Monday, April 15, 2019

நடுநிலை வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?


2019 பாராளுமன்ற தேர்தல் பிரிவினைவாதத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் இடையே நடக்கும் யுத்தமாக பார்க்கப்படுகிறது. ஒரு அணி இந்தியா என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே முழு உரிமையுடன் வாழ வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்து ஓட்டு கேட்கிறது. மறு அணி, இந்தியாவின் மேன்மை மற்றும் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமைதான், ஆகவே அனைவரும் ஒற்றுமையுடன் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்ற வாதத்துடன் பிரிவினை வாதத்திற்கு எதிராக அன்பை முன்வைத்து ஓட்டு கேட்கிறது. இது போக சில அல்லுசில்லுகள் உள்ளூர் அளவில் தங்கள் இருப்பைக் காண்பிப்பதற்காக காமெடி பண்ணிக் கொண்டிருக்கின்றன. இச்சமயத்தில் நடுநிலை வாக்காளர்கள் தங்கள் வாக்கை சிதறடிக்காமல், நாட்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டு பிரிவினை வாதத்திற்கு எதிராக தங்கள் வாக்கை செலுத்த வேண்டியது அவசியம். நாடு என்னும் பெரிய பிம்பத்தை மனதில் கொண்டு, மதம், இனம், மொழி மற்றும் சாதி இவைகளைத் தாண்டி உங்கள் கை விரல் “மை” நாளைய இந்தியாவின் எதிர்காலம் நீதி எனும் சூரியனின் வெளிச்சத்தில், நீங்கள் கை காட்டுபவர்கள் குரல் கொடுக்க உங்கள் வாக்கை மறக்காமல் பதிவிடுங்கள். கட்சி ஓட்டுகளல்ல, உங்கள் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகிறது.
இப்படிக்கு
ஒரு நடுநிலை தேசாபிமானி

3 comments:

Sridhar said...

நடுநிலை வாக்காளர்கள் :-) :-) :-)

All the best. Let us vote for India's growth and not personal growth which has been proved time and again.

Anonymous said...

திருட்டு திமுகவுக்கு வாக்களிக்க முடியாது
அதனால் மாம்பழம்

Anonymous said...

"ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு" என்பார்கள். இவர்கள் தெரிந்தே செய்கின்றார்களா? அல்லது தற்போதைய சூழலைப் புரியாமல் செய்கின்றார்களா? என்றே தெரியவில்லை. நாம் இந்த சமயத்தில் ஏதாவது செய்தே ஆக வேண்டும்? பின்புல நிர்ப்பந்த அடிப்படையில் செய்கின்றார்களா? என்றும் தெரியவில்லை.

குறிப்பாகக் கிறிஸ்துவ பாதிரிமார்கள் அளவு கடந்து பதட்டப்படுவதை இந்த முறை நன்றாகவே பார்க்க முடிகின்றது. காரணம் என்ன? கிறிஸ்தவ மக்களின் நலன் அனைத்தும் பா.ஜ.க பறித்து விட்டதா? சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் அவர்கள் மேல் நாள்தோறும் வன்முறை ஏவப்பட்டு வாழவே முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்களா?

இல்லையே? அவர்கள் எப்போது போலத்தான் இங்கே ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் சட்டம் ஒழுங்கு விசயங்களில் இயல்பாகத்தானே இருக்கின்றது.
வேறு என்ன தான் இவர்களுக்குப் பிரச்சனை?

அங்கு தான் அரசியல் உள்ளது.

இவர்களின் வருமானம் வருகின்ற வழி அனைத்தும் பா.ஜ.க அரசு அடைத்து விட்டது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த புதிதில் வெளிநாட்டிலிருந்து நலத்திட்டங்கள் என்ற பெயரில் எவரெல்லாம் நிறுவனங்களில் பெயரில் பணம் பெற்றுக் கொண்டு இருந்தார்களோ? கடந்த கால செயல்பாடுகள், கணக்கு வழக்குகள் போன்றவற்றை ஒப்படைக்கச் சொன்னது. அப்போது தான் பூதம் ஒவ்வொன்றாகக் கிளம்பத் தொடங்கியது.

அடுத்த இரண்டு வருடங்கள் ஒவ்வொரு பூதங்களையும் கழுவி குளிப்பாட்டிய போது எல்லாமே சாக்கடையாகவே இருந்தது. அதாவது எவர் பெயரைச் சொல்லி, எந்த கொள்கையின் அடிப்படையில் பணம் பெற்றுக் கொண்டு இருந்தார்களோ அதற்கான கணக்கு வழக்கும் இல்லை. இவர்கள் வாங்கிய பணத்தை குறிப்பிட்ட விசயங்களுக்கும் செலவளிக்கவும் இல்லை. அப்படியே செலவழித்தவர்களும் பத்து ரூபாய் பெற்றுக் கொண்டு பத்து காசை செலவழித்தவர்களாகவும் இருந்தனர். மீதி? ஸ்வாகா.............


http://deviyar-illam.blogspot.com/2019/04/blog-post_15.html