வாசிக்க: எரேமியா 9,10; சங்கீதம் 100; பிலிப்பியர் 3
வேத வசனம்: பிலிப்பியர் 3: நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர (ஆவலுடன்) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கவனித்தல்: இந்நாட்களில், பல நாடுகளில்
குடியுரிமை பெறுவது என்பது பல்வேறு காரணங்களுக்காக கடினமாகிக் கொண்டிருக்கிறது. ஆயினும்,
ஜனங்கள் தாங்கள் விரும்பும் நாடுகளில் குடியுரிமைப் பெற விடாது விண்ணப்பம் செய்து
கொண்டுதால் இருக்கின்றனர். ஒரு குடிமகனாக மாற குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து விதிகளையும்
முறையாகப் பின்பற்றி, அதைப் பெறுவதற்காக பொறுமையுடன் காத்திருப்பர். பவுலின் நாட்களில்,
ரோம பிரஜையாக மாறுவதி என்பது மிகவும் அதிக விலை கொடுத்து பெறவேண்டியதாக இருந்தது (அப்.22:26-28).
ரோம காலனியாக இருந்த பிலிப்பி பட்டணத்தில் உள்ள விசுவாசிகள் பவுலின் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொண்டிருப்பர்.
சிலுவைக்கு பகைஞராக இருப்பவர்கள் உலகப்பிரகாரமான காரியங்களிலும், பூமியில் உள்ள காரியங்கள்
மீதும் நம் கவனத்தை திருப்புகிறவர்களாக இருக்கின்றனர். ஆபால், நாம் அவர்களின் கவர்ந்திழுக்கும்
கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு செவி கொடுக்கக் கூடாது.
பரலோகத்தில் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் நிரந்தரமான
மற்றும் நித்திய குடியுரிமை உண்டு. பரலோகக்
குரியுடிமையை நாம் பெறத் தகுதியுள்ளவர்களாகும்படி, கிறிஸ்துவானவர் நமக்காக ஏற்கனவே அதற்கான விலையைச்
செலுத்தி இருக்கிறார். இயேசுவின் இரண்டாம் வருகை என்பது புதிய ஏற்ப்பட்டு புத்தகங்கள்
(கலாத்தியர், 2 யோவான் மற்றும் 3 யோவான் தவிர மற்ற) அனைத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும்
முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும். இயேசு தாமே தான் திரும்பவும் வருவேன் என்று நமக்கு
வாக்குப் பண்ணி இருக்கிறார் (யோவான் 14:1-4). ஆதிச்சபையானது கிறிஸ்துவின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி
இருந்தது. அவர்கள் தங்கள் ஜெபங்களில் “மாரநாதா” (இதன் பொருள், ”கர்த்தாவே, வாரும்”
என்பதாகும்) என்று சொல்லி ஜெபித்தனர். உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன என்று டி.எல்
மூடியிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது, அவர் சொன்ன பதில் என்னவெனில், “அனேக ஆண்டுகளாக,
நான் பிரசங்கித்து முடிப்பதற்கு முன்னமே கிறிஸ்து திரும்ப வரக் கூடும் என்ற சிந்தனை
மற்றும் எதிர்பார்ப்பின்றி நான் ஒருபோதும் பிரசங்கித்தது இல்லை.” கிறிஸ்துவின் வருகை
பற்றி நாம் அப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்புடன்
வாழ்க்கிறோமா? இந்த உலகில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது ஆகும். ஆனால், பரலோகத்தில்
நாம் நித்தியகாலமாக கிறிஸ்துவுடன் வாழ்வோம். “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” என்று கொலோசெயர் 3:2 இல் பவுல் கூறுகிறார். நாம்
மேலான காரியங்களின் மீது நம் கண்களையும் சிந்தனையையும் வைக்கும்போது மட்டுமே நித்தியத்திற்காக
நம்மை ஆயத்தப்படுத்துவோம். நாம் கிறிஸ்துவின் வருகைக்காக ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோமா?
பயன்பாடு: நான் கிறிஸ்துவில் என்
நம்பிக்கையை வைத்திருக்கிறேன். ஆகவே, “கிறிஸ்து
இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித்
தொடருகிறேன்” பிலி.3:14). நான் நித்தியத்தை மனதில் வைத்து வாழ்வேன்.
நான் இயேசுவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர்
எனக்குத் தந்திருக்கிற நித்திய நம்பிக்கைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, எனக்காக பரலோகில்
ஒரு வீட்டை நீர் ஆயத்தப்படுத்துகிறதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் வருகைக்காக
ஆயத்தத்துடன் இருக்கவும், அதற்கேற்றபடி வாழவும் எனக்கு உதவியருளும். மாரநாதா! ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 282
No comments:
Post a Comment