சரியான தீர்மானங்களைத்தான் நீங்கள் எடுக்கிறீர்கள்
என்று எப்படி சொல்ல முடியும்?
என்று எப்படி சொல்ல முடியும்?
கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதாகம வழிகாட்டிகள் நமது தெரிந்தெடுப்புகளை சரிபார்க்க உதவும்.
1.இது வேத வசனத்திற்கு முரண்படுகிறதா?
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.... நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.(சங்.119:9- 11)
2. நான் இதற்காக ஜெபித்தேனா?
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் (பிலி.4:6). யோசபாத்தை தன்னுடன் யுத்தம் பண்ண இஸ்ரவேலின் இராஜ அழைக்கும்போது அவன்,கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான் (1இராஜா22:5). நமக்கும் இது நல்ல ஆலோசனைதானே?
3.இத்தீர்மானத்தினால் நான் யாரைப் பிரியப்படுத்த முயலுகிறேன்?
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே(கலா.1:10).
4.இத்தீர்மானத்தினால் எனது பக்தி இன்னும் விருத்தியடையுமா?
எனது சிந்தை உலகு சார்ந்ததாயிருக்கிறதா? உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினா லுண்டானவைகள். (1யோவான்2:15- 17).
5.இயேசு இதைச் செய்வாரா?
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.(1பேதுரு1:15).
6. நான் இதைச் செய்தது பிறருக்குத் தெரிந்தால் வெட்கமடைவேனா?
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. (எபே.5:11,12)
7. நான் கர்த்தரையே நம்பியிருக்கிறேனா?
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்( நீதி.3:5,6). தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்( நீதி.11:28).
8. சட்டத்தின் முன்னரும் உடன் பணியாளர் முன்னிலையிலும் குற்றமற்றவனாயிருப்பேனா?
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை(ரோமர்13:1).
9. நம்பகமான் ஆலோசனையை நான் நாடியிருக்கிறேனா?
உனது சூழ்நிலையை சரியாய் நிதானிக்க முடியாதபடி ஆன்மீகரீதியிலும் உடலுக்கும் மனதுக்கும் அடுத்தும் சம நிலையை இழந்ததாக உணருகிறாயா? ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்( நீதி.11:14).
10. இத்தீர்மானம் எவ்வாறு பிறரைப் பாதிக்கும்?
மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத்.7:12).இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்(லூக்கா17:1,2).
11.இதை நிறைவேற்ற மிகைப்படுத்தவோ பொய்சொல்லவோ வேண்டுமா?
ஒரு கருத்துக் கணிப்பின்படி 60சதவீத மக்கள் தங்கள் வேலைகளில் உயர்வதற்கு தொடர்ந்து பொய் சொல்லுகிறார்களாம்.பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்( நீதி.12:22)
12.இதின் நீண்ட கால விளைவு என்னவாயிருக்கும்?
அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்( நீதி.10:2).
13.இது எப்படி என் சாட்சியை பாதிக்கும்?
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் (1பேதுரு.2:12).
By. Jeanette D. Gardener
Source: Blessing
No comments:
Post a Comment