வாசிக்க: எசேக்கியேல் 27,28; சங்கீதம் 136; எபிரேயர் 10
வேத வசனம்: எபிரேயர் 10: 35. ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை
விட்டுவிடாதிருங்கள்.
36. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு
வேண்டியதாயிருக்கிறது.
37. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
கவனித்தல்: எபிரேய நிருப ஆக்கியோன் யூதக் கிறிஸ்தவர்களான தன்
வாசகர்கள் விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என திரும்பத் திரும்ப கூறி
உற்சாகப்படுத்துகிறார். இந்த யூதக் கிறிஸ்தவர்கள் பல பாடுகளை அனுபவித்தவர்களாகவும்,
யூத மார்க்கத்திற்கு ஒத்தவர்களாக இருக்க வேண்டும் என்று நியாயப் பிரமாணப் போதகர்களால்
சோதிக்கப்பட்டார். விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமா அல்லது தங்கள்
யூத மார்க்கத்திற்கே திரும்பிச் செல்ல வேண்டுமா என்ற குழப்பத்தை இந்த யூதக் கிறிஸ்தவர்கள் அடைந்திருக்க வேண்டும்.
ஆகவே, வேத வாக்கியங்களின் படி கிறிஸ்துவின் மேன்மையை உறுதிப் படுத்துவதன் மூலமாகவும்,
பாடுகளை பொறுமையுடனும் மகிழ்ச்சியுடனும் சகித்ததைப்
பற்றி ஆசிரியர் நினைவுபடுத்துகிறார்.
”முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில்,” ”கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு,” எனபன போன்ற சொற்றொடர்களை நூலாசிரியர் தொடர்ந்து இந்நிருபத்தில் பயன்படுத்தி இருக்கிறார் (எபி.2:1; 3:6, 14; எபி.4:14). விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ளுதல் என்பது என்றாவது ஒரு நாள் மட்டுமே பெறுகிற அனுபவமோ, அல்லது எப்போதாவது பெறுகிற ஒரு அனுபவமோ இல்லை. இது நம் அனுதின கிறிஸ்தவ வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. நாம் கேள்விப்பட்ட செய்தியை அறிக்கையிடுவதில், நற்செய்திக்கு, நம் உறுதி, மற்றும் கிறிஸ்துவில் நம் நம்பிக்கை ஆகியவற்றில் நாம் முடிவு வரை உறுதியாக இருக்க வேண்டும். முடிவு வரை ஓடுகிற அல்லது தங்கள் விசுவாச ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடி முடிக்கிற அனைவருக்கும் உரிய பரிசுகளை தேவன் தந்தருளுவார்.
உபத்திரவங்கள் மற்றும் சோதனைகளின் மத்தியில்,
யூதக் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலைக்கு ஒரு தீர்வை எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால்,
அவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டியதைப் பற்றி ஆசிரியர் அவர்களுக்கு நினைவு படுத்துகிறார்.
உடனடியான தற்காலிகமான ஒரு பதிலைக் கூறுவதற்குப் பதிலாக, தேவனுடைய சித்தத்தைச் செய்வதில்
கவனமாக இருக்கவும் வாக்குப்பண்ணப்பட்ட நித்திய பரிசை பெற அவர்கள் பொறுமையில் தொடர்ந்து
இருக்கவும் நூலாசிரியர் கூறுகிறார். எபிரேயர்
10:35-39ன் படி, நூலாசிரியர் தொடர்ந்து எதிர்கால நம்பிக்கை, பரிசு மற்றும் கிறிஸ்துவின்
வருகை என எதிர்காலம் சம்பந்தமான காரியங்களைக் கூறுகிறார். 37ஆம் வசனத்தில், நூலாசிரியர்
ஏசாயா 26:21 மற்றும் ஆபகூக் 2:3 ஆகிய இரண்டு வேதபகுதிகளை மேற்கோளில் இணைத்து கூறி
கர்த்தரின் அருகை பற்றி நமக்கு கர்த்தர் நினைவு படுத்துகிறார்.
இயேசுவின் இரண்டாவது வருகை குறித்து எந்த
சந்தேகமும் இல்லை. ”கொஞ்சக்காலத்தில்” என்பது எதைக் குறிக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாம் எவ்வளவு
காலம் தான் காத்திருக்க வேண்டும்? நித்தியத்துடன் ஒப்பிடுகையில் நம் நிகழ்கால பிரச்சனைகள்
”அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான”வை இருக்கும் வாசகம் ஆகும்.
கர்த்தர் தன் வருகையை தாமதம் செய்கிறார் என்று யாராகிலும் நினைத்தால், 2 பேதுரு. 3:4-10 வசனங்களில் அப்போஸ்தலனாகிய பேதுரு
சொன்னதை நினைவுபடுத்த வேண்டும்; அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என தேவன் விரும்புகிறார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் வருகைக்கு
எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். நாம் ஒருவேளை நீண்டகாலமாக இயேசுவின் வருகைக்குக்
காத்துக் கொண்டிருக்கலாம். ஆயினும், அவர் வரும்போது, நாம் காத்துக் கொண்டிருந்த காலம்
நமக்கு ஒரு பொருட்டாகத் தெரியாது. இயேசு கிறிஸ்துவின் மீது உள்ள நம் விசுவாசத்தில்
நாம் உறுதியாக இருக்கலாம். இயேசு தன் இரண்டாம் வருகையை தாமதம் செய்யார். இயேசு
இன்று திரும்பி வந்தால், நாம் என்ன செய்வோம்? ”அவர் எந்த நாளிலும் எப்பொழுது வேண்டுமானாலும்
வரக் கூடும் என்பதால், அனுதினமும் ஆயத்தமாக இருப்பது நல்லது” என்று ஹட்சன் டெய்லர்
கூறுகிறார். நாம் இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாக இருக்கிறோமா? என நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போமாக.
பயன்பாடு: கிறிஸ்துவின் நான் கொண்டிருக்கும் நம்மிக்கை, விசுவாசம்
மற்றும் உறுதி ஆகியவற்றில் நான் நிலைத்திருக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தைச் செய்வதே
என் முதலாவது பணி ஆகும். அதற்கு, நான் தேவனுடைய சித்தத்தைச் செய்வதில், பரிசுகளைப்
பெறுவதில் மற்றும் அவருடைய வருகைக்கு ஆயத்தமாக இருப்பதில் நான் கவனமாக இருக்க வேண்டும்.
இருக்க வேண்டும். காரணமின்றி தேவன் தாமதம் செய்யார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
என் கண்கள் நித்தியத்தின் பேரிலும் கிறிஸ்துவின் மீதும் இருக்க வேண்டும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் என்னிடம் காட்டும்
அன்பின் கரிசனைக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, பாடுகளைச் சகிக்கவும், கர்த்தரின் வருகைக்கு
பொறுமையாகக் காத்திருக்கவும் எனக்கு உதவியருளும். இயேசுவே, உம் வருகைக்கு எந்த நேரத்திலும்
அல்லது ஒரு நாளில் நீங்கள் எப்பொழுது வந்தாலும் உமக்கு, உம் வருகைக்கு ஆயத்தமாக இருக்க எனக்கு உதவியருளும். என் தேவனே,
“வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று
பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 319
No comments:
Post a Comment