்களையும் பார்ப்பதற்குப் பதிலாக, என் வாழ்வில் தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டு, அத்தருணங்களை சமாளிப்பதற்காக தேவன் ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறவைகளை நான் பார்க்க வேண்டும். எவ்வித கஷ்டமும் படாமல் எந்த ஒரு பயிற்சியும் எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பயிற்சிக் காலங்களில், எந்த உணவையும் விட தேவனுடைய வார்த்தையானது அதிக பலத்தையும் தைரியத்தையும் எனக்குத் தரும். தேவன் என்னை சிட்சிக்கும்போது, அது என் நன்மைக்காகவே என்பதையும், நான் அவருடைய பரிசுத்தத்தில் பங்கு பெறும்படியாகவும் அதைச் செய்கிறார் என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் (எபி.12:10). என் தேவைகளைச் சந்திப்பதற்காக தேவனுடைய அற்புத ஏற்பாடுகளை நம்புவதன் மூலமாகவும், அவருடைய வார்த்தைகளுக்கு அன்புடன் கூடிய கீழ்ப்படிதலுடன், நான் சோதனையான நேரங்களைக் கடந்து வரும்போது, என் பரம தகப்பனவர் ஒரு மனித தகப்பனைப் போல என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைகிறார்.  நான் அனுதினமும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஜெபம்:  தேவனே, என்னை சிட்சிப்பதன் மூலம் நீர் என் மீது காட்டுகிற தகப்பனுக்குரிய அன்புக்காக  உமக்கு நன்றி. உம் அன்பின் இருதயத்தை புரிந்து கொள்ளவும், உம் வார்த்தைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியவும் எனக்கு உதவும். பரலோகத்தில் இருக்கிற என் தந்தையே, தன் தகப்பனின் விருப்பத்தைக் கனப்படுத்துகிற ஒரு குழந்தையாக நான் வாழ எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

A Lesson to remember always

READ: Deuteronomy 7, 8; Psalm 80; Mark 12:28-44

SCRIPTURE: Deuteronomy 8: 2 Remember how the Lord your God led you all the way in the wilderness these forty years, to humble and test you in order to know what was in your heart, whether or not you would keep his commands.
3 He humbled you, causing you to hunger and then feeding you with manna, which neither you nor your ancestors had known, to teach you that man does not live on bread alone but on every word that comes from the mouth of the Lord.
4 Your clothes did not wear out and your feet did not swell during these forty years.
5 Know then in your heart that as a man disciplines his son, so the Lord your God disciplines you.

OBSERVATION: Israelites carried a lot of possessions and wealth from Egypt (Exo.12:35-38). At the start of their exodus journey, they might thought that they would reach Canaan in a short period of time to possess the promised land. However, God had other plans for them. Since Israelites were slaves, they might had not received any training other than their slavery work. In their journey, God humbled Israelites to know their heart and taught them to live in loving obedience and to trust in Him always. Of course, it was a tough learning period for the Israelites. However, those times of God's teaching and training were full of God's miraculous provision and protection. Israelites were taught to honor "every word that comes from the mouth of the Lord." God wants his people to know that he loves them like a father loves his child. Father's love trains his child to be equipped to face any future challenges. Hebrews 12: 7 says, "For what children are not disciplined by their father?" 

APPLICATION: When God tests me, instead of looking at the hardships and difficulties, I need to understand why God allows it in my life, and to look at God's provisions to handle such times. No training comes easily without enduring any hardships. During such training times, God's word would give me more strength and courage than any food. When God disciplines me, I should remember that  it is for my good, and that it is for I may share in his holiness (Heb.12:10). By trusting God's provisions and with a loving obedience to his words, when I pass through such testing times, my heavenly father rejoices with me, like a human father. I should remember this  everyday. 

PRAYER:  God, thank you for showing your fatherly love by disciplining me. Help me to understand your loving heart and to obey your words always. My Heavenly Father, help me to live as a child that honors his/her father's will. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Friday, March 19, 2021

இஸ்ரவேலே, கேள்!

வாசிக்க: உபாகமம் 5, 6; சங்கீதம் 79,  மாற்கு 12:1-27

வேதவசனம்: உபாகமம் 6: 4. இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
5. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. 
7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பே(சு).

கவனித்தல்: உபாகமம் 6:4 முதலான வசனங்கள் யூதர்களின் காலை மாலை ஜெபங்களில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒருவராக இருக்கிற தேவன் மீதான தங்கள் நம்பிக்கையை அவர்கள் தெரிவிக்கும் யூத விசுவாச அறிக்கையின் ஒரு பகுதியாக இவ்வேதபகுதி இருக்கிறது. இது ஷேமா (The Shema) என்று அறியப்பட்டிருக்கிறது.  உபாகமம் 6:4 தேவனுடைய ஒருமையை (அதாவது அவர் ஒருவரே) என்பதையும், தேவனுடைய தனித்தன்மையை (அதாவது, அவருக்குச் சமமானவர்/ஒப்பானவர் எவரும் இல்லை) என்பதையும் வலியுறுத்துகிறது.  இஸ்ரவேலரைச் சுற்றிலும் வாழ்ந்த மக்கள் விக்கிரக வணக்கம் செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கையில், இஸ்ரவேலர்கள் தங்கள் விசுவாசத்தை தேவனுக்கு மாத்திரமே வெளிப்படுத்தவேண்டும். தேவன் ஒருவரே என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் echad  (எகாத்) என்ற வார்த்தையைக் கவனிப்பது மிகவும் சுவராசியத்தைத் தருகிறது. எகாத் என்ற வார்த்தையின் பொருள் தேவன் ஒரே ஒருவர் மாத்திரமே (ஒன்றே ஒன்று மட்டுமே) என்பதாக அல்லாமல், பன்மையில் ஒருமையைக் குறிக்கும் ஒரு வார்த்தையாக அது இருக்கிறது. உபாகமம் 6:5 ஆம் வசனத்தில் இருந்து, வெளியரங்கமாகவும் அந்தரங்கமாகவும் ஒருவர் தன் விசுவாசத்தை செயல்களில் காட்டுவது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவையுள்ள நேரங்களில் நினைவுபடுத்திக் கொள்ளவும், தேவனைப் பற்றி தியானிக்கவும், நாம் தேவனுடைய கற்பனைகளை நம் இருதயத்தில் காத்துக் கொள்ள வேண்டும். தேவனைப் பற்றிய அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது, அவர்களும் தேவனை அறியச் செய்வது மிக முக்கியமானதாகும். நாம் என்ன செய்தாலும், எங்கிருந்தாலும், உட்கார்ந்து அல்லது நடந்து கொண்டிருந்தாலும் , படுத்திருந்தாலும் அல்லது எழுந்திருந்தாலும் நாம் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்துப் பேசலாம்/ பேசவேண்டும். ஆயினும், அது ஒரு சடங்காக செய்யப்படாமல், தேவன் மீது உள்ள அன்புடன் செய்யப்படவேண்டும். 
 
பயன்பாடு:  நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது/வாசிக்கும்போது, என் தேவன் யார் என்பதை நான் அறிந்து கொள்கிறேன். அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர். அவரைப் போல, அவருக்கு ஒப்பானவர் வேறு யாரும் இல்லை. நான் தேவனைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, அவர் மீதான என் அன்பு என்பது என் இதயம், ஆத்துமா மற்றும் என் கைகளின் இயல்பான வெளிப்பாடாக அது இருக்கிறது. நான் தேவனுடைய வார்த்தைகளை என் இதயத்தில் காத்துக் கொள்ளும்போது, என் வாழ்வில் வரக்கூடிய அனேக ஆபத்துகளில் இருந்து அது என்னைப் பாதுகாக்கிறது.  நான் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும், நான் தேவனுடைய வார்த்தையைக் குறித்து சிந்திக்க்கவும், பேசவும் முடியும்.நான் அதை அனுதினமும் செய்வேன். 

ஜெபம்:  சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் யார் என்பதை எனக்கு வெளிப்படுத்துகிறதற்காக உமக்கு நன்றி. நீரே என் ஆண்டவர், நீரே என் தேவன். உம்மைப் போல யாருண்டு! என் மீட்பரே, உம்மை முழு இருதயத்தோடு நேசிக்கவும்,  வார்த்தைகளில் மட்டுமல்ல, செயல்களிலும் என் அன்பை காண்பிக்க எனக்கு உதவும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573