Wednesday, November 25, 2009

இயேசுவுடன் ஒரு உலா


மனதில் உள்ளவற்றை மறைக்காமல் மவுனமாக ஒரு மறைவெளிப்பாட்டைப் பெற யான் பெற்ற ஒரு அருமையான சுற்றுலாவே இந்த பதிவு.... என் உள்ளம் கிறிஸ்துவின் இல்லம்......


ஒரு மாலையில் நான் கிறிஸ்துவை என் உள்ளத்தில் வரும்படி அழைத்தேன். அது என்னே ஒரு அற்புதமான வருகையாக இருந்தது. அவ்வருகை கிளர்ச்சியூட்டுவதாகவும் உணர்ச்சி நிறைந்ததாகவும் மட்டும் இல்லாமல் உண்மையானதாகவும் இருந்தது. என் வாழ்வின் மையத்தில் ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர் என் உள்ளத்தின் இருண்ட பகுதிக்குள் வந்து ஒளியை வீசச்செய்தார். அனல் மூட்டி குளிரை விரட்டினார். எந்த சலனமும் இல்லாத இடத்தில் பாடல் தொடங்கி வெறுமையை அவருடைய அன்பான ஐக்கியத்தால் நிரப்பினார். நான் இயேசுவுக்கு கதவை திறந்ததற்காக வருந்தவில்லை. இனியும் ஒருக்காலும் வருந்தப் போவதுமில்லை.

இந்தப் புதிய உறவில் சந்தோசத்துடன் இயேசுவிடம் சொன்னேன், “ஆண்டவரே, என்னுடைய இந்த இருதயம் உம்முடையதாக வேண்டும். நீர் இதில் தங்கி உம்முடைய வாசஸ்தலமாக்கிக் கொள்ளும். எனக்குள்ளதெல்லாம் உமக்கே சொந்தம். நான் எல்லாவற்றையும் உமக்கு காட்டுகிறேன்.

படிப்பறை
முதல் அறை நான் படிக்கும் இடமாகிய நூலகமே. என் இல்லத்தில் என் சிந்தனையின் கனத்த சுவர்கள் அடங்கிய மிகவும் சிறிய இடம். ஆனால் இது மிகவும் முக்கியமான அறை. பார்க்கப்போனால் அது இல்லத்தின் கட்டுப்பாட்டு அறை எனலாம். அவர் என்னுடன் நுழைந்து புத்தக அலமாரியிலுள்ள புத்தகங்கள், மேஜை மீது கிடக்கும் மாத இதழ்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தார். அவரைப் பின் தொடர்ந்த எனக்கு அவருடைய பார்வை விசனத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன் நான் இதைக் குறித்து தவறாக நினைத்தது இல்லை. ஆனால் அவர் அந்தக் காரியங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது நான் திக்குமுக்காடிப் போனேன். சில புத்தகங்களை அவர் பார்க்கக் கூடாதபடிக்கு அவர் கண்கள் மிகவும் பரிசுத்தக் கண்களாக இருந்தன. எந்த ஒரு கிறிஸ்தவனும் படிக்கவேண்டாத சில மாத இதழ்கள் இருந்தன. சுவர் மீது சில படங்கள் நினைவிலும் சிந்தனையிலும் வெட்கத்தை உண்டு பண்ணின. வெட்க முகத்துடன் நான் அவரைப் பார்த்து, “ஐயா இந்த அறை சுத்தமாக்கப்பட்டு சரி செய்யப்படவேண்டும் என எனக்கு தெரியும். நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறி எனக்குதவுவீர்களா?” எனக் கேட்டேன்.

“நிச்சயமாக” என்று சொன்னவர் “உனக்கு உதவி செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் நீ படிக்கிறவைகளில் உனக்கு உதவாத அசுத்தமான, நல்லதல்லாத உண்மையற்றவிகளை எடுத்து தூற எறி! இப்பொழுது காலியான அலமாரியில் வேதாகம புத்தகங்களை வை. உன் நூலகம் முழுவதும் வேதாகமம் வைத்து இரவும் பகலும் தியானம் செய். சுவரில் உள்ள படங்கள் மூலம் உன் நினைவுகளை கட்டுப்படுத்துவதில் கஷ்டம் இருக்கும். ஆனால் உனக்கு உதவும்படி ஒன்று தருகிறேன் என்று கூறி அவர் தம்முடைய ஒரு பெரிய உருவப் படத்தைக் கொடுத்து சுவரில் நடுவாக தொங்கவிடு, அதாவது சிந்தனை சுவரில்” என்று சொன்னார்.

நான் அப்படியே செய்தேன். மேலும் வருடங்கள் செல்ல செல்ல என் எண்ணங்கள் கிறிஸ்துவை மையப்படுத்தும் போது அவருடைய பரிசுத்தம் அவ் அருடைய வல்லமை ஆகியவை என்னுடைய கெட்ட எண்ணங்களி பின்னாக் விரட்டியடிக்கும். இப்படியாக என் எண்ணங்களை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவி செய்தார்.

உணவு அறை
dining roomபடிக்கும் அறையில் இருந்து உணவு அறைக்கு சென்றோம். அந்த அறைதான் பசி, ஆசை ஆகியவை அடங்கியவை.நான் இங்குதான் எனது அதிக நேரத்தையும் கடின முயற்சியையும் என் தேவைகளை திருப்ப்திப்படுத்தவும் செலவழித்தேன்.
“இது எனக்கு மிகவும் பிடித்தமான அறை. நான் உங்களுக்கு பரிமாறும் உணவில் பிரியப்படுவீர்கள் என்ற நிச்சயம் எனக்கு உண்டு” என்று அவரிடம் சொன்னேன். அவர் என்னுடன் மேஜையில் அமர்ந்து ”எப்படிப்பட்ட உணவு வகைகள் உண்டு?” என்று கேட்டார். “எனக்கு பிடித்த உணவு வகைகள்: பணம் பட்டப்படிப்புகள், கையிருப்புகள் அத்துடன் செய்தித்தாளில் புகழ் செல்வம் பெறுதல் பற்றிய கட்டுரைகளை எழுதுவது” ஆகியவற்றைச் சொன்னேன். உணவு அவர் முன் வைக்கப்பட்ட போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் அதை சாப்பிடவில்லை என்பதை கவனித்தேன். நான் அவரிடம், ஐயா! இந்த உணவு பிடிக்கவில்லையா? என்ன பிரச்சனை?” என்று கேட்டேன். அவர் “நான் சாப்பிடவேண்டிய உணவு ஒன்றுண்டு. அது நீ அறியாதது. உணக்கு உண்மையாகவே திருப்தியளிக்கும் உணவு வேண்டுமானால் அது பிதாவின் சித்தத்தைச் செய்வதே. உன் சுயத்தை திருப்திப்படுத்துகிற சொந்தக் களியாட்டுகள் ஆசைகள் ஆகியவற்றை தேடுவதை நிறுத்திவிட்டு தேவனை திருப்திப்படுத்துகின்றவற்றை தேடு. அதுதான் உன்னை திருப்திப்படுத்தும்” என்று பதிலளித்தார். சாப்பாட்டு மேஜையில் “தேவ சித்தம் செய்தலின்” ருசியைக் காட்டினார். என்ன மணம்! அதைப் போல வேறு எந்த உணவும் உலகில் கிடையாது. அது ஒன்றுதான் திருப்தியைக் கொடுக்கும்.

பொது அறை
உணவு அறையில் இருந்து பொது அறைக்கு நடந்து சென்றோம். இந்த அறை அதிக பிணைப்பானதும் வசதியானதுமாக இருந்தது. நான் அதை விரும்பினேன். அதில் ஒரு குளிர்காயும் அடுப்பு, குஷன் நாற்காலிகள், ஒரு மெத்தையான இருக்கை ஆகியவையனைத்தும் அமைதியான சூழ்நிலையில் இருந்தன.

“இது உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொடுக்கும் அறை. இங்கு நாம் அடிக்கடி வருவோம். இது தனியாக அமைதியாக இருக்கிறதால் நாம் இருவரும் இங்கு ஐக்கியம் கொள்வோம்” என்று அவர் சொன்னார். ஆம். இளம் கிறிஸ்தவனாகிய எனக்கு இதைக் கேட்டு மெய்சிலிர்த்தது. க்றிஸ்துவுடன் சில நிமிடங்கள் தனிப்பட்ட சினேகத்தில் தங்கியிருப்பதைக்காட்டிலும் மேலானதாக நான் செய்யக்கூடிய காரியத்தை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர் வாக்களைத்தது என்னவென்றால் “ நான் இங்கு ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் இருப்பேன். என்னை இங்கு வந்து சந்தி. அந்த நாலை நாம் ஒன்றாக தொடங்குவோம்” என்பதே. ஆகையால் ஒவ்வொரு நாள் காலையிலும் நான் மாடியில் இருந்து கீழே இறங்கி அந்த பொது அறைக்கு வருவேன். அங்கு அலமாரியில் இருந்து எடுத்த வேதாகமத்தில் ஒரு புத்தகத்தை எடுப்பார். நாங்கள் அதைத் திறந்து ஒன்றாக வாசிப்போம். அவர் எனக்கு தேவனின் அற்புதமான இரட்சிப்பின் உண்மைகளை விவரித்து காண்பிப்பார். அவர் தன் அன்பையும் கிருபையையும் பகிர்ந்து கொண்ட போது என் இருதயம் பாடலால் நிறைந்தது. அந்த நேரங்கள் அற்புதமான நேரங்கள். நாள் செல்ல செல்ல அனேக வேலைப்பளுவினால் இந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறுகினது. ஏன் என்று தெரியவில்லை? கிறிஸ்துவுடன் நேரம் செலவழிக்க ரொம்ப கடினமாக இருந்தது. வேண்டுமென்றே நான் அவ்விதம் செய்யவில்லை. அது உங்களுக்குப் புரியும். அது அவ்விதமாகவே நடந்தது. கடைசியாக நேரம் குறுகினது மட்டுமல்ல, நான் சில நாட்களை அங்கும் இங்குமாக கடத்தினேன். அவசர காரியங்கள் இயேசுவுடன் அமைதி நேர உரையாடலை தடை செய்தன. எனக்கு ஞாபகம் வருகிறது, ஒரு நாள் காலை என் வேலையினிமித்தமாக படியிறங்கி கீழே வேகமாக வந்தேன். நான் பொது அறையை கடந்தபோது கதவு திறந்து இருப்பதைப் பார்த்தேன். உள்ளே பார்த்த போது கணப்பில் தீ எறிந்து கொண்டிருந்ததுமல்லாமல் இயேசு அங்கே உட்கார்ந்திருந்தார். துக்கத்துடன் எனக்குள் இப்படியாய் சிந்த்தித்தேன்,” அவர் என் விருந்தாளி. நான் அவரை என் உள்ளத்தில் வரும்படி அழைத்தேன்! அவர் என் இரட்சகராகவும் என் நண்பராகவும் வந்தார். ஆனால் நான் அவரை அசட்டை செய்கிறேன்.” நான் நின்று திரும்பி தயக்கமாக உள்ளே சென்றேன். தலை குனிந்த பார்வையுடன், “ஐயா என்னை மன்னியுங்கள். இங்குதால் எல்லா நாளும் காலைவேளைகளில் இருக்கிறீர்களா? என்று கேட்டேன். “ ஆம்” என்று அவர் சொன்னார் “நான் இங்கு எல்லா காலைகளிலும் உன்னை சந்திப்பேன் என்று உனக்கு சொன்னேனே” நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைத்துக் கொள். உன்னை அதிக விலை கொடுத்து விடுவித்திருக்கிறேன். உன் ஐக்கியத்தை நான் மதிக்கிறேன். உனக்காக அமைதிநேரத்தை உன்னால் கடைபிடிக்கமுடியாவிடினும் எனக்காகவாவது செய்”

கிறிஸ்து என் ஐக்கியத்தை விரும்புகிறார், எனக்காக காத்திருந்து, நான் அவ் அவருடன் இருப்பதை அவர் விரும்புகிறார் என்கிற உண்மை மற்ற எந்தவொரு காரியத்தையும்விட அதிகமாக தேவனோடு கொண்டுள்ள அமைதிவேளையை மறுரூபப்படுத்தியுள்ளது. கிறிஸ்து உங்கள் இருதயத்தின் பொது அறையில் தனியாக காத்திருக்கும்படிச் செய்யாமல் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கவும் வேதம் வாசிக்கவும் நேரத்தை கண்டுபிடிக்கவும்.

பணிஅறை
அதிக நேரமாவதற்கு முன்பே உன் வீட்டில் நீ வேலை செய்யும் அறை உண்டா? என்று கேட்டார். என் இதய வீட்டில் வெளியில் கார் நிறுத்தும் இடத்தில் சில கருவிகளும் மேஜையும் உண்டு. நான் அதில் ஒன்றும் அதிக வேலை செய்வது இல்லை. எப்பொழுதாவது சில கருவிகளை வைத்து விளையாடினாலும் சிறப்பாக எதையும் உருவாக்குவதில்லை. அங்கு அவரை அழைத்துச் சென்றேன். மேஜையை நோக்கிப் பார்த்து நன்றாக செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி “தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக என்ன செய்கிறாய் என்று கேட்டார். அங்கு கிடந்த ஒன்றிரண்டு பொம்மைகளை பார்த்து ஒன்றை எடுத்து “உன் கிறிஸ்தவ வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இதைப் போன்றதைத்தான் செய்கிறாயா?” என்று கேட்டார்.
“நான் அதிகம் செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு சக்தியும் திறமையும் கிடையாது” என்றேன்.
“நீ சிறந்த ஒன்றை செய்ய ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டார்.
“நிச்சயமாக” என்று பதிலளித்தேன். சரி உன் கைகளைக் கொடு. என் ஆவி உன்னில் கிரியை செய்யும்படி என்னில் ஓய்ந்திரு. நீ திறமையற்றவன், அவலட்சணமானவன் என்பது எனக்கு தெரியும். ஆனால் தேவ ஆவியானவர்தான் சிறப்பாக சிறந்த பணிசெய்பவர். அவர் உன் கைகள், இருதயம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் போது உன் மூலம் கிரியை செய்வார்” என்றார். என் பின்னால் அவர் நின்று அவருடைய பலத்த கரங்களை என் கரங்களின் கீழாக வைத்து கருவிகளைக் கொண்டு வேலைப்பாடு தெரிந்த அவர் விரல்களில் வைத்து என் மூலம் வேலை செய்தார். நான் எந்த அளவுக்கு அவரில் சார்ந்து அவரில் நம்பிக்கை வைத்தேனோ அந்தளவுக்கு அவர் என் வாழ்க்கையில் கிரியை செய்ய முடிந்தது.

