Sunday, October 3, 2021

கிறிஸ்துவுக்கு முன் மற்றும் கிறிஸ்துவுக்குப் பின்

 வாசிக்க: ஏசாயா 61, 62; சங்கீதம் 93; எபேசியர் 2

வேத வசனம் எபேசியர் 2: 1. அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
2. அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

கவனித்தல்:  சமீப காலம் வரைக்கும்  கி.மு (கிறிஸ்துவுக்கு முன்”,  கி.பி (கிறிஸ்து பிறப்புக்குப் பின்) என்ற சுருக்கக்  குறியீடுகளை நாள் மற்றும் ஆண்டு ஆகியவாற்றைமக்கள் பரவலாக பயன்படுத்தி வந்தனர். ஆண்டுகளைக் குறிப்பிடும்போது அது மதம் தொடர்பற்றதாக இருக்க வேண்டும் என்று சொல்லி, பொதுவான யுகம் (Common Era, CE) மற்றும் பொது யுகத்திற்கு முன் என்ற சுருக்கக் குறியீடுகளை தற்போது ஜனங்கள் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். பெயரில் அல்லது சுருக்கக் குறியீடுகளில் உண்டாகும் மாற்றம் உலக வரலாறு மற்றும் இயேசுவைப் பற்றிய உண்மைகளை மாற்றாது. எபேசியருக்கு எழுதின தன் நிருபத்தில், கிறிஸ்துவில் வாழ்கிற புதிய மனிதனைப் பற்றிய ஒரு படத்தை நம்முன் வைத்து, பழைய பாவ வாழ்க்கைக்கும் மற்றும் கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வேறுபிரித்துக் காண்பிக்கிறார்.
 

நாம் இயேசுவிடம் வருவதற்கு முன்பு, நாம் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தோம்.  நாம் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தோம் (ரோமர் 6:20). முன்பு, நாம் தேவனை அறியாதவர்களாக இருந்தோம் (கலா.4:8), அந்தகார இருளில் இருந்தோம் ( எபே.5:8). ஒரு காலத்தில் நாம் தேவனற்றவர்களாக இருந்தோம் (1 பேதுரு 2:10). இருளின் அதிகாரத்தில் நாம் இருந்தோம் (கொலோ.1:13). அடிப்படையில், நாம் ஆன்மீக ரீதியாக மரித்தவர்களாகவும், தேவனுடைய கோபாக்கினையை பெறத் தகுதியானவர்களாக நாம் இருந்தோம். நாம் தேவனை விட்டு விலகி அந்நியரும் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருந்து வந்தோம். தேவனுக்கு அடுத்ததாக, நம் கடந்த காலத்தைக் குறித்து நமக்கு நன்கு தெரியும். ஆனால் நம்மை நேசிக்கும் தேவன், நாம் அவருடைய பிள்ளைகளாகும்படி தெரிந்து கொண்டு, அழைத்து, கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்க்கையை நமக்குத் தந்திருக்கிறார். ஆவிக்குரியப் பிரகாரமாக  மரித்தவர்களாக இருந்த நாம் இப்பொழுது கிறிஸ்துவுக்குள் ஜீவனைப் பெறுகிறோம். கிறிஸ்துவில் நாம் புதிய சிருஷ்டியாக இருக்கிறோம். ”பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” ( 2 கொரி.5:17). கிறிஸ்துவுக்குள்ளான நம் புதிய வாழ்க்கையானது தேவன் நமக்குக் கிருபையாக கொடுத்திருக்கும் ஈவு ஆகும் (எபே.2:8). நமது பழைய கிறிஸ்தற்ற வாழ்க்கையை நாம் தொடர்ந்து வாழக் கூடாது. மாறாக, நாம் கிறிஸ்துவில் யார் என்பதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் உள்ளவர்களாக இருந்து, அதன்படி வாழ வேண்டும். ஒரு ஆவிக்குரிய பயிற்சியாக, நாம் எபேசியருக்கு எழுதின நிருபத்தை வாசித்து தியானம் செய்கையில், இந்நிருபம் நம்மைப் பற்றி, கிறிஸ்துவில் நாம் யார் என்று என்ன சொல்கிறது  என்பதை ஒரு நோட்டில் எழுதுவோம். .

பயன்பாடு:  கிறிஸ்துவில் எனக்கு ஒரு புதிய அடையாளம் மற்றும் வாழ்க்கை எனக்கு உண்டு. கிறிஸ்து எனக்குள் வாழ்ந்து, பாவங்கள் மற்றும் மாம்ச சிந்தனைகளுக்கு எதிராகப் போராடும்படி என்னை பெலப்படுத்துகிறார். நான் என் கடந்தகாலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது. நான் ஒவ்வொரு நாளும் இயேசுவுடனான உறவை அனுபவித்து மகிழ வேண்டும். பாவங்கள் அல்ல, என் வாழ்க்கையை கிறிஸ்துவே ஆளுகை செய்யும்படி நான் அவரை அனுமதிக்க வேண்டும்/அனுமதிப்பேன். என் கடந்த காலத்தைக் குறித்து சாத்தான் நினைவுபடுத்தும் போது, கிறிஸ்துவில் நான் யார் இருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, எனக்குத் தந்திருக்கிற புதிய வாழ்க்கைக்காக உமக்கு நன்றி. தேவனைத் தவிர வேறெதற்கும் பயப்படாமல் உம் பிள்ளையாக வாழ எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவியருளும். கர்த்தாவே, கிறிஸ்துவின் நான் யார் என்பதை நினைவில் கொள்ளவும், உம் அருகில் இருந்து உம்முடனே கூட ஆளுகை செய்ய அவைகளைப் பயன்படுத்த எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 275

No comments: