வாசிக்க: யாத்திராகமம் 31, 32; சங்கீதம் 41; மத்தேயு 21:1-22
வேதவசனம்: யாத்திராகமம் 32: 22. அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர். 23. இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள். 24. அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.
கவனித்தல்: பரிசுத்த தேவன் இஸ்ரவேலருக்கான தம் பிரமாணங்களை மோசே மூலமாகக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், இஸ்ரவேலர்களோ பொறுமையிழந்து, தங்களை வழிநடத்த தெய்வங்களை உண்டுபண்ணும்படி ஆரோனுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆரோன் அவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, ஜனங்களிடம் இருந்து தங்க நகைகளைக் கேட்டு வாங்கி அதினால் ஒரு கன்றுக் குட்டியை உண்டாக்கி அவர்களை விக்கிரக வணக்கத்திற்கு நேராக வழிநடத்தினான். மறுபக்கத்திலோ, இஸ்ரவேலருக்கு எதிரான தேவ கோபம் தணிய தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடிய மோசே, மலையில் இருந்து கீழே இறங்கி வந்த போது, ஆரோனை நேரடியாக எதிர்த்து கேள்வி கேட்டார். ஆரோன் மோசேக்குக் கொடுத்த பதிலில், அவர் என்ன செய்தார் என்பதை மறைத்து பாதி உண்மையை மட்டும் சொல்வதையும், அக்கினியில் இருந்து அந்த சிலை தானாகவே வந்தது போல ஒரு தவறான அறிக்கையையும் செய்கிறார். தன் தவறுகளையும், தன் பொறுப்பில் இருந்து தவறியதையும் ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அடிப்படை ஆதாரம் கூட இல்லாத தன் நொண்டிச் சாக்குகளால் இஸ்ரவேலர் மீது பழி சுமத்துகிறார். அவர் மக்களைப் பார்த்து பயந்திருக்கலாம், ஜனங்களின் அழுத்தத்திற்கு அவர் கீழ்ப்படியாமல் போனால் நடக்கக் கூடிய பின்விளைவுகளைக் குறித்து ஒருவேளை கவலைப் பட்டிருக்கலாம். இறுதியில், அது ஜனங்கள் தேவனுக்கு எதிராக பாவம் செய்யும்படி வழிநடத்தியதுமல்லாமல், தேவனுக்கு அருவருப்பான காரியங்களைச் அவர்கள் செய்யவும் வைத்தது. மோசேயும், கர்த்தருக்காக உறுதியாக நின்ற லேவியர்களும் அங்கில்லை எனில், இஸ்ரவேலர்களின் பயணம் ஒரு வித்தியாசமான முடிவை எட்டியிருந்திருக்கும்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
No comments:
Post a Comment