Monday, September 13, 2010

தசம பாகம் குறித்த சில சிந்தனைகள்

1.தசம பாகம் கொடுத்தல் என்பது நியாயப்பிரமாணம் கொடுப்பதற்கு முன்பே விசுவாசத்தினால் ஏவப்பட்டு கொடுக்க ஆரம்பித்த ஒரு காரியம்.
2. புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தசம பாகம் கொடுப்பது தவறு அல்ல, ஆனால் முதலாவது கொடுக்கவேண்டியது நமது இருதயத்தையும் பிற்பாடே நமது பொருளுடைமைகளும்.
3. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் என்பதால் நாம் நியாயப்பிரமாணத்தின்படி தசம பாகம் கொடுத்தால் தவறு, ஆனால் விசுவாசத்தினால் கொடுப்பது என்பதில் தசம பாகம் ஆரம்பமே.
4. புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் கொடுப்பதை உற்சாகமாகக் கொடுக்கவேண்டும். உதாரத்துவமாகக் கொடுக்கவேண்டும். விசனமாயும் கட்டாயமாயுமல்ல. அப்படிக் கொடுத்தால் அதிலே ஒரு பிரயோஜனமும் இருக்காது.
5.தசம பாகம் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது தவறு. தேவன் ஆசீர்வதிப்பதிலிருந்து நாம் கொடுக்கிறோம். வாங்குதல் கொடுத்தல் பிரமாணத்தின்படி நாம் தேவனுக்காகக் கொடுக்கும்போது திரும்பவும் பெற்றுக் கொள்கிறோம்.
6. ஊழியக்காரன் தசமபாகம் காணிக்கைக் குறித்து பயமுறுத்தியோ, நயமாகவோ பிரசங்கம் பண்ண வேண்டிய தேவையில்லை. தேவனுடைய வார்த்தையை உண்மையாகக் கூறினால் தேவன் ஒரு காக்கையைக் கொண்டாவது போஷிப்பார். ஊழியக்காரனின் கண்கள் தசம பாகங்கள் காணிக்கை மீதல்ல, தேவன் மீதே இருக்க வேண்டும்.
7. தசம பாகம் கொடுத்தால் பரலோகம், கொடுக்காவிட்டால் நரகம் என்பது மிகவும் தந்திரமான ஒரு நய வசனிப்பு. இதற்கு வேத ஆதாரமில்லை.
8, நீங்கள் உங்களது காணிக்கை தசம பாகங்களை நீங்கள் செல்லுகிற சபைக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அது கட்டாயமல்ல.
9.தேவன் உங்களுக்கு கொடுக்க ஏவும் எவருக்கும் உங்கள் காணிக்கையைச் செலுத்தலாம். ஏனெனில் உங்களது காணிக்கை தேவனுக்கேயன்றி மனிதருக்கல்ல.
10. தசம பாகம் காணிக்கைகளை விட அதிக முக்கியமானது ஏழைகள், திக்கற்றவர்கள், விதவைகள், ஆதரவற்றவர்கள், அந்நியர்கள் ஆகியவர்களுக்கு உதவுவது ஆகும். ஏனெனில் காணிக்கை என்பதற்கும் கர்த்தருக்கே கடன் கொடுப்பது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா!
11. நமக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிற தேவனுக்கு தசம பாகம் கூட கொடுக்க மனதில்லாதிருப்பதும், உணர்ர்சிவச பிரசங்கங்களைக் கேட்டு உள்ளதையும் கொடுத்து ஏமாறுவதும் தவறு.
12. நாம் தேவனுக்காகக் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று நமது இருதயம் மாத்திரமல்ல, நமது நேரமும் கூட. அவரோடு ஒரு நாளில் குறைந்தது இரண்டு பணிநேரம் செலவிடுவது வாழ்க்கைக் குழப்பங்கள் மாத்திரமல்ல, வேதாகமக் குழப்பங்களும் வரும் வாயிலை மூடிவிடும். நேரம் உங்களைத் தேடி வராது, நீங்கள்தான் அதைத் தேடிப் போக வேண்டும். தூக்கத்தைக் குறைத்தாலே எளிதில் நாம் நேரத்தைக் கண்டுகொள்ளலாம்.

5 comments:

Anonymous said...

Good.

It would be useful if you can explain/clarify why Tithe is linked to "The LAW" afterwards?

Hebrews 7:5
நியாயப்பிரமாணத்தின்"படி" தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.
(have a commandment to take tithes of the people "according" to the law)

Thanks,
Stephen
http://martyrstephen.blogspot.com/

A.James Robinson said...

எபிரெயர்; 10 : 5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.
7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
8 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:
9 தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.

A.James Robinson said...

எபிரெயா; 10 : 5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;