Thursday, August 23, 2007

கிறிஸ்தவம் முட்டாள்களின் மார்க்கமா?

   கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே கிறிஸ்தவர்கள் மீது அடிக்கடி கூறப்படும் குற்றச்சாட்டு என்னெவெனில், "உங்களுடைய விசுவாசம் குருட்டு விசுவாசமே(Blind Faith), உங்கள் விசுவாசம் அறிவு சார்ந்தது அல்ல" என்பதாகும். மேலும் ஒருவன் கிறிஸ்தவனாகும் போது தனது ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொலை செய்து விடுகிறான் என்றும் கிறிஸ்தவ விசுவாசம் என்பது ஒரு பகுத்தறிவுப் படுகொலை என்று பறைசாற்றும் பகுத்தறிவு மேதாவிகள் என்றூ தங்களை கூறிக்கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒருவன் கிறிஸ்தவனாகும் போது இருட்டை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறான் என்று கூறுவோரும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் பல கிறிஸ்தவர்களால் தங்கள் விசுவாசத்துக்கான சரியான காரணத்தினையும் விளக்கத்தையும் கூற முடிவதில்லை. விசுவாசம் என்றால் விசுவாசம் தான் அதற்கு விளக்கம் கிடையாது என்று எண்ணுவோரும் உண்டு. சரி. நம் கேள்விக்கு வருவோம். கிறிஸ்தவ விசுவாசம் அறிவு சார்ந்ததுதானா? அதற்கு ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம் உள்ளதா?
உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள் (1பேத்ரு3:15) என்று அபோஸ்தலனாகிய பேதுரு கூறியிருக்கிறார். மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் "எல்லாருக்கும் சொல்லக் கூடிய ஒரு உத்தரவு(பதில்)" உண்டு என்று அறிந்து கொள்ளலாம். அந்த பதில் என்ன?
ஆதிக் கிறிச்தவர்கள் இயேசுதான் தேவனுடைய குமாரனென்பதற்கு சாட்சியாக அவரின் உயிர்த்தெழுதலை சாட்சியாகப் பறைசாறினர். முதன்மை அப்போஸ்தலன் பேதுரு முதல் புறஜாதியாரின் அபோஸ்தலன் பவுல் போன்ற எல்லாருமே தங்கள் பிரசங்கங்களில், நிருபங்களில் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்தே பேசினர்," நீங்கள் அவரை கொலை செய்தீர்கள். தேவன் அவரை மூன்றாம் நாளில் உயிரோடே எழுப்பினார். நாங்கள் இதற்கு சாட்சிகள்" என்பதே அவர்களின் அறைகூவலாக இருந்தது. இதனை ஒருவரும் மறுக்க முடியவில்லை. ஏனெனில் பிரதான ஆசாரியரும், மூப்பரும் இயேசுவின் கல்லறையைப் பாதுகாத்த காவலர்களுக்கு,அவரின் உயிர்த்தெழுதலை மறைக்க லஞ்சம் கொடுக்க முயல்வதை நாம் மத்தேயு28:11- 15 வசனங்களில் காண்கிறோம். இயேசுவின் கல்லறை இன்றும் காலியாக இருக்கிறது.
வேதாகமத்தில் சொல்லப்படுள்ள சம்பவங்கள் உண்மைதான் என்பதை அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. பூதம் கிணறு வெட்ட கிளம்பிய கதை போல, கிறிஸ்தவத்தை மறுக்க (மறைக்க) அகழ்வாராய்வு செய்ய கிளம்பியவர்கள், தங்கள் ஆராய்வின் பலனாக சான்றுகளைக் கண்டு பிரமிப்படைந்து அவற்றை மறுக்க இயலாமல் வேதாகமத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தொல்பொருளியலின் தந்தை என்று போற்றப்படும் சர் வில்லியம் ராம்சே என்பவர் ஆவார். கிறிஸ்தவத்தின் வரலாற்றுத்தன்மை, அது வெறும் கட்டுக்கதையல்ல - கட்டுக்கடங்கா வரலாற்று உண்மைகளடங்கியது என்பதைப் பறைசாற்றுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
பழங்கால படைப்புகளின் நம்பகத்தன்மை அதற்குள்ள கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கையைக் கொண்டே மதிப்பிடப் படுகிறது. ஒரு படைப்பு உண்மையானதாக இருக்கவேண்டுமெனில் அதற்கு ஒரு கையெழுத்துப்பிரதியாவது இருக்க வேண்டும். பண்டைக்கால நூல்களில், ஹோமர் என்பவர் எழுதிய இலியட் என்ற காவியத்துக்கு 643 கையெழுத்துப்பிரதிகளும், ஜூலியஸ் சீஸர் எழுதிய யுத்த விளக்கங்கள் என்ற நூலுக்கு 10 கையெழுத்துப்பிரதிகளும், பிளேட்டோவின் டெட்ராலஜிஸ் என்ற நூலுக்கு 7 கையெழுத்துப்பிரதிகளும் கிடைத்துள்ளன. (இது ஒரு சுருக்கமான பட்டியலே). ஆனால் புதிய ஏற்பாட்டுக்கு இதுவரைக் கிடைத்துள்ள கையெழுத்துப்பிரதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? லத்தீன், சீரியாக் மொழிகளில் மட்டும் ஏறக்குறைய 20000 கையெழுத்துப்பிரதிகளும், கிரேக்க மொழியில் 5300கையெழுத்துப்பிரதிகளும் இதுவரை கிடைத்துள்ளன. பிளேட்டோவின் ஞானத்தையும் ஹோமரின் இலியட் இதிகாசத்தையும்னம்புவேன் ஆனால் கிறிஸ்தவத்தை மட்டும் புறக்கணிப்பேன் என்று கூறுவோரின் அறிவுக்கூர்மை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா! அவர்களுக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். டாக்டர் புரூஸ் மெர்ஜர் என்பவர் பழங்கால இலக்கியங்களிலுள்ள பிழைகளைக் கண்டறிவதற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டார். அவர் தன் ஆராய்ச்சிக்காக,
1.புதிய ஏற்பாடு
2.இலியட்
3.மகாபாரதம் ஆகிய நூல்களை எடுத்துக் கொண்டார். எழுத்துப் பிழை, வார்த்தைகளின் வாக்கிய அமைப்பினால் பொருள் மாறவில்லையெனில் அவற்றை இவர் பிழையாக கருதவில்லை. இவருடைய ஆராய்ச்சியின் படி, இலியட்டில் 15600 வரிகளும், புதிய ஏற்பாட்டில் 20000 வரிகளும், மகாபாரதத்தில் 250000 வரிகளும் மொத்தம் உள்ளன. அவற்றில் இலியட்டில் மொத்தம் 764 வரிகள் பிழையுள்ளவை, அதிலும் ஒவ்வொரு 20 வரியிலும் ஒரு வரியின் பொருள் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பிழைவிகிதம் 4.9% ஆகும். மகாபாரதத்தில் 26000 வரிகள் பிழைய்ள்ளவை ந்று கண்டறியப்பட்டுள்ளது.பிழைவிகிதம்10% ஆகும். ஆனால் புதிய ஏற்பாட்டில் 40 வரிகள் மட்டுமே பிழையுள்ளவை. பிழைவிகிதம் 0.2% மட்டுமே. இப்படியிருக்க நாம் எதை தைரியமாக நம்ப முடியும்? என்னைக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு உடனே பதில் கூரிவிடுவேன்.
கிறிஸ்தவத்தின் உண்மை அதன் வல்லமை ஆகியவை யாராலும் மறு(றை)க்கவியலாததாக உள்ளது. கிறிஸ்தவத்தை எதிர்த்து நின்றவர்களின் பெரும்பாலோனோர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டே மரித்தனர். இதற்கு நல்ல ஒரு உதாரணம், தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் வாலிபன்.
பிரெஞ்சு தத்துவ ஞானி வால்டேர் என்பவர், "இன்னும் சில வருடங்களில் கிறிஸ்தவம் இந்த உலகத்தை விட்டு மறைந்து போய்விடும்" என்று கெக்கரித்தான். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? அவன் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய அச்சுக்கூடத்திலேயே ஜெனீவா வேதாகமச்சங்கம் அமைந்து உலகமெங்கும் வேதாகம் அச்சடிக்கப் பட்டு வினியோகிக்கப்பட்டது.
சாட்சிகளையும் சான்றுகளையும் எழுத ஆரம்பித்தால் இங்கு இடம் கொள்ளாது.... மன்னிக்கவும் இந்த உலகமே கொள்ளாது. உலகத்திலுள்ள எல்லா வேதாகமங்களையும் அழித்து விட்டாலும் கூட, பல நூல்களில் மேற்கோள்களாக பயன் படுத்தப் பட்டுள்ள வேதாகம மேற்கோள்களை பயன்படுத்தியே ஒரு புதிய வேதாகத்தை மீண்டும் எழுதிவிட முடியும். ஆகவே வேதாகமத்தையோ, கிறிஸ்தவத்தையோ யாரும் நினைத்தால் கூட அழித்துவிட முடியாது.
இதனை வாசிக்கும் நீங்கள் கிறிஸ்தவ விசுவாசம் என்பது குருட்டுத்தனமானதல்ல என்றும் கிறிஸ்தவம் என்பது கும்மிருட்டில் குதிப்பதல்ல என்றும், அது இருட்டை நோக்கிய ஒரு அடி அல்ல மாறாக வெளிச்சத்தை நோக்கிய ஒரு வெற்றிப்படி என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவ விசுவாசம் பகுத்த்றிவு படுகொலை அல்ல, மாறாக அறிவுப்பூர்வமான, அறிவார்ந்த செயல் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். வரலாறு இதனை நமக்கு சான்றாக அறிவிக்கிறது. ஆராய்ச்சிகள் இதனை ஆதரிக்கிறது. " நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்ற இயேசுவில் இணைந்து நாம் இளைப்பறுவோம்.
 
Source: The Evidence that Demands A New Verdict by Josh Mc Dowell
               Surprised by Faith   by  Dr. Don Bierle

Thursday, August 16, 2007

யார் தெரியுமா?

ஒரு இளம் வாலிபன் ஆண்டவரின் அன்பினால் தொடப்பட்டவனாய் நான் மிஷனெரியாகச் செல்வேன் என்று தீர்மானம் பண்ணினான். அவன் தன் தீர்மானத்தை அடக்கி வைக்க மாட்டாதவனாய் அதை தன் சபையாரிடம் தெரிவித்தான். ''என்னை மிஷனெரியாக அனுப்புங்கள்'' என்று அவர்களிடம் முறையிட்டான். அவன் தீர்மானத்தைக் கேட்ட சபையார்,சிலர் எள்ளி நகையாடினர்,சிலர் உனக்கேன் இந்த வீண் வம்பு என்றனர், சிலர் அது தேவனுடைய சித்தமாயிருக்குமானால் தானாகவே நடக்கும், நீ ஒன்றும் செய்யாதே நீ சின்ன பையன் என்றனர், சிலர் மிஷனெரியாக தூர தேசம் செல்வது சுத்த முட்டாள்தனம், நீ ஏன் இங்கேயே ஊழியம் செய்யக்கூடாது என்றனர், சிலர் ரொம்ப அதிகப் பிரசங்கித்தனமாக பேசாதே என்றனர். மொத்தத்தில் எல்லாரும் அவ்வாலிபனின் தீர்மானத்தை அசட்டை பண்ணினர். ஆனால் அவ்வாலிபன் தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். ஆண்டவர் தனக்கு கொடுத்த பாரத்தின் படியும், தரிசனத்தின் படியேயும் ஊழியம் செய்ய கிளம்பிச் சென்றான். நடந்தது என்ன தெரியுமா? துணிச்சலான அவ்வாலிபன் வேதாகமத்தை பல மொழிகளில் மொழிபெயர்த்தான். இன்றுவரையும் அவனுடைய சாதனை முறியடிக்கப்பட முடியவில்லை. பல மொழிகளின் தந்தை என்றழைக்கப்படும் உயரிய இடத்தைப் பெற்றான். சரித்திரம் இன்றும் அவ்வாலிபனின் சாதனைக்கு சான்று பகருகிறது. ஏன் உங்கள் கைகளில் உள்ளவேதாகமத்தில் கூட அவனுடைய பங்கு இருக்கக் கூடும். அவ்வாலிபன் யார் தெரியுமா?


அவன் தான் இங்கிலாந்து தேசத்திலிருந்து இந்தியாவிற்கு ஊழியம் செய்யப் புறப்பட்டு வந்த வில்லியம் கேரி. ஆண்டவரே என்னையும் அந்த வாலிபனைப் போல ஆத்தும பாரமுடையவனாய்,அழிந்துபோகிற அன்பர்களின் ஆத்தும கதறலை கேட்டு அவர்களுக்கு உதவுகிறவனாய் மாற்றும்.

நான்:ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.(எரேமியா1:6,7)

Saturday, August 4, 2007

அன்பு இருந்தா வரும் பண்பு
பண்பு இருந்தா வரும் பணிவு
பணிவு தரும் உயர்வு

உயர்வு தரும் மமதை
மமதை தரும் போதை
மாற்றி விடும் பாதை

பாதைக்கு வழிகாட்டி
வாழ்விற்கு ஒளிகாட்டி
நாள்தோறும் நாட்காட்டி
வசனமே வழிகாட்டி

இத்தோட முடிக்காட்டி
எனக்கு வரலாம் கோட்டி

அப்பாட ஒரு வழியா முடிச்சிட்டேன்

நானுமிருக்கேன்யா ! ! !

ஒரு ஞாயிற்றுகிழமையன்று காலையில்

அம்மா: மகனே சீக்கிரம் எழும்பு ,ஆலயத்துக்கு போக வேண்டும். நேரமாகிவிட்டது.
மகன்: அம்மா நான் ஆலயத்துக்கு வர வில்லை நீ மட்டும் போ.
அம்மா: ஏன்?
மகன்: இரண்டு காரணங்கள். ஒன்று அங்குள்ளவர்கள் யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை,இரண்டாவதாக எனக்கு அங்குள்ளவர்கள் யாரையும் பிடிக்க வில்லை.
அம்மா: நீ கண்டிப்பாக போக வேண்டும் என்பதற்கும் இரண்டு காரணங்கள் உள்ளன, ஒன்று இப்போது உனக்கு வயது 54,இரண்டாவதாக, நீ தான் அந்த ஆலயத்தின் போதகர்.