Friday, October 25, 2019

"பொருளாதார செழிப்பு உபதேசம்” பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Prosperity Gospel - Some reflections ( If you want to read the original in English scroll down)

”பொருளாதார செழிப்பு உபதேசம்” என்ற பதத்தைப் பற்றிய என் புரிதல் என்னவெனில், நீங்கள் இயேசுவைப் பின்பற்றினால், அவர் உங்களை செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்படிச் செய்வார் என்ற போதனையை இது குறிக்கிறது என்பதாகும். ஜனங்கள் இயேசுவைப் பின்பற்றவேண்டும் என்ற தீர்மானத்தை எடுப்பதன் மூலமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இனி வரும் நாட்களில் ஆரோக்கியமான மற்றும் செழிப்பான சுகவாழ்வு வாழலாம் என்று சொல்லி மக்களைக் கவர்வதற்காக இப்போதனையானது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
பல்வேறு காரணங்களின் நிமித்தமாக இது ஒரு ஆபத்தான போதனை என நான் நம்புகிறேன். முதலாவதாக மற்றும் (எனது கருத்தின்படி) முக்கியமானதாக உள்ள காரணம் என்னவெனில், இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் முன்மாதிரி மற்றும் போதனைகளுக்கு முரணானதாக இது இருக்கிறது. ”ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என இயேசு தன் சீடர்களுக்குப் போதித்தார் (மத்தேயு 16:24). இது அவரண்டை வந்து செழிப்படைவதற்கான ஒரு அழைப்பு அல்ல, மாறாக அவர் பின் சென்று பாடுபடுவதற்கான அழைப்பு ஆகும். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற தீர்மானம் எடுப்பதினால் வரும் பாடுகளைப் பற்றி விளக்கும் வேதபகுதிகளை புதிய ஏற்பாடு முழுவதிலும் நாம் காணலாம். நான் ஒரு முறை பிரசங்கம் செய்யும்போது, ஒரு புத்தகத்தைத் தவிர புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு புத்தகத்திலும் பாடுகள் பற்றி சொல்லப்பட்டிருப்பதைக் காண்பித்து நான் பேசினேன். இந்த உலக காரியங்களை உதறி தள்ளிவிட்டு அவைகளைப் பார்க்கிலும் மகா பெரிதான பொக்கிஷத்தைக் கண்டடைவதுதான் இயேசுவைப் பின்பற்றுதல் என்பதன் பொருள் என அவர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் (லூக்கா 9:58, மத்தேயு 19:21, மத்தேயு 13:44-46). தங்கள் வாழ்க்கையில் மிக மகிழ்வுடன் பாடுகளை அனுபவித்து இரத்த சாட்சிகளாக மரித்த அப்போஸ்தலர்கள் மூலமாக இது நன்றாக விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது. இது பற்றி, அப்போஸ்தலனாகிய பவுல் தன் பாடுகள் நிறைந்த வாழ்க்கை முறையை கள்ள போதகர்களின் உல்லாசமான வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசும் போது பேசுகிறார் (1 கொரிந்தியர் 4:8-13, 2 கொரிந்தியர் 4, 11). பொருளாதார செழிப்பு உபதேசமானது மிகவு ஆபத்தானது, ஏனெனில் வேதம் கூறும் நற்செய்து அதுவல்ல.

இயேசுவே மிகவும் உயர்ந்த பரிசு ஆவார். அவரே வாழ்வின் உணவு (ஜீவ அப்பம்). யோவான் 6 ம் அதிகாரத்தில், மற்றுமொரு அற்புத உணவுக்காக ஜனங்கள் இயேசுவிடம் வந்த போது, அவர்களுக்கு அவர் அதைக் கொடுக்கவில்லை. மாறாக, அவர்கள் தன்னை மட்டுமே தேடி வந்தார்களா அல்லது உணவுக்காக வந்தார்களா என அவர்களிடம் கேட்டார். அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கும் ஒரு கற்பனை பூதமாக இருக்க அவர் சம்மதிக்கவில்லை. அந்நேரத்தில் அனேகர் இயேசுவை விட்டு விலகிச் செல்ல அவர் அனுமதித்தார், ஏனெனில் உலகப் பிரகாரமாகத் தங்களுக்கு  கொடுத்தால்தான் இயேசு தங்களுக்குத் தேவை என அவர்கள் நினைத்தனர் (பொருளாதார செழிப்பு உபதேசம்). இயேசுவைப் பின்பற்றுவதினால் தங்களுக்கு வீடு இல்லை எனினும், ஒன்றுமில்லாதிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது இயேசுவை உயர்ந்த பொக்கிஷமாக கருதிய சீடர்கள் மட்டுமே அவரோடிருந்தனர், மற்றவர்கள் விலகிச் சென்றுவிட்டனர்.    கிறிஸ்தவர்களாகிய நமக்கு, இயேசுவே நம் விருப்பங்கள் மற்றும் குறிக்கோள்களின் மையமாக இருக்கிறார். இயேசுவின் மதிப்பு மற்றும் அவர் யார் என்பதிலிருந்து நம் பார்வையை விலக்கி, மாறாக இயேசு உங்களுக்கு என்ன செய்யக் கூடும் என்பதில் முழுக் கவனத்தையும் செலுத்த வைப்பதன் மூலமாக செழிப்பு உபதேசமானது வேத சத்தியத்தை திரித்துக் கூறுகிறது. இதன் விளைவாக அனேகர் இயேசுவிடம் வருகிறார்கள் (அல்லது வருவதாக நினைத்துக் கொள்கிறார்கள்). அவர்கள் இயேசுவின் மீது அன்பு வைத்தோ, பாவத்தை வெறுத்தோ, அல்லது அவருக்காக மரிக்கவும் ஆயத்தம் என்றோ வருவதில்லை. மாறாக, அவர்களின் இருதய விருப்பத்தின் படி சரீர சுகம், பொருள் மற்றும் செழிப்பை அவர்களுக்கு இயேசு தருவார் என நம்புவதினால் அவர்கள் வருகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவம் இது அல்ல, “இயேசுவிடம் வருவதற்கு” இதுவே அவர்களது நோக்கமாக இருக்குமெனில், அவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்கள் அல்ல.
இப்போதனையானது ஆபத்தானது என்பதற்கான மற்றுமொரு காரணம் என்னவெனில், கேட்பவர்களை குழப்பத்திலும் சோர்விலும் ஆழ்த்தக் கூடிய தவறான நம்பிக்கையை இது கொடுக்கிறது என்பதாகும். பொருளாதார செழிப்பு பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கேட்பவர்கள் தங்களுடைய ஊழியங்களுக்கு அதிகம் கொடுத்தால் அதிக செழிப்பு உண்டாகும் என வாக்குப் பண்ணுகின்றனர். பரிசுத்த வேதாகமத்தில் அப்படி ஒரு வாக்குத்தத்தம் கிடையவே கிடையாது. தேவன் வாக்குப் பண்ணாத ஒன்றை, அவர் தரவேண்டும் என நாம் எதிர்பார்க்கமுடியாது. அநேக ஏழை நாடுகளில், இப்போதனையின் விளைவாக கேட்பவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் கொடுத்து இழந்து, பிரசங்கிப்பவர்களைத் தவிர வேறு எவரும் செழிப்படையாத ஒரு நிலை காணப்படுகிறது. ஜனங்கள் தங்கள் விசுவாசத்தை சேதமடைய விடாதபடிக்கு இப்படிப்பட்ட போதனைக்கு எதிராக எச்சரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அனைவரும் இந்த உலக செல்வத்தை நாட வேண்டும் என புதிய ஏற்பாடு போதிக்க வில்லை. இந்த உலக உடைமைகளைக் குறித்து நாம் கவலைப்படக் கூடாது என்றே அது போதிக்கிறது. நாம் போதுமென்ற மனதுடன் அடிப்படை தேவைகளுடன் வாழ்வதற்கு, நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது (1 தீமோத்தேயு 6:8). ” எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று ஜெபிக்கும்படி இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். நமக்கு அவசியமானவைகளைப் பெற நமக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதேயன்றி, இவ்வுலக ஐசுவரியங்களைப் பெறுவதற்காக அல்ல. நம் தேவைக்கும் அதிகமாக நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், நாம் அச்செல்வத்தை தேவ இராஜ்ஜியத்திற்காக பயன்படுத்த வேண்டி நம்மிடம் அவை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே அதன் பொருள் (2 கொரிந்தியர் 8:1-15, லூக்கா 16:1-15). பொருளாதாரச் செழிப்பைப் பற்றி (அல்லது பணக்காரர்கள் ஆவது பற்றி) பேசுவதில் அதிக நேரம் செலவழிக்கும் போதகர்களைப் பற்றி எச்சரிக்கையாயிருங்கள் (1 தீமோத்தேயு 6:10).

