வாலிபர்களுக்கு நடைமுறையில் கிறிஸ்தவத்தை கைக்கொள்ளுவதில் வரும் பிரச்சனைகள் ஏராளம். அதை உணர்ந்து சகோதரன் ஸ்டான்லி அவர்கள் எழுதிய இந்த புத்தகம் மிக பயனுள்ளதாகையால் இதை உங்களுக்கு வழங்குகிறோம்.
கடிதம் - 1
சோதனை அலைகள்
அன்புள்ளா அண்ணா
வாழ்த்துக்கள்.சமீபத்தில் நீங்கள் நடத்திய மாணவர் மலர்ச்சி முகாமில் பங்கு பெற்றவர்களில் நானும் ஒருவன். நான் கல்லூரியில் முதலாண்டு படிக்கிறேன். என்னைப்போன்ற மாணவருக்கு மலர்ச்சி முகாம் மிக பயனுள்ளதாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. நீங்களும் மற்ற அண்ணன்மார் ஆற்றிய சொற்பொழிவுகளும் அன்னை பேரிதும் கவர்ந்துவிட்டன. என்னையே மறந்து நன் நீங்கள் முகாமில் அறிமுகம் செய்த இயேசு நாதருக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன். ஏதோ மேலோகமே இறங்கி வந்து என் இதயத்தை நிரப்பி விட்டது போலிருந்தது.
ஆனால்,
கல்லூரிக்கு திரும்பி வந்ததும் ஒரே பிரச்சனை. இனி நல்வாழ்வு நடத்த வேண்டுமென்ற தீர்மானத்துடன் திரும்பிய எனக்கு ஒரே குழப்பம். விடுதியிலுள்ள சோதனைகள் எல்லாம் என்னையே நோக்கிப் பாய்கின்றன போலும்.முகாமில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை.முகாமில் நடந்ததெல்லாம் வெறும் வெத்து வேட்டு,அதை எல்லாம் நம்பாதே என்று யாரோ என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பது போலிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.எனவேதான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். உடன் பதில் எழுதுவீர்களா? ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டுமென்று விளக்கமாக எழுதுங்கள்.
இப்படிக்கு உங்கள் தம்பி
மோகன்.
தம்பி மோகனுக்கு,
உனது மடலுக்கு நன்றி. முகாமில் ஒரே குதூகலம்,திரும்பிய பின்னரோ ஒரே குழப்பம் என்று எழுதியிருந்தாய்.இயேசுனாதருக்கு உன்னை நீ அர்ப்பணித்துள்ள்ச்ச்ய் அல்லவா? அப்படியானால் அவர் சொல்வதை கேள்:-
''உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக"
"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்."
உனக்கு ஏன் முன்னை விட இப்போது சோதனைகள் அதிகம் தெரியுமா? இயேசுவின் பாத படிக்கு வந்து சேருமுன் நீ சாத்தானுக்கு அடிமையை இருந்தாய். இப்போது நீ இயேசுவின் பிள்ளை ஆனதும் அவனுக்கு உன் மேல் கோபம் வராமல் இருக்குமா? உன்னை எப்படியாவது விழத்தள்ளி மறுபடி உன்னை அவன் பக்கம் இழுத்துவிட அவன் தன்னால் ஆனது அத்தனையும் செய்வான். ஆனால் " உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்"என்று வேதம் கூறுகிறது.
கிறிஸ்தவ வாழ்வு ஒரு போராட்டம்தான்.ஆனால் வெற்றி நமதே. இறைவன் தமது வேதத்தில் கூறியுள்ளதை பார்:
"நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் "
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்."
" நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."
யாரோ உன் மன நிலையை குழப்பி எதையோ சொல்லிகொண்டிருப்பது போலிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தாய். அதுதான் சாத்தானின் சத்தம். அவன் ஒரு வஞ்சகன், அவன் பொய்யன். "அப்பாலே போ சாத்தானே நான் இயேசுவின் வார்த்தைகளையே நம்புவேன் "என்று சொல்லி விடு. நீ எதிர்த்து விட்டால் அவன் ஓடி விடுவான்.கொஞ்சம் இடங்கொடுத்து விட்டாலோ கூடாரம் போட்டு விடுவான். எச்சரிக்கையாயிரு.
காலையும் மலையும் தவறாது வேதம் வாசித்து ஜெபம் பண்ணு. உனக்காக நாங்கள் ஜெபம் பண்ணுகிறொம்.
அன்பின் வாழ்த்துகளுடன்
உன் அண்ணன்
யோவான் 14:1;16:33; 1யோவான்4:4; அப்.14:22; 2தீமோ.3:12; சங்.34:19.
No comments:
Post a Comment