வாசிக்க: யோசுவா 1, 2; சங்கீதம் 94, லூக்கா 3:21-38
வேதவசனம்: சங்கீதம் 94: 13. சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
கவனித்தல்: சங்கீதம் 94ல், நாம் இரண்டு விதமான மக்களைக் குறித்தும், ஆண்டவர் அவர்களை எப்படி ஒழுங்குபடுத்துகிறார் என்பதைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். தேவனுக்குப் பயப்படாத துன்மார்க்கர், தீய செயல்களைச் செய்பவர்கள் கர்த்தரின் தண்டனை குறித்து எச்சரிக்கப்படுகிறார்கள். மறுபுறம், தேவனால் சிட்சிக்கப்படுகிற (அ) ஒழுங்குபடுத்தப்படுகிற நீதிமானின் ஆசீர்வாதம் பற்றி இந்த சங்கீதம் கூறுகிறது (வ.12-19). தீய செயல்களைச் செய்பவர்கள் தேவனுடைய தண்டனை குறித்து எச்சரிக்கப்படுகையில், தேவன் தம் ஜனங்களை அவருடைய வார்த்தைக்கேற்றபடி வாழ சிட்சிக்கிறார். தேவன் தாம் சிட்சிக்கிற மனிதன் வேதத்தைச் சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்றும், அவனுடைய/அவளுடைய வாழ்வில் தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் அவர் சிட்சிக்கிறார்..நம் நன்மைக்காகவே தேவன் நம்மை சிட்சிக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் (எபி.12:10). தேவனுடைய நோக்கம் இன்னதென்று நாம் அறிந்து கொள்கிற வரைக்கும், சிலகாலம் நாம் விரும்புகிற ஒன்றாக இல்லாமலிருக்கும். இங்கே நமக்கு ஒரு நினைவூட்டல் என்னவெனில், தேவன் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர் உதவி செய்கிறார், துணையாக இருந்து ஆதரிக்கிறார், தேற்றுகிறார், மற்றும் நமக்குத் தேவையானதைத் தருகிறார். “கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” (வ.14).
No comments:
Post a Comment