Thursday, August 31, 2017

வாக்குத்தத்தம் - நமது சொந்தம் ( The hope for living today)


இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். (மத்தேயு 28:20).


டேவிட் லிவிங்ஸ்டன் தன் தாய் நாடான ஸ்காட்லாந்துக்கு கடினமான பதினாறு வருட மிஷனெரிப் பணி மற்றும் புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிப் பணிக்குப் பின் திரும்பின போது, அந்த ஊழிய நாட்களில் அவருடைய சரீரமானது ஏறக்குறைய 27 விதமான காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு மிகவும் இளைத்து, மெலிந்து போயிருந்தார்.  சிங்கம் ஒரு முறை அவரைத் தாக்கினபடியால், அவருடைய இடது கை பயன்படுத்த முடியாமல் வெறுமனே தொங்கிக் கொண்டிருந்தது.

கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடம் அவர் உரையாற்றும் போது, “ நான் தூர தேசத்தில் தனிமையில் மிகவும் கடினமான ஒரு வாழ்க்கை வாழந்த காலத்தில் என்னைத் தளரச் செய்யாமல் தாங்கினது என்ன என்று உங்களிடம் சொல்லட்டுமா?” அது கிறிஸ்துவின் வாக்குத்தத்தமே, “ இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.”

இந்த வாக்குத்தத்தமானது நமக்கும் சொந்தமானதே. நாம் எவ்வளவுதான் கடினமான சூழ்நிலைகளினூடாகக் கடந்துச் சென்றாலும், கிறிஸ்து நம்மை விட்டு விலகுவதில்லை. நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியிலும் அவர் நம்முடனே கூட இருக்கிறார்.  இந்த வாக்குத்தத்தத்தை இன்று உங்கள் முன் நிறுத்திக் கொள்ளுங்கள். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும்!
- பில்லி கிரகாம்

(Taken and translated from Billy Graham's "Hope for Each Day"

Wednesday, August 30, 2017

அடுத்தது என்ன?மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் அறியத் தீர்மானி.


நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். யோவான் 13:17

உன்னுடைய நங்கூரத்தை நீ தகர்க்காவிட்டால், தேவன் கொடுங்காற்று அனுப்பு அதைத் தகர்த்து உன்னை வெளியாக்குவார். தேவனோடு கடலுக்குள் குதித்து, அவருடைய திட்டமாகிய உயர்ந்த அலைகளின்மீது செல்லும்போது உன்னுடைய கண்கள் திறக்கப்படும். நீ இயேசுவில் விசுவாசித்தால் அமைதலான நீரில் நிறைந்த மகிழ்ச்சியோடு உன்னுடைய நேரத்தை எப்போதும் செலவிடக் கூடாது. ஆழத்திற்குள் பிரவேசித்து, ஆவிக்குரிய அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எதையாவது ஒன்றைச் செய்யவேண்டுமென்று அறியும்போது, நீ அதைச் செய்தால், உடனே நீ அதிகம் அறிந்துகொள்வாய். ஆவிக்குரிய மந்த நிலை உன்னில் உண்டாகும்போது, அதின் காரணத்தை திரும்பிப் பார்த்தால், நீ செய்ய வேண்டும்மென்று அறிந்த ஒன்றை செய்யாது விட்டு விட்டாய் என்பதைக் கண்டுகொள்வாய். எனவே இப்போது நீ ஆவிக்குரிய பகுத்தறிவை இழந்தாய்; ஆபத்தான வேளைகளில் நிலைநிற்க முடியாமல் போகிறது. கற்றுக்கொண்டே இருக்க மறுப்பது ஆபத்தாகும்.

உன்னை தியாகஞ்செய்வதற்கான சந்தர்ப்பங்களை நீ உருவாக்குவது போலியான கீழ்ப்படிதலாகும். ரோமர் 12:1-3ல் கூறியுள்ள ஆவிக்குரிய செயல்களைச் செய்வதைக் காட்டிலும் தியாகம் எளிதானது. தன்னையே தியாகஞ்செய்யும் பெரிய செயலைக் காட்டிலும், தேவனுடைய சித்தத்தை உணர்ந்து, அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதே மிகச் சிறந்ததாகும். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம். இதுவரையிலும் நீ கண்டிராத புதிய அனுபவத்திற்குள் தேவன் உன்னை நடத்திச் செல்ல விரும்பும்போது, உன் பழைய அனுபவங்களையே திரும்பத் திரும்ப பறைசாற்றாதே.

-    ஆஸ்வால்டு சேம்பர்ஸ்


(“அவருடைய மேன்மைக்கு என்னுடைய முழுமை” என்ற தினதியான நூலில் இருந்து எடுக்கப்பட்டது).
My Utmost for His Highest by Oswald Champers

Sunday, August 27, 2017

அ முதல் அவரே எனக்கும் எவருக்கும்

அண்ட சராசரம் அனைத்தையும்
அன்பினால் அணைத்து
அமுதமாம் இணையில்லா வார்த்தைகளால்
அற்புதமாய் படைத்து
அடியேனை உம் சாயல்போல் மாற
அளவெடுத்து மண் பிசைந்து
அழகாக ஆணும் பெண்ணுமாக
அதிசய உரு கொடுத்து
அவர்களே ஆளட்டுமென
அதிகாரத்தையும் கொடுத்து பின்
அனுதினமும் அன்புறவு
அலகின் சூழ்ச்சியினால்
அதில் வீழ்ச்சி வந்தும்
அவதரித்து மரித்து மீட்டீர்
அகோர பாவத்தின் சாபம்
அதற்கான கிரயம் உம் ஜீவன்
அறிய முடியவில்லை
அன்பின் ஆழம் அகலம் உயரம்
அண்டினால் தீருமென் துயரம்
அன்பரின் சொல் மதுரம்
அவர் சிந்தின உதிரம்
அறிக்கையிட்டால் கழுவும் இதயம்
அவரிடமே அடிபணிகிறேன்
அனைத்தையும் நான் படைக்கிறேன்
அணுவளவும் பயமில்லையே!

 - by Arputharaj