பொழுதுபோக்கு அறை
வேடிக்கைக்கும் ஐக்கியத்துக்குமாக ஏதாவது ஒரு பொழுதுபோக்கு அறை உண்டா என்று கேட்டார். நான் அவர் தை கேட்க மாட்டார் என்று நம்பியிருந்தேன். எனக்காக என்று சில ஐக்கியங்களையும் செயல்பாடுகளையும் நான் வைத்திருந்தேன்.நான் ஒரு நாள் மாலை என் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அவர் என்னை இந்றுத்தி என்னைப் பார்த்து ,”வெளியில் செல்கிறாயா?” என்று கேட்டார். நான் ஆம் என்று பதிலளித்தேன். “நல்லது நான் உன்னுடன் வரவிரும்புகிறேன்” என்றார். “அப்படியா” என்று நான் மனக்குழப்பத்துடன் பதில் அளித்தேன். “ நாங்கள் செல்லும் இடத்திற்கு நீங்கள் வர விரும்ப மாட்டீர்கள். நாளை இரவு நாம் இருவரும் செல்வோம். நாளை இரவு ஒரு ஆலயத்தில் நடக்கும் வேதபாட வகுப்பிற்கு செல்வோம். ஆனால் இன்று இரவு இன்னொரு நிகழ்ச்சி எனக்கிருக்கிறது” என்றேன். ஆனால் அவர் “ நான் வருத்தப்படுகிறேன். உன் வீட்டில் வந்தபோது நாம் இருவருமே எல்லாவற்றையும் நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து செய்வோம் என்று நினைத்தேன். நான் உன்னுடன் சேர்ந்து வர விரும்புகிறேன் என்பதை நீ அறிவாயாக” என்றார். ஆனால் நான் நாளை இரவு ஏதாவதொரிடத்திற்கு நாம் சேர்ந்து செல்வோம் ” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினேன். அன்று மாலை சில துயரமான மணித்துளிகளை சந்தித்தேன். நான் கெட்டுப்போவதாக உணர்ந்தேன். இயேசுவுக்கு என்னவிதமான நண்பன் நான். என் வாழ்க்கையை விட்டு அவரை வெளியே அனுப்பி விட்டு அவர் விரும்பமாட்டார் என்று அறிந்தும் பல இடங்களுக்கு சென்று பல வேளைகளை செய்கிறேன் என்று நினைத்தேன்.
அன்று மாலை திரும்பி வந்த போதி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அவரிடம் இதைப் பற்றி பேச விரும்பினேன். நான் அவரிடம் “நீங்கள் இல்லாமல் எனக்கு நல்ல நேரம் எதுவும் இல்லை. ஒரு நல்ல பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.இப்போதிலிருந்து நாம் சேர்ந்தே எல்லாவற்றையும் செய்வோம் ” என்று சொன்னேன்.
பின்பு பொழுது போக்கும் அறைக்குள் நாங்கள் போனோம். அவர் அவ்வறையை மாற்றினார். அவர் புதிய நண்பர்கள் புதிய ஆச்சரியமான சம்பவங்கள் மற்றும் புதிய சந்தோசங்களை அங்கு கொண்டு வந்தார். சிரிப்பும் இசையும் அந்நேரமுதல் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தனி அறை
ஒரு நாள் கதவருகில் அவர் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். என்னை தடுத்து நிறுத்தும் ஒரு பார்வை அவர் கண்ணில் இருந்தது. நுலையும் போது அவர் சொன்னார், “வீட்டில் ஏதோ ஒரு வகையான நாற்றம் வருகிறது. ஏதோ இங்கு செத்து கிடக்கிறது. அது மாடியிலுள்ள தனியறையில் இருந்துதான் வருகிறது” என்றார். அவர் இப்படிச் சொன்னவுடன் அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு விளங்கி விட்டது. தனி அறையின் முடிவில் ஒரு சிறிய உள்ளறை. அது சில அடிகள் சதுரமானது. அது பூட்டப்பட்டிருந்தது. அவ்வறையில் என் சொந்தமான சில தனிப்பட்ட பொருட்களை நான் யாருமே அறியாதவகையில் வைந்த்திருந்தேன். நிச்சயமாக இயேசுவும் கூட அதைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அவைகள் என் பழைய வாழ்க்கையின் செத்து நாற்றமெடுக்கிற சில காரியங்கள். அவைகள் எனக்கு வேண்டுமென விரும்பி அவைகளை அறிக்கையிட பயந்தேன்.
தயக்கத்துடன் அவருடன் சென்றேன். போகப் போகப் நாற்றம் அதிகரித்தது. அவர் அக்கதவை சுட்டிக் காட்டினார். நான் கோபமடைந்தேன். அப்படித்தான் நான் சொல்லமுடியும். நான் எனது நூலகம், உணவு அறை, பொது அறை, வேலை செய்யும் அறை, பொழுதுபோக்கு அறை ஆகியவற்றை விட்டுக் கொடுத்தேன். ஆனால் இப்பொழுது எனது சிறிய இந்த தனியறையையும் கேட்கிறார். “இது மிகவும் அதிகம். நான் சாவியைக் கொடுக்கப் போவதில்லை” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். என் சிந்தனைய அறிந்தவராய் “நாற்றத்துடன் உள்ள இரண்டாம் தளத்திலே நான் தங்குவேன் என்று நீ நினைத்தால் அது உன் தவறு. நான் வெளியில் தங்குவேன்” என்று சொல்லி படி இறங்கினார்.
ஒருவர் கிறிஸ்துவை நேசிக்க அறிந்தபின் அவருடைய ஐக்கியத்தை விட்டு விலகுவது துக்ககரமானது. நான் அவரை உள்ளே விட வேண்டியதாயிற்று.
“நான் சாவியை தருகிறேன்” என்று சோகமாகச் சொன்னேன். “எனக்கு அதை சுத்தம் செய்ய பெலன் இல்லை. நீங்கள்தான் அதை திறந்து சுத்தம் செய்யவேண்டும். “சாவியைக் கொடு; நான் அவ்வறையை சுத்திகரிக்க அங்கீகாரம் கொடு. நான் அதைச் செய்வேன்” என்றார். நடுங்கும் விரல்களுடன் சாவியை அவரிடம் நான் கொடுத்தேன். அவர் அதை வாங்கி கதவருகில் சென்று திறந்து உள்ளே நுழைந்தார். சுத்திகரித்தார். அவ்வறையினுள் உள்ள எல்லா அழுகக் கூடிய நாற்றமடித்த பொருட்களை வெளியில் எடுத்து எறிந்தார். அவ்வறையை சுத்திகரித்து அதற்கு வர்ணம் பூசினார். இவை எல்லாம் ஒரு சில கணங்களில் நடந்தது. அந்த செத்தப் பொருட்கள் என் வாழ்வை விட்டு வெளியேறியதால் எவ்வளவு வெற்றி! என்ன விடுதலை!

தலைப்பு மாற்றம்
எனக்குள் ஒரு எண்ணம் “ ஆண்டவரே அந்த தனி அறையை நீர் சுத்திகரித்தது போலவே இவ்வீட்டில் முழு நிர்வாகத்தையும் நீர் எடுத்து எனக்காக இந்த முழு வீட்டையும் இயக்க வாய்ப்புண்டா? என் வாழ்க்கை எப்படியிருக்கவேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அப்படியாக அதை மாற்றிக்கொள்ளும் பொறுப்பை நீர் ஏற்றுக்கொள்வீரா?” அவர் பதிலளித்தபோது முகம் ஒளிர்ந்தது. “அப்படிச் செய்வதைத்தான் நான் விரும்புகிறேன்! உன் சுயபலத்தில் நீ வெற்றியுள்ள வாழ்வுவாழ முடியாது. உன் மூலமாக உனக்காக நான் அதை வாழவிரும்புகிறேன்” என்றார். அதுதான் வழி. ஆனால் “ நான் ஒரு விருந்தாளி, எனக்கு அங்கீகாரமில்லை, உரிமையுமில்லை” என்றார். நான் முழங்காலில் நின்று “ஆண்டவரே நீர் விருந்தாளியாக இருந்தீர். நான்விருந்தளிப்பவனாக இருந்தேன். ஆனால் இப்பொழுதிருந்தே நான் உமது வேலைக்காரன். நீர்தான் என் சொந்தக் காரரும் எஜமானரும் என்றேன்.

நான் வேகமாக பொக்கிஷ பெட்டிக்கு ஓடி என் ஆஸ்திகள், பொறுப்புகள், இருப்பிடன், சூழ்நிலை ஆகியவை அடங்கிய வீட்டின் பத்திரத்தை எடுத்து அவருக்கே அவ்வீட்டை நித்திய காலத்துக்குமாக எழுதிக் கொடுத்தேன். “இதோ, இங்கே நானும் என்னுடையவைகள் அனைத்தும், எனறென்றைக்குமாக உமக்கே. நீர் இவ்வில்லத்தை நடத்தும். நான் உமது அடிமையும் நண்பனுமே” என்றேன். என் உள்ளத்தில் இயேசு வீடமைத்து தங்கியபின் காரியங்கள் மாறின.

என் உள்ளம் கிறிஸ்துவின் இல்லம்

Sunday, November 15, 2009

Teen Questions : என் கேள்விகளை தருகிறேன். உங்கள் பதில் என்ன? 1


நான் கிறிஸ்துவுக்காக வாழ போராடிக் கொண்டிருக்கும் கோடிகளில் ஒரு சிறு போராளி. ஆனால் என் மனதில் அவ்வப்போது எழும்பும் கேள்விகளும், வாழ்க்கையில் வரும் தோல்விகளும் துவளச் செய்கின்றன. என் கேள்விகளை தருகிறேன். உங்கள் பதில் என்ன?
கேள்வி 1: கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்ற தீர்மானத்தை நான் எடுத்திருக்கிறேன். ஆனால் என்னால் அவருக்காக வாழவேண்டும் என்ற தீர்மானத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை? ஒவ்வொருமுறையும் நான் தோற்றுவிடுகிறேன். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என்று ஒன்று உண்டா? அதை வாழ என்ன செய்யவேண்டும்? எனக்குத்தெரிந்து வெற்றியுள்ள கிறிஸ்தவர்கள் எவரும் இருப்பதாக தெரியவில்லை. எல்லாருமே(ஊழியர்களையும் சேர்த்துத்தான்) போலி வேஷம் போடுவதாகவே தோன்றுகிறது. ஏன்?

ஹலோ! ஸ்வீட் டீன் ! உன் கேள்வி உன் எண்ண அலைகளை கரைக்கு கொண்டுசேர்த்துள்ளது. உன் போல் போராடிக் கொண்டிருக்கும் பலருக்கு இப்பதில் பிரயொஜனமாயிருக்கும்.

முதலாவதாக நீ அறிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், இன்றும் வெற்றியுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் அனேகம் உண்டு. எலியா தீர்க்கதரிசி தன் காலத்தில் தேவனுக்காய் வாழ எவரும் இல்லை என்று எண்ணினான். ஆனால் தேவன் அவனுக்கு அளித்த பதில் என்ன? 7000 பேர் இருக்கிறார்கள் என்றார்(1இராஜாக்கள்.19:18). அன்றே 7000 பேர்கள் இருந்திருந்தால் இன்று குறைந்தது ஒரு 70கோடி பேராவது நிச்சயமாக இருப்பார்கள். ஆகவே வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை நிச்சயமாகவே (அவ்வாறு வாழ விரும்பும் எவருக்கும்) உண்டு. போலிகளைக் கண்டு நீ ஏமாற வேண்டாம். அவர்களைக் குறித்து பேசுவது வீண்.
கிறிஸ்தவ வாழ்வில் தோல்விகள் வரலாம். ஆனால் கிறிஸ்தவம் ஒரு போதும் தோற்காது. தோல்விகள் ஏன் வருகின்றன என்று சற்று உற்று நோக்கினால் அவை நமக்கு வரும் சோதனைகளினாலேயே(Temptations) என்பதை விளங்கிக் கொள்ளலாம். நாம் இவ்வுலகத்திலிருக்கிற படியால் உலகக் காரியங்கள் பல விதத்தில் நம்மை பின் நோக்கி இழுக்கின்றன. நாம் இவ்வுலகத்தில் இருக்கும் காலமட்டும் சோதனைகள் வரத்தான் செய்யும். சோதனைகளே வரக்கூடாது என்பது அல்ல வெற்றிக் கிறிஸ்தவம். சோதனைகளை ஜெயிப்பதுதான் வெற்றிக் கிறிஸ்தவம்.


நமக்கு வரும் சோதனைகளை நாம் எவ்வாறு ஜெயிக்கலாம்?

இயேசுக்கிறிஸ்துவினால்: ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்(எபிரெயர்.2:18). இயேசு சொன்னார்: திடன்கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்(யோவான்16:33).

விசுவாசத்தினால்: தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1யோவான்.5:4). தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், வசனத்தினாலும் : மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

மேலே நீ கண்டபடி உன் வெற்றி கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உதவ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவரை விசுவாசி, அவர் உனக்காக செய்து முடித்தவைகளை விசுவாசி. சோதனைகளினால் நீ தாக்கப் படாமல் இருக்க நினைத்தால் விசுவாசம் என்னும் கேடகத்தை பயன்படுத்து. தேவனுடைய பட்டயமாகிய ஆவியின் பட்டயத்தை சரியாகப் பயன் படுத்து. வெற்றி உனக்குத்தான். உனக்கு வரும் சோதனைகள் மட்டுமல்ல உன்னை தாக்க வரும் பிசாசும் கூட உன்னை விட்டு ஓடிப் போவான். சோதனையையும் பிசாசையும் நீ எதிர்த்துத்தான் ஆகவேண்டும்.(எபேசியர்:6)

வெற்றி பெற வேறு வழி இல்லை. குறுக்கு வழி நாடாதே! சிலர் ஜெபமே ஜெயம் என்று சொல்வார்கள். அதற்கு வேத வசன ஆதாரம் கிடையாது. விசுவாசம் இல்லை எனில் ஜெபம் சுபம் ஜெயம் தராது. நீ இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டவன். இவை உனக்கு புரிந்திருக்கும். சாத்தான் உன்னை தொடமுடியாது. உனக்கும் தேவனுக்கும் ஏதாவது இடைவெளி இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக உன் தவறுகளை அவரிடம் அறிக்கையிட்டுவிடு. வெற்றி என்றுமே உன் பக்கம்தான். உன் சாட்சியை கேட்க ஆவலாக இருக்கிறேன்.கேள்வி 2: பருவ மாறுதலில் பல எண்ணங்கள் மனதில் சிறகடிக்கிறது. முக்கியமாக ஒரு விசயத்தில் என்னால் கன்ட்ரோலாகவே இருக்க முடியவில்லை. மனது அலைபாய்கிறது. என்ன விசயம் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்? நான் என்ன செய்ய வேண்டும்?

முதல் கேள்விக்கான பதிலை ஆராய்ந்து அத உன் வாழ்க்கையில் செயல்படுத்து. சிறிது நாட்கள் கழித்து வா. அப்போதும் இந்த கேள்வி உன்னிடம் இருந்தால்........ பதில் சொல்கிறேன். அதுவரை பொறுத்திரு.

- S.Arputharaj

Wednesday, November 4, 2009

பவுலடிகள் எனப்படும் சவுல் ஒரு அப்போஸ்தலரா?

கேள்வி: லூக்கா 6:13ன் படி இயேசு தெரிந்தெடுத்தது பன்னிரெண்டு அப்போஸ்தலரைத்தானே. அப்படியிருக்க பவுல் எப்படி அப்போஸ்தலரானார்?

இயேசு கிறிஸ்து மரித்து பின்பு உயிர்த்து மகிமையாக பரமேறின பின் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸுக்குப் பதிலாக வேறொருவரை சீட்டு போட்டு எடுத்தனர். அது யூத வழக்கம்.

ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த ஒரு மனிதனே இந்த பவுல் ஆவார். அவர் எந்தளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ அதை விட அதிக வைராக்கியத்துடன் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்க கிளம்பினார். அவர் மூலமாகவே அனேக தேவ இரகசியங்களும் புதிய ஏற்பாட்டில் உள்ள பெரும்பாலான புத்தகங்களும் தேவ ஏவுதலால் எழுதப்பட்டன.

கிறிஸ்தவர்களை துன்புறுத்தப் புறப்பட்ட பவுலை இயேசு தமஸ்குவில் சந்தித்தார், தன்னை வெளிப்படுத்தினார். அத்தோடு சவுல் எனப்பட்ட இந்த பவுலைக் குறீத்தும் அங்கு வெளிப்படுத்துகிறதை காணலாம்: "அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான் "(அப்போஸ்தலர் 9).

ஆகவே பவுல் மனுசரால் ஏற்படுத்தப் பட்ட ஒரு அப்போஸ்தலனாயிருக்கவில்லை. தேவனே அவரை தெரிந்தெடுத்தார், வழி நடத்தி போதித்தார். இதையே பின்பு பவுல் பின்வருமாறு கூறுகிறார்: "மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்" என்று கூறுகிறார்.

மேலும் தான் அறிவித்த சுவிசேசத்தைக் குறித்து சொல்லுகையில் "நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார். ஆகவே பவுல் எப்படி அப்போஸ்தலரானார் என்று நாம் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. தனக்குத்தானே அப்போஸ்தலர் என்று பட்டம் கொடுத்து கொள்ளும் இக்கால அப்போஸ்தலர் அல்ல அவர். தேவன் அவரை அப்போஸ்தலராக அழைத்தார். அதையே அவர் மக்களுக்கு எழுதும் போது அழைக்கப்பட்டவனாக அப்போஸ்தலனாக எழுதினார். இதில் இரகசியமொன்றுமில்லை. அப்போஸ்தலன் என்றால் "அழைக்கப்பட்டவன்" "அனுப்பப்பட்டவன்" என்பதுதான் பொருள். இக்காலத்தில் அப்போஸ்தலன் என்றால் ஏதோ பெரிய பட்டமாக கருதப்படுகிறது. அதுவுமல்லாமல் பிஷப் என்றால் பெரிய இராஜா என்கிற எண்ணம். அதனால் இப்போது பிஷப்கள் பெருத்துவருகிறார்கள். பிஷப் பட்டம் விற்கப்படுகிறது.

இப்படிப்பட்ட பட்டங்களால் நாம் அறியப்படுவதை விட "ஒரு நல்ல கிறிஸ்தவன்" என்கிற பேரைப் பெற்று தேவனுக்கு சாட்சியாக வாழ்வது எவ்வளவு மேலானது!

Wednesday, April 22, 2009

நீங்க என்ன ஜாதி?

உங்களைப் பார்த்து யாராவது நீங்க என்ன ஜாதி? என்று கேட்டால் உங்கள் ரெஸ்பான்ஸ் என்னவாக இருக்கும்? உடனே முறைத்துப் பார்ப்பீர்கள்தானே! உங்க பகுதியில் எப்படியோ எனக்கு தெரியாது. ஜாதிச் சண்டைகளுகு பெயர்போன தென் தமிழகத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயமாக யாராவது உங்களைப் பார்த்து இக்க்கேள்வியை நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்டிருப்பார். நானும் ஒரு தென் தமிழக கிறிஸ்தவன் என்பதால்தான் இந்தக் கட்டுரை……….
இதை எழுதுவது என் கடமை
வாசிப்பது உங்கள் பொறுமை.
விசயத்தை தெரிந்து கொள்ள உடனே உள்ள வாங்க


நீங்கள் தென் தமிழகத்தில் உள்ள ஒரு காரியத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதுதான் எனது முழு அவா. ஆகவே தயவு செய்து பொறுமையுடன் இரசித்து ருசித்து வாசிக்கும்படியாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


எங்க ஊர்ப்பக்கங்களில் ஒருவரை முதலில் சந்திக்கும் போது பெரும்பாலும் எல்லாரும் அறிந்து கொள்ளவிரும்புகிற காரியம் அவர் என்ன ஜாதி என்பதாகத்தான் இருக்கும். ஒருவேளை அவர்கள் வாயை திறந்து நேரடியாக கேட்காவிடினும் உள்மனதில் அதுதான் ஓடிக்கொண்டு இருக்கும். ஆகவே முதலில் பெயரைக் கேட்பார்கள். கேட்டபின்பு நைசாக ஊர்பெயரைக் கேட்பார்கள். அதிலேயே ஓரளவுக்கு என்ன ஜாதி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். மேலும் சந்தேகம் இருக்குமெனில் அந்த ஊரில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். இப்படியாக எங்க மக்கள் ஜாதியைக் கண்டுபிடிப்பதில் பயங்கரமான புத்திசாலிகள். இன்னும் சில கரை கண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரைப் பார்த்து அவரைன் பார்வை மற்றும் தோற்றத்தைவைத்தே அவர் என்ன ஜாதி என்பதை கணித்துவிடுவார்கள். இங்கேபோய் இதைச் சொல்வதற்கு என்ன அவசரம் வந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ...........இருக்கிறது.


சில மாதங்களுக்கு முன்பு வட தமிழகத்தில் சாதியை மையமாக வைத்து பாரம்பரிய கிறிஸ்தவ சபை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியினால் வேதனைப்பட்டவர்களில் நானுமொருவன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல கிறிஸ்துவுக்குள் இருப்பதுதான் முக்கியம், ஒருவர் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் என்ன சபையிலிருந்தாலும் நாமெல்லாரும் ஒரே சரீரமே என்பதை நான் முழுமையாக நம்புபவன். இதற்கு சபைப் பிரிவுகள் தடையாக இருக்கமுடியாது. ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருக்கும் படசத்தைல் பல காரியங்களை சபைப் பாரம்பரியங்கள் மற்றும் உலகப் பாரம்பரியங்களின் படி செய்ய முடியாதல்லவா? ஆம்.


எங்கள் ஊரில் உள்ள ஒரு பழக்கத்தை நான் முன்பு சொன்னேன். இப்போது ஆவிக்குரிய வட்டாரத்தில் காணும் மற்றொரு காரியத்தையும் கூறுகிறேன். முன்பு ஆவிக்குரிய சபைகளுக்கு செல்வதையே மற்ற கிறிஸ்தவர்கள் கூட வெறுத்தனர். ஒருவன் பெந்தேகோஸ்தே சபைக்கு சென்றால் அவனை மிகவும் கீழ்த்தரமானவனாக நினைப்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றும் கூட சில இடங்களில் உள்ளது. ஆனால் இன்று ஆவிகுரிய சபைகளுக்கு செல்வது கிட்டதட்ட ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. எதுவும் சீர்கெட்டும்போது எல்லாமே தலைகீழாக மாறிவிடுமல்லவா. அதேபோலத்தான் இன்று ஆவிகுரிய சபைகளிலும் சாதி என்ற பேச்சு எழும்பி விட்டது. முன்பு பாரம்பரிய சபைகள் மட்டுமே சாதியின் அடிப்படையில் இருந்துவந்தன. இன்று ஆவிக்குரிய சபைக்கு செல்லும் ஒருவரை அவர் செல்லும் சபையைவைத்தே அவர் என்ன ஜாதி என்று கூறுமளவுக்கு நிலைமை மலிந்துவிட்டது. அதாவது பாஸ்டர் என்ன ஜாதி என்று பார்த்து செல்லுமளவுக்கு நிலைமை என்ன செய்ய? இதைக் குறிது எழுதுவதற்கே எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆனால் உண்மை எழுதுவது நன்மைக்கே!


இதை எழுதுவதற்கு எனக்கு ஒன்றும் பெரிதாக தகுதியில்லை. ஏனெனில் நானும் ஒருகாலத்தில் குட்டையில் ஊறின மட்டையாக எங்க ஊர் மக்களில் ஒருவனாகவே இருந்துவந்தேன் என்பதை வெட்கத்துடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் வசனத்தின் வெளிச்சம் எனக்கு உண்டானபோதுதான் ஜாதியைக் குறீத்து ஒரு சரியான உணர்வு வந்து சாதியுணர்வு நீங்கிற்று.


வேதம் ஜாதி குறித்து என்ன சொல்கிறது?
வேதாகமத்தில் பலவிதமான ஜாதிகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உண்மைதான். ஆனால் நாம் ஒருவிசயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். வேதாகம காலத்தில் ஒரு நாட்டு மக்களைக் குறிக்கும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்களையே அவாறு குறிப்பிட்டனர். இன்று உள்ளதுபோலல்ல. ஆகவே யாராவது வேதாகமத்திலேயே ஆண்டவர் பல ஜாதிகளைக் குறீத்து எழுதிவைத்துள்ளார் அல்லவா? என்று யாராவது சொன்னால் உடனே நம்பிவிடாதீர்கள். இன்னும் சில ஜாதிப் பிரசங்கியார்கள் இப்படியாக சொல்வார்கள்," பாருங்க ஆபிரகாமே என்ன செய்தான்? தன் சொந்த இனத்தாரிடம் தன் மகனுக்கு பெண்கொள்ளும்படி எலயேசரை அனுப்பவில்லையா? ஆகவே ஜாக்கிரதையாயிருங்கள். அதுவும் திருமண காரியத்தில் ரொம்ப ஜாக்கிரதை என்பார்கள். உடனே ஏமாந்துவிடாதீர்கள். ஏனெனில் ஆபிரகாம் வாழ்ந்துவந்த பகுதி மக்கள் சபிக்கப்பட்டவர்கள் மாத்திரமல்ல கொடிய விக்கிரகவணக்க்த்தாராகவும் இருந்துவந்தனர். ஆகவே தான் ஆபிரகாம் தனக்கு நன்றாக தெரிந்த தன் குடும்பத்தினரிடம் தன் ஊழியக்காரனை அனுப்பினான். இன்று ஊழியக்காரர்களே ஜாதி பார்ப்பது மட்டுமல்லாது ஜாதியக்குறித்து முழக்கமான பிரசங்கங்கள் வேறு. கர்த்தாவே! எங்க மக்களை இரட்சியும்.


புதிய ஏற்பாடு ஜாதி குறித்து என்ன சொல்கிறது?
இயேசு ஜாதி பார்த்தாரா? அவர் ஜாதி பார்த்திருந்தால் நமக்கு அதாவது வேதாகமத்தின்படி புறஜாதிகளுக்கு எப்படி இரட்சிப்பு கிடைத்திருக்கும். தேவனின் பார்வையில் எல்லா மனிதரும் ஒரே ஜாதியே அது மனித ஜாதி. தேவன் நேசிப்பது மனிதனையே, அவன் எந்த ஜாதி என்று அவர் பார்ப்பதில்லை.

புதிதாக திருமணம் முடித்த ஒருவனிடம் தெற்கத்திப் பயல் ஒருவன் அண்ணே உங்க மனைவி என்ன ஜாதி என்று கேட்டான்? அதற்கு பதிலளித்த அந்த புதுமாப்பிள்ளை அடேய் அவள் பென் ஜாதி நான் ஆண் ஜாதி ஆகவே இப்போ அவள் என் பொஞ்சாதி ஆகவே உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ என்று பதிலளித்தானாம்.


அப்போஸ்தல கால சபையில் ஜாதியை( நாம் பார்க்கிற ஜாதி அல்ல, வேறு நாட்டு மக்கள்) மையமாக வைத்து பிரச்சனை வந்ததா? ஆம். வந்தது. வேதாகமத்தில் அதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் 6ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் அதில் அப்போஸ்தலர்கள் தலையிடவில்லை, அதை விரும்பக் கூட செய்யவில்லை. அவர்களின் பதில் இன்று மட்டுமல்ல என்றுமே ஒவ்வொரு ஊழியனும் பின்பற்றவேண்டிய காரியமும் ஆகும் (அப்.6:2- 4).


மிகவும் இன வைராக்கியம் மிகுந்தவர்களும் மற்ற மக்களுடன் கலப்பதை தீட்டாக கருதின யூதமக்களுக்கு யூதரல்லாதவருடன் பேசுவது என்பதே மிகவும் கீழ்த்தரமானது ஆகும். அப்படிப்பட்ட யூதகுலத்தில் பிறந்து வளந்த பேதுருவுக்கு தேவன் காண்பித்த தரிசனம் என்ன்? இன்று அடிக்கடி தரிசனம் காண்பவர்கள் அதயே மேடைக்கு மேடை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாது பேசுபவர்கள் இதை சற்று வாசித்து சிந்திக்கவேண்டும் (அப்.10). நாம் யாராக இருந்தாலும் யூதனானாலும் கிரேக்கனானாலும் பரிசுத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆகவே யாவரும் ஒன்றே. இன்னும் சொல்லப் போனால் யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை புது சிருஷ்டியே காரியம் என்று வேதம் கூறவில்லையா? இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள 1கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் வரங்களைக் குறித்து சொல்கிற தேவன் அதைத் தொடர்ந்து உடனே கூறுகிற காரியமும் இதுதான். சற்று நிதானமாக உங்கள் வேதாகமத்தை எடுத்து அந்த அதிகாரத்தை வாசித்து தியானியுங்கள். மிகவும் பிரயஜனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


நாமெல்லாரும் ஒரே ஜாதி என்றால் என்ன ஜாதி?
நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம் என்பதினால் நமக்குள்ளே எவ்வித பிரிவினைகளும் இருக்கக் கூடாது. இருக்காது. நாமெல்லாரும் வசனத்தின்படி விசுவாசத்தினால் ஆபிரகாமின் சந்த்ததியினராகவும் இருக்கிறோம். நாம் இஸ்ரவேலர்கள். தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். உள்ளத்தில் யூதனானவே யூதன் என்று ஒரு இடத்தில் அப்.பவுல் கூறினார். ஆம் நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். இஸ்ரவேல் என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று அர்த்தமாம். நாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நாம் எந்த நாடு எந்த மொழி எந்த பகுதி எந்த சபைப் பிரிவு என்றாலும் நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நாம் ஒரே சரீரம். நாம் பிரிந்திருக்க முடியாது.


ஜாதி யார் பார்ப்பார்?
ஒரு பிரசங்கியார் வேடிக்கையாக தன் பிரசங்கத்தில் பின்வருமாறு சொன்னார். இயேசு ஒரு இடத்தில் இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி வேறெவ்விதத்தினாலும் போகாது என்று சொன்னார் அல்லவா? ஆகவே இந்த ஜாதி என்பதெல்லாம் பிசாசுகளுக்குத்தான். இரட்சிக்கப்பட்ட நமக்கு அல்ல என்றார். இதற்கு மேல் இதைக் குறித்து நான் கூற விரும்புவதற்கொன்றுமில்லை.


திருமணத்தின் போதாவது ஜாதி பார்க்கலாமா என்று கேட்டால் நான் பொதுவாக என் நண்பர்களிடம் கூறுகிற காரியம் என்னவெனில் திருமணத்தில் தேவ சித்தம்தான் முக்கியம். ஜாதி அல்ல. ஆகவே தேவ சித்தத்திற்கு தடையாக எந்தக் காரியத்தையும் வைக்காதீர்கள். தேவன் கண்டிப்பாக வேறுஜாதியைத்தான் நீ மணமுடிக்கவேண்டும் என்று சொல்ல மாட்டார். ஆனால் அதுவே அவரது சித்தமாக இருகும் போது நம் விருப்பமும் ஆசையும் அதை நம் வாழ்வில் நிறைவேறாமல் செய்துவிடும். விளைவு திருமண தோல்விகள். ஆகவே ஜாதியை மட்டுமல்ல - படிப்பு, அழகு, வரதட்சணை(வாங்கினால் வெட்கம்) குடும்ப அந்தஸ்து என எதையும் முன்வைக்காமல் ஆண்டவரே உம் சித்தமே என் பாக்கியம் என்று சொல்ல மட்டும் செய்யாமல் அதின்படி நடக்கவும் செய்யுங்கள். தேவன் நிச்சயமாக உங்களை ஏமாற்ற மாட்டார். நீங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிச் செய்வார்.அதுவே அவரது விருப்பமும் கூட. மறந்துவிடாதீற்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள். மறக்காமல்........சாதி சாதி என்று பலர் ஏத்திக் கூறுவர்
சாதியொன்றுமில்லை எல்லாம் பாதியில் வந்தது
சாதியொன்றுண்டு (உள்ளத்தின்படி) யூத இஸ்ரவேல் சாதி
எல்லாரும் வாழ்ந்து சுகிக்கவே
தேவனை மதிக்கவே
சாத்தானை மிதிக்கவே
உலகத்தை ஜெயிக்கவே
ஜெய் ஜெய் ஜெய்

கடிசியாக ஒருமுறை உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்க என்ன ஜாதி? (எல்லாம் பழக தோஷம்)நான் யூத ஜாதி. அப்ப நீங்க?

இந்தக் கட்டுரை எழுத மிகவும் உந்துதலாக இருந்த ஜஸ்டின் பிரபாகரன் அவர்கலின் ஒரு பாடல் வரிகளுடன் கீழே கொடுகப்பட்டுள்ளது. கேட்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.


ஜாதியிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
Caste ல Caste நாங்க Holy Caste
Caste ல Caste நீங்க என்ன Caste
Caste ல Caste நாங்க Pentecost


யுதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை
உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை
கிறிஸ்துவின் சமூகத்திலே
ஆணென்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை
கற்றவனும் இல்லை கல்லாதவனும் இல்லை
அனைவரும் சரிசமமே

Dowry வாங்கும் கிறிஸ்தவனுக்கு நீதி இல்லையே
ஜாதி பார்க்கும் கிறிஸ்த்வனுக்கு நியாயம் இல்லையே
தாலி கயிறு கட்டுகிற வேலையில்லையே
நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே
ஜாதி Dowry ஒழித்து கட்டி நிவிர்த்தி செய்வோமே
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே - ஜாதியிலே


புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு
கல்யாணம் என்பது கனமுள்ளதாகும்
சந்தையாக மாற்றவேண்டாம்
நியாயத்துக்கும் அநீதிக்கும்
வெளிச்சத்த்துக்கும் இருளுக்கும்
கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும்
சம்பந்தமில்ல தெரிஞ்சுகோங்க

நேரம் காலம் பார்த்து இராகுகாலம் கேட்டு
நல்ல நாளும் வைத்து சகுனமெல்லாம் பார்த்து
கல்யாணத்தை நடத்துறாங்க
கர்த்தருடன் இருக்கையிலே காலம் நேரம் ஒன்றுமில்லை
நாளும் நேரம் பார்ப்பதுமே கர்த்தருக்கே கோபமாமே
தெரிஞ்சுக்காம செய்யுறாங்க

ஒரு மழலையின் ஜெபம்

பகைஞனையும் அடக்கிப் போட தேவரீர் உமது சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர் என்று தாவீது சங்கீதம் 8ல் கூறுகிறார். இங்கே ஒரு மழலை குழந்தையின் ஜெபம் உண்மையில் உள்ளத்தை உருக்குகிறது. பெலனையும் அளிக்கிறது.
அன்புள்ள இயேசப்பா,
சிறுபிள்ளையான என்னை நேசிப்பதற்காக உமக்கு நன்றி. அப்புறம் எனக்கு நீங்க பல தடவை நான் கேட்டதையெல்லாம் கொடுத்திருக்கீங்க. இப்போதும் நான் கேட்கப்போறதையும் தருவீங்கல்ல. எனக்கு என்ன சொல்லி உங்க கிட்ட கேட்கிறதுன்னே தெரிய லை. நான் நேத்திக்கு எங்க பாஸ்டர் மாமா வீட்டிற்கு போனப்போ அங்கே ஒரிசான்னு ஒரு இடத்தில கிறிஸ்தவர்கள் தாக்கப்படுறது பத்தி சொல்லிகிட்டு அதுபத்திய படங்களையெல்லாம் காட்டிகிட்டு இருந்தாங்க. நானும் படம்னதும் ஆசையா எட்டிப் பார்த்தேன். நான் ஒருபோதும் அதுமாதிரி படங்கள பார்த்ததில்லை. அப்பப்பா திகில் படங்களில் வருகிறதை விட பயங்கரமா இருந்துச்சு. நான் அத பார்த்த உடனே பயந்துட்டேன். நான் உடனே பாஸ்டர் மாமாகிட்டே என்னது மாமா இதுன்னு கேட்டேன். அவர் சொல்ல சொல்ல என்னால அழுகைய அடக்கவே முடியலை. அங்கே இருந்தவங்களும் அழுதாங்க. அதுக்கப்புறம் நான் எங்க வீட்டுக்கு திரும்பி வந்துட்டேன். நேற்று நைட்டு முழுக்க அந்தப் படங்கள்தான் என் முன்னால தெரிஞ்சது. என்னைப் போல பல பிள்ளைங்க அழுதுகிட்டே இருக்க இடம் இல்லாம தவிப்புடன் பார்த்ததை என்னால மறக்கவே முடியல. அப்புறம் ஏன் அவுங்கல்லாம் வீட்டுல இல்லாம காட்டுல இருக்கணும். அவுங்களுக்கும் உதவுங்க இயேசப்பா. எனக்காகவாவது அவங்களுக்கு உதவி செய்யுங்க. எனக்கு இப்போ கண்ணை மூடவே முடியல. ஏன் தெரியுமா. நான் கண்ணை மூடினா அந்த சிஸ்டர் ஆன்டியை எரித்த படத்தையும் மாமா காட்டினார். நான் ஒரு தடவை தெரியாம அடுப்புல கை வைச்சுட்டேன். அதுவே எனக்கு பல நாள் வலிச்சிகிட்டே இருந்தது. ஆனா இயேசப்பா அந்த ஆன்டியையே அடுப்புக்குள்ள வச்ச மாதிரியில்ல இருக்கு. அந்த ஆன்டிக்கு எவ்வளவு வலிச்சிருக்கும். எனக்கு அடுப்புல கை வச்சி வலிச்ச போது எங்கம்மா எப்படி அழுதாங்க தெரியுமா? நானும்தான். எனக்கு இப்போ அதை நினைக்கும்போதெல்லாம் அந்த ஆன்டி எப்படி கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு நினைச்சே எனக்கு அழுகை அழுகையா வருது. எப்படி இயேசப்பா அது அந்த ஆன்டிக்கு நடந்தது. இனிமே யாருக்கும் அப்படி நடக்கக் கூடாது. அவங்களுக்கெல்லாம் வலிக்குமே. நான் உங்க பிள்ளையா இருக்குற மாதிரிதானே அவங்களும் உங்க பிள்ளைதானே. தய்வு செய்து அவங்களுக்கு ஏதாவது செய்யுங்க. அப்புறம் அங்கே ஒரிசாவில் இருக்குற எல்லாரும் உங்க பிள்ளையாக மாறனும். எனக்கு நல்லா தெரியும். அங்கே சீக்கிரம் அது நடக்கும்னு. எங்க சண்டே ஸ்கூல் டீச்சர் போன வாரம் பாடம் நடத்தும் போது நீங்க எருசலேமில் மரித்த பிறகு எருசலேமில் ஏராளமானவங்க உங்க பிள்ளைகளாக மாறினாங்களாமே. அது போல இப்பவும் நிறைய பேர அங்க கொன்னுட்டாங்கன்னு மாமா சொன்னாங்க. அப்படின்னா அங்கேயும் நிறைய பேர் உங்க பிள்ளையாக மாறப் போறாங்கதானே. எனக்கு ஒரு விஷியம் மட்டும் புரியல இயேசப்பா. அவங்கல்லாம் எதுக்கு சர்ச் எல்லாத்தையும் எரிக்கிறாங்க இடிக்கிறாங்க. என்ட்ட இருந்து யாராவது எதையாவது பிடுங்கினால் எங்கப்பா அதுபோல பல மடங்கு வாங்கிதந்து என்னை சமாதானப்படுத்துவாங்க. அதுபோல இயேசப்பா இப்போதும் நீங்க எனக்கு செய்யுங்க. எனக்கு இதுக்கு மேல என்ன கேட்கன்னு தெரியல. திரும்ப திரும்ப அந்த படங்கள் தான் என் கண் முன்னால. பாருங்க என் கண்ணுல கண்ணீர் வந்துட்டு. நான் அழுதா எங்கம்மா ஏதாவது செய்து என்னை சிரிக்க வைப்பாங்க. அது போல நீங்களும் செய்யணும்னு ஆசை. செய்வீங்களாப்பா. PLeeeeash!(தூரத்தில் ஒலிபெருக்கியிலிருந்து மெல்லிய பாடல் சத்தம் கேட்கிறது)

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

ஆட்டுக்குட்டிதான் இவர் கண்ணீரை
அற அகற்றி துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப்பருக இயேசுதாமே...........

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

ஜெபம் என்றால்... என்ன? ஏன்? எதற்கு?

ஜெபம் என்பதைக் குறித்து ஒரு சிறிய சிந்தனையை தளத்தின் முன் வைக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் ஜெபம் என்பதை குறித்து பல முறை பேசியிருக்கலாம், இன்னும் சொல்லப் போனால் நாம் அனுதினமும் ஜெபிக்கிறவர்களாகவும் இருக்கிறோம். ஆனலும் ஜெபம் என்பதன் கருத்து இன்னமும் முழுமையக சரியாக பெரும்பாலோனோரால் புரிந்து கொள்ளப்படவில்லை. So.....நீங்கள் யாருடனாவது தொலை பேசியில் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் எதிர்முனையில் இருப்பவரிடம் நான் பேசுவேன் பேசுவேன்...... பேசிக்கொண்டே இருப்பேன், கேட்க வேண்டியது மட்டுமே உன் கடமை ஆகவே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே ...... இருங்க என்று நீங்க சொன்னால் எதிர் முனையில் இருப்பவர் என்ன செய்வார்? முதலில் பொறுமையாக கொஞ்ச நேரம் கேட்பார். பின்பு சற்று எரிச்சலுடன் கேட்பார் பின்பு இவன் என்ன நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் இவனுக்கு நான் ஏதாவது உதவி செய்யலாம் என்று நினைத்தால் கூட இவன் கேட்க மாட்டேங்கிறானே என்ற ஆதங்கத்துடன் இணைப்பை துண்டித்து விடுவார். இன்று அனேக கிறிஸ்த்வர்கள் செய்யும் ஜெபங்களில் கூட இதே நிலைதான் என்பதை மிகவும் மன் வேதனையுடனும் பாரத்துடனும் கூற வேண்டியதாயுள்ளது.

சரி. ஜெபம் என்றால் என்ன?

ஜெபம் என்பது தேவனுடன், தேவன் நம்முடன் பேசும் ஒரு வழிமுறை ஆகும். அது ஒரு வழிச் சாலை அல்ல, இருவழிச் சாலை. நாம் பேச அவர் பேச இருவரும் உரையாடி மகிழும் ஒரு இனிமையான நேரம் அதுவாகும்.

இன்று ஜெபம் செய்தீர்களா?
பொதுவாக கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் ஜெபம் செய்தீர்களா என்று கேட்டால் சாரி பிரதர், சாரி சிஸ்டர் எனக்கு நேரமே கிடைக்க மாட்டேங்குது என்பார்கள். இன்றைய வேகமான சூழ்நிலையில் நாம் அத்தகைய பதில்களி ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இயேசுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்தாஅல் அவர் சம்யம் கிடைக்கும் போதெல்லம் ஜெபித்தார். அவரைச் சுற்றிலும் எப்போது ஜனங்கள் இருந்தனர். ஊழியம் இருந்தது. அவருக்கு போஜன்ம் அருந்தக் கூட நேரமில்லாதிருந்தது என்று நாம் வாசிக்கிறோம். அதேவேளையில் அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் என்று மத்தேயு14:23, மற்கு6:46 ஆகிய இடங்களில் வாசிக்கிறோம். இன்னும் பல இடங்களில் இயேசு ஜெபம் செய்ய சென்றதை நாம் காண்கிறோம். தேவனும் தேவ குமாரனுமாகிய இயேசுவுக்கே ஜெபம் தேவையானதாக இருந்தது, மற்றும் அவ்ருக்கு நேரமும் கிடைத்தது. நமக்கூ ஏன் நேரம் கிடைப்பதில்லை? ஏன் காலங்கள் பல ஆன பின்பும் நாம் சுருக்கமான் ஜெபம் பெருக்கமான் ஆசீர்வாதம் என்ற கொள்கையுடன் அவ்சரம் அவ்சரமக ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும்? சற்று சிந்தித்துப் பார்ப்போமாக.

என்ன ஜெபிக்க வேண்டும்?
நம் எல்லாருக்குமே அதிக நேரம் ஜெபிக்க ஆசைதான். ஆனால் அது நடப்பதுதன் இல்லை. நம்மில் பலர் அதிக நேரம் ஜெபிக்க வேண்டுமெனில் ஏராளமான ஜெப விண்ணப்பங்களோடு ஆயத்தத்துடன் சென்றால் போது. மணிக்கணக்கில் ஜெபிக்கலாம் என்று நினைக்கிறோம். உண்மை என்ன? நம்மிடம் ஒரே ஒரு ஜெபக் குறிப்பு இருந்து நாம் உண்மையான பாரத்தோடு ஜெபித்தால் அதற்கே பல மணி நேரங்கள் ஆகலாம். அதிக வசனிப்பு ஜெபத்திற்கு அலங்காரமாக இருந்தாலும் தேவன் அப்படிப்பட்ட ஜெபங்களை விட ஆயக்காரன் அன்று செய்தது போல சிறிய எளிஅ ஜெபங்களை மிகவும் விரும்புகிறார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் என்று மத்தேயு6:7,8 ஆகிய வசனங்களில் இயேசு சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் நாம் எதற்காகத்தன் ஜெபிப்பது?
நம்முடைய கரியங்களுக்காக ஜெபிக்க தேவையில்லைதன். ஆனல் ஜெபிப்பது தவறில்லை.
1.தேசத்திற்காக
தேசத்தின் எதிர்காலம் ஜெபிக்கிற தேவனுடைய பிள்ளைகளின் கயிலேதான்.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன் என்று தேவன் 2 நாளாகமம்7:14ல் சொல்லியிருக்கிறார்.
மேலும் அப்போஸ்தலனகிய பவுல் நமக்கு ஒரு பிரதனமான ஆலோசனையை தருகிறார்.
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது (1தீமோ.2:1- 3).

2.பின்மாரிக்காக
நாமெல்லாரும் முன்மாரியைக் குறித்து அறிந்திருக்கிறொம். அன்று பரிசுத்த ஆவியின் வல்லமையல் சபை உண்டானது, 3000பேர் ஒரே பிரசங்கத்தினாஅல் இரட்சிக்கப்பட்டனர். சபை வேகமாக வளர்ந்து பரவியது. முன்மாரியை கண்டு ஆச்சரியப்பட்ட நாம் பின்மாரிக்கக்வும் ஆவ்லுடன் காத்திருந்து அதற்கக் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பல தேவ ஊழியர்கள் மூலமக அதை அடிக்கடி நினைவு படுத்தவும் செய்கிறார். நாம் பின் மாரிகாலத்து மழைக்கக பரிசுத்த ஆவியன்வ்ரின் அருள் மாரிக்கக் ஜெபிக்கிறோமா? இன்றே ஜெபிப்போம்.
பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். ( சகரிய.10:1)


3. ஊழியர்கள் எழும்ப
அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வேண்டிக் கொள்கிறதை நம் மத்தேயு9:37,38 மற்றும் லூக்கா10:2 ஆகிய வசங்களில் நாம் வாசிக்கிறோம். பாருங்கள். நாம் மேற்சொன்னது போல தேசத்திற்ககவும் பின்மாரிக்காகவும் ஜெபிக்கும் போது நிச்சயமாக தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு ஒரு பெரிய அறுவடையை அனுப்புவார். அறுவடைக்கு ஆட்கள் இல்லையேல் என்னவாகும் அறுவடை அனைத்தும் வீணாகிவிடும். அனைவரின் உழைப்பும் வீண். எஜமானுக்கும் வேலையாட்களுக்கும் எல்லாம் நஷ்டமே?
இன்றூம் நாம் இந்தியாவில் காண்கிற உபத்திரவ்ங்கள் எல்லாம் காட்சிகள் எல்லாம் பயிர் முற்றி அறுவடைக்கு ஆயத்தம் என்பதை நம்க்கு மறைமுகமக் சொல்கிறது., சீக்கிரத்தில் இந்திய தேசத்தில் ஒரு பெரிய அறுவடை உள்ளது. எல்லாரும் எதிர்பார்க்கிறோம். அறுவடைக்கு ஆட்கள் உள்ளனரா என்று பார்க்கிறோமா. ஆகவே நமெல்லோரும் வேலையாட்களை தேவன் அனுப்பும் படி ஜெபிப்போம்.

தேவன் என்ன செய்வார்?
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்? என்று கேட்பார். நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்று சொல்வோமாகில் இந்திய தேசம் இரட்சகரைக் கணும் நாள் தூரத்திலில்லை. ஆகவே ஆண்டவ்ரின் மன்வேதனையை அறிந்து அதைப் புரிந்தவர்களாக நாம் ஜெபிப்போம். ஜெபிப்ப்பதற்கு நமக்கு பல காரியங்கள் இருந்தாலும் இந்து மூன்றும் முக்கியமந்து. ஆகவே ஜெபம் செய்வோமாக.............ஆமென்.

ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்.(ஏசாயா 59:16)

கள்ளப் போதகமும் வஞ்சிக்கப்பட்டவர்களும்

கள்ள உபதேசங்கள் குறித்து கால தாமதமாக பதிவதற்காக் பொறுத்துக் கொள்ளுங்கள். செய்வதை திருந்தச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் இந்த கால தாமதம். சரி தலைப்புக்கு வருவோம். என்ற ஒரு விவாத தொடுப்பு ஆரம்பிக்கப்பட்டது நினைவிலிருக்கலாம். அது எங்கே போய் ஒளிந்து கிடக்கிறது என்பது தெரியவில்லை. எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்ற அப்பியாசத்தில் இங்கே கொடுத்துள்ளேன். இக்கட்டுரைக்கு வலு சேர்க்கும் வண்ணம் சகோ.ஸ்டான்லி அவர்களின் துண்டுப் பிரதி ஒன்றையும் இணைத்துள்ளேன்.

கடைசிக் காலத்தின் அறிகுறிகளில் பெருகிவரும் கள்ளப் போதகமும் ஒன்றாகும்.


கள்ளப் போதகர்கள் யார்?
வேதத்தை வேத வெளிச்சத்தில் காணாதவர்கள். தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அல்லது தங்கள் இஷ்டக் கருத்துக்களை ஊர்ஜிதம் செய்ய மட்டுமே வேதத்தை பொய்யாய் யாதொரு நெறிமுறையின்றி மேற்கோளாக பயன்படுத்துவார்கள்.
வினோதமாக வேதசத்தியத்திற்கு இவர்கள் விளக்கம் அளிப்பது போதாதென்று தாங்கள் புதுமை படைப்பாளிகள் என்றும் சில வேளைகளில் மார்தட்டிக் கொள்வார்கள்.
தங்கள் போதகத்தின் பயனாக கிறிஸ்து மகிமைப்படுத்தப்பட்டாரா? ஜனங்கள் எச்சரிக்கப்பட்டு பயன்பெற்றார்களா? என்றெல்லாம் அவர்கள் கிஞ்சித்தும் நோக்குவதில்லை.
ஜனங்களை தங்கள் பக்கம் வசப்படுத்தி அடிமைகளாக்கி தங்களுக்கு ஆதாயம் அல்லது பிழைப்பை தேடிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
இந்திய திருச்சபையில் கொசுக்களைப் போல பெருகியிருக்கும் இவர்களைக் குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
தப்பான போதனைகள் இன்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வேகத்தைப் பார்த்தால் இந்த வெள்ளத்தில் எவருமே மீந்திருக்க முடியாது என்ற அளவுக்கு சிந்தைக்கு தொட்டில் கட்டி அப்பாவி விசுவாசிகளுக்கு மகுடி வாசித்து மயங்கவைக்கும் போதை உபதேசங்கள் விஷம் போல பெருகியிருக்கின்றன.

சர்ப்பமானது தனது தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல உங்கள் மனதையும் (மயக்கி) கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தினின்று விலக்கும்படி (தந்திரமாய்) கெடுத்துப் போடுமோ என்று பயந்திருக்கிறேன் என்று பவுல் சொன்னதில் இப்படிப் பட்ட கள்ளப் போதகர்களும் அடங்குவரோ?


கள்ள உபதேசங்கள் கள்ளப் போதகர்கள் இவற்றைப் பற்றி பேசும் போது முதலாவது நாம் ஒரு காரியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் பிசாசினால் சத்தியத்தினின்று விலகும் படி வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆவர். நாம் அவர்கள் எந்தப் பகுதியில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சரியாய் விளங்கிக்கொண்டால்தான் அவர்களிடம் நாம் தப்பவோ அல்லது சரியாய் பதில் கூறவோ முடியும். இந்தக் காரியத்தில் நமக்கு உதவியாய் இருக்கும் படிக்கு நான் சமீபத்தில் வாசித்த சகோ.ஸ்டான்லி அவர்கள் எழுதிய வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கள் என்ற துண்டுப் பிரதியை இங்கே தர விரும்புகிறேண். நிச்சயம் அது மிகவும் பிரயோஜனமாக் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கள்
"உமது வருகைக்கும் உலகின் முடிவுக்கும் அடையாளம் என்ன?" என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு இயேசு கொடுத்த 93 வசனப் பதிலின் முதல் வாக்கியம் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்பதே. அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார். பகுத்தறிவதில் விசுவாசிகள் வளரவேண்டுமென்று பவுல் ஜெபித்தார் (பிலி.1:9). வஞ்சிக்கப்படுதலை அடையாளங்காண இதோ சில பரிசோதனைகள். வஞ்சிக்கப்பட்ட ஊழியர் அல்லது மக்களில் கீழ்கண்ட ஒன்று அல்லது கூடுதல் அடையாளங்களைக் காணலாம்.

1. நான் மிகவும் வித்தியாச்மானவர் என்று வஞ்சிக்கப்பட்டவன் நினைக்கத் துவங்குகிறான். மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென அவன் எண்ணுகிறான்.

2.எழுதப்பட்ட வசனத்தை விட சொல்லப்படும் வார்த்தைகளில் அவன் அதிகம் ஆர்வம் காட்டுகிறான். திருமறைக்கும் மிஞ்சிய வெளிப்பாடுகளை தேவனிடமிருந்து வரும் புதிய காரியம் என்று அணைத்துக் கொள்ளுகிறான்.

3. சொப்பனங்கள் தரிசனங்கள் சத்தங்கள் மற்றும் கவர்ச்சியானதும் உடலுக்கடுத்ததுமான உணர்ச்சிவசக்காரியங்களில் அவன் அலாதிப் பிரியங்கொள்ளுகிறான். நூதனக்காரியங்களிலே அவனுக்கு நாட்டம் அதிகம்.

4.அவன் ஒரு புறம் சாய்ந்துவிடுகிறான். மற்றவை மறக்கப்படுமளவிற்கு ஏதோ ஒரு உபதேசம் அல்லது அனுபவத்தையே திரும்ப திரும்ப வலியுறுத்துகிறான். இது வேதத்தை திருக்குவது என்று அவன் அறியான்.

5. பக்குவப்பட்ட வேத போதகர்கள் முதிர்ச்சியடைந்த தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனையை அவன் நாடுவதில்லை. அவர்களது கண்காணிப்புக்குள் அடங்குவதுமில்லை. எல்லாமே நேரே பரலோகத்தில் இருந்து தனக்கு கிடைத்துவிடுகிறது என அவன் எண்ணுகிறான். முடிவை வைத்து முறை சரியென்று சாதித்துவிடுகிறான்.

6. ஏதோ விளக்கம் கூறி தன் வாழ்விலுள்ள சில பாவங்களுக்கு அவன் சாக்குப் போக்கு சொல்லிவொடுகிறான். அவன் பொதுவாக பிறர்மீது கடினமாகவும் தன்மீதோ சலுகையுடனும் இருப்பான்.

7.வேதத்தை ஆழமாய் ஆராய்கிறேன் என்ற போர்வையில் அவன் மறைவான இரகசியமான காரியங்களில் அசாதாரண பிரியம் காட்டுகிறான்.

8.மிஷனெறிப்பணியிலும் நற்செய்தி அறிவிப்பிலும் அவனது நடைமுறை ஈடுபாடும் விருப்பமும் தணிகிறது.

9. யாராவது அவனது தவறுகளை சுட்டிக் காட்டினால் அதை நல்மனதுடன் அவன் ஏற்பதில்லை. நான் சத்தியத்திற்காக பாடனுபவிக்கிறேண் என்று பிசாசு அவனை எண்ணச் செய்கிறான்.

10. தான் வஞ்சிக்கப்பட்டுள்ளது அவனுக்குத் தெரியாது; அதை ஒத்துக் கொள்ளவும் மாட்டான். வெற்றிகள் அவன் கண்களை குருடாக்கிவிட்டன. நான் தவறென்றால் தேVஅன் எனது ஊழியத்தை இவ்வித மாசீற்வதிப்பது எப்படி? என்பதே அவனது விவாதம்.

துர் உபதேசங்கள் உருவாவது எப்படி?

சபையின் ஆரம்ப கால முதலே தவ்றான உபதேசங்கள் சபைக்குள் நுழைந்துவிட்டன. இன்னும் சொல்லப் போனால் அப்போஸ்தலர்கள் காலம் முடிவதற்கு முன்பே கள்ள உபதேசங்கள் முளைத்துவிட்டன. வெளிப்படுத்தல் புத்தகத்திலும் கூட் பல துர் உபதேசங்கள் சபையில் இருப்பதை ஆண்டவர் சுட்டிக் காட்டுவதை நாம் காணலாம். விதை விதைக்கும் எல்லா இடங்களிலும் களையும் முளைக்கும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்த்வனும் வேத வசனத்தில் தெளிவுள்ளவர்களாய் இருக்கவேண்டும். போதகர்களும் வேத வசனத்தின்படி சரியாய் பகுத்து போதிக்கவேண்டும். இஷ்டப்படி உளறிக் கொட்டி உபதேசமாக்கிவிடக் கூடாது. இக்கட்டுரை கண்களை தெளிவிக்கும் கலிக்கமாக இருக்கும்.

துர் உபதேசங்களின் பிறப்பிடம்
1. வேத வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

2.தங்கள் சுய கருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்

3.வேத வசனங்களின் அடிப்படை போதனையையே நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக்குதல்

4.சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்.

5.தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்

தவறான போதனை யாரிடம் இருந்து வரும்?

தவறான போதனை எவரிடமிருந்தும் வரலாம் என்பது சற்று அதிர்ச்சியளிக்கக் கூடிய கசப்பான உண்மைதான். ஆனபடியால் எல்லாருமே தவறான போதனையைத்தான் செய்கிறார்கள் என்ற கள்ள உபதேசக்காரர்களின் கூற்றை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எவரும் தவறு செய்யும் ஆபத்து உள்ளது என்பதையே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் ஊழியர்களும் தவறாய் போதிக்கும் ஆபத்துக்கள் உண்டு. வல்லமையான ஒரு ஊழியர் மூலம் பலத்த செய்கைகள் திரளாய் நடக்கும்போது அவருடைய போதனைகள் யாவும் சரியே என்று கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டுவிடக் கூடாது. ஆனால் வழக்கமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக அற்புதங்கள் ஆவிக்குரியவர்களின் கண்களை மங்கச் செய்து நிதானிப்பை மழுங்கச் செய்கின்றன. ஒருவர் தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கும்போது தேவன் அவரை கிருபையாய் பயன்படுத்த ஆரம்பிக்கிறார். அவ்ருக்கு இருக்கிற திறமைகளினிமித்தமாகவோ அல்லது அவர் அதிக வசனம் தெரிந்தவர் என்பதினால் அல்ல கிருபையினால் மாத்திரமே தேவன் பயன்படுத்துகிறார். இதற்கு சரியான உதாரணமாகக் கூற வேண்டுமானால் பாலாசீர் லாறி என்பவரைக் கூறலாம். என்னை கிறிஸ்துவுக்குள் நடத்திய மூத்த போதகர் பாஸ்டர் கே.ஜே ஆபிரகாம் என்பவர் அவரைக் குறித்து அடிக்கடி கூறுவதுண்டு. ஆரம்ப நாட்களில் பாலாசீர் லாறிக்கு பிரசங்கிக்க சரியாக வருவதில்லை. ஆனால் இரவு நேரத்தில் எல்லாரும் படுக்கச் சென்றால் இவர் மாத்திரம் முழஃங்கால் அடியிட்டு ஆண்டவரே கிருபை தாரும் என்று தேவனிடத்தில் மன்றாடுவார். காலையில் எல்லாரும் எழும்பும்போது பார்த்தாலும் அவர் இரவில் ஆரம்பித்த அதே ஜெப நிலையில்தான் இருப்பார். நான் கேள்விப்பட்டவரையில் இந்தியாவில் தேவன் பயன்படுத்திய மனிதர்களில் பாலாசீர்லாறி போன்று எவரையும் பயன்படுத்தவில்லை என்று உறுதியாகக் கூறுவேன். சாம்பிளுக்கு ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இவருடைய கூட்டங்களில் திரளாய் அற்புதம் நடைபெறுவதுண்டு. இவருடைய நிழல் படும் இடங்களில் எல்லாம் அற்புதம் நடந்தது. அதற்காக இவருடைய நிழல் அனேகம் பேர் மீது பட வேண்டும் என்பதற்காக பெரிய விளக்குகள் மூலம் ஏது செய்தனர். ஆனால் இவரின் முடிவு என்ன? திரித்துவத்திலிருந்து ஒருத்துவத்திற்கு மாறினார். பின்பு சிறிது காலத்தில் கிறிஸ்துவும் கிருஷ்ணரும் ஒன்றே என்றார். அதன்பின்பு நானே கலியுகக் கல்கிபகவான் என்று கூறினார். தனக்கு மரணம் கிடையாது என்று கூறினார். சொல்லி சில நாட்களிலேயே மரித்தும் போனார். இன்றும் இவருடைய ஆசிரமம் எங்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. வஞ்சிக்கப்பட்ட ஒரு கூட்டம் உலக மக்கள் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றனர் கூழையும் கஞ்சியையும் குடித்துக் கொண்டு.

சரி நாம் துர் உபதேசங்களின் பிறப்பிடத்தை சற்று ஆராயலாமா?
1. வேத வசனங்களை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உபதேசித்தல்

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று மொடவாதம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். வேத வசனத்தின் உண்மையான பொருளை விளங்கிக் கொள்ளாமல் இவர்களின் தலையில் உதிப்பது எதுவோ அதையே உபதேசமாக்குகின்றனர். இப்படிப்பட்ட தவறான புரிந்து கொள்ளுதல்களுக்கு பல உதாரணங்களை நாம் வேதாகமத்திலிருந்தும் சரித்திரத்திலிருந்தும் உதாரணமாகக் கூறலாம். உதாரணமாக அந்திக் கிறிஸ்து என்ற பதத்தை எடுத்துக் கொள்வார்கள். இதில் அந்தி என்பது மாலையைக் குறிக்கிறது. அப்படியானால் கடைசிக் காலத்தில் எழும்பும் கிறிஸ்துதான் அந்திக் கிறிஸ்து என்பர். ஆனால் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பதுதான் அந்திக் கிறிஸ்து என்ற பதத்தின் சரியான பொருள். இப்படிப்பட்ட குழப்பங்கள் துர் உபதேசங்கள் என்னும் அரசியலில் சர்வ சாதாரணம். நாம் கண்டு கொள்ளவேக் கூடாது.

2.தங்கள் சுய கருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக்குதல்

போதிப்பவர் எப்போதும் வேதாகமத்தின் கருத்தையே வலியுறுத்தி போதிக்க வேண்டும். தன் சொந்தக் கருத்தை நிலை நிறுத்துவதற்காக வேதத்தை பயன் படுத்தினால் அது துர் உபதேசத்தில் விட்டுவிடும். பொதுவாக அமெரிக்க அரோப்பிய நாடுகளில் பாவம் குறித்து உங்களிடம் ஏதேனும் புத் சரக்கு இருந்தால் உங்கள் காட்டிலே மழைதான். திரளான பேர் உங்கள் சபையில் சீக்கிரம் சேர்வர். நீங்கள் செய்ய வேண்டியது பாவத்தைக் குறித்து கடுமையாக பேசாமல் பாவம் செய்வது தவறல்ல என்று போதிக்க வேண்டும். அவ்வளவுதான். அமெரிக்காவில் ஒரு போதகர் இப்படியாகச் சொன்னார். ஆண்டவராகிய் இயேசு அனைத்துப் பாவங்களுக்காகவும் மரித்து விட்டார். அதாவது நாம் செய்த செய்து கொண்டிருக்கிற செய்யப் போகிற பாவங்கள் எல்லாவற்றிற்காகவும் சிலுவையில் கிரயம் செலுத்திவிட்டார். ஆகவே நாம் இஷ்டம் போல வாழலாம். உலக சிற்றின்பங்களில் திளைக்கலாம் என்பது இவரின் போதனை. நடந்தது என்ன தெரியுமா? அவரது சபையில் சீக்கிரமே ஏராளமானோர் இணைந்தனர். இதுபோல சபைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கை உள்ளவர்கள் ஒருவரும் உங்களுக்கு போதிக்க வேண்டுவதில்லை, அந்த அபிசேகமே உங்களுக்கு சகலத்தையும் குறித்து போதிக்கிறது என்ற வசனத்தை காட்டி திசை திருப்ப முயல்வர். ஆனால் சபை கூடி வருதல் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். இதன் சுவையை உணர்ந்த அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த கிறிஸ்தவன் ஒழுங்காய் தவறாது சபைக்கு செல்வான். உண்மைக் கிறிஸ்தவனால் கூடி ஆராதிக்காமல் இருக்க முடியாது.

3.வேத வசனங்களின் அடிப்படை போதனையையே நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக்குதல்

இதற்கு பல உதாரணங்களை வேதத்திலிருந்தே கூறலாம். ஸ்திரீயை தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது ( 1கொரி.7:1) - அப்படியனால் ஒருவரும் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாதா? 2.அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அனேகர் போதகராகாதிருப்பீர்களாக (யாக்.3.1) - அப்படியானர் ஒருவரும் போதகராகக் கூடாது! இப்படிப்பட்ட ஒருவசன உடும்புகள் துர் உபதேசங்களில் ஏராளம் உண்டு. ஏழாம் நாள்
ஓய்வுனாள் சபையாரும் கூட இப்படிப்பட்ட உபதேசக் குழப்பத்தில் ஊறினவர்கள்தான்.

. 4.சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்கள், வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளமாக்குதல்

வேதாகமே எந்த கிறிஸ்தவ உபதேசத்திற்கும் அடிப்படியாக இருக்கவேண்டும். மாறாக தாங்கள் கண்ட சொப்பனங்கள், தரிசனங்கள், வெளிப்பாடுகளின் அடிப்படையில் வேதாகமத்திற்கு புதிய விளக்கம் கொடுக்க முயல்வது என்றுமே ஆபத்தானது ஆகும். தேவன் மனிதனுக்கு சொல்ல வேண்டிய நற்செய்தியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சொல்லிவிட்டார். பரிசுத்த ஆவியானவர் பல ஆவிக்குரிய இரகசியங்களை நிருபங்களில் எழுதியுள்ளார். இதற்Kஉ மாறாக கர்த்தர் எனக்கு புதிதாக வெளிப்படுத்தினார் என்று யாராவது கூறினால் அது வேதத்திற்கு ஒத்திருக்கிறதா என்பதுதான் நாம் செய்ய வேண்டிய முதலாவது வேலை. தேவன் ஒருபோதும் மாறாதவர். அவர் தம் வேதாகமத்தில் இருப்பதற்கு மாறாக எதையும் கூறுவதில்லை. பிரெந்காம் என்கிற அடிக்கடி தரிசனம் கண்ட ஊழியரை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இவரும் ஒரு காலத்தில் பிரபலமான அறொஉதங்களைச் செய்யும் பிரசங்கியார். பிரச்சனை என்ன வெனில் இவர் கண்ட தரிசனங்களை உபதேசமாக்கியதுதான். இன்று பல பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடக்கும் இவரைப் பின்பற்றுபவர்கள் ஏராளம் ஏராளம். தரிசனங்கள் சொப்பனங்கள் வெளிப்பாடுகள் என்று வரும்போது நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நாம் நம்ப வேண்டியது வேதாகமத்தை மாத்திரமே. அதுவே நம் அஸ்திபாரம். நாம் காண்கிற கேட்கிற கேள்விப்படுகிற சொப்பனங்கள் தரிசனங்கள் வெளிப்பாடுகள் அல்ல.

5.தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்

தேவன் ஒரு சிலரை சில குறிப்பிட்ட அனுபவங்கள் மூலமாக நடத்துகிறார். அதற்காக அவர் அதையே உபதேசமாக்கிவிடக் கூடாது. ஒரு தேவ ஊழியர் தன் தலைமுடியை பராமரிப்பதில் அதிக நேரம் பணம் செலவழித்தாராம். ஒரு நாள் தேவன் அவரை மொட்டை அடிக்கும் படிக் கூறினாராம். மொட்டையடித்த அந்த ஊழியர் எல்லாரும் என்னைப் போல மொட்டையடிங்கள் என்று சபையில் போதித்தால் எப்படியிருக்கும். ஆனால் இன்று பல ஆவிக்குரிய சபைகளிலும் கூட இந்த போக்கை நாம் காணலாம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் விழிப்பாய் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இல்லையேல் வஞ்சிக்கப்பட்டு ஏமாந்துவிடவ் ஏண்டியதுதான். எனக்கு மேற்சொன்ன சம்பவத்தை வாசிக்கும் போது சிறுவயதில் படித்த மொட்டை வால் நரி என்ற பஞ்ச தந்திர கதைதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையில் விபத்து ஒன்றில் தனது வாலை இழந்த ஒரு நரி அந்தக் காட்டிலிருந்த அனைத்து நரிகளும் வாலை வெட்டிக் கொண்டு மொட்டையாக இருக்க தந்திரம் செய்ததாம். அது போல வஞ்சிக்கப் பட்ட பலர் தங்களோடு கூட்டு சேர ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றனர். மேலே நாம் கண்டவை எல்லாம் ஒரு சாம்பிள்தான். நாம் விழிப்பாயிருந்தால் எவரும் நம்மை விழத்தள்ள முடியாது. நாம் எளிதாய் தவறான உபதேசங்களை அடையாளங் கண்டு கொள்ளலாம். என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று துணிகரங் கொண்டு எவரும் கள்ள உபதேசங்களில் மாட்டிவிடாதீர். பிறகு ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகிவிடும். தேவனைப் பற்றீய சரியான அறிவும் வேதாகம அடிப்படை அறிவும் இருந்தால் நாம் எத்தகைய உபதேசங்களையும் இனம் கண்டு கொள்ளலாம். நாம் நம்மை சுத்திகரிக்கும் உபதேசத்தில் இருக்கிறோமா?

தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம்

எஜமான் பயன்படுத்தும்படியாகப் பாத்திரத்தை தேடினார்
அவருக்கு முன்பாக் அனேக பாத்திரங்கள் இருந்தன
அவர் எதைத் தெரிந்து கொள்ளப்போகிறார்?


"என்னை பயன்படுத்தும்" என்றது பொற்பாத்திரம் "
நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது
நான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன்
என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது
உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது

பதில் ஏதும் சொல்லாமல் எஜமான் கடந்து சென்றார்.

ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார்
என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,
உமக்கு திராட்ச ரசம் ஊற்றித்தருவேன்
நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன்
என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு!
நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும்.

எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார்
தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு
கடக்க முற்பட்டவ்ரை, எஜமனே நான் இங்கே இருக்கிறேன்"
எல்லா மனிதர்களும் பர்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும்
நான் அலங்கரமாயிருப்பேன் என்றது "

எஜமனே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம்.
எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும்
பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது

எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார்
சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "
என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "
பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது

எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார்
கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவரற்ற நிலையில் கிடந்தது
எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த
எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம்

இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்
இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன்
பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை
அலமாரியில் அலங்காரமய் இருப்பதும் எனக்கு தேவையில்லை
பெரிய வாயோடு பெருமை பராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை
தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை

களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார்.
தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார்.
" நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு
நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று"

Source: Pilgrims Journal

பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். (1Corinthian1:27-29)

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்,நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. (ஏசாயா 64:8)

தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம்

எஜமான் பயன்படுத்தும்படியாகப் பாத்திரத்தை தேடினார்
அவருக்கு முன்பாக் அனேக பாத்திரங்கள் இருந்தன
அவர் எதைத் தெரிந்து கொள்ளப்போகிறார்?


"என்னை பயன்படுத்தும்" என்றது பொற்பாத்திரம் "
நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது
நான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன்
என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது
உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது

பதில் ஏதும் சொல்லாமல் எஜமன் கடந்து சென்றார்.

ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார்
என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,
உமக்கு திராட்ச ரசம் ஊற்றித்தருவேன்
நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன்
என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு!
நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும்.

எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார்
தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு
கடக்க முற்பட்டவ்ரை, எஜமனே நான் இங்கே இருக்கிறேன்"
எல்லா மனிதர்களும் பர்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும்
நான் அலங்கரமாயிருப்பேன் என்றது "

எஜமனே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம்.
எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும்
பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது

எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார்
சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "
என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "
பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது

எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார்
கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவரற்ற நிலையில் கிடந்தது
எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த
எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம்

இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்
இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன்
பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை
அலமாரியில் அலங்காரமய் இருப்பதும் எனக்கு தேவையில்லை
பெரிய வாயோடு பெருமை பராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை
தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை

களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார்.
தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார்.
" நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு
நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று"

Source: Pilgrims Journal

பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். (1Corinthian1:27-29)

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்,நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. (ஏசாயா 64:8)

கிறிஸ்து வராதிருந்தால் .........?

கிறிஸ்து வராதிருந்தால் என்ற தலைப்பிட்ட ஒரு கிறிஸ்மஸ் கார்டை கண்ட போதகர் சிந்தனையில் மூழ்கினார். அப்படியே தூங்கியும் விட்டார் (ரொம்ப சிந்தித்தால் இது நடப்பது வாடிக்கைதானே!) அப்போது.............

ஆலயத்திற்கு செல்ல புறப்பட்டார். தெருக்களைக் கடந்து சென்றார். ஆலயத்தைக் காணமுடியவில்லை. வழி தவறிவிட்டோமோ என்று பதறிப் போய் அங்குமிங்கும் அலைந்தார். ஆலயமில்லை. ஆலயமில்லையே என்று எண்ணினார். துக்கம் தொண்டையை அடைத்தது.

வீட்டிற்கு திரும்பினார். நூலகத்திற்குள் நுழைந்தார். இரடசகராகிய இயேசுவைக் குறித்த
புத்தகங்களைத்தேடினார். ஒரு புத்தகத்தையும் காணோம். மற்ற ஏதேதோ புத்தகங்கள் நிறைந்திருந்தது. ஏமாற்றமடைந்தார். ஒன்றுமே புரியாமல் திகைத்து நின்றார்.

வாசல்கதவு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தார். ஐயா எங்க அம்மா சாகும் தருவாயில் இருக்காங்க, சீக்கிரம் வந்து பாருங்க என்று ஒரு சிறுமி அழுதுகொண்டே சொன்னாள். துரிதமாக சிறுமியின் கையை பிடித்துக் கொண்டு அவளுடன் புறப்பட்டு சென்றார். அந்தத்தாயைப் பார்த்தார். அம்மா உங்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியை ஆண்டவர் தருவார் என்று சொல்லி வேதாகனத்தைப் புரட்டினார். மல்கியா கடைசிப் புத்தகமாயிருந்தது. அதற்குப் பின் வேதப்புத்தகத்தில் ஒன்றுமில்லை. சுவிசேஷத்தைக் காணோம். நிருபங்களைக் காணோம். ஜீவனைக் கொடுத்து இரட்சிப்பை அருளிய அவருடைய சுவிசேஷங்களைக் காணோமே! வாயில் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. பதறினார்.
மறு நாள் அந்த தாயார் மரித்துவிட்ட செய்தியறிந்து அடக்க ஆராதனை நடத்திவைக்க சென்றார். சவப்பெட்டியின் அருகில் நின்று அவர் செய்தி கொடுக்கும் வேளை வந்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கிறிஸ்து இல்லாததால் மகிமையான உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கை வரவில்லை. ஆகவே பரலோகத்தின் நித்திய வாழ்வைக் குறித்து பேச முடிய வில்லை. மண்ணுக்கு மண்ணாக ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆண்டவரே நீர் பிறக்கவில்லையோ என்று தன்னையும் அறியாமல் கதறி அழுதார். கட்டுப் படுத்த முடியாமல் கலறையில் சாய்ந்து அழுதார். திடீரென விழித்து எழுந்தார். கண்டது கனவுதான் என்று உணர்ந்தார். ஆண்டவரே நீர் வராதிருந்தால் எனக்கு இரட்சிப்பு ஏது? உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஏது? நித்தியத்தில் உம்மோடிருப்போம் என்ற நம்பிக்கை ஏது? என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். O come let us adore Him....O come let us adore Him Christ the Lord. என்ற இனிமையான பாடலின் ஒலி ஆலயத்திலிருந்து இனிமையாக ஒலிக்க ஆரம்பித்து செவிக்கின்பமாக தொனிக்க ஆரம்பித்தது.

நன்றி: பாலைவன நீரோடைகள்

Thursday, April 16, 2009

கரை சேர்வோம் கரை சேர்ப்போம்ஆதியில் ஏதேனில் ஒருவர்
ஆனார் இருவர் ஆண்டவர் செய்தது ஆபரேஷன்
ஆதாமிலிருந்து ஏவாள்
ஆதிக் குடும்பம் ஆரம்பம்

அனுதினமும் ஆண்டவர்
இறங்கிவந்தார் ஈந்தாரின்பமதை
உணவு ஊண் உறைவிடம்
எல்லாம் ஏதேனிலுண்டு
ஐம்பொறிகளையும் ஒடுக்காததால்
ஓங்கிற்று பாவம்
அதனால் மனுக்குலம் ஐயோ பாவம்

சாபமதை நீக்க வந்த எம்பெருமான்
பாவமற வாழ்ந்து மாண்டுயிர்த்தார்
பாவிகளை இரட்சிக்கும் வழிதிறந்தார்
ஆதிக் குடும்பம் பெற்ற பேரின்பம்
இன்றும் நாம் பெற்றிடவே
இன்ன்னலற வாழ்ந்திடவே

வாழ்க்கையெலாம் வளமாகி
அவர் வார்த்தை நம் பலமாகி
அனுதினமும் ஜெயம் சூடி
அவரன்பில் நாம் மூழ்கி
கரை சேர்வோம் கரை சேர்ப்போம்

Wednesday, April 15, 2009

அவரை எங்கே தேடுகிறீர்கள்?மனிதன் தன் வாழ்வில் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டிருக்கிறான், திருப்தியடைவதில்லை என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. ஏனெனில் ஒரு மனிதன் மரணமடையும்போதுதான் அவனுடைய தேடல் முற்றுப் பெறுகிறது என்கிற தத்துவமும் உண்டு. ஆன்மீக விசயங்களிலும் இக்கூற்று பொருந்தும். ஆன்மீக தேடல் எங்கே முற்றுப் பெறும்?

ஆன்மீக ரீதியான தேடல்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று கடவுளை மறுப்பதற்காக தேடுதல்
மற்றொன்று கடவுளை தேடுதல்
ஆக மொத்தத்தில் எல்லாரிடமும் தேடல் என்பது குடிகொண்டிருக்கிறது. ஒன்றைக் குறித்த தேடலில் நாம் திறந்த மனதுடன் இருந்தால்தான் உண்மையை கண்டுகொள்ள முடியும். முன்னமே முடிவுசெய்யப்பட்ட முடிவுகளுடன் நாம் தேடினால் உண்மை என்பது எட்டாக்கனியாகவும் கானல் நீராகவும் ஆகிவிடும் அபாயம் உள்ளது. ஆனால் தேடுகிற எல்லாருமே தங்களுடைய முடிவு சரி தான் என்கிற முடிவுடன் தான் தேடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே தேடலில் தாங்கள் எதிர்பார்த்த முடிவுதான் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி வரவில்லையெனில் அவற்றை நிராகரித்துவிடுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து ஒரு மனிதனா அல்லது கடவுளா என்பதையும் மேற்கண்ட இருசாராரும் தேடிக்கொண்டிருக்கீறார்கள் அல்லது அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவரல்லாத ஆன்மீகவாதிகள் அவரும் ஒரு கடவுளாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

இயேசு கடவுள் என்பதை நிரூபிக்க ஆதிகிறிஸ்தவர்கள் அவரின் உயிர்த்தெழுதலைக் குறித்தே பிரசங்கித்தனர். நீங்கள் அவரைக் கொலைசெய்தீர்கள். தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்பதே சீடர்களின் முழக்கமாக இருந்தது. இயேசுவின் உயிர்த்தெழுதல் உண்டுபண்ணின மாற்றம் அக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் விளைவிக்கும் மாற்றங்கள் மகத்தானவைகளாக இருக்கீறது.


இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அறியாத சிலர் கல்லறையில் அவரின் பிணத்தைக் காண சென்றார்கள். அங்கே அவரைக் காணாமல் திகைத்தபோது உயிர்த்தெழுதல் செய்தி கேட்டு பரவசத்துடன் திரும்பினர்.

ஒருவேளை கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால்................?

கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால்? கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். என்று பவுல் 1கொரிந்தியர்15:17ல் கூறுகிறார். ஆம் கிறிஸ்து உயிர்த்தெழாவிடில் கிறிஸ்தவ விசுவாசம் வீணானதாக இருக்கும். கிறிஸ்தவம் என்ற ஒன்றே இருந்திருக்காது. கிறிஸ்த்வர்கள் பொய்யான ஒன்றை நம்புகிறவர்களாக இருந்திருப்பார்கள்(1கொரிந்தியர்15:15). ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அக்காலத்தியவர்கள் எவரும் மறுக்கவியலவில்லை. இயேசுகிறிஸ்துவின் பாவமற்ற தன்மையையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் அக்காலத்திய யூதர்களால் மறுக்கமுடியவில்லை. சரி. 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒன்றை நாம் இப்போது எப்படி நம்புவது?

பழங்காலச் செய்திகளை நாம் நம்புவதற்கு நம்மிடை இருப்பது வரலாற்று ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளுமே. ஒரு பழங்கால செய்தி கட்டுக்கதையாக இல்லாதபட்சத்தில் அதற்கு சான்று பகரும் ஆவணங்கள் வரலாற்றில் நிச்சயம் இருக்கும். அவ்வாறு அவற்றிற்கு சான்று இல்லையேல் நாம் அதை நம்பத்தேவையில்லை. நம்ம நாட்டிலேதான் புராணக் கதைகளை கூட உண்மை என்று நம்புகிறவர்களாச்சுதே! ( ஓ அதனாலதான் உண்மையை நம்ப மாட்டேங்குறாங்களோ)


இயேசுகிறிஸ்துவின் கல்லறை அன்று எவ்வாறு சான்று பகர்ந்ததோ அதே போல இன்றளவும் அவரின் உயிர்த்தெழுதலை சான்று பகருகிறது. அவரின் கல்லறை கட்டுக்கதை என்று சொல்பவர்களால் கிடைக்கப்பெற்ற வரலாற்று ஆவணங்களை மறுக்கவியலாது. ஜோசிபஸ் என்ற அக்காலத்திய(கிறிஸ்தவரல்லாதவர்) வரலாற்றாசிரியரின் எழுத்துக்களும் இயேசுவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கின்றன. ஆதாரங்கள் தோண்டத்தோண்ட கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதை நாம் ஏன் நம்ப வேண்டியிருக்கிறது எனில் சிவப்புச் சிந்தனையுடன் வரலாற்று மண்ணை அகழ்வாராய்வு செய்தவர்கள் கிறிஸ்து மற்றும் கிறிஸ்தவத்தின் உண்மைகளைக் குறித்த கண்டுபிடிப்புகளினால் கிறிஸ்து அடியவர்களாக மாறியுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் தொல்பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் சர் வில்லியம் ராம்சே ஆவார். இவர் தனது ஆய்வு முடிமுடுவுகள் குறித்துக் கூறும்போது............

I began with a mind unfavorable to it...but more recently I found myself brought into contact with the Book of Acts as an authority for the topography, antiquities, and society of Asia Minor. It was gradually borne upon me that in various details the narrative showed marvelous truth. (William M. Ramsay - St. Paul the Traveler and the Roman Citizen, The Bearing of Recent Discovery on the Trustworthiness of the New Testament).கிறிஸ்து உயிர்த்தெழாவிடில் அவரின் மரணத்தினால் பயந்து மறுபடியும் மீன்ன் பிடிக்கச் என்ற அவருடைய சீடர்கள் உலகத்தைக் கலக்குபவர்கள் என்கிற அடைமொழியை பெற்றிருக்க மாட்டார்கள். உயிர்த்தெழுதல் பொய் எனில் , அந்தப் பொய்க்காக தங்கள் உயிரையும் கொடுக்க தயங்காது பிரசங்கித்திருக்க மாட்டார்கள். . உயிர்த்தெழுதலின் செய்தியைப் பிரசங்கித்ததற்Kகக அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்க மாட்டார்கள். கிறிஸ்தவம் கிறிஸ்துவுடன் புதைந்திருக்கும்.

இன்றைய அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களைத்தான் தெரிந்து கொள்வார்கள். மற்றவர்களை கடாசிவிடுவார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?

அன்றிலிருந்து இன்றளவும் வெறுமையாக காணப்படும் கல்லறை சொல்லும் செய்தியை நம்பி கிறிஸ்துவின் அடியவராகலாம். அல்லது வெறுமையுடன் திரும்பலாம். முடிவு நம் கையில்தான்.

கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் உயிர்த்தெழுதல் தரும் செய்தி என்ன?
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். (மத்தேயு.28:6,7)

பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.(மாற்கு16:6)

உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். (லூக்கா.24:5 - 9)

நாமும் நது எல்லா பயங்களும் நீங்கி, நம் தேடலில் நாம் கண்டு கொண்டதை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும். ஏனெனில் ..............

நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். (கொலோசேயர்.2:14:15)

மேலும் அவர் சீக்கிரம் வரப் போகிறார்.

இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார்.

ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

Saturday, April 11, 2009

தன் பிழைகளை உணருகிறவன் யார்?அவர் மிகவும் பெரிய ஓவியர் என்ற புகழைப் பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மிகவும் பிரமாண்டமான அழகான ஓவியம் ஒன்றை வரைந்து ஊரின் மையப்பகுதியில் வைத்து அந்த ஓவியத்துக்கருகில் இந்த ஓவியத்தில் பிழை ஏதும் இருந்தால் பார்வையாளர்கள் அந்த இடத்தை வட்டமிடுங்கள் என்ற ஒரு சிறிய குறிப்பையும் வைத்தார். பின்பு அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். அடுத்த நாள் யாராவது தனது ஓவியத்தை குறை கூறியிருக்கிறார்களா என்று பார்க்க ஆவலுடன் விரைந்தார். வந்து கண்டு மயங்காத குறையாய் அதிர்ந்து போனார். அப்படி நடந்தது என்ன?


வர் வந்து பார்த்த போது அந்த ஓவியத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் எல்லா இடத்திலும் வட்டமிடப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பிழைகளைச் வட்டமிட்டு வட்டமிட்டு மொத்தத்தில் அந்தப் படத்தின் அழகே காணாமல் போய் விட்டது. மொத்தத்தில் வட்ட வட்டக் குறிகள் தான் கண்ணுக்கு தெரிந்தது. என்னச் செய்யலாம் என்று யோசித்த அந்த ஓவியர் பொறுமையாக அந்த வட்டக் குறிகள் எல்லாவற்றையும் அழித்த பின் இந்த ஓவியத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை திருத்தவும் என்று எழுதிவைத்தார். பின்னர் வீடு திரும்பிய அவர் வழக்கம் போல அடுத்த நாள் வந்து பார்த்தபோது அவர் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் முந்தின நாள் பிழைகளைச் சுட்டிக் காட்டினவர்கள் எவரும் இன்று அந்த பிழைகளை திருத்த முன்வரவில்லை. இதுதான் பொதுவாக மனித குணாதிசயமாக இருக்கிறது.

ஒருவரின் குறையைக் கூற வேண்டுமாயின் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்பவர்கள் அதிகம். ஆனால் அதே குறையை திருத்த முயல்பவர் மிக மிக சொறபமே. இன்னும் சொல்லப் போனால் எவருமிலர். பொதுவாக மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய பொன்மொழி என்னவெனில்......

நீ ஒரு விரலால் மற்றவர்களைச் சுட்டிக் காட்டும் போது
உன் விரல்கள் மூன்று உன்னைச் சுட்டிக் காட்டுகிறது என்பதை மறந்துவிடாதே! (கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாருங்கோ)

இன்று பொதுவாக நண்பர்கள் அல்லது யாரையாவது சந்தித்து கொஞ்ச நேரம் பேச ஆரம்பித்தால் தானாகவே பேச்சு எவருடைய குறையையாவது மையப்படுத்தி தொடர ஆரம்பித்துவிடுவது வழக்கமாகிவிட்டது. கிறிஸ்தவர்கள் நடுவில் இது ரொம்ப ரொம்ப அதிகம். அந்த சபை இந்த சபை என்று டினாமினேஷன் குழப்பங்களும் ஊழியர்களை மட்டம் தட்டி அவர்களைப் பேசுவதும் அல்லது சபை பழக்க வழக்க மாறுபாடுகளை பேசுவதும் தவிர்க்கமுடியா டாபிக்குகளாக கிறிஸ்தவர்களிடம் உள்ளது. இதற்கு உதாரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். நானும் கூட நாம் மற்றவர்களின் தவறுகளைத்தானே சுட்டிக் காட்டுகிறோம் இதில் என்ன தவறு என்று நினைத்திருக்கிறேன். அப்படிப் பட்ட தருணங்களில் எல்லாம் எனது நினைவுக்கு வரும் திருவசனம் உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை( அதாவது உனது மலையளவு தவறை) உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன? (மத்தேயு.7:3-5).

அந்த ஊருக்கு ஒரு பெரிய மகான் ஒருவர் வந்திருந்தார். தனது சேட்டைக் கார மகனை அவரிடம் கூட்டிச் சென்று அறிவுரை கேட்க வைக்கலாம் என்று நினைத்த அந்த தாயார் தனது மகனை அவரிடம் கூட்டிச் சென்றார். அந்த மகான் முன்பாக பெரிய கூட்டம் நின்றது. தனது முறை வந்த போது அவள் அந்த மகானிடம்
"ஐயா எனது மகன் ரொம்ப சேட்டை பண்ணுகிறான். எப்போது பார்த்தாலும் இனிப்பு சாப்பிடுகிறான். நீங்கதான் பெரிய மனசு பண்ணி இவனுக்கு அறிவுறை கூறி திருந்தவும் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தவும் வழி சொல்லனும்" என்று கூறினாள்.

