கிறிஸ்து வருகைப் பதிகம் நல்லவர்க்கும் தீயவர்க்கும் நடுவர் வந்தார்
நாட்டவர்க்கும் காட்டவர்க்கும் நட்பாய் வந்தார்
பல்லவர்க்கும் பாவிகட்கும் பரிவாய் வந்தார்
பத்தருக்கும் சுத்தருக்கும் பரிந்து வந்தார்
புல்லருக்கும் பொடியருக்கும் பொறுக்க வந்தார்
புரவலர்க்கும் இரவலர்க்கும் பொதுவார் வந்தார்
எல்லவர்க்கும் ஏழையர்க்கும் இரங்க வந்தார்
இம்மானு வேலரசே! வந்தார் தாமே.
- வேதநாயகம் சாஸ்திரியாரின் செபமாலை எனும் நூலில் இருந்து