Wednesday, June 2, 2021

தேவை: ஒபதியா போன்ற தேவபக்தியுள்ள அதிகாரிகள்

வாசிக்க: 1 இராஜாக்கள் 17, 18 ; நீதிமொழிகள் 2 ; யோவான் 9: 1-23

வேத வசனம்: 1 இராஜாக்கள் 18: 3. ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.
4. யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.

கவனித்தல்: இந்த வேதபகுதியில், இஸ்ரவேல் ராஜ்ஜிய வரலாற்றில் வருகிற மூன்று வித்தியாசமான நபர்களை நாம் பார்க்கிறோம்: ஆகாப், ஒபதியா, மற்றும் யேசபேல். ஒபதியா என்ற பெயரின் அர்த்தம்—தேவனுடைய வேலைக்காரன் (ஊழியன்) அல்லது யெகோவாவை வணங்குகிறவன்— அவன் கர்த்தர் மேல் வைத்திருந்த அர்ப்பணிப்பை சரியாகக் குறிப்பிடுகிறது. கர்த்தருக்குப் பயந்து நடக்கிற ஒபதியா இஸ்ரவேலின் மிகவும் மோசமான துன்மார்க்கமான ராஜாக்களில் ஒருவராகிய ஆகாப் ஆவார். ஆகாப் பாகாலை வணக்கம் செய்கிற யேசபேலைத் திருமணம் செய்திருந்தார். ஆகாபும் யேசபேலும் பாகால் வணக்கத்தை இஸ்ரவேலில் புகுத்தினர். இப்படிப்பட்ட தேவபக்தியற்ற ஆட்சியாளர்களின் கீழ் கடவுளுக்குப் பயந்து நடக்கிற ஒரு விசுவாசி எப்படி வேலை செய்திருக்கக் கூடும் என்று நாம் ஆச்சரியப்படலாம். ஒபதியா ஒரு முக்கியமான வேலையில் இருந்தான், அதாவது ஆகாபினுடைய அரண்மனை விசாரிப்புக்காரன். தன் விலங்குகளுக்கு தீவனம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க ஆகாப் ஒபதியாவை அனுப்பியது அவன் ராஜாவுக்கு எவ்வளவு முக்கியமானவனாக இருந்தான் என்பதைக் காட்டுகிறது. எலியாவினால் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட அந்த பஞ்சக்காலத்தில், ஆகாப் தன் விலங்குகளுக்கு உணவு கொடுப்பது பற்றி கவலைப்பட்டு, தீவனம் தேடி தீவிரமாகச் சென்றான். மறு பக்கத்திலோ, ஒபதியா தீர்க்கதரிசிகளைப் பற்றி கவலைப் பட்டு, அவர்களைப் பாதுகாத்தான். ஆகாப் ராஜா தன் விலங்குகளுக்கு உணவைத் தேடிக் கொண்டிருந்த காலத்தில், அவனுடைய ஊழியக்காரன் ஒபதியாவால் தீர்க்கதரிசிகளுக்கு உணவளிக்க முடிந்தது என்பது ஆச்சரியமானது ஆகும். பஞ்சம் தீவிரமடைந்த போது தேவபக்தியற்ற ஆகாப் மற்றும் யேசபேலின் இயலாமையை அது அம்பலப்படுத்தியது.

தேவபயம் அற்ற இடங்களில் வேலை செய்வதில் அனேகர் ஒழுக்கம் மற்றும் நெறி சார்ந்த குழப்பங்கள் அல்லது சங்கடங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். வேலையை விட்டு விலகுவது அவர்களை ஒழுக்கம் சார்ந்த வீழ்ச்சி அல்லது தோல்விகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் என்று நினைக்கக் கூடும். ஆயினும், எல்லா இடங்களிலுமே ஒழுக்கம் மற்றும் நன்னெறி சார்ந்த சங்கடங்கள் இருக்கும் என்றும், அதன் அளவு மற்றும் நிலை தான் இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்படியெனில், நாம் சமரசம் செய்துகொண்டு அனுசரித்து நடக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, நாம் இருக்கிற இடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினால், எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கும, நம் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வதற்கும் தேவையான பலத்தை அவர் நிச்சயம் தருவார். ஒரு சிறிய விளக்கு கூட இரவின் இருளை நீக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உயர்ந்த பதவிகளில் தேவபக்தியுள்ளவர்கள் இருப்பது ஜனங்களுக்கு நம்பிக்கையைத் தந்து, குரலற்றவர்களின் நலன்களைப் பாதுகாக்க உதவும். இந்த உலகில் உள்ள குழப்பங்களையும், ஏற்றதாழ்வுகளையும் நாம் காணும் போது, நமக்கு ஒபதியா போன்ற தேவபக்தியுள்ள அதிகாரிகள் தேவை என்பதை அது நினைவுபடுத்துகிறது.

பயன்பாடு: நான் எங்கு வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும், அது அலுவலகமோ அல்லது வீடோ எதுவானாலும், நான் தேவனுக்காக வேலை செய்கிறேன். முதலாவதாக, நான் தேவனுக்கு ஊழியம் செய்கிறேன். என் தேவபக்தியுள்ள நடக்கைகளை சமரசம் செய்து கொள்ளும்படி என் வேலை சார்ந்த பொறுப்பு என்னைக் கட்டாயப்படுத்தாதவரையில், தேவ பக்தியற்ற இடங்களில் தேவனுடைய சித்தத்தைச் செய்கிற ஒரு சாட்சியாக நான் இருக்க முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் என் மூலமாக செய்து முடிப்பார். கர்த்தரை நான் எப்பொழுதும் என் முன்பாக வைத்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதையே நான் செய்ய வேண்டும்.

ஜெபம்: பிதாவே, எங்கள் நாட்டில் இருக்கிற தேவபக்தியுள்ள அதிகாரிகளுக்காக உமக்கு நன்றி. என் தேவனே, என் வாழ்க்கையின் நோக்கத்தையும், உம் சித்தத்தையும் புரிந்து கொள்ள எனக்கு உதவும். ஆண்டவரே, என் வாழ்விலும் வேலையிலும், உமக்கு உண்மையுடன் இருக்க எனக்கு உதவும். எந்தச் சூழ்நிலையிலும் உமக்காக நிற்கவும், எது சரியோ அதைச் செய்யவும் உம் பலத்தைத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 153

Wanted: Godly officials like Obadiah

READ:  1 Kings 17, 18 ; Proverbs 2 ; John 9: 1-23

SCRIPTURE: 1 Kings 18: 3 Ahab had summoned Obadiah, his palace administrator. (Obadiah was a devout believer in the Lord.
4 While Jezebel was killing off the Lord’s prophets, Obadiah had taken a hundred prophets and hidden them in two caves, fifty in each, and had supplied them with food and water.)

OBSERVATION: In the above passage, we see three different characters in the history of the Kingdom of Israel: Ahab, Obadiah, and Jezebel. The meaning of Obadiah’s name—the servant of God or the worshipper of Yahweh— aptly refers to his devotion to the Lord. Godly Obadiah worked under one of the most wicked kings of Israel, Ahab who married a Baal  worshipper Jezebel. Ahab and Jezebel promoted Baal worship in Israel. We may wonder how a devout believer could work under these ungodly rulers. Obadiah held an important responsibility, i.e. the king's palace administration. Ahab's sending of Obadiah to find grass for his animals  shows how important he was to the king. During the famine that was prophesied by Elijah, Ahab was worrying about feeding his animals and desperately searched for the grass. On the other hand, Obadiah was concerned for the prophets and protected them. It is interesting to see that while King Ahab was searching for food for his animals, his servant Obadiah was able to feed the prophets. The intensification of the famine exposed the inability of the ungodly Ahab and Jezebel.

Many people have moral and ethical dilemmas to work under ungodly conditions. They may think that quitting the job would save them from any moral failures. However, we should remember that in every work place there will be such dilemmas, only its amount or level may vary from place to place. This doesn’t mean that we need to adjust and compromise our moral values. Rather, if God wants us to stay where we are, he will surely give us his strength to face all the problems and to keep ourselves holy. Remember, even a small lamp will remove the darkness of the night. The presence of godly persons in high positions will give hope to people and will help to protect the interests of the voiceless ones. When we see the present confusion and disparities in the world, it makes us think that we need more godly officials like Obadiah.

APPLICATION: Wherever I work, whatever job I do, whether it is a workspace or home, I  work for God. Firstly, I am a servant of God. As long as my work responsibility does not compel me to compromise my godly behaviors, I can be a witness to God to do his will in ungodly working conditions. God will work through me to bring his intended changes in those conditions. I keep the Lord always before me. I should do what God wants me to do.

PRAYER: Father, thank you for the godly officials in our country.  My God, help me to understand the purpose of my life and your will. Lord, in my work and life, help me to be faithful to you. Give me your strength to stand for you and to do what is right in any situation.  Amen.

 - Arputharaj Samuel +91 9538328573

Day - 153

Tuesday, June 1, 2021

கண்ணுக்குத் தெரியாத அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை

வாசிக்க:  1 இராஜாக்கள் 15, 16 ; நீதிமொழிகள் 1 ; யோவான் 8: 31-59

வேத வசனம்: யோவான் 8: 34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
36. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

கவனித்தல்: ஒரு அடிமையாக இருப்பதை எவரும் விரும்புவதில்லை. ஆயினும், உலகமெங்கிலும் அடிமைத்தனத்தின் பழைய மற்றும் நவீன வடிவங்களை நாம் காண்கிறோம். இயேசுவிடம் பேசிய யூதர்களைப் போலவே, அனேகர் தாங்கள் ஒரு அடிமைத்தனத்தில் இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூட தயாராக இல்லை என்பது வருந்தத்தக்கது ஆகும். இங்கு, யாரோ ஒருவருக்கு அடிமையாக இருப்பது ( அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அடிமைத்தனம்) பற்றி  இயேசு சொல்லவில்லை. பாவத்துக்கு அடிமையாக இருத்தல் பற்றி கூறுகிறார். இது ஒரு குறிப்பிட்ட பாவத்தைக் குறிப்பிடாமல், ஒருவரின் பாவ வாழ்க்கையைக் குறிக்கிறது. பாவத்திற்கு அடிமையாக இருத்தல் என்பது வேறெந்த அடிமைத்தனத்தைப் பார்க்கிலும் மிகவும் வேதனையானது ஆகும். ஏனெனில், இது நம் மனச்சாட்சியையும், உள்ளான மனிதனையும் பாதிக்கிறது. பாவத்துக்கு அடிமைகளாக இருப்பவர்கள் தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்க முடியாது. அனேக நல்ல மனிதர்கள் பாவ சோதனைகளுக்கு இடம் கொடுத்து பாவ வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறார்கள். கெட்ட பழக்க வழக்கங்களைக் குறித்த விஷயத்தில், இதை நான் விட்டுவிட நினைக்கும்போது அல்லது நான் முடிவெடுத்துவிட்டால் உடனடியாக எளிதில் நிறுத்திவிட முடியும் என்று ஜனங்கள் சொல்வதுண்டு. ஆனால், எத்தனை வருடமானாலும் அவர்களில் ஒரு மாற்றமும் இருக்காது. ஏன்?

“பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” என்று இயேசு சொல்கிறார். ஒரு பாவி தன் எஜமானனாகிய பாவத்திற்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கு எவ்வித சுயாதீனமும் இல்லாதவராக இருக்கிறார். இன்று கிடைக்கக் கூடிய அனைத்து விதமான மருந்துகளில், எந்த மருந்தும் பாவத்தில் இருந்து விடுதலையைத் தர முடியாது. குமாரன் நம்மை விடுதலையாக்குகிறார் என்று இயேசு சொல்கிறார். இயேசு நம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கி, நீதியின் ஊழியக்காரராக மாற்றுகிறார் (ரோமர் 6:22). இயேசு நம்மை பாவத்தில் இருந்து எப்படி விடுதலையாக்குகிறார்? “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று அவர் சொல்கிறார் (வசனம் 32). இயேசுவே அந்த சத்தியம். வேதாகமத்தில் நாம் தேவனுடைய சத்தியத்தை வாசிக்கும்போது, நாம் இயேசுவைப் பற்றி அதிகம் அறிந்து கொள்கிறோம். அவர் நம்மை எவ்வித பாவ அடிமைத்தனத்தில் இருந்தும் விடுவிக்கிறார். “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”

பயன்பாடு: பலவிதமான பாவங்களும், பாவச் சோதனைகளும் இருக்கின்றன. அனேகருக்கு தங்கள் பாவ வாழ்க்கையை ஒத்துக் கொள்வது கடினமானதாக இருக்கிறது. நான் அவர்களைப் போல இருக்கக் கூடாது. “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1: 8, 9) என்று வேதம் சொல்கிறது. ஆகவே, உலகப் பிரகாரமான பொய்களால் என்னை நான் வஞ்சித்துக் கொள்வதற்குப் பதிலாக, தேவனுடைய மன்னிப்பும், சுத்திகரிப்பும் தேவைப்படுகிற ஒரு பாவி என்று ஒப்புக் கொண்டு அறிக்கை செய்வேன். அப்பொழுது, இயேசு என்னை பாவ வாழ்க்கையில் இருந்து விடுவித்து, எனக்கு பரிசுத்தத்தையும் நித்திய ஜீவனையும் தருகிறார். நான் இயேசுவின் போதனையையும் சத்தியத்தையும் கடைபிடிக்கும்போது, பாவமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ அவர் எனக்கு உதவுகிறார். நான் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறேன். நான் இனி பாவத்திற்கு அடிமை அல்ல. 

ஜெபம்: இயேசுவே, பாவங்களில் இருந்து விடுதலையை நான் பெற்றனுபவிக்க நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற ஏற்பாட்டுக்காக உமக்கு நன்றி. இன்றும் நீர் ஜனங்களை விடுவிக்கிறீர். ஆண்டவராகிய இயேசுவே, உம்மால் கூடாதது என்று எதுவுமில்லை. உம்மைக் குறித்தும் உம் சத்தியத்தைக் குறித்தும் நான் இன்னும் அதிகம் அறிந்து கொள்ள எனக்கு உதவும். உம் பரிசுத்தத்திலும் நீதியிலும் வாழ்வதற்கு எப்பொழுதும் எனக்கு அனுக்கிரகம் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 152

Freedom from the invisible slavery

READ:  1 Kings 15, 16 ; Proverbs 1 ; John 8: 31- 59

SCRIPTURE:  John 8: 34 Jesus replied, “Very truly I tell you, everyone who sins is a slave to sin.
35 Now a slave has no permanent place in the family, but a son belongs to it forever.
36 So if the Son sets you free, you will be free indeed.

OBSERVATION: No one wants to be a slave. Yet, we see old and modern forms of slavery across the world. Sadly, like the Jews who spoke with Jesus, many people are not even ready to accept that they are in a bondage. Here, Jesus does not say about (political, economical, and social slavery) being a slave of someone else. He says about being a slave to sin. This refers to a life of sin, not a particular sin. Slavery to sin is more painful than any other slavery. Because, it attacks our conscience and inner man. Those who are slaves to sin cannot be a part of God’s family. Many good people are trapped in sinful life by giving space to temptations of sin. Concerning bad habits, people used to say that when I want to get rid of this or If I decided, I could easily stop this. But year after year, there will be no change in them. Why? 

Jesus says that a person “who sins is a slave to sin.” A sinner has no free will to disobey his/her master, SIN. Of all the available drugs, no medicine could give freedom from sin. Jesus says that the son sets us free from sin. JESUS sets us free from the slavery of sin to be a servant of righteousness (Rom.6:22). How does Jesus set us free from sin?  He says, “you will know the TRUTH, and the truth will set you free” (v.32). Jesus is the truth. As we read God’s truth in the Bible, we know more about Jesus. He sets us free from any bondage He sets us free from any bondage of  sin. “So if the Son sets you free, you will be free indeed.”

APPLICATION:  There are different types of sins and sinful temptations. Many people have difficulty in accepting their sinful life. I should not be like them. The Bible says, “If we claim to be without sin, we deceive ourselves and the truth is not in us. If we confess our sins, he is faithful and just and will forgive us our sins and purify us from all unrighteousness” (1 John 1:8, 9). Therefore, instead of deceiving myself with worldly lies, I will acknowledge and confess that I am a sinner who needs God’s forgiveness and purification. Then, Jesus sets me free from a sinful life, and gives me holiness and eternal life. Jesus helps me to live a sin free life when I keep his teaching and truth. I am a child of God. I am no longer a slave to sin.

PRAYER: Jesus, thank you for your provision to experience the freedom from sins. Even today, you set people free. Lord Jesus, nothing is impossible for you. Help me to know more about you and the truth. Help me every moment to live in your holiness and righteousness. Amen

- Arputharaj Samuel +91 9538328573

Day - 152

Monday, May 31, 2021

இயேசு நீதியுள்ள நியாயாதிபதி

வாசிக்க:  1 இராஜாக்கள் 13, 14 ; சங்கீதம் 150 ; யோவான் 8: 1-30

வேத வசனம்: யோவான் 8: 3. அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.

கவனித்தல்: இயேசுவை தங்களுடைய தீய திட்டங்களில் சிக்க வைப்பதற்கான மற்றுமொரு தந்திரமான முயற்சியை பரிசேயர்களும், வேதபாரகர்களும் செய்வதை நாம் இங்கு பார்க்கிறோம்.  அவர்களுடைய கேள்விக்கு இயேசு பதிலளிப்பதைப் பொறுத்து அவர்மேல் குற்றம் சாட்ட விரும்பினர். அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும் என்று இயேசு தீர்ப்பளித்திருந்தால், இயேசு ரோமப் பேரரசுக்கு எதிரானவர் என்று சொல்லி இருப்பார்கள். ஏனெனில், அந்நாட்களில் மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் யூதர்களிடம் கொடுக்கப்படவில்லை.  அந்தப் பெண்ணைக் கல்லெறிந்து கொல்வதற்கு கட்டளையிட மறுத்திருந்தால், இயேசு மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு எதிரானவர் என்று சொல்லி இருப்பார்கள். நியாயப்பிரமாணத்தின்படி, விபச்சாரப் பாவம் செய்த ஆண் மற்றும் பெண் இருவருமே தண்டிக்கப்பட (அ) கொல்லப்பட வேண்டும் (லேவி.20:10. உபா.22:22). இங்கு, விபச்சாரத்தில் பிடிபட்ட அந்தப் பெண்ணை மட்டுமே அவர்கள் தேவாலயத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். 

அவர்கள் எவ்விதத்திலாவது இயேசுவின் மீது குற்றம் சாட்டும்படியாக அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, தரையில் தன் விரலினால் எழுதினார். இயேசு விரலினால் தரையில் எழுதினதை சிலர் பழைய ஏற்பாட்டில் தேவன் தன் விரலினால் எழுதி கொடுத்த கற்பலகை சம்பவத்துடன் தொடர்பு படுத்துகின்றனர் (யாத்திராகமம் 31:18). இது போல, இயேசு விரலினால் தரையில் எழுதினதற்கு ஜனங்கள் பல்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றனர்.  பதில் சொல்லும்படி அவர்கள் நச்சரித்துக் கொண்டிருந்த போது, “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்” என்று இயேசு சொன்னார். இயேசுவின் பதிலானது அவர்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி, பயத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். ஆகவே அவர்கள் அனைவரும், ஒருவர் பின் ஒருவராக, அந்த இடத்தை விட்டுச் சென்றனர். முடிவில், இயேசுவும் அவளை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தவில்லை. மாறாக, அவளுடைய ஒழுக்கக் கேடான வாழ்க்கையில் தொடர்ந்து இராதபடிக்கு அறிவுறுத்தினார். 

அந்த விபச்சாரப் பெண்ணிடம் இயேசு செய்த செயலானது இயேசுவும் ஒரு பாவி என்பதைக் காட்டுகிறது என்று சிலர் இயேசு மீது குற்றம் சாட்டுகின்றனர். எந்த நீதிமன்றத்திலும், ஒரு நீதிபதியானவர் தனக்கு முன் கொண்டுவரப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை வழங்குவார். ஒரு நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விடுதலை செய்கிறார் எனில், அந்த நீதிபதியும் குற்றம் சாட்டவரைப் போல ஒரு குற்றத்தை செய்திருக்கிறார் என்று அர்த்தம் ஆகாது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய இயேசு அவளுடைய பாவங்களை மன்னிக்கிறதற்கு தனக்கு உள்ள சக்தியை வெளிப்படுத்தினார். தீய திட்டங்களுடன் இயேசுவை சிக்கலில் மாட்டி விட முயற்சித்தவர்கள், அவருடைய பதிலால் வகையாக சிக்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு இயேசுவைக் குற்றம் சாட்ட எவ்வித வாய்ப்பும் இல்லாமல் போயிற்று. மாறாக, அவர்களுடைய மனச்சாட்சியானது அவர்களுடைய பொல்லாத செயல்களைக் குறித்து அவர்களைக் குற்றம் சாட்டியது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய இயேசு அவர்களுடைய திட்டங்களை முறியடித்து, ஒரு புதிய வாழ்க்கையை வாழ அந்த பெண்ணுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். 

பயன்பாடு: மற்றவர்களுக்கு எதிராக நான் குற்றம் சாட்டுவதற்கு முன்பு, நான் என் குறைகள் மற்றும் தவறுகளைக் குறித்து அறிய வேண்டும். “கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது” என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும் (நீதி.11:1). ஒரு கிறிஸ்தவனாக, நான் ஜனங்களை ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை நேசிப்பதற்கும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தருவதற்கும் ஆயத்தம் உள்ளவனாக இருக்க வேண்டும். என் சுய-நீதி எல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது. இயேசுவே என் நீதி. அவர் ஜனங்களை நேசிக்க எனக்கு போதிக்கிறார். ஆகவே, நான் ஜனங்களை அன்புடனும், தேவ நீதியுடனும் தீர்ப்பிட வேண்டும். 

ஜெபம்: இயேசுவே, உம்மைப் போல என்னை நேசிக்க வேறு யாருமில்லை. ஜனங்கள் என் மேல் குற்றம் சாட்டி, ஆக்கினைத் தீர்ப்பிட தயாராக இருக்கையில், நீர் என்னை நேசித்து, உம் இரக்கத்தை காண்பிக்கிறீர்.ஆண்டவரே, நீரே நீதியுள்ள நியாயாதிபதி. நான் உம் நீதி பரிபாலனத்தில், உம் நீதியில் வாழ எனக்கு உதவும். ஆமென். 

 - அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 151