Tuesday, November 23, 2021

தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் நம் நாவு

வாசிக்க: எசேக்கியேல் 39,40; சங்கீதம் 142; யாக்கோபு 3

வேத வசனம்: யாக்கோபு 3: 8. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
9. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
10. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

கவனித்தல்:  விலங்குகளின் கண்காட்சிகள் மற்றும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளில், மீன்களில் இருந்து, பறவைகள் மற்றும் மிகப்பெரிய உருவம் கொண்ட யானைகள் போன்ற விலங்குகள் தங்கள் பயிற்சியாளர்களுக்குக் கீழ்ப்படிவதை அல்லது அவைகளின் அற்புதமான செயல்களை நாம் காண்கிறோம். உதாரணமாக, ஒரு யானை சிறிய ஸ்டூலில் ஏறி நிற்பது, பயங்கரமான விலங்குகளான சிங்கம் மற்றும் புலிகளின் கீழ்ப்படிதல், மற்றும் அவைகளின் விளையாட்டுத்தனமான செய்கைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகளில் விபத்துகள் நடப்பது மிகவும் அரிது; பெரும்பாலும் அவை மனித தவறுகளாலேயே நடக்கின்றன. விலங்குகளை நாம் அவைகளின் இயல்பான சுபாவத்திற்கு எதிராக காரியங்களைச் செய்யும்படி பயிற்றுவிக்க முடியும் போது, மனிதர்களாகிய நாம் நம் வார்த்தைகளையும் சிந்தனைகளையும் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கிறோம். விலங்கு ஒன்றை கட்டுப்படுத்துவது என்பது கடுமையான மற்றும் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் முயற்சிகளினால் சாத்தியமாகக் கூடிய கலை ஆகும்.  ஆனால், தேவனுடைய ஒழுங்கு மற்றும் பயிற்சிக்குள் வராத பட்சத்தில் “ஒரு மனுஷனாலும்” தன் நாவை முழுமையாக அடக்க முடியாது.

நம் நாவை  நாம் எப்படி தவறாகப் பயன்படுத்துகிறோம் என்பதை 9 மற்றும் 10ஆம் வசனங்களில் யாக்கோபு கூறுகிறார். நம் நாவினாலே, நாம் தேவனை துதிக்கிறோம், அதன் பின்னர் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிற மனிதனை நாம் சபிக்கிறோம். ”இது இவருக்கு (இவளுக்கு, இவர்களுக்கு) தேவையான ஒன்றுதான்,” அவனுக்கு (அவளுக்கு) இதை யாராவது ஒருத்தர் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, ஆகவே நான் சொன்னேன், “ என்பன போன்ற பல காரணங்களை நாம் சொல்லி நாம் பேசிய வார்த்தைகள் சரிதான் என்று வாதாடலாம். ஒரே நாவில் இருந்து துதித்தலும் சபித்தலும் வரக் கூடாது என்பதை யாக்கோபு மிகவும் அழுத்தமாக “இப்படியிருக்கலாகாது” என்றுக் கூறுகிறார். சபையின் தூண்களாகக் கருதப்பட்ட ஆதிச்சபைத் தலைவர்களில் ஒருவராக யாக்கோபு இருந்தாலும், தன் நிருபத்தை வாசிப்பவர்களை குற்றம் சாட்டி குறை கூறாமல், அவர்களுடனே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். யாக்கோபு 3:2இல், “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என்று அவர் கூறுவதை நாம் வாசிக்கிறோம். ஆயினும், நம் மனிதப் பலவீனங்கள் நம்மை தீட்டுப்படுத்த, கறைப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது.

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்” என்று இயேசு நம்மை எச்சரிக்கிறார் (மத்,12:36). “வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என்று மத்தேயு 15:18 இல் இயேசு கூறுகிறார். சில சமயங்களில் நாம் கட்டுப்பாடிழந்து, நாவடக்கமின்றி தேவையற்ற, முறையற்ற வார்த்தைகளை நாம் பேசிவிடக் கூடும். ”மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” (நீதி,18:21). கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும் (சங்.141:3) என்று தாவீது ஜெபித்தது போல நாமும் ஆண்டவரிடம் ஜெபிக்கலாம்.

பயன்பாடு: மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படியே இயேசு என்னை அழைத்திருக்கிறார் (லூக்கா 6:28; ரோமர் 12:14). என் வார்த்தைகளால் நான் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு என் இருதயத்தை நான் தேவனுடைய வார்த்தைகளால் நிரப்ப வேண்டும். ”கெட்ட வார்த்தை” எதுவும் என் வாயில் இருந்து வர நான் அனுமதிக்கக் கூடாது; கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனம் உண்டாகும்படி பக்திவிருத்திக்கேதுவான வார்த்தைகளை மட்டுமே நான் பேச வேண்டும் (எபே.4:29). கிறிஸ்துவில் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற, பக்திவிருத்தி உண்டாக்குகிற, வளரச் செய்கிற வார்த்தைகளை நான் பேசுவேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் எனக்குத் தந்திருக்கிற ஜீவ வார்த்தைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் துணையின்றி நான் எதையும் செய்ய இயலாது. கர்த்தாவே, என் முழு இருதயத்தாலும் வார்த்தைகளாலும் மற்றவர்களை ஆசீர்வதிக்க எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, எப்பொழுதும் ஆவியின் நிறைந்திருக்கவும்,  தேவ பக்திக்கேதுவான, கிருபை நிறைந்த வார்த்தைகளைப் பேச என் வாய்க்குக் காவல் வைத்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 325

Our tongue under God’s control

READ: Ezekiel 39,40; Psalms 142; James 3

SCRIPTURE: James 3: 8 But no human being can tame the tongue. It is a restless evil, full of deadly poison.
9 With the tongue we praise our Lord and Father, and with it we curse human beings, who have been made in God’s likeness.
10 Out of the same mouth come praise and cursing. My brothers and sisters, this should not be.

OBSERVATION: In animal shows and circuses, we see animals, from fishes, birds to big-sized elephants,  obeying their trainers or their incredible performance. For example, an elephant standing on a small stool, ferocious animals like tigers and lions’ obedience, and their playful acts surprise us. Mishaps in such events happen rarely;  Oftentimes, they happen because of human errors. While we are able to train animals to do things against their natural character, we humans struggle to control our words and thoughts. Taming an animal is an art that is possible with severe and continuous training and exercise. “No human being” can have complete control of their tongue unless they come under God’s discipline and training.

In verses 9 and 10, James tells us how we inappropriately use our tongue. With our tongue, we praise God and then abuse human who is created in the image of God. Contrasting words can come from our mouths. We may justify our words by giving reasons like, “they deserve it,” “somebody has to tell it to him/her, so I did,” and so on. James emphatically says that blessing and cursing should not come forth from the same mouth: “this should not be.” Although James, one of the Early Church leaders who were “esteemed as pillars,”  identifies himself with the readers instead of accusing and blaming them. In James 3:2, we read, “We all stumble in many ways.” However, we should not allow our human weaknesses to defile us.

Jesus warns us, “everyone will have to give account on the day of judgment for every empty word they have spoken” (Mt.12:36). In Matthew 15:18, Jesus says, “the things that come out of a person’s mouth come from the heart, and these defile them.” At times, we may lose control over our words and speak unwanted words with a slip of the tongue. “The tongue has the power of life and death, and those who love it will eat its fruit” (Pro.18:21). As David prayed, we too can ask the Lord that “Set a guard over my mouth, Lord; keep watch over the door of my lips” (Ps.141:3).

APPLICATION: Jesus has called me only to bless others (Lk. 6:28, Rom.12:14). I need to treasure God’s word in my heart to avoid sinning against the Lord through my words. I should not allow “any unwholesome talk” to come out of my mouth; I must speak “only what is helpful for building others up according to their needs” (Eph.4:29). I will speak words that encourage, edify, and equip others in Christ.

PRAYER: Father God, thank you for the Word of life you have given me. Jesus, I can do nothing without you. Lord, help me to bless others with all of my heart and words. Holy Spirit, help me be spirit-filled and take control of my mouth to speak godly and grace-filled words always. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 325

Monday, November 22, 2021

பெயரளவு விசுவாசம் vs உண்மையான விசுவாசம்

வாசிக்க: எசேக்கியேல் 37,38; சங்கீதம் 141; யாக்கோபு 2

வேத வசனம்: யாக்கோபு 2: 14. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

கவனித்தல்: சில நேரங்களில் தங்கள் வாழ்க்கைக்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத முரண்பாடான பெயர்களை உடையவர்களை நாம் பார்க்கிறோம். உதாரணமாக, மகாராஜா என்ற பெயரை உடைய, ஆனால் குடியிருப்பதற்கு ஒரு சிறிய வீடு கூட இல்லாத (வீடற்ற) ஒருவரை நாம் பார்க்கக் கூடும். சில கிறிஸ்தவர்கள் யாக்கோபு 2:14 ஐ தவறாகப் புரிந்து கொண்டு, அதை முரண்பாடானதாகக் காண்கின்றனர். யாக்கோபு 2:14 ஐ அது சொல்லப்பட்ட சூழலுக்கு வெளியே வைத்து ஒருவர் வாசித்தால், அவர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தவறான வியாக்கியானம் கொடுக்கக் கூடும். இங்கே, கிரியைகளினால் நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று யாக்கோபு கூறவில்லை. நாம் ”கிரியைகளினாலல்ல,” விசுவாசத்தினால் கிருபையினாலேயே இரட்சிக்கப்படுகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை (எபேசியர் 2:8,9). யாக்கோபு 2:14-26 ஐ வாசிக்கும்போது, யாக்கோபின் வாதத்தின் கருத்தானது பெயரளவு விசுவாசத்திற்கு எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.  இரட்சிக்கும் விசுவாசத்தைப் பற்றி அவர் பேசவில்லை. மாறாக, விசுவாசத்தை வாழ்க்கையின் வழிமுறையாக கைக்கொள்வதைப் பற்றிப் பேசுகிறார். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்திற்காக பாடுகளையும் உபத்திரவங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கு யாக்கோபு இந்த நிருபத்தை எழுதுகிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது (யாக்.1:1,2). விசுவாசத்தினாலல்ல, கிரியைகளினாலேயே நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று அவர்கள் விசுவாசித்திருந்தால், அவர்கள் எந்த உபத்திரவத்தையும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ஏனெனில், நியாயப்பிரமாணம் போதிப்பதும் அதுவே.

இந்த வேதப் பகுதியின் சரியான பொருளை அறிந்து கொள்வதற்கான முக்கியமான திறவுகோல் வார்த்தை என்னவெனில், “அந்த விசுவாசம்” என்பதாகும். 19ஆம் வசனத்தில், தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன” என்று அவர் சொல்கிறார். நாமெல்லாரும் அறிந்திருக்கிறபடி, பிசாசுகளின் நம்பிக்கை உயிரற்றதும், பயனற்றதுமாக இருக்கிறது.  இரட்சிக்கும் விசுவாசமானது நாம் விசுவாச அறிக்கையை செய்தவுடன் முடிந்து விடுவதில்லை. அது நம் விசுவாசத்தை கடைபிடிக்கவும், நம் வாழ்க்கையில் வாழந்து காட்டவும் நம்மை அழைக்கிறது. நம் கிரியைகள் ஒருபோதும் நம் இரட்சிப்பிற்கான ஆதாரமாக இருக்க முடியாது. செயல்களில் காட்டப்படாத விசுவாசம் விசுவாசமே அல்ல. தேவன் மேல் உள்ள நம் விசுவாசமானது உண்மையானதும் உயிருள்ள விசுவாசமாகவும் இருக்கிறது. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் நாம் நடக்கையில் அனுதினமும் நம் வாழ்வில் எல்லாப் பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. தேவனை விசுவாசித்து, தன் விசுவாசத்தை வாழ்க்கைமுறையாகக் கொண்டவரே ஒரு கிறிஸ்தவர் ஆவார். கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவின் வாசனையை நம் வாழ்க்கை மூலமாக எல்லா இடங்களிலும் பரப்ப தேவன் நம்மைப் பெலப்படுத்துவாராக (2 கொரி.2:14).