பொறுமையாக அதைக் கேட்ட அந்த மகான் கண்களை மூடி கொஞ்சம் யோசித்தார். பின்பு அந்த தாயாரிடம் " அம்மா நாளைக்கு உன் மகனை என்னிடம் கூட்டிக் கொண்டு வா. நான் அவனுக்கு அறிவுரை கூறுகிறேன், அவன் திருந்திவிடுவான் என்று கூறி அனுப்பினார். குழப்பத்துடன் வீடு திரும்பிய அந்த தாயார் வழி நெடுகிலும் ஏன் அந்த மகான் என்னை நாளை வரச் சொன்னார். நான் கேட்டது ரொம்ப எளிமையான காரியம் தானே என்ற அங்கலாய்ப்புடன் சென்றாள்.

அடுத்த நாள் அந்த மகான் முன்பு தனது மகனைக் கூட்டிக் கொண்டு நின்றாள். அப்போது அவளின் மனை அருகில் அழைத்த அம்மகான்

"தம்பி நீ ரொம்ப நல்லப் பையனாக இருக்கணும். இனிப்புகளை எல்லாம் அதிகம் சாப்பிடாதே! அது உடலுக்கு தீமையானது" என்று கூறி பலவாறு அறிவுரை கூறினார்.
இதைக் கேட்ட அந்த தாய் அடக்க முடியாமல்" ஐயா நீங்கள் இதை நேற்றே கூறியிருக்கலாமே! ஏன் இன்று என்னை வரச் சொன்னீர்கள்? என்று கேட்டாள். அப்போது அம்மகான் சிரித்துக் கொண்டே" அம்மா நானும் நேற்று வரை அதிகம் இனிப்பு சாப்பிடுகிறவனாய் இருந்தேன். அப்படிப் பட்ட நிலையில் நான் இவனுக்கு எப்படி நீ இனிப்பு சாப்பிடாதே என்று அறிவுரை கூற முடியும்? நான் முதலில் அதை நிறுத்த வேண்டுமே. ஆகையால் தான் நான் அப்பழக்கத்தை விட்ட பின் இன்று இவனுக்கு இனிப்பு சாப்பிடாதே என்று அறிவுரை கூற முடிந்தது என்று சொன்னார். இப்படிப்பட்டவர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நான் இப்போது சொல்லப் போகிற நபர் ஒரு பெரிய ஊழியர். அவருடைய பிரதான ஊழியம் கிறிஸ்தவ சபைகளில் காணப்படும் குறைகளை எழுதுவதுதான். அவருடைய எழுத்துக்கள் பலருக்கும் (எனக்கும்தான்) பிரயோஜனமாக இருந்திருக்கின்றன. ஆனால் அவருடைய வாழ்வில் அவர் அடிக்கடி சுட்டிக் காட்டும் ஒரு பிழை நடந்து விட்டது. உடனே மக்கள் சும்மா இருப்பார்களா? என்ன ஐயா இது! உங்க வீட்டுலயே இப்படி ஆயிடுச்சே? என்று கேள்விக் குறி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் நேர்மையானதாக இல்லை. மற்றவர்களால்தான் அவ்வாறு நேர்ந்துவிட்டது. எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சால்ஜாப்பு வாங்கினார். நான் அவரை குறை கூறி இதை எழுதவில்லை. தாவீதின் சங்கீத வரிகளையே நினைவு கூறுகிறேன்.

தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேன்பை விலக்கிக் காரும்.அவைகள் என்னை ஆண்டு கொள்ள ஒட்டாதிரும். அப்பொழுது நான் உத்தமனாகி பெஉம் பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே! என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங்கீதம்.19:12- 14)

ஆகவே தான் ஆண்டவர் இயேசு மற்றவர்களி குற்றவாளிகள் என்று தீர்க்காதிருங்கள் என்று கூறினார். ஏனெனில் நீங்கள் எந்த அளவினால் குற்றவாளிகள் என்று தீர்க்கிறீர்களோ அந்த அளவின்படியே இம்மையிலும் மறுமையிலும் நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் என்றார். நாம் இந்த தலைப்பில் பேச ஆரம்பித்தால் நிறைய பேசலாம். எனினும் சுருக்கம் கருதி ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

விபசாரத்தில் கையும் களவுமாக பிடிபட்ட ஒரு பெண்ணை நியாயந்தீர்க்கும் படி இயேசு முன்பதாக யூதர்கள் அவளைக் கொண்டு வந்து நிறுத்தினர். யூதர்களுன் நியாயம் என்னவெனில் அப்படிப்பட்ட பெண்ணை கல் எறிந்து கொல்வதுதான். மன்னிப்பே கிடையாது. எல்லாருடைய கண்களும் இயேசுவின் வாய்மொழிக்காக காத்திருந்தன. இயேசுவோ ஒரே ஒரு வார்த்தையை மட்டும் கூறி தனது தலியை குனிந்து தரையில் எழுதலானார். அவர் கூறியது, உங்களில் பாவமில்லாதவன் முதலாவது இவள் மேல் கல்லெறியட்டும். எல்லாரும் ஒருவர் முகத்தை பார்த்தனர். எல்லாருடைய இருதயங்களும் குத்தப்பட்டது. ஆகவே அவர்கள் தலைகளைக் குனிந்து கொண்டு முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு கற்களை கீழே எறிந்து விட்டு வந்த வழியே திரும்பினர். கொஞ்ச நேரம் கழித்து இயேசு தலைதை தூக்கிப் பார்த்த போது அங்கே அந்தப் பெண்ணைத்தவிர ஒருவரும் காணப்படவில்லை. ஒரு பாவமும் செய்யாத இயேசு (யோவான்.8:46) அவளைப் பார்த்து நானும் உன்னை குற்றவாளி என்று தீர்க்கிறதில்லை. இனிமேல் பாவம் செய்யாதே போ என்று கூறி அவளை அனுப்பினார். (யோவான்.8:2௧1)

மேலே சொல்லப்பட்ட சம்பவம் கட்டுக் கதையல்ல. நாம் கடைபிடிக்கவேண்டிய உண்மைச் சம்பவம். இயேசுதாமே மனிதர்களாகிய நமக்கு நல்முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். நாம் மற்றவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்ட அரசியல் பண்ணிக் கொண்டிருக்க வில்லை. நாம் நமது வாழ்க்கையிலுள்ள பிழைகளை உணர்ந்து அதை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு சீர் பொருந்துவோமாகில் நாம் பாக்கியசாலிகளாயிருப்போம். நமக்குதவ இயேசுண்டு. நாம் இப்படி ஜெபம் செய்யலாமா?

தேவனே என்ன்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே நடத்தும். ஆமென்.

கிறிஸ்து வராதிருந்தால்..........?


கிறிஸ்து வராதிருந்தால் என்ற தலைப்பிட்ட ஒரு கிறிஸ்மஸ் கார்டை கண்ட போதகர் சிந்தனையில் மூழ்கினார். அப்படியே தூங்கியும் விட்டார் (ரொம்ப சிந்தித்தால் இது நடப்பது வாடிக்கைதானே!) அப்போது.............

ஆலயத்திற்கு செல்ல புறப்பட்டார். தெருக்களைக் கடந்து சென்றார். ஆலயத்தைக் காணமுடியவில்லை. வழி தவறிவிட்டோமோ என்று பதறிப் போய் அங்குமிங்கும் அலைந்தார். ஆலயமில்லை. ஆலயமில்லையே என்று எண்ணினார். துக்கம் தொண்டையை அடைத்தது.

வீட்டிற்கு திரும்பினார். நூலகத்திற்குள் நுழைந்தார். இரடசகராகிய இயேசுவைக் குறித்த 
புத்தகங்களைத்தேடினார். ஒரு புத்தகத்தையும் காணோம். மற்ற ஏதேதோ புத்தகங்கள் நிறைந்திருந்தது. ஏமாற்றமடைந்தார். ஒன்றுமே புரியாமல் திகைத்து நின்றார்.

வாசல்கதவு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தார். ஐயா எங்க அம்மா சாகும் தருவாயில் இருக்காங்க, சீக்கிரம் வந்து பாருங்க என்று ஒரு சிறுமி அழுதுகொண்டே சொன்னாள். துரிதமாக சிறுமியின் கையை பிடித்துக் கொண்டு அவளுடன் புறப்பட்டு சென்றார். அந்தத்தாயைப் பார்த்தார். அம்மா உங்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியை ஆண்டவர் தருவார் என்று சொல்லி வேதாகனத்தைப் புரட்டினார். மல்கியா கடைசிப் புத்தகமாயிருந்தது. அதற்குப் பின் வேதப்புத்தகத்தில் ஒன்றுமில்லை. சுவிசேஷத்தைக் காணோம். நிருபங்களைக் காணோம். ஜீவனைக் கொடுத்து இரட்சிப்பை அருளிய அவருடைய சுவிசேஷங்களைக் காணோமே! வாயில் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. பதறினார்.
மறு நாள் அந்த தாயார் மரித்துவிட்ட செய்தியறிந்து அடக்க ஆராதனை நடத்திவைக்க சென்றார். சவப்பெட்டியின் அருகில் நின்று அவர் செய்தி கொடுக்கும் வேளை வந்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கிறிஸ்து இல்லாததால் மகிமையான உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கை வரவில்லை. ஆகவே பரலோகத்தின் நித்திய வாழ்வைக் குறித்து பேச முடிய வில்லை. மண்ணுக்கு மண்ணாக ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆண்டவரே நீர் பிறக்கவில்லையோ என்று தன்னையும் அறியாமல் கதறி அழுதார். கட்டுப் படுத்த முடியாமல் கலறையில் சாய்ந்து அழுதார். திடீரென விழித்து எழுந்தார். கண்டது கனவுதான் என்று உணர்ந்தார். ஆண்டவரே நீர் வராதிருந்தால் எனக்கு இரட்சிப்பு ஏது? உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஏது? நித்தியத்தில் உம்மோடிருப்போம் என்ற நம்பிக்கை ஏது? என்று எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். O come let us adore Him....O come let us adore Him Christ the Lord. என்ற இனிமையான பாடலின் ஒலி ஆலயத்திலிருந்து இனிமையாக ஒலிக்க ஆரம்பித்து செவிக்கின்பமாக தொனிக்க ஆரம்பித்தது.

 நன்றி: பாலைவன நீரோடைகள்

பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

இன்றியமையாத ஏழு கேள்விகள்


ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னைப் பார்த்து ஏழு கேள்விகளை வினவ வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவை உயிர்நாடி போன்றவை. அவற்றை அசட்டை செய்தால் ஆபத்து விளையும். அவற்றை ஒவ்வொன்றாக கவனிப்போம். உண்மையுடன் அவற்றிற்கு விடையளிக்க ஆண்டவர் அருள் புரிவாராக!


1.துணிகரமான பாவத்தை செய்து கொண்டிருக்கிறேனா?
"என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்கு செவி கொடார்" (சங்கீதம்.66:18) என் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்க்கவும் மாட்டார். அறிந்த பாவத்திற்கு இடங்கொடுக்கும் மட்டும் என் ஜெபத்திற்கு பதில் பெற்றுக் கொள்ள மாட்டேன்.


"அறிந்த பாவம்" என்று நான் கூறினதை கவனிக்கவும். ஏனென்றால் உன் வாழ்க்கையில் "நம்மை எளிதில் அகப்படுத்தும் பாவம்" என்று வேதம் விளம்புகிறதை முன்னிட்டு நீ முடிவு செய்ய நேரிடும். யாதாமொரு பாவத்திற்கு நீ அடிக்கடி இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறாய். அது ஒரு சுமை போலும் விக்கிரகம் போலுமிருக்கும். ஆயினும் அது பாவமே. அதை விட்டு நீ விலகவேண்டுமென்று கர்த்தர் உரைக்கிறார். 

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது" (ஏசாயா.59:2). 

பாவம் பிரிவினை உண்டாக்குகிறது. தேவனின் முகத்தை மறைக்கிறது. பாவமிருக்கும் இடத்தில் ஐக்கியமும் கூட்டுறவும் நிலவ முடியாது. " கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக் கடவன்" (2தீமோத்தேயு.2:19)அது தேவனின் கட்டளையாகும். அவருக்கு பிரியமானவர்களாயிருக்கும்படிக்கு நாம் அறிந்து செய்யும் பாவங்களனைத்தையும் விட்டு விலக வேண்டும். அப்படியானால் அன்பரே தீமையென்று தெரிந்த எவற்றையும் விட்டு விலகுவோமாக. 

ஆம். ஆவியானவரை துக்கப்படுத்தும் யாவற்றையும் அகற்றிப்போடுவோமாக. நமது வாழ்க்கையினின்று அவற்றை புறம்பே தள்ளுவோம். பாவத்தை விட்டு விலகும்வரை கிறீஸ்தவ வாழ்கையில் நாம் முன்னேற முடியாது. ஒரு ஏந்திரக் கல்லுக்கு ஒப்பானது பாவம். அது நம்மை தாழ இழுத்துக் கொண்டிருக்கும். அதற்கு இடங்கொடுத்தால் மேலும் அதிகமதிகமாக அதை விரும்புவோம். நமது ஆசையை நிறைவேற்றுவதால் என்றும் அணையாத ஒரு தீயை சுவாலித்தெரிய செய்கிறோம். இப்படியாக பாவத்திற்கு இடமளித்த இருதயத்தின் வேதனையையும் அங்கலாய்ப்புமே ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் தோன்றக்கூடிய ஆறாத்துயரமாயிருக்கும்.

எனவே அன்பரே பாவத்தை அறவே ஒழித்துவிடுவோமாக. அது வெகுக்கடினமாயினும் பரவாயில்லை. மற்றபடி "எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை" நாம் கண்டடைய முடியாது. பாவத்தை விட்டு விலகாவிட்டால் அது நம்மை நாசமாக்கும்." துரோகிகள் வழியோ கரடுமுரடாம்" என் நண்பனே இயேசுகிறிஸ்துவை நினைவு கூர். அவர் எவ்வித விலங்கையும் தகர்த்து எந்த சங்கிலியையும் முறித்து விடுவோர். சிறையுற்றவனை விடுவிப்பார். அவர் உன்னை விடுதலையாக்குவார். ஆம். உன்னை அடிக்கடி மேற்கொள்ளும் பாவத்தினின்றும் விடுவிப்பார். இரட்சிக்க வல்லமை உள்ளவராக இருப்பதுடன் அவர் உன்னை வழுவாமல் காக்கவும் வல்லவர். உன்னில் வாசமாயிருக்கும் ஆவியானவரின் வல்லமையினால் அறிந்து செய்யும் சகல பாவங்களின் பேரிலும் நீ வெற்றி சிறப்பாய். ஆம், "ஜெயங்கொண்டவனாய் இருப்பது" எத்துணை பாக்கியமுள்ளது.


2.கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிகிறவனாய் நான் வாழ்கிறேனா?
"உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்" (ரோமர்.6:18). சகலத்தையும் நான் ஒப்படைத்து விட்டேனா? அப்படிச் செய்வதாக நான் பாடுகிறேன். ஆண்டவரே உமது சித்தப்படியே செய்யும் என்று நான் அடிக்கடிக் கூறுவது உண்மையே. 

ஆயினும் மெய்யாக அதை நாடுகிறேனா? அவர் போகச் சொல்லும் இடத்திற்கு நான் செல்லுகிறேனா? அல்லது என் சொந்த வழியை விரும்புகிறேனா? கிறீஸ்துவுக்குப் பதிலாக சுயத்திற்கு முதல் இடம் கொடுக்கிறேனா? என் வாழ்க்கைக்கு அவரே ஆண்டவரும் எஜமானனுமாக விளங்குகிறாரா?கீழ்ப்படிகிற பிள்ளைகளே தேவனுக்கு வேண்டும். நாம் பிடிவாதமுள்ளவர்களாயிருந்தால் அவர் நம்மை பயன்படுத்த முடியாது. "பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிகிறதே நலம்" போர்முனையில் நேரும் கலகம் அதன் இலட்சியத்தை சிதைக்கும். அவருக்கு உத்தம விசுவாசமுள்ளவர்களாக விளங்க வேண்டும். அறியாத தவறுதல், குற்றங்குறைகள் மன்னிக்கப்படும். ஆனால் துரோகத்தை அவர் ஒருக்காலும் சகிக்க மாட்டார். 

தேவன் நம்மை பயன்படுத்த வேண்டுமானால் நாம் கீழ்ப்படிய வேண்டும். தேவன் நம்மை எங்கே போக அழைக்கின்றாரோ அங்கு செல்ல நாம் ஆயத்தபாயிருக்கவேண்டும். நம்முடைய வழியில் அல்ல அவர் ஏவும் வழியில் செல்ல வேண்டும். நாம் அல்ல, அவரே சகலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு ஸ்தோத்திரம். அவருக்கு நம்மை உண்மையாக ஒப்புக் கொடுக்கையில் அவருடைய திட்டங்கள் நம்முடையவையாகும். அவர் சித்தத்தை செய்வதில் நாம் மகிழ்ச்சியாக இருபோம்.நமக்குப் பிரியமானதைச் செய்ய வற்புறுத்தும் ஒரு கடினமான ஆளோட்டியாக அவரைப் பாவிக்கலாகாது. நமக்குப் பிரியமற்றதையே எப்போதும் செய்ய வற்புறுத்த மாட்டார். அவர் நமது பிதாவாயிருக்கிறார். 


அமர்ந்த தண்ணீர்களண்டையில் நம்மைக் கொண்டு போய்விட ஆவலாயிருக்கிறார். அவருக்குப் பிரியமான பல விருப்பங்களை நமது உள்ளத்தில் உருவாக்குகிறார். நம்மை ஒப்புக் கொடுக்கவேண்டுமென்பதே அவருடைய ஒன்றான விருப்பம். ஏனென்றால் நமது ஆவி ஆத்மா, சரீரம் யாவும் அவருடையாது. எனவே கீழ்ப்படியாமல் அவருடன் ஐக்கியப்பட்டிருபது கூடாத காரியம். 


3. தினசரி தனி ஜெபத்தில் என் நேரத்தை செலவிடுகிறேனா?
ஜெபமின்றி ஒருவரும் வெற்றி வாழ்க்கை வாழ முடியாது. ஜெபிக்காமல் கிறீஸ்தவ வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது. ஜெபத்தை அசட்டை செய்தால் ஆவியில் பலவீனமுள்ளவர்களாயிருப்பீர்கள். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் மாத்திரமே புதுப் பெலனடைவர். விண்ணப்பமாகிய சூழ்நிலையில் வாழத்தவறினால் சத்துருவினால் தாக்கப்பட ஏதுவாகும். ஆண்டவராகிய இயேசு இடைவிடாமல் மன்றாடினார். இராமுழுவதையும் ஜெபத்தில் கழித்தார். பவுல் ஜெபித்தார். ஆதி திருச் சபை ஜெபிக்கும் சபையாக விளங்கியது. தேவனால் அது பயன்படுத்தப்பட்டது. ஆடவரும் பெண்டிரும் ஜெபவீரராக விளங்கினர்.


ஆகவே ஜெபத்தில் காத்திருக்கிறேனா என்று என்னையே விசாரித்துக் கொள்வேனாக. தேவனுடன் உறவாட எனக்கு நேரமுண்டா? ஒவ்வொரு நாளும் அவரை சந்திக்கும்படி சமயத்தைக் குறிப்பிட்டிருக்கிறேனா? அதை தவறாமல் கடைபிடிக்கிறேணா? நான் ஜெபிக்கிற மனிதன் என்று தேவன் அறிவாரா? அப்படியானால் மீண்டும் என் உடன்படிக்கையை 
புதுப்பிக்க அவர் உதவிபுரிவாராக. அவர் வந்து என்னை தூங்குகிறவனாக கண்டு பிடியாதபடிக்கு காலைதோறும் அவரை சந்திக்க நான் ஆயத்தமாயிருப்பேனாக.


4.தேவனுடைய திருவசனத்தை கருத்துடன் ஆராய்கிறேனா?
தேவனுடைய வசனத்தை அசட்டை செய்தால் அவர் சத்தத்தைக் கேளாதபடிக்கு விலகிவிடுகிறேன். ஏனென்றால் தமது வசனத்தின் வாயிலாகவே அவர் நம்மோடு பேசுகிறார். ஆகவே வேதத்தை தியானியாதிருந்தால் அவரால் வழி நடத்தப்படாதிருக்கிறேண். திருவசனத்தை வாசியாதபடியினால் பலர் வழிவிலகிப் போயிருக்கின்றனர். அதற்குரிய 

இடத்தை மற்றொன்றும் பெற முடியாது. தேவன் மனிதருக்கு விளம்புகிற செய்தி வேதவசனமேயாகும். நான் அவரை உண்மையாக அறிந்திருந்தால் அதை படிக்க ஆவல் கொண்டிருப்பேன். எவ்வளவு அதிகமாக வாசிக்க முற்படுகிறேனோ அவ்வளவுக்கு அது எனக்கு இனிமையாயிருக்கும். அதை ஆராய்ந்தறியாமல் நான் வாழ முடியாது 
என்றறிவேன். அன்றாடக கடமைகளை நிறைவேற்ற அது எனக்கு ஜீவ ஆகாரமும், பானமுமாக விளங்கும். 

கிறீஸ்த்வ வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் மீண்டும் மீண்டும் அதை வாசிக்க முற்படுவேன். நான் இரட்சிக்க பட்டபோது தினந்தொறும் அதை வாசித்தேன். ஆனால் இன்னும் அதை ஆவலுடன் வாசிக்கிறேனா? முதலாவதாக வாசித்தபோது எனக்குப் புதிதாக தோன்றினபடிக்கு இன்றும் அதைக் காண்கிறேனா? அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளின் ஆன்மீக அனுபவங்களை நான் ஆனந்திக்கிறேனா? தாவீதின் சங்கீதங்களில் இன்றும் நான் ஆறுதலைக் கண்டடைகிறேனா? தேவனின் திருவசனம் ஒரு உயிர்ப்பிக்கும் வசனமாக விளங்குகிறதா? நாள்தோறும் என் ஆத்துமாவிற்கு ஆகாரமாக அதை உட்கொள்ளுகிறேனா?
ஒருக்கால் நான் ஆவியில் இன்று பலவீனமாக இருக்கிறேனா? தேவன் தமது வசனத்தைப் பாலுக்கும் உணவுக்கும் அவர் ஒப்பிடுகிறார். அப்படியானால் நான் திடனுற்றிருக்கும்படி அடிக்கடி அதை ஆராய வேண்டும். திருவசனத்தை கருத்துடன் ஆராயும் மாணவனாயிருக்க தேவன் அருள்புரிவாராக!


5.பகிரங்கமாக கிறிஸ்துவை அறிக்கையிடுகிறேனா?
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஆரம்ப நாட்களில் ஆத்துமாக்களை பற்றின வாஞ்சையினால் அனல் கொண்டிருந்தேன். தேவனுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து வீதிகளில் சென்று என் சாட்சியை அறிவிக்க ஆர்வமுற்றிருந்தேன். வழி தப்பினவரை மீட்கும் சேவையிலும் ஆத்துமாக்களுக்கு இயேசுவை இரட்சகராக சுட்டிக்காட்டுவதிலும் ஆனந்தமாயிருந்தேன். குணப்படாதவரின் நிலைமைக்காக என் மனம் பாரமுற்றீருந்தது. கிறிஸ்துவின் பேரில் உள்ள ஆதிஅன்பினால் நிறைந்தவனாக எனக்கு அவர் அருளின நன்மைகளை அடுத்தவருக்கு அறிவிக்க ஆவல் கொண்டிருந்தேன். லேகியோனைப் போல என் குடும்பத்தாரிடமும் நண்பரிடமும் சாட்சி கொடுக்கச் சென்றேன்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? ஆதி அன்பை இழந்துவிட்டேனா? குளிர்ந்து போய் அதையடுத்து அசட்டையாயிருக்கிறேனா? தேவனால் தூண்டப்பட்ட அக்கினி அணைந்து போயிற்றா? கெட்டுப்போனவர்களைப் பற்றி சற்றும் மனப்பாரமின்றீ நான் ஆராதனைகளிலும் மார்க்கசடங்குகளிலும் கலந்து கொள்ளுகிறேனா? அப்படியானால் அதற்குக் காரணமென்ன? 

"கெட்டோனை இரட்சியும்" என்றூ பாடுகிறேன். ஆனால் அவர்களை மீட்க ஏதாவதொன்றை செய்ய முன்வருகிறேனா? "அழிந்துகொண்டிருப்போரை காப்பாற்றும் " என்று பாடுகிறேனே, அவர்களுக்காக நான் கவலைப்படுகிறேனா? "விழுந்துபோனவருக்காக கண்ணீர்விடும் " என்று பாடுகிறேனே - அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காக --நான் கண்ணீர் உதிர்க்கிறேனா? கெட்டுப்போன மக்களின் இரட்சிப்பில் என் ஆத்துமா அக்கறை கொண்டுள்ளதா? அப்படியிராவிட்டால் என் நிலைமை இன்னும் மோசமானதாகும். உடனடியாக அதன் காரணத்தை கண்டுபிடித்து அகற்றுவேனாக. பகிரங்கமாக ஆண்டவரைப்பற்றி சாட்சி கூறவேண்டும். மக்களுக்கு கிறிஸ்துவைப் பிரஸ்தாபப்படுத்தவேண்டும். சாட்சிபகர அவர் 

கட்டளையிட்டிருக்கிறார். மீண்டும் அவரின் மகத்துவத்தை எடுத்துரைப்போமாக. சுவிசேச துண்டுப்பிரதிகளை பிறருக்கு நான் வினியோகிக்கலாம். ஆம். என் நண்பருக்கு அவர்கள் ஆத்தும இரட்சிப்பை குறித்து கடிதங்கள் எழுதலாம். தேவனுடைய பிரதிநிதியானால் நான் அவருக்கு உண்மையுள்ளவனாக விளங்கவேண்டும்.


6. தேவன் என்னை ஆசீர்வதித்ததிருப்பதற்கேற்ப என் ஈகை தாராளமாயிருக்கிறதா?
"கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்" (லூக்க.6:38). 
நாம் கொடுப்பதற்குத்தக்கதாக தேவன் நமக்கு ஈந்தருளுகிறார். அவர் ஒருபோதும் மனிதனுக்கு கடன்படவரல்லர். தேவனின் ஈகைக்கு மேலாக நீ அளிக்கமுடியாது. தேவனுடைய பணிவிடைக்கென்று குறைந்தது உன் வருமானத்தில் பத்தில் ஒருபங்கை நீ கொடுக்க வேண்டும். அதற்கு மேலாக அவர் உன்னிடம் கேட்பதையும் தரவேண்டும். 

நீ அவருக்கு உண்மையுள்ளவனாக இருந்தால் அவரும் உனக்கு உண்மையுள்ளவராக இருப்பார். ஏராளமானவற்றை உடையவராக இருந்த காலத்தில் தேவனுக்கு கொடுப்பதில் உண்மையில்லாதவர்களாக இருந்த பலர் இன்று நெருக்கத்திலிருக்கின்றனர். திருப்பணிகென்று உண்மையாக காணிக்கை கொடுத்தவரில் ஒருவராவது குறைவுற்ற 
நிலைமையிலிருப்பதை நாம் காண முடியாது. "உதார குணமுள்ளவன் செழிப்பன். தண்ணீர் பாய்ச்சுபவன் தண்ணீர் பாய்ச்சப்படுவான்."

ஆனால் திட்டமாக ஆத்தும ஆதாயஞ்செய்யப்படும் ஊழியத்திகேயன்றி சமுதாய சேவைக்கும் வேதாகமத்தை சந்தேகிக்கின்ற மக்களுக்கும் உன் பணத்தை கொடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் நன் கொடை பயன்படுத்தப்படுகின்றதை முன்னிட்டு தேவனுக்கு நீ பொறுப்பாளியாக இருக்கிறாய்.மனமகிழ்ச்சியுடன் கொடு. ஏனென்றால் "உற்சாகமாய் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாயிருக்கிறார்." 

மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் ஒழுங்குமுறையாக அளிக்கவேண்டும். தேவனுக்கென்று கவனமாக கணக்குவை. எவ்விதமாகவாவது அவருக்குக்கொடு. " அனுப்பப்படாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?" உலகத்தாருக்கு சுவிசேசம் அறிவிக்கப்படவேண்டுமானால் அதற்Kஆன செலவை யாராவது ஒருவர் ஏற்க வேண்டும். 

தண்ணீர் இலவசமானது. ஆனால் அதை குழாய்கள் வழியாக எடுத்துச் செல்ல பணம் செலவழிக்கவேண்டும். அவ்வாறே இலவசமான இரட்சண்யத்தை பிறருக்கு அறிவிக்க தூண்டுகிறவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். உலகத்தின் கடைசி முனைமட்டும் அது துரிதமாக பிரசங்கிக்க்கப்பட நாம் முயல்வோமாக. எனவே ஈகை என்பது பவுல் 
விளம்புகிறபடியே கிறிஸ்தவனுக்கு கிடைக்கும் ஒரு கிருபையாக விளங்குகிறது. நாம் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கிறிஸ்தவராக இருப்போமேயானால், நாம் கொடையாளிகளாயும் , ஆம் தாராளமாக கொடுக்கிறவர்களாயும் விளங்குவோம்.

7.ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கென்று ஏதாவது செய்கிறேனா?
தேவனால் பயன்படுத்தப்படும்படிக்கு சாட்சி கொடுக்கக்கூடிய ஓரிடத்தையும் மக்களையும் நான் கண்டுபிடிக்க வேண்டும். என் செய்கையை தவறென்று அடுத்தவர் கருதுகின்றனர் என்ற நினைவால் நான் பாதிக்கப்படலாகாது. 

ஆத்தும ஆதாயத்தில் ஆர்வமுற்றிருக்கும் ஒரு சபை எனக்கு உறைவிடமாயிருக்கவேண்டும். சேவையில் ஈடுபடவே நான் மீட்கப்ப்பட்டேன். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஏதாவதொன்றை நான் செய்யாவிட்டால் அவர் எனக்களைத்த பரம தரிசனத்திற்கு நான் உண்மையற்றவனாக இருப்பேனல்லவா? பல வரங்கள் எனக்கில்லாதிருப்பினும் நான் ஏதோ ஒன்றில் ஈடுபடலாம். நோயாளிகளை கண்டு சந்திக்கலாம். சுவிஷேசப் பிரதிகளை வினியோகிக்கலாம். என் சாட்சியத்தை அறிவிக்கலாம். தனித்து ஆட்களை சந்திந்துப் பேசி அவர்களை கர்த்தருக்கென்று ஆதாயஞ்செய்யலாம். இப்படி ஏதாவது ஒரு காரியத்தை செய்ய முன் வரவேண்டும். யாராவது தங்களைக்கண்டு சன்ந்தித்து தூண்டிவிடும் மட்டும் சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆலயத்திற்கு வந்து ஆராதனைகளில் கலந்து கொள்ளுகின்றனர். ஆனால் தாங்களும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்று கனவில் கூட நினைத்துப்பார்ப்பதில்லை. போதகருக்குத் தேவையானால் அவர் தேடி வந்து அவர்களை ஊழியத்திற்கு அழைப்பார் என்று கருதுகின்றனர். ஆனால் இரட்சிக்கப்பட்டது உண்மையானால் தாங்களே ஏதாவதொன்றை செய்ய முன்வருவர். "ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?" என்று பவுல் முதலாவது விசாரித்தான். மறுபிறப்படைந்த ஒரு ஆத்துமாவின் பேராவலும் அதுவே. அன்பு சேவை 
செய்யும். ஆண்டாவராகிய இயேசுவை உத்தமமாக நேசிப்போர் அவரை சேவிக்க வாஞ்சிப்பர். சோம்பேறிகளாயிருக்க மாடார்கள். போதகரோ மற்றவரோ ஏவுமட்டும் காத்திராமல் அவர்கள் தேவனிடம் சென்று அவர் உத்தரவை பெற்றுக் கொள்வர். ஓய்வு நாள் பாடசாலையில் அவர்கள் ஆசிரியராயிருக்கக்கூடும். அப்படியானால் அந்தக்குழுவின் தலைவரை அணுகி 

விசாரிக்க வேண்டும். நல்ல குரல் வளம் உடையவராயிருப்பின் பாடகர் குழுவில் சேர்ந்து கொள்ளலாம். அல்லது வாத்தியக்கருவியில் பழக்கப்பட்டிருந்தால் அதௌ வாசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஆராதனை முதலிய கூட்டங்களுக்கு மற்றவரை அழைத்து வந்து இடமளிக்கும் பணிவிடையிலும் இளைஞர் குழுவிலும் பிறருக்காக மன்றாடும் ஜெபக்கூட்டங்களிலும் சேவைபுரியலாம். தூர இடங்களுக்கு சென்று நற்செய்தி அறிவிக்க ஒருக்கால் ஆண்டவர் உன்னை அழைப்பார். அப்படியானால் அதற
குப் பயிற்சி பெற்று வாழ்க்கையை அதில் பயன்படுத்தலாம். இப்படியாக ஒருவன் ஜீவனைப்பெற்றது உண்மையாயின் தன் ஆண்வருக்கு ஏதோ ஒன்றில் தொண்டாற்றும் வரை அவன் மனம் அமர்ந்திராது.

மீண்டும் நான் கிறிஸ்துவை சேவிக்கிறேனா? அவருக்கு உழைக்கிறேனா? என் காலத்தை அவருக்காக செலவழிக்கிறேனா? 

அல்லது ஏதோ ஒரு அழைபு வரக்காத்திக்கொண்டிருக்கிறேனா? என்று வினவுவோம். முயற்சியுடையவர் முயற்சியில்லாதவர் என்று இருவகைத் தொண்டர் உளர். "ஆண்டவரே இதோ இருக்கிறேன்" என்று சுறுசுறுப்புள்ளவர்கள் கூறுவர்./ "என்னை அனுப்பும்" 
என்று முயற்சியுடையவர்கள் ஆர்வமுற்றீருப்பர். நான் எந்த வகுப்பை சேர்ந்தவன்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கென்று ஏதாவதொன்றை செய்ய முற்படுகிறேனா? 

னம்மை உத்தமரென்று அவர் அங்கீகரிக்க வேண்டுமானால் மேற்கண்ட கேள்விகளைக் குறீத்து தீவிரமாய் ஆராய்வது 

அவசியம். "நீ வெட்கப்படாத ஊழியக்காரனாய் தேவனுக்கு முன் உன்னை உத்தமனாய் நிறுத்தும்படி 

கருத்துள்ளவனாய் இரு" என்று திருவசனம் விளம்புகிறது. அவர் கரத்தினின்று பூரணமான பிரதிபலனை 

பெற்றுக்கொள்ளவௌம் " நல்லது உண்மையும் உத்தம்ய்மான ஊழியக்காரனே" என்ற மேன்மையான வாழ்த்துரையைக் 

கேட்கவும் பாத்திரராயிருக்க நம்மையே ஆராய்ந்தறிந்து அவர் எதிர் நோக்கும் உன்னத நிலையை அடைவோமாக.  

Courtesy: Taken from The Man who God uses by Oswald smith

Tuesday, March 17, 2009

நகை- கவிதை


புன்னகை பூத்த புன்முறுவல்

முகத்தில் இருந்தால்

பொன் நகை வேண்டாமே

என்ன நகை போட்டாலும்

நறுமுகைக்கு அழகு

நாதனேசுவின் மீட்புதானே