வாசிக்க: ஏசாயா 63, 64; சங்கீதம் 94; எபேசியர் 3
வேத வசனம்: சங்கீதம் 94: 18. என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
19. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
கவனித்தல்: வழுக்குகின்ற சாலைகள் மற்றும் சரிவுகள் எவருக்கும்
மிகவும் ஆபத்தானவை. சரிவான ஒரு இடத்தில் ஒருவர் கீழே விழும்போது, விழுவதில் இருந்து
தன்னைக் காத்துக்கொள்ள பிடிமானம் கொடுக்கும் எதாகிலும் கிடைக்காதா என்று பார்ப்பார்/தேடுவார்.
நாம் உதவி ஏதும் இல்லாது விழுந்தால், மிகவும் கடுமையான சரீரப் பாதிப்புகளை நமக்கு
உண்டாக்கக் கூடும். இங்கே, தன் கால்கள் சறுக்குகிறதாக உணர்ந்த நேரத்தில் பெற்றுக்
கொண்ட தேவனுடைய பாதுகாப்பு மற்றும் மாறாத கிருபையின் அன்பு பற்றி சங்கீதக்காரன் சொல்கிறார்.
எதிரிகளின் இடைவிதாத தாக்குதல் தன் வலிமையானது தன்னை வீழ்வதில் இருந்து பாதுகாக்க போதுமானது
அல்ல என்ற ஒரு சிந்தனையை அவருக்குக் கொடுத்திருக்கக் கூடும்.
ஒரு மலை முகட்டில் நாம் நிற்கும்போது, கீழே
விழாமல் நம்மைப் பாதுகாக்க மற்றும் நிற்க நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்
வாழ்வில் விளிம்பில் நாம் இருப்பதாக உணரும் நேரத்தில், நமக்கு உதவி செய்ய ஒருவருமே
இல்லை என்ரு நினைக்கும் நேரத்தில், சங்கீதக்காரனைப் போல நாமும் கூட சிந்திக்கக் கூடும்.
அப்படிப்பட்ட தருணங்களில், தேவனுடைய வார்த்தையைச் சந்தேகிக்கவும், வாழ்க்கையைக் குறித்த
நம் கவலைகளை அதிகரிக்கவும் சாத்தான் தன் பொய்களை நம் மனதில் விதைக்க முயற்சி செய்வான்.
ஆனால், தேவனோ தம் ஜனங்களை ஒரு போதும் கைவிடுவதுமில்லை, மறப்பதும் இல்லை. அவருடைய
அன்பு ஒருபோதும் தவறாத மாறாத அன்பு ஆகும். ஆகவே, தம் ஜனங்கள் கஷ்டப்படும்போது/பாடுபடும்போது
அவர் அவர்களுக்கு உதவுகிறார். நாம் தேவனை நம்பி, அவருடைய உதவியைத் தேடும்போது, அவர்
எல்லா தீங்குகளில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார். வேதம் சொல்வது போல, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில்
இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்” சங்.91:11,12). நமக்குக் கவலைகள் இருக்கும்போது, நாம் பலகாரியங்களைக் குறித்து
பயந்து கவலைப்படுகிறவர்களாக இருப்போம். நம் தேவன் இரக்கங்களின் பிதாவும் சகலவித ஆறுதலின்
தேவனுமாக இருக்கிறார் (2 கொரி.1:3). அவருடைய ஆறுதலானது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
“என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. அவர் என் கால்களை மான்களுடைய
கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்” என்ற தாவீதுடன் இணைந்து நாமும் தேவனை உயர்த்திப் பாடுவோம் (சங்.18:32,33). தேவனுடைய
வார்த்தையானது எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நமக்குத் தருகிறது. நம் பிரச்சனைகளின்
போது நமக்கு உதவி செய்ய எவருமே இல்லை என்று நாம் நினைக்கும் அல்லது உணரும்போது, கர்த்தர்
நம் கன்மலை என்பதை மறவாதிருப்போமாக.
பயன்பாடு: மனிதர்கள் என்னை மறந்து கைவிட்டுவிடக் கூடும். ஆனால் தேவன் ஒருபோதும் என்னைக் கைவிடுவதில்லை. அவர் என்னுடன் எப்பொழுதும் இருப்பேன் என்று வாக்குப்பண்ணி இருக்கிறார். நான் தேவனுடைய கிருபையின் மாறாத அன்பை நம்ப முடியும். அவரே என் வாழ்வில் எனக்கு பாதுகாப்பு, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியை என் வாழ்க்கையில் தருகிறார். ஆகவே நான் எதற்கும் கவலைப்படத் தேவை இல்லை.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
உம் தவறாத, கைவிடாத, மற்றும் மாறாத அன்பிற்காக நன்றி. நான் மிகவும் பலவீனமாக இருக்கும்
நேரங்களிலும் கூட உம்மை நான் நம்ப முடியும். பரிசுத்த ஆவியானவரே, தேவனிடம் என் ஜெப
விண்ணப்பங்களை ஏறெடுத்து, கிறிஸ்து இயேசுவுக்குள் என் இருதயத்தையும் மனதையும் பாதுகாத்துக்
கொள்ள எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 276
No comments:
Post a Comment