தேவன் மிகவும் மேலான கனத்திற்கு உரியவர். மிகைப்படுத்தல் நிறைந்த இக்காலத்தில், அவருடைய மதிப்பைக் குறிப்பிட போதிய வார்த்தைகள் நம்மிடம் கிடையாது. உலக ஐசுவரியங்கள் மீது கவனத்தை வைக்கத் தூண்டும் எந்த போதனையும் அவருடைய மகிமையைப் பற்றிய மிகவும் குறுகிய பிம்பத்தையே தருகிறது.

நான் இதைப் பற்றி எழுத மிகவும் அதிகமான காரியங்கள் உண்டு என்றாலும், நீங்கள் பொருளாதார செழிப்பு உபதேசத்தின் சாராம்சம் என்ன என்று உங்களுக்குச் சற்று விளங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

( இக்கட்டுரையானது பிரான்சிஸ் சான் (FRANCIS CHAN) என்ற தேவ மனிதரின் பின்வரும் இணையதள பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டு, தமிழ் கிறிஸ்தவர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.)


WHAT DO YOU BELIEVE REGARDING THE “PROSPERITY GOSPEL”?
My understanding of that term is that it refers to teachings which imply that if you follow Jesus, He will make you healthy and wealthy. It is often used to attract people to make a decision to follow Jesus so that they can spend the rest of their lives in health and prosperity.

I believe this is a dangerous teaching for several reasons. First and foremost (in my opinion) is that it contradicts the teachings and example of Christ and the apostles. Jesus taught His disciples “If anyone would come after me, let him deny himself and take up his cross and follow me” (Matt 16:24). It was not a call to come and prosper but rather the opposite- a call to come and suffer. The New Testament is full of passages explaining the suffering that comes with a decision to follow Christ. I once gave a sermon where I went through every book of the New Testament and showed how suffering was in every book but one. Jesus was clear that following Him meant forsaking things of this earth to find a treasure far greater (Luke 9:58, Matthew 19:21, Matthew 13:44-46). This was exemplified by the martyred apostles who spent their lives joyfully suffering. Paul speaks about this when he compares his lifestyle of suffering in comparison to false teachers living in luxury (1 Corinthians 4:8-13, 2 Corinthians 4, 11). It is dangerous because it is not the gospel.

Jesus is the greatest prize. He is the bread of life. In John 6, as people were coming to Him looking for another miraculous meal, He refused to give it to them. Instead, He asked them if they wanted Him alone. He refused to be their genie, granting every wish they might have. Jesus let great numbers of people walk away in that moment because they wanted Jesus only if He would provide for them materially (prosperity gospel). He was then left with the disciples who treasured Him regardless of if they were homeless and poor because of it. For the Christian, Jesus is the focus of our affections and aspirations. The prosperity gospel distorts this by putting the focus on what Jesus can do for you rather than the beauty and value of who He is. This results in many people coming to Jesus (or so they think), not because they have fallen in love with Him, hate their sin, and would die for Him, but because they believe He will give them the desires of their heart in health, wealth, and prosperity. This is not Christianity, and if this is the motivation of people “coming to Jesus”, they are not truly Christian.

Another reason this teaching is dangerous is that it gives false hope to listeners that can result in confusion and discouragement. Prosperity preachers often promise greater wealth if their listeners will give more to their ministries. This is never promised in Scriptures. We can never hold God to something that He has not promised. In many impoverished nations, this has resulted in listeners giving their resources without anyone becoming rich besides the preacher. This can lead them into questioning the faithfulness of God. People need to be warned against this kind of teaching so that their faith is not damaged.

The New Testament does not teach that everyone should expect riches on earth. Instead, it teaches that we shouldn’t really care about earthly possessions. We have been given something far greater, so we can be content with basic necessities (1 Timothy 6:8). Jesus taught his disciples to pray “give us this day our daily bread”. We are promised provision, but not riches on earth (Matthew 6:31-33). If we are given more, it just means that we’ve been entrusted to use those resources for His Kingdom (2 Corinthians 8:1-15, Luke 16:1-15). Beware of teachers who spend a lot of time talking about becoming wealthy (1 Timothy 6:10).
God is supremely valuable. In an age of exaggeration, there are no words left to describe His worth. Any teaching that places focus on earthly riches gives a diminished picture of His glory.
There is much more I could write, but I think you get the gist.

No comments: