வாசிக்க: நியாயாதிபதிகள் 19-21; சங்கீதம் 115; லூக்கா 14: 1-24
வேதவசனம்: சங்கீதம் 115: 17. மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
18. நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.
பயன்பாடு: தேவன் மீது உள்ள என் விசுவாசத்தை அசைக்கக் கூடிய கேள்விகளை நான் எதிர்கொள்ளும்போது, என் தேவன் சாகவில்லை என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். என் மேல் கரிசனையுள்ள உயிருள்ள தேவனை நான் ஆராதிக்கிறேன் என்பதை நான் உணர வேண்டும். ” இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி.13:8). அவர் சொல்கிறார்: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” (வெளி.1:18). அவர் உயிரோடிருக்கிறபடியால், நானும் பிழைத்திருப்பேன் (யோவான் 14:19). ஆவிக்குரிய மந்தநிலையினூடாக அல்லது தேவனைத் துதிப்பதற்குக் கடினமாக இருப்பதை உணரும்போது, நான் தேவனை நினைத்துப் பார்க்க வேண்டும். என் சுவாசம் முதல் இந்த உலகில் என்னிடம் இருக்கும் அனைத்தும் அவரிடம் இருந்து வந்தவை ஆகும். ”கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.” உயிருள்ள ஒரு மனிதனாக, நான் இப்போதும் எப்போதும் தேவனைத் துதிப்பேன்.
ஜெபம்: பிதாவே, நீர் எனக்குத் தந்திருக்கிற அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, நீர் என் தேவன். நீரே நித்தியப் பிதா. தேவனே, நான் உயிருள்ள நாட்களிலெல்லாம் உமக்கு நன்றியறிதலுள்ளவனாகவும், உம்மைத் துதிக்கிறவனாகவும் இருக்க எனக்கு அருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment