ஏதேனும் ஜெபக் குறிப்பு உண்டா எனக் காத்திருந்தபோது
எனக்கெதிரே இருந்த நபர், “நான் சாக வேண்டும் என்று ஜெபியுங்கள்” என்ற போது பேரதிர்ச்சியாக
இருந்தாலும்,
உடனே ஆவியானவரின் ஆலோசனையின்படி ஜெபிக்கத் துவங்கினேன், “அன்புள்ள
ஆண்டவரே, உமக்கு ஸ்தோத்திரம். நீர் இன்றும் மாறாதவராயிருக்கிறபடியால் உமக்கு
ஸ்தோத்திரம். இந்த ஜெபக் குறிப்புக்காக உம் சமூகத்தில் வருகிறோம். “நான்” என்ற எண்ணமே எங்களுக்கு வரும்
அனேக பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது. “நான்” என்ற எங்களைப் பற்றிய
சிந்தனையினாலேயே நாங்கள் அனேக வேதனைகளில் சிக்கி விடுகிறோம். ஆகவே எங்களில்
இருக்கிற அந்த “நான்” என்பது
சாகவேண்டும் என ஜெபிக்கிறோம். “நான்” என்ற
நிலையில் இருந்து, எல்லாம் “கிறிஸ்து” என்ற நிலைக்கு வந்து வாழ்கிற
கிறிஸ்தவர்களாக எங்களை மாற்றும். அதுவே உமது திருவுளச் சித்தமாக இருக்கிற படியால்
உம்மிடம் எங்களை ஒப்படைக்கிறோம். உம் சித்தம் நடைபெறுவதாக. இயேசுவின் நாமத்தில்
ஜெபம் கேளும் எங்கள் பரம பிதாவே!” என்று
ஜெபித்து, ஆமென் சொன்னதும் அங்கே நிலவிய அமைதி - தெய்வீக அமைதி.