Saturday, March 3, 2018

வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை – Rev. Billy Graham




உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. (யாக்கோபு 4:14)
வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் பெரிய ஆச்சரியமான காரியம் என்ன என்று அனேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக மாணவர் என்னிடம்  கேட்டார். “ வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை ” என நான் உடனே பதில் சொன்னேன். பெரும்பாலும் நாம் இந்த உண்மையை அறிவதற்கு முன்னமே, ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன, வாழ்க்கை அதன் இறுதி காலத்தை நெருங்கிவிடுகிறது.
ஒரு பக்கத்தில், வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை  நமக்கு அறைகூவல் விடுகிறது. நாம் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலம் என்ற ஒன்று இருந்தால், அது இப்பொழுதே! ”ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” என்று இயேசு சொன்னார் (யோவான் 9:4).
வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை  நம்மை ஆறுதல்படுத்தவும் செய்கிறது. வாழ்க்கை மிகவும் குறுகியது – நமக்கு முன்னே இருப்பது நித்தியம்!  உபத்திரவங்கள்  அல்லது போராட்டங்கள் நம்மை மேற்கொள்ளும்போது அல்லது கடினமான சூழ்நிலைகள் நம்மை தீவிரமாக தாக்கும்போது, அவை சீக்கிரத்தில் கடந்து போகும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:17-18).
இந்த  உலக வாழ்க்கை நீண்டகாலம் நிலைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழாதீர்கள். அது நடக்காது. மாறாக, நித்தியத்தை உங்கள் கண்முன் வைத்துக் கொண்டு வாழுங்கள்.

(Rev. பில்லி கிரகாம் அவர்கள் எழுதிய  “Hope for Each Day” என்ற தின தியான நூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

No comments: