2019 பாராளுமன்ற தேர்தல் பிரிவினைவாதத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் இடையே நடக்கும் யுத்தமாக பார்க்கப்படுகிறது. ஒரு அணி இந்தியா என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே முழு உரிமையுடன் வாழ வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்து ஓட்டு கேட்கிறது. மறு அணி, இந்தியாவின் மேன்மை மற்றும் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமைதான், ஆகவே அனைவரும் ஒற்றுமையுடன் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்ற வாதத்துடன் பிரிவினை வாதத்திற்கு எதிராக அன்பை முன்வைத்து ஓட்டு கேட்கிறது. இது போக சில அல்லுசில்லுகள் உள்ளூர் அளவில் தங்கள் இருப்பைக் காண்பிப்பதற்காக காமெடி பண்ணிக் கொண்டிருக்கின்றன. இச்சமயத்தில் நடுநிலை வாக்காளர்கள் தங்கள் வாக்கை சிதறடிக்காமல், நாட்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டு பிரிவினை வாதத்திற்கு எதிராக தங்கள் வாக்கை செலுத்த வேண்டியது அவசியம். நாடு என்னும் பெரிய பிம்பத்தை மனதில் கொண்டு, மதம், இனம், மொழி மற்றும் சாதி இவைகளைத் தாண்டி உங்கள் கை விரல் “மை” நாளைய இந்தியாவின் எதிர்காலம் நீதி எனும் சூரியனின் வெளிச்சத்தில், நீங்கள் கை காட்டுபவர்கள் குரல் கொடுக்க உங்கள் வாக்கை மறக்காமல் பதிவிடுங்கள். கட்சி ஓட்டுகளல்ல, உங்கள் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகிறது.
இப்படிக்கு
ஒரு நடுநிலை தேசாபிமானி
ஒரு நடுநிலை தேசாபிமானி
No comments:
Post a Comment