Monday, November 29, 2021

தேவனுக்காக வாழ ஒரு தீர்மானம்

வாசிக்க: தானியேல் 1,2; சங்கீதம் 147; 1 பேதுரு 3

வேத வசனம்:  தானியேல் 1:  தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

கவனித்தல்: ”ஊரோடு ஒத்து வாழ்” என்று ஒரு பழமொழி சொல்கிறது. ஆங்கிலத்தில், “ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனை போல வாழு” என்று இதே பழமொழி வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. எவராகிலும் ஒருவர் வித்தியாசமாக வாழ முயற்சித்தால், மற்றவர்கள் அவரை குறை கூறி விமர்சித்து அல்லது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையை ஏற்றுக் கொண்டு பின்பற்றுமாறு அறிவுரை கூறுவார்கள். ஒருவர் தன் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்து மற்றவர்களில் இருந்து வேறுபட்டு செயல்பட்டால், அவரை வாழத்தெரியாத பைத்தியம் என்று மக்கள் சொல்வர். பாபிலோன் ராஜாவின் உணவினால் தன்னைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு தானியேல் தீர்மானித்த போது, அவனைச் சுற்றி இருந்தவர்கள் தானியேலைப் பற்றி இவ்வாறு சொல்லி இருக்கக் கூடும்.  ராஜாவுக்கு வேலை செய்யும்படி மூன்று வருட பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தானியேலும் அவனுடைய நண்பர்களும் இருந்தனர். இந்த இளம் வாலிபர்கள் யூத அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களாகவும் எவ்வித அதிகாரமும் இல்லாதவர்களாகவும் இருந்தனர். ஆயினும், பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் உணவினாலே, “தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி” தானியேல் தன் இருதயத்திலே தீர்மானம் எடுத்தான். இந்த தைரியமான முடிவு ஒரே ஒரு நாளுக்கானது அல்ல என்பதை நாம் பார்க்க வேண்டும். ஆகவே, ”பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனசின்” பயம் புரிந்து கொள்ளத்தக்கது ஆகும்.  ஆனால், ”தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்” (வ.9). நாம் தேவனுக்காக தீர்மானங்களை எடுத்து, பயம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ளும்போது, தேவன் நம் தீர்மானங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க நமக்கு உதவுகிறார்.

உலகத்தினால் தங்களைக் கறைப்படுத்தாதபடிக்கு/தீட்டுப்படுத்தாதபடிக்கு தீர்மானமாக இருந்த பல தேவ மனிதர்களைப் பற்றி வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். அவர்கள் தங்கள் தேவபக்தியுள்ள வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ள மறுத்து, தங்கள் வாழ்வின் சோதனைகள் எல்லாவற்றையும் ஜெயிப்பதற்கான வல்லமையையும் தேவ தயவையும் பெற்றுக் கொண்டார்கள். உதாரணமாக, ”நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று யோசேப்பு சொன்னார் (ஆதி.39:9). எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில், ஒரு விசுவாச வீரர்களின் பட்டியலை நாம் காண்கிறோம். ”தேவனுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்த ஒரு மனிதனைக் கொண்டு தேவன் என்ன செய்வார் என்பது இன்னும் இந்த உலகம் பார்க்கவில்லை” என்று டி.எல்.மூடியிடம் ஒரு நண்பர் சொன்னபோது, தேவனுக்காக அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும் மனிதனாக நான் இருப்பேன் என மூடி தீர்மானம் செய்து கொண்டார். டி.எல். மூடி மூலமாக  தேவன் என்னவெல்லாம் செய்தார் என்பதை வரலாறு நமக்குக் கூறுகிறது. நம் வாழ்வில், நம் கிறிஸ்தவ நெறிகளை சமரசம் செய்யப்பண்ணுகிற  பலவித சோதனைகள் மற்றும் சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். அப்படிப்பட்ட சமயங்களில், வேத பண்டிதரும் போதகருமான ஜான் மெக்ஆர்தர் சொல்வது போல, “சமரசம் செய்து கொள்ளாமல், தேவன் அவர் விரும்புகிறபடி நீங்கள் வாழ உங்களை அவருடைய கட்டுப்பாட்டில் விட்டுக் கொடுத்து விடுங்கள். அது இந்த உலகத்தில் வாழ்கிற எவருடைய வாழ்க்கையைக் காட்டிலும் பத்து மடங்கு சிறப்பான வாழ்வாக இருக்கும்.” தானியேலையும் அவனுடைய நண்பர்களையும் தேவன் கைவிட்டுவிடவில்லை. அவர்கள் மற்ற எல்லா வாலிபர்களைக் காட்டிலும் முகத்தில்  அதிக களையுள்ளவர்களாகவும் சரீர புஷ்டியுள்ளவர்களாகவும் இருந்தார்கள் (தானி.1:15). நாம் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கக் கூடாது (ரோமர் 12:2). நாம் தேவனையும், அவருடைய வார்த்தையையும் கனப்படுத்துவதற்கு ஒரு தீர்மானம் எடுக்கும்போது, அதைச் செய்வதற்கான பலத்தை அவர் நமக்குத் தருகிறார். ”மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்” என்று இயேசு சொல்கிறார் (லூக்கா 18:27).

பயன்பாடு:  நான் தேவனுக்காக, எதிர்ப்புகள் இருக்கும் இடத்திலும் தேவபக்தியுள்ள ஒருவாழ்க்கையை வாழ முடியும்.   உலகத்தில் இருப்பவனிலும் எனக்குள் இருப்பவர் மிகவும் பெரியவர் (1யோவான் 4:4). நான் கிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தைகள் எனக்குள்ளும் இருக்கும்போது, நான் கனிகொடுக்கும்படி அவர் என்னைப் பலப்படுத்துகிறார் (யோவான் 15:7-8). உலகத்திலிருந்து வரும் சோதனைகளை ஜெயிக்க பரிசுத்த ஆவியானவர் எனக்கு வல்லமையைத் தருகிறார் (கலா.5:16).  ”நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா.2:20).

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உமக்காக வாழ்வதற்கு நீர் தருகிற கிருபை மற்றும் வல்லமைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, எங்களுக்காக நீர் உலகத்தை ஜெயித்தடஹ்ற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவின் சாட்சியாக எல்லா இடங்களிலும் எல்லா நாட்களிலும் வாழ்வதற்கு உம் வல்லமையால் என்னை நிரப்பியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 330

A Godly determination

READ: Daniel 1,2; Psalms 147; 1 Peter 3

SCRIPTURE: Daniel 1: 8 But Daniel resolved not to defile himself with the royal food and wine, and he asked the chief official for permission not to defile himself this way.

OBSERVATION: An ancient proverb says, “live like a Roman in Rome.” If somebody tries to live differently, others will criticize or advise such a person to accept and follow the accepted practice of the land. If someone is firm to stick with his/her convictions and dare to stand alone to go against the common practice, people would say that such person is mad, who does not know how to live. People who lived around Daniel would have told such things about him when he became determined to refuse the royal food. Daniel and his friends were among the men chosen for the three years of special training to serve the king. Although these young Jewish men belonged to the royal and noble families, at that time, they were exiles and had no power. However, Daniel “resolved not to defile himself” with the food from king Nebuchadnezzar. We should remember that this bold decision was not just for one day. So, the fear of Ashpenaz, the chief of the emperor’s court official, is understandable. But God “caused the official to show favor” to Daniel. When we make godly decisions and face questions of fear and the future, God helps us accomplish our godly pursuits.

Throughout the Bible, we read many such godly men and women of God who were determined not to defile themselves by the world. They refused to compromise their godly life and received God’s favor and strength to overcome all the trials of their life. For example, Joseph said, “How then could I do such a wicked thing and sin against God?” (Gen.39:9). In Hebrews 11, we see a list of great people of God who lived by faith. When a friend of D.L. Moody told him, “It remains to be seen what God will do with a man who gives himself up wholly to Him,” he resolved to himself to be such a man to live for God. History tells us what God did through Moody. In our lives, we may face various temptations and situations that could lead us to compromise our Christian values. Such times, as John MacArthur says, “Don’t compromise and let God take your life and do with it as He pleases, and it may it be ten times greater than the life of anyone in this world.” God did not forsake Daniel and his friends. They were “healthier and better nourished” than any others. We should not conform to the pattern of this world (Rom.12:2). When we make a decision to honor God and his word, he gives us the strength to do it. Jesus said, “What is impossible with man is possible with God” (Luke 18:27).

APPLICATION: I can live for God and pursue a godly life even when I live in unfriendly environments. The one who is in me is greater than the one who is in the world (1 Jn.4:4). When I remain in Christ, and his words remain in me, he enables me to be fruitful (Jn.15:7-8). Holy Spirit gives me the power to overcome the temptations of the world (Gal.5:16). “The life I now live in the body, I live by faith in the Son of God, who loved me and gave himself for me” (Gal.2:20).

PRAYER: Father God, thank you for your grace and power to live for you in the ungodly world. Jesus, thank you for overcoming the world for us.  Holy Spirit, fill me with your power to be a witness of Christ everywhere and every day. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 330

Sunday, November 28, 2021

இரட்சிப்பில் வளருதல்

வாசிக்க: எசேக்கியேல் 47,48; சங்கீதம் 146; 1 பேதுரு 2

வேத வசனம்: 1 பேதுரு 2: 1. இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
2.
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
3.
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

கவனித்தல்: மனித வளர்ச்சி என்பது பிறப்பிற்கும் முதிர்ச்சி அடைதலுக்கும் இடையே படிப்படியாக நடைபெறுகிற ஒரு காரியம் ஆகும். ஒரு குழந்தை வளரும்போது,  அதன் மரபியல், ஊட்டச்சத்து மற்றும் வளரும் சூழ்நிலை ஆகியவைகளைப் பொறுத்து நிலையான மற்றும் ஒருபோதும் பின்னோக்கிச் செல்ல முடியாத வளர்ச்சியை உடையதாக வளருகிறது. குழந்தைப் பருவம் மற்றும் பதின்ம வயதுப் பருவத்திற் இடையே ஒரு பிள்ளை வளருகிற வேகமானது மிகவும் அதிகமாக இருக்கும். ஆயினும், ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு மனித சரீரம் வளர்ச்சி அடைவதில்லை. மனிதனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் வளர்ச்சியும்  மனித சரீர வளர்ச்சியுடன் பல ஒற்றுமைகளையும் தனித்துவமான வித்தியாசங்களையும் கொண்ட ஒரு தனித்துவமான ஒரு காரியம் ஆகும்.  இங்கே, " சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து" தங்களைத் சுத்திகரித்துக் கொண்டு ”என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே” மறுபிறப்பின் அனுபவத்தைப் பெற்றவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 1: 22-23). ஒரு குழந்தைக்கு வளர்ச்சி தேவையானதாக இருப்பது போல, இந்த கிறிஸ்தவர்கள் தங்கள் ஆன்மீக வாழ்க்கையில் வளர வேண்டும்.

ஆகவே, “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும்” விட்டு விடுங்கள் என்று பவுல் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். தேவ பக்தியற்ற இக்காரியங்கள் ஒரு கிறிஸ்தவனின் வாழ்வில் இருக்க தகுதியற்றவை. அதன் பின், ஒருவரின் ஆவ்க்க்குரிய வளர்ச்சிக்கு ”களங்கமில்லாத திருவசனமாகிய ஞானப்பால்” அவசியம் எனக் கூறுகிறார். புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல, கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையின் மேல் வாஞ்சையாக இருக்க வேண்டும்.   நாம் மிகவும் விரும்பும் எந்த உணவையும் விட தேவனுடைய வார்த்தையானது மிகவும் விரும்பத்தக்கதும், பலனுள்ளதும் ஆகும். ஒரு குழந்தை உணவு உண்ண மறுக்கும் போது, சிறிதளவு உணவை அந்த குழந்தையின் வாயில் வைத்து உணவை சாப்பிட்டுப் பார்க்கும்படி ஒரு தாய் செய்வார். இங்கே, தேவனுடைய வார்த்தையை விசுவாசிகள் வாஞ்சிக்க வேண்டும் என உற்சாகப்படுத்துவதற்காக அக்காட்சியை பேதுரு இங்கு நம் முன் வைக்கிறார். கர்த்தவர் நல்லவர் என்பதை அவர்கள் ருசி பார்த்திருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.  மனித சரீர வளர்ச்சியைப் போலல்லாது, நம் வயது என்னவாக இருந்தாலும், கிறிஸ்துவில் நம் ஆன்மீக வாழ்வில் நாம் தொடர்ந்து வளர முடியும்.

கர்த்தராகிய இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்னர் எதுவுமே செய்யத் தேவையில்லை என்று பல கிறிஸ்தவர்கள் நினைக்கின்றனர். நம் இரட்சிப்பில் நிலைத்திருக்கவும், வளரவும், தேவனுடைய வார்த்தையால் நம் ஆன்மீக வாழ்க்கையை போஷித்து, வளப்படுத்த வேண்டும். பின்வரும் கேள்விகளைக் கேட்டு நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக: நம் ஆன்மீக, கிறிஸ்தவ வாழ்வில் வளருகிறோமா? தேவனுடைய வார்த்தையை மிகவும் விருப்பத்துடன் வாஞ்சிக்கிறோமா? தேவனுடைய வார்த்தைக்கு நாம் உரிய இடம் கொடுக்கவில்லை எனில், நம் கிறிஸ்தவ ஆன்மீக வாழ்வில் எந்தவிதமான வளர்ச்சியும் இருக்காது. “பாவமானது வேதாகமத்தில் இருந்து உங்களை விலக்கி வைக்கும், இல்லையேல் இந்தப் புத்தகம் பாவத்தில் இருந்து உங்களை விலக்கிப் பாதுகாக்கும்” என ஜான் பன்யன் கூறுகிறார்.  அனேக கிறிஸ்தவர்கள் தேவனுடைய வார்த்தையினால் பலப்படுத்தப் படாதபடியினாலேயே, உலகப் பிரகாரமான சோதனைகளுக்கு எதிராக எதிர்த்து நிற்க முடியாமல் வீழ்ந்து விடுகிறார்கள். நாம் தேவனுடைய வார்த்தையை வாஞ்சித்து அனுதினமும் அதை வாசித்து, அது நமக்குத் தரும் ஊட்டத்தில்  நாம் வளருகிறோமா? நம்மை நாமே ஆராய்ந்து, சரிசெய்து கொள்வோம்.

பயன்பாடு:  தேவனுடைய வார்த்தையானது என் மனதைப் புதிதாக்கி, என் ஆத்துமாவிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. தேவனுடைய வார்த்தையானது என்னை எச்சரித்து, பாவம் செய்யாதபடிக்கு என்னைப் பாதுகாக்கிறது. தேவனுடைய வார்த்தையானது பிசாசுக்கு எதிராக நிற்பதற்கு எனக்கு பலத்தைத் தருகிறது; அது ஆவியின் பட்டயம் ஆகும். அனுதினமும், நான் என் ஆவிக்குரிய வாழ்வில் வளர, வாழ தேவனுடைய வார்த்தை எனக்கு அவசியம் தேவை. நான் தினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, அது சொல்கிறபடி வாழ்வேன். 

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, ஒரு போதும் தவறாத, ஆத்துமாவை உயிர்ப்பிக்கிற, என் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கிற தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் வார்த்தைகளை அனுதினமும் கேட்டு, அதன்படி வாழ எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, இன்றும் என்றும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையால் என் ஆன்மீக வாழ்வில் நிலைத்திருக்கவும், வளரவும் உம் ஞானத்தையும் வல்லமையையும் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 329

Growing in Salvation

READ: Ezekiel 47,48; Psalms 146; 1 Peter 2

SCRIPTURE: 1 Peter 2: 1 Therefore, rid yourselves of all malice and all deceit, hypocrisy, envy, and slander of every kind.
2 Like newborn babies, crave pure spiritual milk, so that by it you may grow up in your salvation,
3 now that you have tasted that the Lord is good.

OBSERVATION: Human growth is a progressive process that takes place between birth and maturity. As a baby grows, it has constant and irreversible growth, depending on genetic, nutritional, and environmental factors. A child’s growth velocity is maximum during infancy and adolescence. However, the human body does not grow after attaining a certain age. Human spiritual life and growth is also a process with many similarities and unique differences from human growth. Here, Apostle Peter writes to those who were born again “through the living and enduring word of God,” those who purified themselves by “obeying the truth” (1 Peter 1: 22-23). Like a baby requires growth, these Christians must grow in their spiritual lives.

“Therefore,” Peter exhorts them to get rid of “all malice and all deceit, hypocrisy, envy, and slander of every kind.” These ungodly things are unworthy to be in a Christian’s life. Then, Peter says that pure spiritual milk is necessary for a person’s spiritual growth. Here, “pure spiritual milk” refers to the unadulterated and undiluted word of God. Christians should “crave” for the word of God, “like newborn babies.” The word of God is more desirable and beneficial than any food that we like it most. When a child refuses to eat, a mother will make the child taste the food by putting a small quantity in its mouth. Peter brings the same scene here to encourage the new Christians to desire the Word of God; he reminds them they have tasted that the Lord is good. Unlike human growth, whatever our age may be, we can continue to grow in our spiritual lives in Christ.

Many Christians think that they do not need to do anything after they have accepted the Lord Jesus as their savior. To remain and grow in our salvation, we must nourish and enrich our spiritual lives with the Word of God. Let us examine ourselves: Do we grow in our spiritual lives? Do we crave for the Word of God?  There will be no growth in our Christian spiritual lives if we do not give the proper place for the Word of God. John Bunyan says, “Sin will keep you from this book, or this book will keep you from sin.” Many Christians are not able to stand against worldly temptations because they are not strengthened by the Word of God. Do we read and crave for the Word of God every day and grow in the nourishment it gives us? Let us discern and correct ourselves.

APPLICATION: The Word of God renews my mind and refreshes my soul. God’s word warns me and protects me from sinning. The Word of God gives me the strength to stand against evil; it is the sword of the Spirit. Every day, I need God’s word to live and grow in my spiritual life. I will read, meditate on God’s word, and put it into practice.

PRAYER: Father God, thank you for the Bible, which is the infallible, soul-refreshing Word of God that answers all my questions. Jesus, help me to hear your words every day and live accordingly.  Holy Spirit, give me your strength and wisdom to remain and grow in my spiritual life by the power of the Word of God today and always. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 329

Friday, November 26, 2021

நம் நம்பிக்கை ஜீவனுள்ள நம்பிக்கை

வாசிக்க: எசேக்கியேல் 45,46; சங்கீதம் 145; 1 பேதுரு 1

வேத வசனம்:  1 பேதுரு 1: 3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
4.
அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

கவனித்தல்: ”நம்பிக்கைதான் வாழ்க்கை; நம்பிக்கை இல்லாமல் எவரும் இந்த உலகத்தில் வாழமுடியாது” என்று மக்கள் சொல்வதை அடிக்கடி நாம் கேட்கிறோம். எந்தவிதமான நிச்சயமுமின்றி, ஒரு காரியம் நடைபெறவேண்டும் அல்லது உண்மையாக வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் மற்றும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், வேதாகமம் கூறும் நம்பிக்கை உலகத்தில் இருந்து நாம் கேட்கும் நம்பிக்கை பற்றிய கருத்து அல்லது அர்த்தத்தில்  இருந்து வித்தியாசனமானது ஆகும்.  உலகப்பிரகாரமான நம்பிக்கையானது, “நிச்சயமில்லாத நன்மை” ஆக இருக்கையில், வேதாகம நம்பிக்கையானது ஜான் பிளன்சர்ட் சொல்வது போல, “நிபந்தனையற்ற நிச்சயத்தன்மை உடையதாக” இருக்கிறது. ”நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஒத்த கருத்துடையதாக இருக்கிறது; ஏனெனில் இயேசு கிறிஸ்துவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்வதற்கான விசுவாசிகளின் நோக்கமானது நரகத்துக்கு தப்பி நித்திய மகிமைக்கும் பிரவேசிப்பதைப் பற்றிய எதிர்பார்ப்பாக இருக்கிறது” என்று  ஜான் மெக்ஆர்தர் என்பவர் எழுதுகிறார்.  அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாவது நிருபத்தில், நம்பிக்கை என்பது பாடுகளின் மத்தியில் இருக்கிற கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்தும் குறிப்பிடத்தக்க ஒரு கருப்பொருளாக இருக்கிறது. சில அறிஞர்கள் பேதுருவின் முதலாவது நிருபத்தை நம்பிக்கையின் கடிதம் என அழைக்கின்றனர். இங்கு  மறுபடியும் பிறந்த அனுபவத்தைப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இருக்கும் ஜீவனுள்ள நம்பிக்கை பற்றி பேதுரு பேசுகிறார். நம் இரட்சிப்பு, கிறிஸ்துவில் மறுபிறப்பு தேவன் நமக்குத் தரும் பரிசு ஆகும். ”ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” என்று பேதுரு கூறுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல, நாம் “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும்” மரித்துப் போனவர்களாகவும், ”சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்: (எபே.2:1-5). ஒரு காலத்தில், நாம் “நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாக” இருந்தோம் (எபே.2:12). ஆனால், இப்பொழுதோ கிறிஸ்து இயேசுவில் ஜீவனுள்ள நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் மீதான நம் விசுவாசமே நம் நம்பிக்கையின் அஸ்திபாரமாக இருக்கிறது. ஒரு பாமாலைப் பாடலில் உள்ளது போல, நாம் உறுதியான கற்பாறையாகிய கிறிஸ்துவின் மீது நிற்கிறோம், மற்ற நிலமனைத்தும் புதைமணலே ஆகும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நம் விசுவாசத்தின் அஸ்திபாரம் ஆகும். நம் ஜீவனுள்ள நம்பிக்கையும் கிறிஸ்தவ விசுவாசமும் ஒன்றொடொன்று தொடர்புடையதும், பிரிக்க முடியாததும் ஆகும். உலகப் பிரகாரமான சுதந்திரம் நிலையானது அல்ல; அது பூச்சியினாலும் துருப்பிடிப்பதினாலும் அழிந்தும், மற்றவர்களால் திருடப்பட்டும் போகலாம் (மத். 6:19). ஆனால் நம் புது பிறப்பு அல்லது மறுபிறப்பின் அனுபவமானது ஒருபோதும் ”அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய” சுதந்திரத்தைப் பெற நம்மை நடத்துகிறது. கிறிஸ்துவுக்குள் நமக்கு இருக்கும் சுதந்திரம் நித்தியமானது ஆகும். தேவன் நமக்காக அதைப் பாதுகாத்து வைத்திருக்கிறார். நாம் மறுபடியும் பிறக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளாகவும், தேவனுக்கு சுதந்திரராகவும் ஆகிறோம் (ரோமர் 8:14-17). நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை அறிந்து கொள்ளும்போது, தேவனைத் துதிப்பதுதான் நம் இயல்பான பதிலாக இருக்கும். ஏனெனில் அது தகுதியில்லாத நமக்கு தேவன் அருளும் கிருபையின் பரிசு ஆகும். ”நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்று சொல்லும்போது, பேதுரு அதையே செய்கிறார், இயேசுவே நம் நம்பிக்கை (1 தீமோ.1:1); அவர் மூலமாக நாம் ஜீவனுள்ள நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம்; இயேசுவின் இரண்டாவது வருகையானது அனைத்து கிறிஸ்தவர்களும் விரும்புகிற ஆனந்த பாக்கியம் (ஆசீர்வாதமான நம்பிக்கை) ஆகும் (தீத்து 2:13). காம்பஸ் குருசேட் அமைப்பின் நிறுவனர் பில் பிரைட் அவர்கள் சொல்வது போல, ”தேவனுடன் இருக்கும்போது, வாழ்க்கையானது முடிவிலா நம்பிக்கை உடையதாக இருக்கிறது. தேவன் இல்லை எனில், வாழ்க்கையானது நம்பிக்கையற்ற முடிவாக இருக்கிறது.” நாம் நம் வாழ்வில் இப்படிப்பட்ட ஆசீர்வாதமான ஜீவ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோமா? இது மனிதனுக்கு தேவன் கொடுத்த அற்புதப் பரிசு ஆகும். வெற்றிகரமாக கிறிஸ்தவ வாழ்விற்கு இந்த ஜீவனுள்ள நம்பிக்கை நமக்கு உதவுகிறது.

பயன்பாடு: கிறிஸ்துவில் நான் ஒரு புதிய வாழ்வை உடையவனாக இருக்கிறேன். நம்புகிறதற்கு ஏதும் இல்லாதிருந்தும் நம்புவதற்கு தேவன் மேல் உள்ள என் விசுவாசம் என்னைப் பலப்படுத்துகிறது. தேவன் எனக்குத் தந்திருக்கிற ஜீவனுள்ள நம்பிக்கையானது அவருடைய மகிமைக்காக வாழ எனக்கு உதவுகிறது. பரலோகத்தில் தேவன் எனக்காக பாதுகாத்து வைத்திருக்கிற நித்திய பரிசைப் பெற நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்.  கிறிஸ்துவுக்குள் என் நம்பிக்கை இருக்கிறது. கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக எனக்குள் இருக்கிறார் (கொலோ.1:27).

ஜெபம்: கிருபையும் இரக்கமுமுள்ள தேவனே, நீர் எனக்குக் காண்பித்திருக்கிற மாபெரும் இரக்கத்திற்காக உமக்கு நன்றி. நீர் எனக்குத் தந்திருக்கிற புதிய வாழ்க்கை, ஜீவனுள்ள நம்பிக்கை, மற்றும் நித்திய சுதந்திரம் ஆகிய உம் பரிசுக்காக உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, என் விசுவாசத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு, முடிவு வரை விசுவாசத்தில் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 328