Wednesday, November 25, 2009

இயேசுவுடன் ஒரு உலா


மனதில் உள்ளவற்றை மறைக்காமல் மவுனமாக ஒரு மறைவெளிப்பாட்டைப் பெற யான் பெற்ற ஒரு அருமையான சுற்றுலாவே இந்த பதிவு.... என் உள்ளம் கிறிஸ்துவின் இல்லம்......


ஒரு மாலையில் நான் கிறிஸ்துவை என் உள்ளத்தில் வரும்படி அழைத்தேன். அது என்னே ஒரு அற்புதமான வருகையாக இருந்தது. அவ்வருகை கிளர்ச்சியூட்டுவதாகவும் உணர்ச்சி நிறைந்ததாகவும் மட்டும் இல்லாமல் உண்மையானதாகவும் இருந்தது. என் வாழ்வின் மையத்தில் ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர் என் உள்ளத்தின் இருண்ட பகுதிக்குள் வந்து ஒளியை வீசச்செய்தார். அனல் மூட்டி குளிரை விரட்டினார். எந்த சலனமும் இல்லாத இடத்தில் பாடல் தொடங்கி வெறுமையை அவருடைய அன்பான ஐக்கியத்தால் நிரப்பினார். நான் இயேசுவுக்கு கதவை திறந்ததற்காக வருந்தவில்லை. இனியும் ஒருக்காலும் வருந்தப் போவதுமில்லை.

இந்தப் புதிய உறவில் சந்தோசத்துடன் இயேசுவிடம் சொன்னேன், “ஆண்டவரே, என்னுடைய இந்த இருதயம் உம்முடையதாக வேண்டும். நீர் இதில் தங்கி உம்முடைய வாசஸ்தலமாக்கிக் கொள்ளும். எனக்குள்ளதெல்லாம் உமக்கே சொந்தம். நான் எல்லாவற்றையும் உமக்கு காட்டுகிறேன்.

படிப்பறை
முதல் அறை நான் படிக்கும் இடமாகிய நூலகமே. என் இல்லத்தில் என் சிந்தனையின் கனத்த சுவர்கள் அடங்கிய மிகவும் சிறிய இடம். ஆனால் இது மிகவும் முக்கியமான அறை. பார்க்கப்போனால் அது இல்லத்தின் கட்டுப்பாட்டு அறை எனலாம். அவர் என்னுடன் நுழைந்து புத்தக அலமாரியிலுள்ள புத்தகங்கள், மேஜை மீது கிடக்கும் மாத இதழ்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்தார். அவரைப் பின் தொடர்ந்த எனக்கு அவருடைய பார்வை விசனத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன் நான் இதைக் குறித்து தவறாக நினைத்தது இல்லை. ஆனால் அவர் அந்தக் காரியங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது நான் திக்குமுக்காடிப் போனேன். சில புத்தகங்களை அவர் பார்க்கக் கூடாதபடிக்கு அவர் கண்கள் மிகவும் பரிசுத்தக் கண்களாக இருந்தன. எந்த ஒரு கிறிஸ்தவனும் படிக்கவேண்டாத சில மாத இதழ்கள் இருந்தன. சுவர் மீது சில படங்கள் நினைவிலும் சிந்தனையிலும் வெட்கத்தை உண்டு பண்ணின. வெட்க முகத்துடன் நான் அவரைப் பார்த்து, “ஐயா இந்த அறை சுத்தமாக்கப்பட்டு சரி செய்யப்படவேண்டும் என எனக்கு தெரியும். நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறி எனக்குதவுவீர்களா?” எனக் கேட்டேன்.

“நிச்சயமாக” என்று சொன்னவர் “உனக்கு உதவி செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் நீ படிக்கிறவைகளில் உனக்கு உதவாத அசுத்தமான, நல்லதல்லாத உண்மையற்றவிகளை எடுத்து தூற எறி! இப்பொழுது காலியான அலமாரியில் வேதாகம புத்தகங்களை வை. உன் நூலகம் முழுவதும் வேதாகமம் வைத்து இரவும் பகலும் தியானம் செய். சுவரில் உள்ள படங்கள் மூலம் உன் நினைவுகளை கட்டுப்படுத்துவதில் கஷ்டம் இருக்கும். ஆனால் உனக்கு உதவும்படி ஒன்று தருகிறேன் என்று கூறி அவர் தம்முடைய ஒரு பெரிய உருவப் படத்தைக் கொடுத்து சுவரில் நடுவாக தொங்கவிடு, அதாவது சிந்தனை சுவரில்” என்று சொன்னார்.

நான் அப்படியே செய்தேன். மேலும் வருடங்கள் செல்ல செல்ல என் எண்ணங்கள் கிறிஸ்துவை மையப்படுத்தும் போது அவருடைய பரிசுத்தம் அவ் அருடைய வல்லமை ஆகியவை என்னுடைய கெட்ட எண்ணங்களி பின்னாக் விரட்டியடிக்கும். இப்படியாக என் எண்ணங்களை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவி செய்தார்.

உணவு அறை
dining roomபடிக்கும் அறையில் இருந்து உணவு அறைக்கு சென்றோம். அந்த அறைதான் பசி, ஆசை ஆகியவை அடங்கியவை.நான் இங்குதான் எனது அதிக நேரத்தையும் கடின முயற்சியையும் என் தேவைகளை திருப்ப்திப்படுத்தவும் செலவழித்தேன்.
“இது எனக்கு மிகவும் பிடித்தமான அறை. நான் உங்களுக்கு பரிமாறும் உணவில் பிரியப்படுவீர்கள் என்ற நிச்சயம் எனக்கு உண்டு” என்று அவரிடம் சொன்னேன். அவர் என்னுடன் மேஜையில் அமர்ந்து ”எப்படிப்பட்ட உணவு வகைகள் உண்டு?” என்று கேட்டார். “எனக்கு பிடித்த உணவு வகைகள்: பணம் பட்டப்படிப்புகள், கையிருப்புகள் அத்துடன் செய்தித்தாளில் புகழ் செல்வம் பெறுதல் பற்றிய கட்டுரைகளை எழுதுவது” ஆகியவற்றைச் சொன்னேன். உணவு அவர் முன் வைக்கப்பட்ட போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் அதை சாப்பிடவில்லை என்பதை கவனித்தேன். நான் அவரிடம், ஐயா! இந்த உணவு பிடிக்கவில்லையா? என்ன பிரச்சனை?” என்று கேட்டேன். அவர் “நான் சாப்பிடவேண்டிய உணவு ஒன்றுண்டு. அது நீ அறியாதது. உணக்கு உண்மையாகவே திருப்தியளிக்கும் உணவு வேண்டுமானால் அது பிதாவின் சித்தத்தைச் செய்வதே. உன் சுயத்தை திருப்திப்படுத்துகிற சொந்தக் களியாட்டுகள் ஆசைகள் ஆகியவற்றை தேடுவதை நிறுத்திவிட்டு தேவனை திருப்திப்படுத்துகின்றவற்றை தேடு. அதுதான் உன்னை திருப்திப்படுத்தும்” என்று பதிலளித்தார். சாப்பாட்டு மேஜையில் “தேவ சித்தம் செய்தலின்” ருசியைக் காட்டினார். என்ன மணம்! அதைப் போல வேறு எந்த உணவும் உலகில் கிடையாது. அது ஒன்றுதான் திருப்தியைக் கொடுக்கும்.

பொது அறை
உணவு அறையில் இருந்து பொது அறைக்கு நடந்து சென்றோம். இந்த அறை அதிக பிணைப்பானதும் வசதியானதுமாக இருந்தது. நான் அதை விரும்பினேன். அதில் ஒரு குளிர்காயும் அடுப்பு, குஷன் நாற்காலிகள், ஒரு மெத்தையான இருக்கை ஆகியவையனைத்தும் அமைதியான சூழ்நிலையில் இருந்தன.

“இது உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொடுக்கும் அறை. இங்கு நாம் அடிக்கடி வருவோம். இது தனியாக அமைதியாக இருக்கிறதால் நாம் இருவரும் இங்கு ஐக்கியம் கொள்வோம்” என்று அவர் சொன்னார். ஆம். இளம் கிறிஸ்தவனாகிய எனக்கு இதைக் கேட்டு மெய்சிலிர்த்தது. க்றிஸ்துவுடன் சில நிமிடங்கள் தனிப்பட்ட சினேகத்தில் தங்கியிருப்பதைக்காட்டிலும் மேலானதாக நான் செய்யக்கூடிய காரியத்தை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர் வாக்களைத்தது என்னவென்றால் “ நான் இங்கு ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் இருப்பேன். என்னை இங்கு வந்து சந்தி. அந்த நாலை நாம் ஒன்றாக தொடங்குவோம்” என்பதே. ஆகையால் ஒவ்வொரு நாள் காலையிலும் நான் மாடியில் இருந்து கீழே இறங்கி அந்த பொது அறைக்கு வருவேன். அங்கு அலமாரியில் இருந்து எடுத்த வேதாகமத்தில் ஒரு புத்தகத்தை எடுப்பார். நாங்கள் அதைத் திறந்து ஒன்றாக வாசிப்போம். அவர் எனக்கு தேவனின் அற்புதமான இரட்சிப்பின் உண்மைகளை விவரித்து காண்பிப்பார். அவர் தன் அன்பையும் கிருபையையும் பகிர்ந்து கொண்ட போது என் இருதயம் பாடலால் நிறைந்தது. அந்த நேரங்கள் அற்புதமான நேரங்கள். நாள் செல்ல செல்ல அனேக வேலைப்பளுவினால் இந்த நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறுகினது. ஏன் என்று தெரியவில்லை? கிறிஸ்துவுடன் நேரம் செலவழிக்க ரொம்ப கடினமாக இருந்தது. வேண்டுமென்றே நான் அவ்விதம் செய்யவில்லை. அது உங்களுக்குப் புரியும். அது அவ்விதமாகவே நடந்தது. கடைசியாக நேரம் குறுகினது மட்டுமல்ல, நான் சில நாட்களை அங்கும் இங்குமாக கடத்தினேன். அவசர காரியங்கள் இயேசுவுடன் அமைதி நேர உரையாடலை தடை செய்தன. எனக்கு ஞாபகம் வருகிறது, ஒரு நாள் காலை என் வேலையினிமித்தமாக படியிறங்கி கீழே வேகமாக வந்தேன். நான் பொது அறையை கடந்தபோது கதவு திறந்து இருப்பதைப் பார்த்தேன். உள்ளே பார்த்த போது கணப்பில் தீ எறிந்து கொண்டிருந்ததுமல்லாமல் இயேசு அங்கே உட்கார்ந்திருந்தார். துக்கத்துடன் எனக்குள் இப்படியாய் சிந்த்தித்தேன்,” அவர் என் விருந்தாளி. நான் அவரை என் உள்ளத்தில் வரும்படி அழைத்தேன்! அவர் என் இரட்சகராகவும் என் நண்பராகவும் வந்தார். ஆனால் நான் அவரை அசட்டை செய்கிறேன்.” நான் நின்று திரும்பி தயக்கமாக உள்ளே சென்றேன். தலை குனிந்த பார்வையுடன், “ஐயா என்னை மன்னியுங்கள். இங்குதால் எல்லா நாளும் காலைவேளைகளில் இருக்கிறீர்களா? என்று கேட்டேன். “ ஆம்” என்று அவர் சொன்னார் “நான் இங்கு எல்லா காலைகளிலும் உன்னை சந்திப்பேன் என்று உனக்கு சொன்னேனே” நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைத்துக் கொள். உன்னை அதிக விலை கொடுத்து விடுவித்திருக்கிறேன். உன் ஐக்கியத்தை நான் மதிக்கிறேன். உனக்காக அமைதிநேரத்தை உன்னால் கடைபிடிக்கமுடியாவிடினும் எனக்காகவாவது செய்”

கிறிஸ்து என் ஐக்கியத்தை விரும்புகிறார், எனக்காக காத்திருந்து, நான் அவ் அவருடன் இருப்பதை அவர் விரும்புகிறார் என்கிற உண்மை மற்ற எந்தவொரு காரியத்தையும்விட அதிகமாக தேவனோடு கொண்டுள்ள அமைதிவேளையை மறுரூபப்படுத்தியுள்ளது. கிறிஸ்து உங்கள் இருதயத்தின் பொது அறையில் தனியாக காத்திருக்கும்படிச் செய்யாமல் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கவும் வேதம் வாசிக்கவும் நேரத்தை கண்டுபிடிக்கவும்.

