வாசிக்க: உன்னதப்பாட்டு 7,8; சங்கீதம் 62; 1 கொரிந்தியர் 8
வேத வசனம்: உன்னதப்பாட்டு 8: 6. நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம்
பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.
7. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
கவனித்தல்: வேதாகமத்தையும் அதன் நம்பகத்தன்மையையும்
பற்றி கேள்வு எழுப்புவதற்கு உன்னதப்பாட்டு புத்தகத்தை எதிரிகள் பயன்படுத்துகின்றனர்.
சில கிறிஸ்தவர்கள் உன்னதப் பாட்டு புத்தகம் வேதாகமத்தில் இருப்பதன் நோக்கத்தை விளக்க
தடுமாறுகின்றனர். உன்னதப்பாட்டு புத்தகத்தின் முக்கியத்துவத்தை குறைத்துக் காண்பிக்கவும்,
வேதாகமத்தை விட்டு நீக்கவும் முயற்சிகள் முற்காலத்தில் எடுக்கப்பட்டன. பாரம்பரியமாக,
உன்னதப்பாட்டு புத்தகத்தை தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும்,
கிறிஸ்துவுக்கும் சபைக்கும், மற்றும் கிறிஸ்துவுக்கும் தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும்
இடையேயான அன்பினை உருவகமாக சொல்கிற புத்தகமாகப் பார்க்கின்றனர். உதாரணமாக, கிளைர்வாக்ஸை
சேர்ந்த குறிப்பிடத்தக்க துறவி பரி. பெர்னார்ட் என்பவர் உன்னதப்பாட்டு புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில்
உள்ள வசனங்களின் மீது 86 பிரசங்கங்களை எழுதினார். ஆயினும். அன்பின் உருவகமாக விளக்கும்
அணுகுமுறை பலக் கேள்விகளை எழுப்புவதால், அதைப் பயன்படுத்துவதற்கு எதிராக வேத அறிஞர்கள்
எச்சரிக்கின்றனர். சுருக்கமாகச் சொல்வதானால், திருமணமான ஒரு தம்பதியினரிடையே நடைபெறும்
கருத்துப் பரிமாற்றமே உன்னதப்பாட்டு புத்தகம் ஆகும். ஆண் பெண் இன வேறுபாடு மற்றும்
அன்பு ஆகியவை தேவன் கொடுத்த பரிசு என நாம் அனைவருமே ஒப்புக் கொள்வோம். “மனிதன் தனியாயிருப்பது
நல்லதல்ல” என்று சொல்லி, தேவன் ஏவாளைப் படைத்தார். . திருமணம உறவு என்பது மனிதர்களுக்கு
தேவனால் ஏற்படுத்திய நியமம் ஆகும். திருமண உறவிற்கு வெளியே உல்ல அல்லது சட்டத்திற்குப்
புறம்பான உறவைப் பற்றி உன்னதப்பாட்டு புத்தகம் பேசவில்லை. தன் வாழ்க்கைத் துணை பற்றிய
உள்மனச் சிந்தனைகள் மற்றும் அன்பைக் கொண்டாடுதல் பற்றிய அவர்களின் சிந்தனைகளை சுதந்திரமாக
வெளிப்படுத்தும் அன்பு பற்றி இது கூறுகிறது.
உன்னதப்பாட்டு 8:6,7 வசனங்கள் திருமண உறவின்
அன்பானது வலிமையானதும். அடக்க முடியாதாதகவும் மற்றும் மனித அனுபவத்தில் வெல்லவே முடியாததும்
ஆகும். திருமண அன்பின் வலிமையை உணர்ந்து புரிந்து கொள்ளவும், நம் ஆஸ்திகளால் அன்பை
விலைகொடுத்து வாங்க முடியாது என்று நம்மை எச்சரிக்கவும் செய்கிறது. திருமண அன்பு பரஸ்பரம்
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறா அன்பு ஆகும். மரணம் அவர்களைப்
பிரிக்குமளவும் இந்த அன்பு தொடர்கிறது. ஆகவே, அன்பில் நிலைத்து நிற்கவும், வளர்ந்து
செழிக்கவும் போதிய கவனம், மற்றும் நேரம் ஆகியவைகளை நான் கொடுக்க வேண்டும். இறுதியாக,
திருமண அன்பு தேவனிடம் இருந்து வந்த ஈவு ஆகும். ஆகவே அது அதற்கேற்றபடி கனம் செய்யப்படவேண்டும்.
பயன்பாடு: மனித பாலுணர்வு மற்றும்
தேவனின் படைப்பு பற்றிய ஒரு பிழையான பிம்பத்தை இந்த உலகம் எனக்குத் தருகிறது. திருமண உறவின் நோக்கத்தை
நான் புரிந்து கொள்ளவும், அன்பை பயமின்றி வெளிப்படுத்தவும் வேதாகமம் எனக்கு உதவுகிறது.
”புருஷனானவன் தன்
தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்…. இப்படி
இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்” என்று இயேசு சொன்னார் (மத்.19:5-6).
”விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும்
விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்” என்று எபிரேயர் 13:4 கூறுகிறது.
நான் தேவனை அன்பு கூர்வதற்கும் கனப்படுத்தவும், எச்சரிக்கை உள்ளாவனாக இருக்க வேண்டும்.
ஜெபம்: அன்பின் தேவனே, மனித
அன்பு மற்றும் திருமண வாழ்வில் அதன் உபயோகம் பற்றிய ஞானத்தை எனக்குத் தருகிறதற்காக
உமக்கு நன்றி. இயேசுவே, நான் உம்மை நேசிப்பது போல, நான் என் வாழ்க்கைத் துணைக்குக்
கீழ்ப்படியவும், நேசிக்கவும் நான் ஜெபிக்க வேண்டும். கர்த்தாவே, உம் மகிமைக்காக உம்
அன்பில் நிலைத்திருக்க நீர் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 244
No comments:
Post a Comment