வாசிக்க: எரேமியா 43,44; சங்கீதம் 117; 1 தீமோத்தேயு 4
வேத வசனம்: 1 தீமோத்தேயு 4: 7. சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
8. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும்
வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
கவனித்தல்: ”உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே” என்று ஒரு
பழங்கால தமிழ் புலவர் பாடுகிறார். இப்பாடல் வரியில் பொருள் என்னவெனில், நான் என்
உடம்பை போஷித்து வளர்க்கும்போது, அது என் உயிருக்கு (உயிர் தரும் சக்தி, மூச்சுக்கு)
உதவுகிறது. இந்நாட்களில், ஜனங்கள் தங்கள் ஆரோக்கியம் பற்றி அதிக கரிசனை உள்ளவர்களாக
இருக்கிறார்கள். அவர்கள் உடற்பயிற்சி நிகழ்வுகள் அல்லது உடற்பயிற்சி நிலையங்களில் சேருகிறார்கள்.
ஆயினும், தங்கள் சரீர உடற்பயிற்சியை தொடர்ந்து
முறையாக செய்பவர்கள் மட்டுமே தங்கள் சரீரங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறார்கள்.
இங்கே, பவுல் சரீரப்பிரகாரமான பயிற்சியைப் பற்றிக் குறைவாக பவுல் எதுவும் சொல்லவில்லை.
மாறாக, தேவபக்தியின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு இன்னதென்று காண அவர் நம் கவனத்தை
திருப்புகிறார். அவர் தன் ஆவிக்குரிய மகனும் மாணவருமாகிய தீமோத்தேயுவிடம், “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” என்று கட்டளையிடுகிறார்.
தேவபக்திக்கேதுவாக பயிற்சி பெறுவதில் முதலாவது படி என்னவெனில், ” சீர்கேடும்
கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதை”களை உறுதியாக புறக்கணித்து
ஏற்றுக்கொள்ள மறுத்து, கவனிக்காமல் இருக்க வேண்டும். கட்டுக்கதைகள் என்பது பொய்யான
ஆனால் பரவலாக நம்பப்படுகிற பிரபல கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளைக் குறிக்கிறது.
கிழவிகள் பேச்சு என்பது மூட நம்பிக்கை நிறைந்த, நம்ப முடியாத ஆனால் உண்மை என்று பலராலும்
நம்பப்படுகிற கருத்துக்களைக் குறிக்கிறது. அவை சீர்கேடானவை என்று பவுல் கூறுகிறார்.
அப்படியானால், அவைகளைக் கேட்பதில் எந்தவித பயனும் இல்லை. 1-3 வரையிலான வசனங்களில்,
மக்களின் விசுவாசத்தைப் பாதிக்கிற, அவர்களை தவறாக வழிநடத்துகிற வஞ்சிக்கும் பொய்கள்
மற்றும் வேதாகமம் சொல்லாத கடுமையான துறவறம் பற்றி பவுல் குறிப்பிடுகிறார். எல்லா கலாச்சாரங்களிலும்
கட்டுக்கதைகளும், மூட நம்பிக்கைகளும், தவறாக வழிநடத்தும் கதைகளும் உண்டு. நாம் அவைகளைக் குறித்து
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீர்கேடான எந்த கட்டுக்கதைகள் மற்றும் பேச்சுகளுக்கு
நாம் எதிர்த்து நிற்க வேண்டும். நம் கவனமானது தேவன் மீதும், தேவனுடைய வார்த்தை மீதும்
இருக்க வேண்டும். மனித வார்த்தைகள் மற்றும் கருத்துக்கள் மீது அல்ல.
தேவபக்தி என்றால் உண்மையில் என்ன அர்த்தம்
என்று நாம் யோசிக்கக் கூடும். “தேவபக்தி என்பது…தேவனுடைய
காரியங்களை நேசிப்பதும், தேவனுடைய வழிகளில் நடப்பதையும் குறிக்கிறது” என்று ஜான் பைபர் கூறுகிறார். வேறு விதமாகச்
சொல்வதானால், நாம் தேவனுக்காக வாழும் விதத்தை இது குறிக்கிறது. தீமோத்தேயுவுக்கு பவுல்
கொடுத்த கட்டளையானது, நாம் தேவ பக்தியாக இருக்கும்படி, நம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள அல்லது சுயக்
கட்டுப்பாட்டை பயிற்சி செய்ய வேண்டும். எந்த பயிற்சியையும் செய்ய அதை உண்மையுடன் செய்வதற்கான
அர்ப்பணிப்பு தேவைப்படும். நம்மனைவருக்கும் அனுதினம் அனுதினமும் தேவனுடைய வார்த்தையை
வாசித்து ஜெபித்தல் என்பது அடிப்படையான ஒரு ஆவிக்குரிய ஒழுங்குகள் ஆகும். நாம் விசுவாச
வார்த்தையிலும் சத்தியத்திலும் நாம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேவபக்தியானது
இந்த உலக வாழ்க்கை மற்றும் நித்தியத்திற்கும் பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. நாம் கர்த்தரில்
வளர்ந்து, சாட்சி பகர ஆவிக்குரிய ஒழுங்குகளை அனுதினமும் பயிற்சி செய்வதை நாம் அசட்டை
செய்யக் கூடாது. அழிந்து போகக்கூடிய மற்றும் தற்காலிகமான காரியங்களுக்கு நாம் அதிக
முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாம் நித்தியமான காரியங்களுக்கு நாம் எவ்வளவு அதிகமாகச்
செய்ய வேண்டும்? ”மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” என்று இயேசு கேட்கிறார்
(மத்.16:26). தேவபக்திக்கேதுவாக வளரும்படி,
நாம் நம்மில் சிறப்பானதை நம் அதிக கவனத்தை
அவருக்குக் கொடுக்க வேண்டும். ”பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” என நம் மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் (கொலோ.3:2).
நாம் நித்தியத்தின் மீது நம் கண்களை வைக்க வேண்டும், அநித்தியமான, மற்றும் தற்காலிகமானவைகள்
மீது அல்ல (2 கொரி.4.17).
பயன்பாடு: வேத வாசிப்பு, ஜெபம் மற்றும் மற்ற கிறிஸ்தவர்களுடனான
ஐக்கியம் மூலமாக நான் தேவகத்திக்கேதுவாக முயற்சி செய்ய வேண்டும். நான் சரீர மற்றும்
ஆவிக்குரிய பயிற்சிகளை அசட்டை செய்யக் கூடாது. அவை இரண்டுமே பயனுள்ளவை என்றாலும்,
என் ஆவிக்குரிய பயிற்சியானது என்னை தேவனுக்கருகில் நெருக்கமாக்க கொண்டு வந்து, நித்தியத்தில்
அவருடன் இணைந்து வாழ என்னைப் பலப்படுத்துகிறது. நித்திய வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையையும்
வாக்குத்தத்தத்தையும் தேவன் எனக்குத் தந்திருக்கிறார். அவருடன் என்றென்றும் வாழும்படியாக
நித்தியத்திற்காக நான் வாழ வேண்டும்.
ஜெபம்: தந்தையாகிய தேவனே, தேவபக்திக்கேதுவாக இருக்கும்படி
ஆவிக்குரிய பயிற்சிகளைச் செய்ய நினைவுபடுத்துகிறதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம்
வசனத்தினாலே என்னைப் பரிசுத்தமாக்கும். கர்த்தாவே, பரிசுத்தமாகவும் தேவ பக்தியாகவும்
வாழ்வதற்கு உம் பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 299
No comments:
Post a Comment