வாசிக்க: ஏசாயா 21,22; சங்கீதம் 73; 2 கொரிந்தியர் 1
வேத வசனம்: சங்கீதம் 73: 25. பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
26. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
கவனித்தல்: தேவனுடைய கண்ணோட்டத்தில்
துன்மார்க்கரை பார்க்கின்ற வரைக்கும், சங்கீதக்காரன் துன்மார்க்கரின் செழிப்பைக் கண்டு
எரிச்சலடைந்து, காரியங்களை தெளிவாகப் பார்க்க முடியாதவனாக இருந்தார். தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் வந்த உடனேயே, அவர் தன்
சிந்தனைகள் முட்டாள்தனமானவை என்றும் அர்த்தமற்றவை என்றும் புரிந்து கொண்டார். கர்த்தருடைய பார்வையில் உலகத்தைப் பார்ப்பது அனைத்தையும்
புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. சங்கீதக்காரன்
கிட்டத்தட்ட கால் சறுக்கி விழுந்திருந்திருந்தாலும், தேவன் அவரை கைவிட்டுவிடவில்லை.
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுவது போல, ”நாம்
உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் (தேவன்) உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்” (2 தீமோ.2:13). தேவனுடைய
ஆலோசனையானது நம் மன ரீதியான போராட்டங்களை ஜெயிக்க நமக்கு உதவுகிறது. அத்துடன் நம்
உண்மையான ஆசீர்வாதங்கள் என்ன என்பதையும் காண நம்மை வழிநடத்துகிறது. நம் தேவனை விட
மிகவும் பெரிய ஆசீர்வாதம் அல்லது செழிப்பு எதுவும் இல்லை என்பதை சங்கீதங்காரனால் காண
முடிந்தது. உலக ஆசீர்வாதங்களின் அழிந்து போகிற தன்மையைக் குறித்து சங்கீதக்காரன் புரிந்து
கொண்டிருக்க வேண்டும். இது, பூமியிலும் பரலோகத்திலும் தேவனை விட விரும்பத்தக்கது வேறெதுவும்
இல்லை என்பதை அவர் அறிக்கையிடச் செய்தது. கிறிஸ்துவில், நம் நிகழ்காலத்திற்கான ஆசீர்வாதத்தையும்,
எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் உடையவர்களாக நாம் இருக்கிறோம். தேவனே நம் பலமாகவும்
நம்பிக்கையாகவும் இருக்கிறார். அதே வேளையில், துன்மார்க்கரும் தேவனை விட்டு தூரமாய்
போகிறவர்களுக்கும் அப்படிப்பட்ட எந்தவொரு நம்பிக்கையோ அல்லது கிறிஸ்துவில் எதிர்கால
நம்பிக்கை எதுவும் இல்லாதவர்கள் ஆவர். தேவனே நம் நித்திய நம்பிக்கையாகவும் என்றென்றைக்குமான
ஆசீர்வாதமாகவும் இருக்கின்றார். தேவன் நமக்குப் போதுமானவராக இருக்கிறார். நாம் மற்றவர்களுடைய
உலக ஆசீர்வாதங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நாம் தேவனை நோக்கிப் பார்த்துக்
கொண்டிருக்க வேண்டும்.
பயன்பாடு: இயேசு இந்த உலக வாழ்க்கைக்கான
நிச்சயத்தையும் பரலோகத்தில் தேவனுடன் வாழ்வதற்கான எதிர்கால நம்பிக்கையையும் தருகிறார்.
என் சுயநலக் கண்ணாடி வழியாக நான் காரியங்களை பார்த்துக் கொண்டிருக்குமட்டும், நான்
தேவனைப் பார்க்கமாட்டேன். நான் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்கும், அதற்காக எதையும்
இழப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் (பிலி.3:8).
இது நடைபெறுவதற்கு, நான் முதலாவதாக தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும்
தேடவேண்டும். அதன் பின்பு, நான் எனக்குத் தேவையான அனைத்தையும் உடையவனாக இருப்பேன்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,
என் கண்கள் உம்மையே நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நீரே என் பலமும்,
ஆசீர்வாதமும், மற்றும் வாழ்க்கையில் என் பங்குமாக இருக்கிறீர். இயேசுவே, என்னை நானே
தாழ்த்தி தாழ்மையுடனும், உம் மகிமைக்காக வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day - 255
No comments:
Post a Comment