Thursday, August 31, 2017

வாக்குத்தத்தம் - நமது சொந்தம் ( The hope for living today)


இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். (மத்தேயு 28:20).


டேவிட் லிவிங்ஸ்டன் தன் தாய் நாடான ஸ்காட்லாந்துக்கு கடினமான பதினாறு வருட மிஷனெரிப் பணி மற்றும் புதிய இடங்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிப் பணிக்குப் பின் திரும்பின போது, அந்த ஊழிய நாட்களில் அவருடைய சரீரமானது ஏறக்குறைய 27 விதமான காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு மிகவும் இளைத்து, மெலிந்து போயிருந்தார்.  சிங்கம் ஒரு முறை அவரைத் தாக்கினபடியால், அவருடைய இடது கை பயன்படுத்த முடியாமல் வெறுமனே தொங்கிக் கொண்டிருந்தது.

கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடம் அவர் உரையாற்றும் போது, “ நான் தூர தேசத்தில் தனிமையில் மிகவும் கடினமான ஒரு வாழ்க்கை வாழந்த காலத்தில் என்னைத் தளரச் செய்யாமல் தாங்கினது என்ன என்று உங்களிடம் சொல்லட்டுமா?” அது கிறிஸ்துவின் வாக்குத்தத்தமே, “ இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.”

இந்த வாக்குத்தத்தமானது நமக்கும் சொந்தமானதே. நாம் எவ்வளவுதான் கடினமான சூழ்நிலைகளினூடாகக் கடந்துச் சென்றாலும், கிறிஸ்து நம்மை விட்டு விலகுவதில்லை. நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியிலும் அவர் நம்முடனே கூட இருக்கிறார்.  இந்த வாக்குத்தத்தத்தை இன்று உங்கள் முன் நிறுத்திக் கொள்ளுங்கள். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும்!
- பில்லி கிரகாம்

(Taken and translated from Billy Graham's "Hope for Each Day"

No comments: