Friday, December 24, 2021

தேவனை அறிந்து கொள்வதைப் பற்றிய ஒரு இறையியல் கோட்பாடு

வாசிக்க: நாகூம் 1-3; நீதிமொழிகள் 20; வெளிப்படுத்தின விசேஷம் 10

வேத வசனம்: நாகூம் 1: 3. கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது.

கவனித்தல்:  நமக்கு சங்கடம் தருகிற மற்றும் விருப்பமில்லாத காரியங்களைக் காட்டிலும், நமக்கு மிகவும் வசதியாக இருக்கிற மற்றும் நமக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிற காரியங்களுக்கு அதிக கவனம் கொடுக்க மனிதர்களாகிய நாம் பழகிவிட்டோம். மக்கள் தேவனைப் பற்றி நினைக்கும்போது, அவர்கள் தேவனைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுடன் அவர்களுடைய சிந்தனைகள் தொடர்புடையதாக இருக்கிறது. தேவனைப் பற்றிய விஷயத்தில், மக்கள் அவருடைய வேறு எந்த தன்மைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அவருடைய அன்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தேவன் அன்பானவர் மற்றும் அவருடைய் அன்பு நித்தியமானதும், அவரை விட்டு பிரித்திட முடியாததும் ஆகும் என்பது உண்மைதான். பாவத்திற்கான தேவ தண்டனை பற்றி வாசிக்கும்போதும், கேட்கும்போதும், அன்புள்ள தேவன் எப்படி தன் சிருஷ்டிப்பை தண்டிக்க முடியும் என்று அனேகர் நினைக்கின்றனர். நாம் தேவனைப் பற்றிப் படிக்கும்போது, தவறான கள்ளப் போதகர்கள் செய்வது போல—ஒரு வசனத்தை தங்கள் வசதிக்கேற்ப தெரிவு செய்து கொண்டு, தேவனுடைய வார்த்தையைப் பற்றிய தங்கள் தவறான புரிதலின்படி வியாக்கியானம் கொடுப்பது போல—நாம் செய்யக் கூடாது. இங்கே நாகூமின் வார்த்தைகள் தேவன் மோசேயிடம் யாத்திராகமம் 34:6-7இல் சொன்னவைகளை நினைவுபடுத்துகிறது.

நாகூமின் தீர்க்கதரிசனத்தின் மையக் கருப்பொருள் நினிவேயின் அழிவைப் பற்றியதாகும்.  ஆயினும், நாகூம் 1ஆம் அதிகாரமானது தேவனுடைய குணாதிசயங்கள் மற்றும் வல்லமைப் பற்றி நமக்குச் சொல்கிறது. சில நேரங்களில், தவறு செய்கிறவர்களுக்கு எதிராக தேவன் ஏன் எதையுமே செய்வதில்லை? ஏன் மக்களின் பாவங்களை தேவன் கண்டும் காணாதவர் போல இருக்கிறார்? துன்மார்க்கர் ஏன் தொடர்ந்து வளர்ந்து பெருகிறவர்களாக இருக்கிறார்கள், ஆனால் நீதிமான்களோ தொடர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என மக்கள் முறுமுறுக்கக் கூடும்.  இங்கே, நாகூம் 1:3 தேவனுடைய இரண்டு முக்கியமான குணாதிசயங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. “அரை குறை அறிவு ஆபத்தானது” என்று ஒரு பழமொழி கூறுகிறது. தேவனைப் பற்றிய விஷயத்திலும் இது உண்மை ஆகும். ஆகவே, தேவனைப் பற்றிய முழுமையான மற்றும் வேதாகமரீதியிலான ஒரு புரிதலைப் பெற, நாம் அனுதினமும் அவரை அதிகமதிகமாக அறிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். தேவன் தம் ஜனங்களை பாதுகாக்க வல்லவராக இருக்கிறார். அனைவர் மீதும் தம் நீதி நியாயத்தை நிலைநிறுத்த அவர் வல்லவராக இருக்கிறார்.  ஒரு பக்கம் மட்டுமே  அச்சிடப்பட்ட ஒரு நாணயம் அல்லது ரூபாய் தாள் நம்மிடம் இருந்தால், அது எதற்கும் பயனற்றதும் செல்லாததுமாக ஆகி விடுகிறது. எனவே, நாம் இன்னும் அதிகமதிகமாக தேவனை அறிந்து கொள்ளவும், நாம் இதுவரை தேவனைப் பற்றி அறிந்திராத விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் நம்மை ஆயத்தப்படுத்தி, நாம் தேவனைத் தேட வேண்டும்.

பயன்பாடு: தேவன் என்னிடம் அன்பாக இருந்து என்னைத் தண்டனைக்குத் தப்புவித்து இரட்சித்திருக்கிற படியால் நான் உயிர்வாழ்கிறேன். தேவன் எல்லோர் மீதும் கோபம் கொள்வாரெனின், ஒருவரும் உயிர் தப்ப முடியாது. ஆயினும், தேவ கிருபையானது அவர் தம் அன்பில் நமக்குச் செய்தவைகளை  விசுவாசிக்கும் உறுதியை எனக்குத் தருகிறது. தேவனுடைய அன்பு நான் அவர் அன்பில் நிலைத்திருக்கும்படி என்னை உற்சாகப்படுத்துகிறது. தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவர்களுக்கு அவர் வைத்திருக்கும் தண்டனையானது தேவனிடம் திரும்ப வேண்டும் என்ற எச்சரிக்கையைத் தருவதாக இருக்கிறது. மக்கள் தேவனை இன்னும் அதிகமதிகமாக நேசிக்கும்படி, நான் அவருடைய வார்த்தைக்கு சரியான விதத்தில் விளக்கம் கூற/தர வேண்டும்.

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை நிரப்புகிற என்னில் நிரம்பி வழிகிற உம் கிருபைக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் நிலைத்து நிற்கவும், அனுதினமும் அவருடைய அன்பைக் கொண்டாடவும் எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய அன்பு மற்றும் அவர் எனக்காக வைத்திருக்கிற திட்டத்தைப் பற்றிய சத்தியத்தை தேவனுடைய வார்த்தையில் காண்பதற்கு என் கண்களைத் திறந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 353

A theological principle about knowing God

READ: Nahum 1-3; Proverbs 20; Revelation 10

SCRIPTURE:  Nahum 1: The Lord is slow to anger and great in power, And the Lord will by no means leave the guilty unpunished. In the gale and the storm is His way, And clouds are the dust beneath His feet.

OBSERVATION: We human beings are used to focusing more on what is convenient and encouraging to us than on matters that are uncomfortable to us.  When people think about God, their thoughts on God usually have a strong connection with what they know about God. Concerning God, people emphasize his love more than any other aspect of him. Of course, God is love, and his love is eternal and inseparable from him. When reading and listening about God's punishment for sin, many people think, How a loving God could punish his creation? When we study about God, we should not do what false teachers are doing—choosing the text out of its contexts to interpret according to their false understanding of God’s word. Here, Nahum’s words remind what God proclaimed to Moses in Exodus 34:6-7.

The central theme of Nahum’s prophecy was the fall of Ninevah.  However, Nahum 1 tells us about God’s characteristics and his power. Sometimes, people mumble why God is not doing anything against the wrongdoers? Why God overlooks the sins of people? Why do the wicked continually grow up and increase while the righteous suffer? Here, Nahum 1:3 reminds us of God’s two significant characters. An old saying says, “little knowledge is always dangerous.” Concerning God also it is true. So, we must make efforts to know him better every day to have a complete and biblical understanding of God. God is able to protect his people; he has the power to establish his justice to all. If we have a coin or money that is printed on only one side of it, then the coin has no value and becomes void. Therefore, we need to seek God by preparing ourselves to know him more and become familiar with what we have not yet learned about him.

APPLICATION:  I am alive because God is kind to me and saved me from punishment. If God is angry with everyone, none of us will be spared. However, his grace gives me the confidence to believe what he did for me in his love. The love aspect of God encourages me to remain in his love. The punishment he has for those who disobey him serves as a warning to return to God. I should be careful to give a proper interpretation of God’s word to help people love him more and more.

PRAYER:  Father, thank you for your grace that fills me and overflows through me. Lord, help me remain in the grace of the Lord Jesus Christ and celebrate his love every day. Holy Spirit, open my eyes to see the truth in God’s word about his love and plan for me. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 353

Wednesday, December 22, 2021

கர்த்தர் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன?

வாசிக்க: மீகா 5-7; நீதிமொழிகள் 19; வெளிப்படுத்தின விசேஷம் 9

வேத வசனம்:  மீகா 6: 8. மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

கவனித்தல்: இந்தியாவில் மக்கள் பல்வேறு விதமான காணிக்கைகளை— பாலில் இருந்து சாராயம் வரை, தானியங்கள் முதல் தங்கம் வரை, மற்றும் காய்கறிகளில் இருந்து மிருகங்கள் வர (மிகவும் அரிதாக மனிதர்களைப் பலிகொடுத்தும் கூட— ஒரு தெய்வத்தை அமைதிப் படுத்த, கோபத்தை தணிக்க, அல்லது ஆசீர்வாதம் வேண்டி உள்ளூர் பாரம்பரியங்களின் படி காணிக்கைகளைக் கொடுப்பர். இங்கே ஒரு கற்பனை உரையாடலில், காணிக்கைகளும் பலிகளும் தேவனுடைய தயவைச் சம்பாதிக்க தனக்கு உதவுமா என்பதை மீகா அறிந்து கொள்ள விரும்புகிறார். அவர் தன் முதற்பேறான மகனைக் கொடுப்பதற்கும் தயாராக இருந்தார். ஆனால், தேவன் அவை எல்லாவற்றிற்கும் “இல்லை” என்று பதில் அளித்தார். அதற்குப் பதிலாக, எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடிய மூன்று கட்டளைகளை தேவன் அவரிடம் கூறினார். மூன்று எளிய காரியங்களைச் செய்யும் படி தேவன் கூறினார். அவையாவன: நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடு இருத்தல். ஆமோஸ் 5:14-15இல், இதே போன்ற வார்த்தைகளை நாம் காண்கிறோம். மீகாவின் காலத்தில், இஸ்ரவேலர்கள் ”நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி” வாழ்ந்தனர் (மீகா 3:2). தேவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை சுருக்கமாக மீகா 6:8 நமக்குக் கூறுகிறது.

நியாயம் செய்தல் என்பது மக்களுக்கு அவர்களுக்கு உரியதை அல்லது உரிய உரிமைகளைக் கொடுப்பதைக் குறிக்கிறது.  இது தண்டனை வாங்கிக் கொடுத்து நிலைநிறுத்தும் நீதி அல்ல, மாறாக அவர்கள் வாழ்வைப் மறுபடியும் மீட்டெடுக்க உதவும் நீதி நியாயம் ஆகும். நம் காணிக்கைகள் தேவனைப் பிரியப்படுத்துவதில்லை. அவர் நம் காணிக்கைகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறார். மற்றவர்களும் தேவனுடைய அன்பை ருசிபார்க்கும்படி நாம் அன்பையும் இரக்கத்தையும் காண்பிக்க வேண்டும். நம் பிதாவாகிய தேவன் இரக்கமுள்ளவராக இருக்கிறபடியால், நாமும் இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் ( லூக்கா 6:36). நாம் அவருக்கு முன்பாக மனத்தாழ்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என தேவன் விரும்புகிறார். ”தாழ்மையாக நடந்து கொள்தல் என்பது விசுவாசித்து வாழ்வதே. ஏனெனில் விசுவாசமானது பெருமைக்கு நேர் எதிரான ஒன்றாக இருக்கிறது” என வால்டர் கெய்சர் விளக்குகிறார். ”தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என வேதம் சொல்கிறது (யாக்கோபு 4:6; 1 பேதுரு 5:5). பெருமையானது தேவனுக்குரிய  இடத்தில் வேறே எதையாகிலும் வைக்கிற படியால், தேவன் எந்தவிதமான மனிதப் பெருமைக்கும் எதிராக இருக்கிறார். விசுவாசமானது தேவனை வாழ்வின் மையத்தில் வைக்கிறது, பெருமையோ எப்பொழுதுமே சுயத்தை மையமாக நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. தேவனுடன் நடக்கிறவர்கள் பெருமை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

மீகா தன் மக்களை தேவனுக்கு செவிகொடுக்கும்படி அழைத்தார். மீகா 6:8 தேவனுக்கு செவிகொடுப்பதற்கான ஒரு அழைப்பு ஆகும். அது தேவனுடைய வார்த்தையின் படி செயல்படுவதற்கான அழைப்பு ஆகும். நாம் தேவனுடன் இருக்கும்படி மனந்திரும்பி அவரிடம் வரும் வரைக்கும், தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் எதையும் நம்மால் செய்ய முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஸ்பர்ஜன் சொல்வது போல, “கர்த்தர் எதிர்பார்ப்பது ஆவிக்குரிய ஆராதனை ஆகும்; வெளிப்பிரகாரமானவைகளோ, வெளியே தெரிகிற தாலந்துகளோ அல்ல, மாறாக இருதயத்தை தேவன் எதிர்பார்க்கிறார்.” கர்த்தருக்காக சில காரியங்களைச் செய்து அவருடைய தயவைச்  சம்பாதிக்க முடியும் என்று பல கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தேவன் நாம் செய்கிறவைகளை மட்டுமல்ல, நம் இருதயத்தையும் பார்க்கிறார். நாம் உள்ளத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை மிகத் தெளிவாக கூறி இருக்கிறார். நாம் அதற்குக் கீழ்ப்படிந்து, அதன்படி வாழ வேண்டும்.

பயன்பாடு:  என் தேவன் எல்லா காலத்திலும் நல்லவராகவே இருக்கிறார். என் மீதான  அவருடைய அன்பு மற்றும் எதிர்பார்ப்பு ஒருபோதும் மாறுவதில்லை. அவருடைய செய்தியானது புரிந்து கொள்ள முடியாத புதிர் அல்ல. அது தெளிவானதாகவும் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. நான் நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதற்கு வாழ்க்கையைப் பற்றிய தேவனுடைய அளவுகோலின் படி நான் வாழ வேண்டும். என் காணிக்கைகள் மூலமாக நான் தேவனைப் பிரியப்படுத்தவோ, அவருடைய தயவைப் பெறவோ முடியாது. நான் தேவனுடன் தனிப்பட்ட உறவில் தொடர்ந்து வாழ்ந்து, தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

 ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நான் விசுவாசிப்பதை வாழ்க்கையில் செயல்படுத்த எனக்கு சவாலை முன்வைக்கும் உம் செய்திக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எனக்கு உம் ஆவியின் பெலத்தைத் தந்தருளும். இயேசுவின் நாமத்தில், என் ஜெபம் கேட்டருளும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day – 352


What does the Lord require of me?

READ: Micah 5-7; Proverbs 19; Revelation 9

SCRIPTURE:  Micah 6: He has told you, mortal one, what is good; And what does the Lord require of you But to do justice, to love kindness, And to walk humbly with your God?

OBSERVATION: In India, people would offer different kinds of offerings—from milk to liquor, grains to gold, vegetables to animals (rarely even to the level of human sacrifice)—to appease a deity or to seek prosperity, according to the local traditions. Here, in a hypothetical conversation, Micah wants to know whether offerings or sacrifices could help him get God’s favor. He is ready even to offer his firstborn. But God said, “No” to all of these. Instead, God told him three commands that are applicable for all times. He asked them to do three simple things: “to do justice, to love kindness, And to walk humbly with your God.” In Amos 5:14-15, we see similar words. In Micah’s time, Israelites “hate good and love evil” (Micah 3:2). Micah 6:8 gives us a summary of what God expects from us.

Justice means giving people their due or rights. It is not retributive justice but restorative justice. Our sacrifices do not please God. He desires mercy, not our offerings. We should show love and mercy to others so that they also can taste God’s love. We need to be merciful because our God the Father is merciful (Luke 6:36). God wants us to be humble before him. Walter Kaiser explains, “To walk humbly is simply to live by faith, for faith is the antithesis of pride.” The bible says, “God is opposed to the proud, but gives grace to the humble” (James 4:6; 1 Pet.5:5). God is against any form of human pride because it keeps something else in place of God. Faith keeps God at the center of life, but pride always focuses on oneself. Those who walk with God will not have pride.

Micah called his people to listen to God. Micah 6:8 is an invitation to listen to God. It is a call to act upon God’s word. Let us remember that we cannot do anything as the Lord expects us until we come to God in repentance to be with him. As Spurgeon says, “It was a spiritual worship that the Lord required; not externals, not outward gifts, but the heart.” Many Christians think that they can earn God’s favor by doing certain things for the Lord. But God sees our heart, not just what we do. He desires us to be truthful in the innermost being. God has made it clear about what he expects from us. We must obey and live accordingly.

APPLICATION: My God is Good all the time. His love and expectation for me never change. The Good God expects good things from me. His message is not an incomprehensible puzzle. It is clear and understandable for all. I must live in God’s standard for life to do justly, show mercy, and walk humbly. I cannot please God and earn his favors through my offerings. I must continue to live in a personal relationship with God and be willing to share his love and mercy with others as well.

 PRAYER:  Father God, thank you for the threefold message that challenges me to practice what I believe. Lord, give me your Spirit’s strength to fulfill your expectations. In Jesus’ name, I pray. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 352

(Tamil version of this devotion is posted here)

Tuesday, December 21, 2021

சுகமாகத் தங்க பாதுகாப்பான ஒரு இடம்

வாசிக்க: மீகா 3,4; நீதிமொழிகள் 18; வெளிப்படுத்தின விசேஷம் 8

வேத வசனம்: நீதிமொழிகள் 18: 10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

கவனித்தல்:  பண்டைய காலங்களில், அரணான பட்டணங்களில் வாழ்ந்தவர்கள் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து மற்றவர்களைக் காட்டிலும் பாதுகாப்பாக இருந்தார்கள். ஏனெனில், எதிரிகள் முற்றுகை போடும்போது பத்திரமாக இருக்கும்படியாக, உறுதியான மதில் சுவர்கள் மற்றும் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளவைகளாக கோட்டைகள் கட்டப்பட்டன. இன்றும் கூட, ஒரு பயங்கர நிகழ்வு அல்லது இய்ற்கைப் பேரழிவு வரும்போது, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஜனங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுவார்கள். செல்வந்தர் மற்றும் ஏழைகள், படித்தவர் மற்றும் படிக்காதவர், மற்றும் பாலின, சமுதாய, மற்றும் பொருளாதார வித்தியாசங்கள் எதையும் பொருட்படுத்தாமல், ஒரு பாதிகாப்பான இடத்தில் அவர்கள் தஞ்சமடைவார்கள். நீதிமொழிகள் 18:10 இல், ”கர்த்தரின் நாமம் பலத்த துருகம்” என்று நாம் வாசிக்கிறோம். ”கர்த்தருடைய நாமம்” என்கிற சொற்றொடரானது நீதிமொழிகள் புத்தகத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே வருகிறது. கர்த்தருடைய நாமம் என்பது கர்த்தரைக் குறிக்கிற ஒன்றாக இருக்கிறது.

கர்த்தருடைய நாமம் என்பது தேவனுடைய தன்மை மற்றும் குணாதிசங்களை வெளிப்படுத்துகிறது. தேவனுடைய பெயரை மோசே கேட்ட போது, ”இருக்கிறவராக இருக்கிறேன்” என்று தேவன் பதில் சொன்னார் (யாத்.3:14-15). இது தேவன் தம் குணாதிசயம், நம்பகத்தன்மை, மற்றும் உண்மையைப் பற்றி சுயமாக வெளிப்படுத்துகிற பெயராக இருக்கிறது. சிருஷ்டிகராகிய தேவன்  மனிதர்களின் தேவைகளைச் சந்திக்கவும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் தம் பெயரை அவர் வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய நாமத்தை அறிந்து கொள்வது அவருடனான தனிப்பட்ட உறவில் வளருவதற்கு நமக்கு உதவுகிறது. தேவனுடனான நம் உறவானது தொடர்ச்சியான மற்றும் தொடர்ந்து வளருகிற உறவாக, அனுதினமும் அவரைப் பற்றி அதிகமதிகமாக அறிந்து கொள்கிற ஒன்றாக இருக்கிறது. கர்த்தருடைய நாமமானது கர்த்தரைப் போன்றே உறுதியானதாக இருக்கிறது. எல்லா காலத்திலும் நம்பத்தக்கதாக அது இருக்கிறது. தேவையுள்ள நேரங்களில்,  ஆபத்து மற்றும் அவசரக் காலத்தில், நாம் அதை நோக்கி ஓட முடியும். நாம் எவ்வளவு துரிதமாக மற்றும் விரைவாக தேவனை நோக்கி ஓடுகிறோமோ, அவ்வளவு சீக்கிரமாக அவர் நமக்காக செயல்படுகிறார். தன்னிடம் வருகிற அனைவரையும் தேவன் வரவேற்று ஏற்றுக் கொண்டு, தப்புவிக்கிறார். சிலர் தங்களால் சமாளிக்க முடியாத முடியாத பிரச்சனை அல்லது தேவை வரும்போது மட்டுமே தேவனைத் தேடுகின்றனர். நாம் எப்பொழுதும் அவரை நாடி, நம்ப வேண்டும். சில நேரங்களில், புயல்கள், தோல்விகள், பிரச்சனைகள், உறவு சார்ந்த பிரச்சனைகள், வியாதிகள், மற்றும் பயங்கர நிகழ்வுகள் ஆகியவை நம் வாழ்வில் தேவன் இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றன.  கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள் மாறாக எழுந்து நிமிர்ந்து நிற்பார்கள் என சங்கீதம் 20:7-8 நமக்கு நினைவுபடுத்துகிறது. நாம் தேவனை விட்டு விலகி ஓடுகிறோமா? அல்லது தேவனை நோக்கி ஓடுகிறோமா? கர்த்தருடைய நாமத்தை நோக்கி நாம் எப்படி ஓடுகிறோம் என்பதை நம்மை நாமே நிதானித்து அறிவோமாக. உன்னதமானவரின் மறைவில் நாம் தங்கி வாழ்வோமாக. ”கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக” (கொலோ.3:16). ” எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது” (சங்.91:9,10).

பயன்பாடு:  தாவீது பாடுவது போல, “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங்.34:4). என் தேவன் யார் என்பதை கர்த்தருடைய நாமம்  எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர் எனக்கு யாராக என்னவாக இருக்கிறார் என்பதை நான் அறிந்திருப்பதால் நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன். ”நானே” என்று சொன்ன மகத்துவமுள்ளவர் எனக்குள் இருக்கிறார். எனக்குத் தேவையான அனைத்தையும் இயேசு எனக்குத் தருகிறார். கிறிஸ்துவுக்குள் நான் புதிய சிருஷ்டியாக இருக்கிறேன். “பழையவைகள் ஒழிந்தன, எல்லாம் புதிதாயின.” நான் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். நான் அவருடைய வார்த்தையை அனுதினமும் வாசித்து, விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் எவ்வளவு அதிகமாக அடிக்கடி அவரை நோக்கி ஓடுகிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் அவரைப் போல மாறுகிறேன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நான் எப்பொழுதும் வந்தடையத் தக்க கன்மலையாக இருப்பதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, என் பலவீனங்களில் பரிபூரணமாக விளங்குகிற உம் கிருபைக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கர்த்தருடைய நாமத்தை நினைவு கூர்ந்து, அதை நோக்கி ஓடவும், எப்பொழுதும் உம் சிறகுகளின் நிழலில் பத்திரமாக இருக்கவும் உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 351