பணிஅறை
அதிக நேரமாவதற்கு முன்பே உன் வீட்டில் நீ வேலை செய்யும் அறை உண்டா? என்று கேட்டார். என் இதய வீட்டில் வெளியில் கார் நிறுத்தும் இடத்தில் சில கருவிகளும் மேஜையும் உண்டு. நான் அதில் ஒன்றும் அதிக வேலை செய்வது இல்லை. எப்பொழுதாவது சில கருவிகளை வைத்து விளையாடினாலும் சிறப்பாக எதையும் உருவாக்குவதில்லை. அங்கு அவரை அழைத்துச் சென்றேன். மேஜையை நோக்கிப் பார்த்து நன்றாக செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி “தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக என்ன செய்கிறாய் என்று கேட்டார். அங்கு கிடந்த ஒன்றிரண்டு பொம்மைகளை பார்த்து ஒன்றை எடுத்து “உன் கிறிஸ்தவ வாழ்க்கையில் மற்றவர்களுக்கு இதைப் போன்றதைத்தான் செய்கிறாயா?” என்று கேட்டார்.
“நான் அதிகம் செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு சக்தியும் திறமையும் கிடையாது” என்றேன்.
“நீ சிறந்த ஒன்றை செய்ய ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டார்.
“நிச்சயமாக” என்று பதிலளித்தேன். சரி உன் கைகளைக் கொடு. என் ஆவி உன்னில் கிரியை செய்யும்படி என்னில் ஓய்ந்திரு. நீ திறமையற்றவன், அவலட்சணமானவன் என்பது எனக்கு தெரியும். ஆனால் தேவ ஆவியானவர்தான் சிறப்பாக சிறந்த பணிசெய்பவர். அவர் உன் கைகள், இருதயம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் போது உன் மூலம் கிரியை செய்வார்” என்றார். என் பின்னால் அவர் நின்று அவருடைய பலத்த கரங்களை என் கரங்களின் கீழாக வைத்து கருவிகளைக் கொண்டு வேலைப்பாடு தெரிந்த அவர் விரல்களில் வைத்து என் மூலம் வேலை செய்தார். நான் எந்த அளவுக்கு அவரில் சார்ந்து அவரில் நம்பிக்கை வைத்தேனோ அந்தளவுக்கு அவர் என் வாழ்க்கையில் கிரியை செய்ய முடிந்தது.

பொழுதுபோக்கு அறை
வேடிக்கைக்கும் ஐக்கியத்துக்குமாக ஏதாவது ஒரு பொழுதுபோக்கு அறை உண்டா என்று கேட்டார். நான் அவர் தை கேட்க மாட்டார் என்று நம்பியிருந்தேன். எனக்காக என்று சில ஐக்கியங்களையும் செயல்பாடுகளையும் நான் வைத்திருந்தேன்.நான் ஒரு நாள் மாலை என் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அவர் என்னை இந்றுத்தி என்னைப் பார்த்து ,”வெளியில் செல்கிறாயா?” என்று கேட்டார். நான் ஆம் என்று பதிலளித்தேன். “நல்லது நான் உன்னுடன் வரவிரும்புகிறேன்” என்றார். “அப்படியா” என்று நான் மனக்குழப்பத்துடன் பதில் அளித்தேன். “ நாங்கள் செல்லும் இடத்திற்கு நீங்கள் வர விரும்ப மாட்டீர்கள். நாளை இரவு நாம் இருவரும் செல்வோம். நாளை இரவு ஒரு ஆலயத்தில் நடக்கும் வேதபாட வகுப்பிற்கு செல்வோம். ஆனால் இன்று இரவு இன்னொரு நிகழ்ச்சி எனக்கிருக்கிறது” என்றேன். ஆனால் அவர் “ நான் வருத்தப்படுகிறேன். உன் வீட்டில் வந்தபோது நாம் இருவருமே எல்லாவற்றையும் நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து செய்வோம் என்று நினைத்தேன். நான் உன்னுடன் சேர்ந்து வர விரும்புகிறேன் என்பதை நீ அறிவாயாக” என்றார். ஆனால் நான் நாளை இரவு ஏதாவதொரிடத்திற்கு நாம் சேர்ந்து செல்வோம் ” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினேன். அன்று மாலை சில துயரமான மணித்துளிகளை சந்தித்தேன். நான் கெட்டுப்போவதாக உணர்ந்தேன். இயேசுவுக்கு என்னவிதமான நண்பன் நான். என் வாழ்க்கையை விட்டு அவரை வெளியே அனுப்பி விட்டு அவர் விரும்பமாட்டார் என்று அறிந்தும் பல இடங்களுக்கு சென்று பல வேளைகளை செய்கிறேன் என்று நினைத்தேன்.
அன்று மாலை திரும்பி வந்த போதி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அவரிடம் இதைப் பற்றி பேச விரும்பினேன். நான் அவரிடம் “நீங்கள் இல்லாமல் எனக்கு நல்ல நேரம் எதுவும் இல்லை. ஒரு நல்ல பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்.இப்போதிலிருந்து நாம் சேர்ந்தே எல்லாவற்றையும் செய்வோம் ” என்று சொன்னேன்.
பின்பு பொழுது போக்கும் அறைக்குள் நாங்கள் போனோம். அவர் அவ்வறையை மாற்றினார். அவர் புதிய நண்பர்கள் புதிய ஆச்சரியமான சம்பவங்கள் மற்றும் புதிய சந்தோசங்களை அங்கு கொண்டு வந்தார். சிரிப்பும் இசையும் அந்நேரமுதல் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தனி அறை
ஒரு நாள் கதவருகில் அவர் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். என்னை தடுத்து நிறுத்தும் ஒரு பார்வை அவர் கண்ணில் இருந்தது. நுலையும் போது அவர் சொன்னார், “வீட்டில் ஏதோ ஒரு வகையான நாற்றம் வருகிறது. ஏதோ இங்கு செத்து கிடக்கிறது. அது மாடியிலுள்ள தனியறையில் இருந்துதான் வருகிறது” என்றார். அவர் இப்படிச் சொன்னவுடன் அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு விளங்கி விட்டது. தனி அறையின் முடிவில் ஒரு சிறிய உள்ளறை. அது சில அடிகள் சதுரமானது. அது பூட்டப்பட்டிருந்தது. அவ்வறையில் என் சொந்தமான சில தனிப்பட்ட பொருட்களை நான் யாருமே அறியாதவகையில் வைந்த்திருந்தேன். நிச்சயமாக இயேசுவும் கூட அதைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அவைகள் என் பழைய வாழ்க்கையின் செத்து நாற்றமெடுக்கிற சில காரியங்கள். அவைகள் எனக்கு வேண்டுமென விரும்பி அவைகளை அறிக்கையிட பயந்தேன்.
தயக்கத்துடன் அவருடன் சென்றேன். போகப் போகப் நாற்றம் அதிகரித்தது. அவர் அக்கதவை சுட்டிக் காட்டினார். நான் கோபமடைந்தேன். அப்படித்தான் நான் சொல்லமுடியும். நான் எனது நூலகம், உணவு அறை, பொது அறை, வேலை செய்யும் அறை, பொழுதுபோக்கு அறை ஆகியவற்றை விட்டுக் கொடுத்தேன். ஆனால் இப்பொழுது எனது சிறிய இந்த தனியறையையும் கேட்கிறார். “இது மிகவும் அதிகம். நான் சாவியைக் கொடுக்கப் போவதில்லை” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். என் சிந்தனைய அறிந்தவராய் “நாற்றத்துடன் உள்ள இரண்டாம் தளத்திலே நான் தங்குவேன் என்று நீ நினைத்தால் அது உன் தவறு. நான் வெளியில் தங்குவேன்” என்று சொல்லி படி இறங்கினார்.
ஒருவர் கிறிஸ்துவை நேசிக்க அறிந்தபின் அவருடைய ஐக்கியத்தை விட்டு விலகுவது துக்ககரமானது. நான் அவரை உள்ளே விட வேண்டியதாயிற்று.
“நான் சாவியை தருகிறேன்” என்று சோகமாகச் சொன்னேன். “எனக்கு அதை சுத்தம் செய்ய பெலன் இல்லை. நீங்கள்தான் அதை திறந்து சுத்தம் செய்யவேண்டும். “சாவியைக் கொடு; நான் அவ்வறையை சுத்திகரிக்க அங்கீகாரம் கொடு. நான் அதைச் செய்வேன்” என்றார். நடுங்கும் விரல்களுடன் சாவியை அவரிடம் நான் கொடுத்தேன். அவர் அதை வாங்கி கதவருகில் சென்று திறந்து உள்ளே நுழைந்தார். சுத்திகரித்தார். அவ்வறையினுள் உள்ள எல்லா அழுகக் கூடிய நாற்றமடித்த பொருட்களை வெளியில் எடுத்து எறிந்தார். அவ்வறையை சுத்திகரித்து அதற்கு வர்ணம் பூசினார். இவை எல்லாம் ஒரு சில கணங்களில் நடந்தது. அந்த செத்தப் பொருட்கள் என் வாழ்வை விட்டு வெளியேறியதால் எவ்வளவு வெற்றி! என்ன விடுதலை!

தலைப்பு மாற்றம்
எனக்குள் ஒரு எண்ணம் “ ஆண்டவரே அந்த தனி அறையை நீர் சுத்திகரித்தது போலவே இவ்வீட்டில் முழு நிர்வாகத்தையும் நீர் எடுத்து எனக்காக இந்த முழு வீட்டையும் இயக்க வாய்ப்புண்டா? என் வாழ்க்கை எப்படியிருக்கவேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அப்படியாக அதை மாற்றிக்கொள்ளும் பொறுப்பை நீர் ஏற்றுக்கொள்வீரா?” அவர் பதிலளித்தபோது முகம் ஒளிர்ந்தது. “அப்படிச் செய்வதைத்தான் நான் விரும்புகிறேன்! உன் சுயபலத்தில் நீ வெற்றியுள்ள வாழ்வுவாழ முடியாது. உன் மூலமாக உனக்காக நான் அதை வாழவிரும்புகிறேன்” என்றார். அதுதான் வழி. ஆனால் “ நான் ஒரு விருந்தாளி, எனக்கு அங்கீகாரமில்லை, உரிமையுமில்லை” என்றார். நான் முழங்காலில் நின்று “ஆண்டவரே நீர் விருந்தாளியாக இருந்தீர். நான்விருந்தளிப்பவனாக இருந்தேன். ஆனால் இப்பொழுதிருந்தே நான் உமது வேலைக்காரன். நீர்தான் என் சொந்தக் காரரும் எஜமானரும் என்றேன்.

நான் வேகமாக பொக்கிஷ பெட்டிக்கு ஓடி என் ஆஸ்திகள், பொறுப்புகள், இருப்பிடன், சூழ்நிலை ஆகியவை அடங்கிய வீட்டின் பத்திரத்தை எடுத்து அவருக்கே அவ்வீட்டை நித்திய காலத்துக்குமாக எழுதிக் கொடுத்தேன். “இதோ, இங்கே நானும் என்னுடையவைகள் அனைத்தும், எனறென்றைக்குமாக உமக்கே. நீர் இவ்வில்லத்தை நடத்தும். நான் உமது அடிமையும் நண்பனுமே” என்றேன். என் உள்ளத்தில் இயேசு வீடமைத்து தங்கியபின் காரியங்கள் மாறின.

என் உள்ளம் கிறிஸ்துவின் இல்லம்

No comments: