மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல்
அறியத் தீர்மானி.
நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால்,
இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். யோவான் 13:17
உன்னுடைய நங்கூரத்தை நீ தகர்க்காவிட்டால்,
தேவன் கொடுங்காற்று அனுப்பு அதைத் தகர்த்து உன்னை வெளியாக்குவார். தேவனோடு கடலுக்குள்
குதித்து, அவருடைய திட்டமாகிய உயர்ந்த அலைகளின்மீது செல்லும்போது உன்னுடைய கண்கள் திறக்கப்படும்.
நீ இயேசுவில் விசுவாசித்தால் அமைதலான நீரில் நிறைந்த மகிழ்ச்சியோடு உன்னுடைய நேரத்தை
எப்போதும் செலவிடக் கூடாது. ஆழத்திற்குள் பிரவேசித்து, ஆவிக்குரிய அறிவைப் பெற்றுக்
கொள்ள வேண்டும்.
எதையாவது ஒன்றைச் செய்யவேண்டுமென்று
அறியும்போது, நீ அதைச் செய்தால், உடனே நீ அதிகம் அறிந்துகொள்வாய். ஆவிக்குரிய மந்த
நிலை உன்னில் உண்டாகும்போது, அதின் காரணத்தை திரும்பிப் பார்த்தால், நீ செய்ய வேண்டும்மென்று
அறிந்த ஒன்றை செய்யாது விட்டு விட்டாய் என்பதைக் கண்டுகொள்வாய். எனவே இப்போது நீ ஆவிக்குரிய
பகுத்தறிவை இழந்தாய்; ஆபத்தான வேளைகளில் நிலைநிற்க முடியாமல் போகிறது. கற்றுக்கொண்டே
இருக்க மறுப்பது ஆபத்தாகும்.
உன்னை தியாகஞ்செய்வதற்கான சந்தர்ப்பங்களை
நீ உருவாக்குவது போலியான கீழ்ப்படிதலாகும். ரோமர் 12:1-3ல் கூறியுள்ள ஆவிக்குரிய செயல்களைச்
செய்வதைக் காட்டிலும் தியாகம் எளிதானது. தன்னையே தியாகஞ்செய்யும் பெரிய செயலைக் காட்டிலும்,
தேவனுடைய சித்தத்தை உணர்ந்து, அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதே மிகச் சிறந்ததாகும்.
பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம். இதுவரையிலும் நீ கண்டிராத புதிய அனுபவத்திற்குள்
தேவன் உன்னை நடத்திச் செல்ல விரும்பும்போது, உன் பழைய அனுபவங்களையே திரும்பத் திரும்ப
பறைசாற்றாதே.
- ஆஸ்வால்டு சேம்பர்ஸ்
(“அவருடைய மேன்மைக்கு என்னுடைய
முழுமை” என்ற தினதியான நூலில் இருந்து எடுக்கப்பட்டது).
My Utmost for His Highest by Oswald Champers
No comments:
Post a Comment