பயன்பாடு: நான் ஜீவனுள்ள தேவனை விசுவாசிப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். நான் கிரியைகளினாலே அல்ல, விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன். ஆயினும், தேவன் மேல் உள்ள என் விசுவாசமானது தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நற்காரியங்களைச் செய்யும்படி என்னை உற்சாகப்படுத்துகிறது (எபே.2:10). நான் கிறிஸ்துவில் நிலைத்திருக்கையில், நான் மற்றவர்களுக்கு பயனுள்ளவனாகவும், நல்ல கனிகளைத் தருகிறவனாகவும் இருக்கிறேன் (யோவான் 15:5). நான் “நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்க” வேண்டும், ஏனெனில் அவை ”நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்” (தீத்து 3:8,14).  

ஜெபம்: நல்ல தேவனே, என் வாழ்க்கையில் நீர் செய்து வருகிற நற்காரியங்களுக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் இரட்சிப்புக்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, என் செயல்கள் மூலமாக ஜனங்கள் தேவனைக் கண்டுகொள்ள உதவும்படி ஒரு விசுவாச வாழ்க்கையை வாழ எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 324

Nominal faith vs Normal faith

READ: Ezekiel 37,38; Psalms 141; James 2

SCRIPTURE: James 2: 14 What good is it, my brothers and sisters, if someone claims to have faith but has no deeds? Can such faith save them?

OBSERVATION: Sometimes, we see people with ironic names who have no relevance between their names and lives. For example, we may see a person who has not even a single and small house (or a homeless person) but has the name Maharaja (which means a great king). Some Christians misunderstand James 2:14 and find it contradictory. If a person reads James 2:14 out of its’ context, s/he may misunderstand and misinterpret it. Here, James does not say that we are saved by works/deeds. There is no doubt that we are saved by grace through faith, “not by works” (Eph.2:8,9). When we read James 2:14-26, we understand that the premise of James’ argument is against nominal faith. He is not speaking about saving faith. Instead, he writes about practicing faith as the way of life. We should not forget that James writes this epistle to Jewish Christians who go through persecutions and trials for their faith in Jesus Christ (1:1,2). If they had believed that it is not by faith but by works we are saved, they would not have faced any suffering. For the law teaches exactly the same.

The keyword to understanding the proper meaning of this passage is “such faith.” In verse 19, he says, “You believe that there is one God. Good! Even the demons believe that—and shudder.” As we all know, demons’ faith is dead faith and useless. Here in 2:14, James points out of a person who claims to have faith but does not practice or show it in actions. Such nominal faith is useless. Saving faith does not end with our confession of faith. It calls us to practice and live out our faith in life. Our works cannot/never be a source for our salvation; a faith that does not produce any works is not a faith at all. Our faith in God is real and living faith, and it is practiced in every aspect of our lives as we daily walk with the Lord Jesus. A Christian is someone who believes in God and makes his faith his /her way of life. May God enable us “to spread the aroma of the knowledge” of Christ in all places through our lives (2 Cor.2:14).

APPLICATION: I am called to believe in the living God. I am justified by faith, not by works. However, my faith in God motivates me to produce good works in obedience to God’s word (Eph.2:10). As I remain in Christ, I become useful to others and bear good fruit (Jn.15:5). I must be “careful to devote” myself to doing good deeds, for they are “excellent and profitable for everyone” (Titus 3:8,14).

PRAYER: Good God, thank you for the good works you have done in my life. Lord, thank you for your salvation. Holy Spirit, give me your power to live a life of faith that helps people to see God through my actions.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 324

Saturday, November 20, 2021

தேவனுடைய வார்த்தையைப் பெறும் இரகசியம்

வாசிக்க: எசேக்கியேல் 35,36; சங்கீதம் 140;  யாக்கோபு 1

வேத வசனம்: யாக்கோபு 1: 19. ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;
20.
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.

கவனித்தல்: மன உறுதி, நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் ஆகியவற்றைப் பெறவும், மற்றும் உலகப் பிரகாரமான கவர்ச்சிகளை எதிர்த்து நிற்பதற்காக  இந்தியாவில் மவுன விரதம் சிலர் இருப்பதுண்டு. பொதுவாக, அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தங்கள் மவுன விரதத்தை அனுசரிப்பதற்காக எவருடனும் பேச மாட்டார்கள். ஆயினும், அவர்களின் மவுன விரதம் முடிந்த உடனே, அவர்கள் முன்பு இருந்த வழக்கமான வாழ்விற்கு திரும்பிவிடுவார்கள். இப்படிப்பட்ட துறவற பழக்கங்கள் சில பலன்களைக் கொடுத்தாலும், அவை தற்காலிகமானவையே. யாக்கோபு 1:19இல், கிறிஸ்தவர்கள் அடிக்கடி குறிப்பிடும் மூன்று விதிகளை நாம் வாசிக்கிறோம். நம் அனுதின வாழ்வில் இவைகளைக் கைக்கொண்டால், அவை அனேக  நன்மைகளைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே  இல்லை. ஆயினும், நம்மில் பலர் இந்த வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை கவனிக்கத் தவறிவிடுகிறோம். தேவனுடைய் வார்த்தையைப் பெறும் மனப்பான்மை தொடர்பாக, இந்த மூன்று அறிவுரைகளையும் சத்திய வசனத்தினாலே மறுபிறப்படைந்தவர்களுக்கு முதலாவதாக யாக்கோபு எழுதுகிறார். யாக்கோபு 1:19 முழு நிருபத்திற்கும் ஒரு சுருக்கமான உரையை தருவதாக சில அறிஞர்கள் நம்புகின்றனர்: கேட்பதற்கு தீவிரமாக இருத்தல் (யாக்.1:21-2:26); பேசுகிறதற்கு பொறுமை (யாக்.3:1-18); கோபிக்கிறதற்கு தாமதம் (யாக்.4:1-5:18). இந்த மூன்று விதிகளையும் நாம் முறையாகப் பின்பற்றினால், இவை தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ள நமக்கு உதவுகின்றன.

பழைய ஏற்பாட்டு ஞான நூல்களில் ஒன்றாகிய நீதிமொழிகள் புத்தகத்தில், கட்டுப்பாடற்ற வார்த்தைகளினால் உண்டாகும் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கிற மற்றும் கட்டுப்பாடான பேச்சுகளினால் வரும் நன்மைகளைப் பற்றியும் சொல்கிற அனேக வசனங்களை நாம் காண்கிறோம் (நீதி.10:19; 13:3; 17:28; 29:20). ”நாம்  அதிகம் கேட்டு, கொஞ்சமாகப் பேசவேண்டும் என்பதற்காகவே கடவுள் நமக்கு இரண்டு காதுகளையும்  ஒரு வாயையும் கொடுத்திருக்கிறார்” என்று  ஒரு பழங்கால  பழமொழி கூறுகிறது. நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது, தேவனுக்குச் செவி கொடுக்கிறோமா? நாம் அன்றைய நாளுக்கான வேதவாசிப்புப் பகுதியை வேகமாக வாசித்து முடிக்கிறோமா? அல்லது தேவன் நம்மிடம் சொல்வதைக் கேட்பதற்கு கவனம் செலுத்துகிறோமா? நாம் எதைக் கேட்கிறோம், எப்படிக் கேட்கிறோம் என்ற இரண்டுமே தேவனுக்கு முக்கியமானவை ஆகும் (மாற்கு 4:24; லூக்கா 8:18). வாரன் வியர்ஸ்பி என்ற தேவ மனிதர் சொல்வதைப் போல, “ஒரு வேலைக்காரன் தன் எஜமானரின் சத்தத்திற்கு உடனே செவிகொடுப்பது போல, மற்றும் ஒரு தாய் தன் குழந்தையின் சிறிய சிணுங்கல் சத்தம் கேட்டும் விரைந்தோடுவது போல,  தேவன் சொல்கிறதை  உடனே கேட்பதற்கு தீவிரமானவராக ஒரு விசுவாசி இருக்க வேண்டும்.”

ஜனங்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதற்கு பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள். செவிகொடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் பேசவோ அல்லது என்ன பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டோ இருக்கிறார்கள். எல்லோரும் பேசிக்கொண்டிருந்தால், ஒருவருக்கும் கேட்காது, கேட்க மாட்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஜெபிக்கும்போது, அநேக கிறிஸ்தவர்கள் தேவன் சொல்வதைக் கேட்பதில்லை அல்லது தேவன் அவர்களுடன் பேசும்படி காத்திருப்பதில்லை. நாம் தேவனுடன்  பேசுவதைக் காட்டிலும் அதிகமாக, தேவனுக்கு செவிகொடுக்க வேண்டும். தாங்கள் பேசுவது கேட்கப்படவில்லை என்று  உணரும்போது அல்லது தேவனுடைய வார்த்தை அவர்களின் பாவ  நிலையை எதிர்த்து  உணர்த்தும் போது, ஜனங்கள் கோபமடைகின்றனர். ”நம் கோபம் மற்றும் சினம் ஆகியவை, மற்றவர்களின் நலனை மையமாகக் கொண்டவர்களிடம் இருந்து அல்ல, பெரும்பாலும சுயத்தை மையமாகக் கொண்டவர்களாக இருப்பதில் இருந்தே வருகிறது என  பாஸ்டர் டேவிட் கூஜிக் (David Guzik)) கூறுகிறார். நாம் கேட்பதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாகவும் இருக்கக் கற்றுக்  கொள்ளும்போது, நாம் கோபம் கொள்ள தாமதிக்கிறவர்களாக மாறிவிடுகிறோம். மனித உணர்வின் வெளிப்பாடான கோபத்தை நாம் ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது என வேதாகமம் கூற வில்லை. ”நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என்று எபேசியர் 4:27-27இல் பவுல் கூறுகிறார். நம் கோபமானது மாம்சத்தின் கிரியையாக மாறும்போது, நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதை அது தடுத்து விடும் (கலா.5:20, 21). நாம் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ள திறந்த மனதுடையவர்களாக இருக்க வேண்டும் என யாக்கோபு 1:19-20 ல் உள்ள வேத பகுதியானது சுருக்கமாகக் கூறுகிறது.

பயன்பாடு: நான் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்யக் கூடாது. தேவன் அனுதினமும் என்னுடன் பேச விரும்புகிறார். அவர் பரிசுத்த வேதாகமம்  மூலமாக என்னுடன் பேசுகிறார். நான் வேதாகமத்தை வாசிக்கத் திறக்கும்போது, நான் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு திறந்த மனதுள்ளவனாக இருக்க வேண்டும். தேவன் என்னுடன் பேசும்போது,  எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல்  நான் கீழ்ப்படிவேன்.

ஜெபம்:   அன்பின் தேவனே, வேதாகமம் மூலமாக என்னுடன் பேசுவதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, ”நவமான இருதயத்தையும் புதிய ஆவியையும்” எனக்குத் தாரும். ”கல்லான இருதயத்தைஎடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை” எனக்குத் தாரும் (எசேக்கியேல். 36:26). பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய வார்த்தையைக் கேட்க என் இருதயத்தைத்  திறந்தருளும், அவைகளுக்குக் கீழ்ப்படிய உம் பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 323