Saturday, September 2, 2017

மூன்று தோட்டங்கள் ( Where are you today?)

வெளிப்படுத்தல் 22:1-14

பரிசுத்த வேதாகமத்தின் ஆரம்பத்தின் ஒரு தோட்டத்தைக் காண்கிறோம். முடிவிலும் ஒரு தோட்டத்தைக் காண்கிறோம். முதலாவது நாம் காண்பது மனிதன் இழந்துபோன பரதீசு ஆகும். கடைசியாக நாம் காண்பது மனிதன் திரும்பப் பெற்றுக் கொண்ட பரதீசு ஆகும். இந்த இரண்டு தோட்டங்களுக்கும் நடுவே, மூன்றாவதொரு தோட்டம் வருகிறது, கெத்சமனே தோட்டம். கெத்சமனே தோட்டத்தின் சொல்ல முடியாத கசப்பு மற்றும் பாழான நிலையின் மூலமாகவே நாம் ”ஜீவத் தண்ணீருள்ள சுத்தமான நதி” பாய்ந்தோடும் மகிமையான தோட்டத்தை மறுபடியும் கண்டு கொள்கிறோம். கெத்சமனே இல்லையெனில், புதிய எருசலேம் இல்லை. கெத்சமனே தோட்டத்தின் மறைவான மற்றும் புரிந்துகொள்ள முடியாத அந்த இரவு இல்லையெனில், நித்தியமான நம்பிக்கைக்கையின் ஆசீர்வாதமான அருணோதயம் இல்லை. நாம் தேவனுடைய குமாரனுடைய மரணத்தினாலே அவருடனே நாம் ஒப்புரவாக்கப்பட்டோம்.

நாம் நம் மீட்பைக் குறித்து சாதாரணமானதாகக் கருதும் அபாயத்தில் எப்பொழுதும் இருக்கிறோம். அதை அற்பமானதாகக் கருதுகிறோம். பாக்கியமானவைகள் மிக எளிதாக நமக்கு வரவேண்டிய உரிமைகளாகக் கருதப்படும் இடத்திற்கு வந்து, நமக்கு வரவேண்டியவை எனக் கருதப்பட்டு பெறப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. “கெத்சமனேயை நான் மறக்க முடியுமா?” ஆம், நான் மறக்கக் கூடும். அந்த மறதியில் நான் என் மீட்பின் பரிசுத்தமான பயபக்தியை இழந்துவிடுகிறேன். மேலும் “திரும்பப் பெற்ற பரதீசின்” உண்மையான மகிமையை நான் தவற விட்டுவிடுகிறேன். ”நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே.” இவ்வசனம் நாம் மனத்தாழ்மையுடன் இருக்கவும், “நான் யாருடையவன்,” நான் யாரைச் சேவிக்க வேண்டும் என்ற நினைவுடன் அவரைப் பற்றிய அன்பினால் நம் மனதை நிரப்பவும் உதவுகிறது.

(Taken and translated from John Henry Jowett's daily meditation"

No comments: