சாது கொச்சுக்குஞ்ஞு அவர்கள் பற்றி நான் கேள்விப்படும்போதெல்லாம் பல விசயங்கள் என் மனதில் தோன்றி எழும். தமிழகமெங்கும் அவரும் பொன்னம்மா சன்னியாசியும் நடந்தே சபைகள் தோறும் கிராமங்கள் தோறும் தேவ ஊழியம் எப்படி சாத்தியமாயிற்று! ஆனந்தமே பரமானந்தமே எனத் துவங்கும் பாடல் மற்றும் துக்கத்திண்டே பான பாத்ரம் என துவங்கும் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள் மனதில் விரியும். இதில் “ஆனந்தமே பரமானந்தமே” பாடல் எழுதப்பட்ட சூழலை முன்பொருமுறை தமிழ்கிறிஸ்தவ தளத்தில் பதிவிட்டேன். அப்பொழுது பாடல்களில் வரலாறு என்ற ஒரு திரியில் பல பாடல்களின் வரலாற்றை தொகுத்து எழுதிக் கொண்டிருந்தேன். அப்படி எழுதும்போது துக்கத்தின் பான பாத்ரம் பாடலை நான் அதன் வரலாறு தெரிந்தும் எழுதத் தயங்கினேன்.
என்னவெனில், அப்படிப் பட்ட ஒரு மனம் உள்ளவர்கள் இன்று கிறிஸ்தவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நான் அப்படி இருக்கிறேனா என்று ஒரு பக்கம் சிந்தனை, இன்னொருபக்கத்தில், அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்காவது மனம் வேறெதிலும் செல்லாது மனதை வியாபித்துக் கொள்வதையும் கவனித்திருக்கிறேன். சமீபத்தில் முகநூலில் நண்பர் ஒருவர் அந்தப் பாடலைப் பற்றிய தகவலை பகிர்ந்த போது, திரும்பவும் நான் அப்பாடல் வரிகளின் ஆழம் மற்றும் அது தூண்டிய சிந்தனைகளில் மூழ்கி அப்பாடலை திரும்பத் திரும்ப பாடி கரைந்து எனையுமறியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன்.
நிற்க, இக்கண்ணீர் என் சூழ்நிலையை நினைத்து அல்ல, மாறாக எப்படி என்னை பாழாக்கும் சூழ்நிலைகளிலும் பரிசுத்த தேவன் எனை அவர் பக்கம் அவ்ரைப் போல மாற்றுவதில் அவருக்காக வாழ என்னை தயார்படுத்துகிறார் என்பதை நினைத்து மனம் உருகி உளம் கசிந்து வரும் கண்ணீர்.
பல முறை நான் யோபு “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்” என்று சொல்லி இருப்பதைப் பற்றி தியானித்தும் சிந்தித்தும் இருக்கிறேன். ஆனால் அனேக தேவ மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் மிக முக்கியமான உண்மை, அவர்களுகு இவ்வுலக பாடுகள் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஏன், இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு இந்த ஒரு உலகமே ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ஆகவே தான் அவர்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அவர்களை அசைக்க வில்லை. ஏனெனில் அவர்கள் அவர்மீது அல்லவா கட்டி எழுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இதை எல்லாம் நினைத்து மனம் வேத வசனத்தை அசைபோடும்போது, அடிமனதிலிருந்து சொல்ல விரும்புகிற வசனம், “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்.” ஏனெனில் நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இயேசுவுக்காக. அவர் சொல்லி இருக்கிறார், “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும்
உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.” பிறகென்ன கவலை!
Friday, August 12, 2016
அலை பாயும் மனமே மலையாதே!
அலை மோதும் நினைவுகள் கரை கடப்பதில்லை
கரை மீது மோதினாலும் தரை தடுப்பதில்லை
தர தரவென்று இழுத்துச் செல்லும் சிந்தனை
செல்லுகிற பாதையில் செவிக்கினிய நல் வார்த்தை
நல்கிடும் நல்லவரே நாதனேசுவே
நாத கீத வேத மனைத்துமென்
பாதம் செல்லும் பாதைத் துணையே
வாதை எண்ணி வருத்தமில்லை
வருந்தி அழைக்கும் இரட்சகரே
இரங்கி என்னையும் ஆற்றுவாரே
ஆறாத காயங்களும் காயாத கசப்புகளும்
கசடற கழுவி கறை திரை நீக்கி
நீக்கமற அவர் நினைவில்
நீசன் என் தோஷமற அகற்ற
அகலம் உயரம் நீளம் ஆழம்
அளவிட முடியாதன்பு
முள்முடி சூடி எனக்காக வாடி
வதைபட்டவருக்கோ காடி
என கண்ணீர் வந்திடுதே
என் கவலைகள் மறந்திடுதே
மறவாதவர் என் உறவானவர்
உறைவிடமாக என்னுள் வந்தவர்
எனக்குள் நினைவுகள் இனி அலைபாய்வதில்லை.
அலைகள் மீது நடந்தவர் அதை அடக்கினவர்
அவரில் அடங்கி அவர் அன்பில் மூழ்கி
எனையே நான் மறந்தேனே
இனி நினைப்பதற்கு எதுவுமில்லையே
அவரைத் தவிர!
Monday, August 8, 2016
வேதப் புத்தகம்!!!
அறுபத்தி ஆறு புத்தகங்கள்
ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள்
இன்றும் இனிமை தித்தி(க்கும்)ப்புச் சுவை
ஈசனின் ஈகை, ஊட்டுவதோ நம்பிக்கை
உணர்த்தும், உடைக்கும், உருமாற்றும்
ஊசலாடும் மனங்களுக்கு அருமருந்து
என்றும் இள்மை, அளிப்பது வளமை
ஏக்கங்களை ஆக்கங்களாக்கும்
ஐயங்களை அகற்றி பயங்களை பறக்கடிக்கும்
ஒவ்வொருநாளும் ஓதற்கரிய இன்பம்
ஓலம், அலங்கோலம் அனைத்தையும் மாற்றும்
ஔஷதமே என் வேதப் புத்தகமே!!!
(எப்பொழுதோ தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக எழுதியது, தூர எடுத்துப் போடுவதற்காக எடுத்துவைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தைப் புரட்டியதில் திரும்பக் கிடைத்தது :) )

Sunday, August 7, 2016
பாடல் பிறந்த கதை - 1
பொதுவாக பிரபலமான பாடல்கள் உருவான கதையை வாசிக்கும் போது, அதன் பின் பிண்ணனி உணர்ந்து பாட ஏதுவாகவும், தேவனின் இடைபடுதலை அறிந்துணர்ந்து அர்த்தம் உணர்ந்து பாடவும் உதவியாக இருக்கிறது. நான் இங்கே சொல்லப் போவது பிரபலமான பாடல்கள் அல்ல, ஏன், இன்னும் சொல்லப் போனால் கிட்டத்தட்ட அனைத்தும் இன்னமும் முறையாக ஒலிப்பதிவு கூட செய்யப்படவில்லை, அதற்கான காலமும் சூழலும் கனிந்து வரவில்லை. ஆயினும் நான் எழுதப் போகும் பாடல் பிறந்த கதைப் பாடல்கள் அனைத்துமே நான் எழுதி இயற்றியவை. இதில் நான் என்று சொல்ல எதுவுமே இல்லை. எல்லாம் தேவ கிருபை. அந்தக் கிருபை பற்றிய கதையை சொல்வதில் எனக்கென்ன தயக்கம்!
2001 ஆம் ஆண்டு வாக்கில், நான் மருத்துவ விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்த காலம், பேரூந்தில் அன்றைய நாளின் தியான வேதபகுதியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே பேரூந்தோடு கூட நானும் என் சிந்தனையும் பயணம் செய்து கொண்டு செல்கிறோம். பேரூந்து சேர்மா தேவி எனும் ஊரைத் தாண்டி அம்பாசமுத்திரம் நோக்கி செல்கையில், என் மனதில் அன்று வாசித்த வேதபகுதி அப்படியே ஒரு காட்சியாக தோன்றுகிறது. அன்று காலையில் மூன்று வான சாஸ்திரிகள் இயேசு பிறந்த இடத்திற்கு ஒரு நெடிய பயணதிற்குப் பின் வந்து சேர்ந்து பணிந்து, காணிக்கை படைத்ததைப் பற்றி வாசித்திருந்தேன். அதை நினைத்தவுடனே என் மனதில் வண்ணமயமான அக்காட்சி, ஒரு பாலகன் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொள்ளும் அந்த சாஸ்திரிகளின் பணிவு மற்றும் தெளிவு நினைக்கவே ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் ஏன் அப்படி அவரைப் பணிந்து கொள்ள வேண்டும்! வாகன போக்குவரத்து தொலைத் தொடர்பு வசதியற்ற அக்காலத்தில் ஒரு நீண்ட பயணம், அதின் சவால்கள், அதின் முடிவில் தங்களையே தாழ்த்தி, மற்றவர்கள் பார்வையில் ஒரு சாதாரண ஏழைப் பிள்ளை முன்பு சாஷ்டாங்கமான பணிதல் - இதிலிருந்து நான் என்ன அறிந்து கொள்கிறேன்? ஏன்? ஏன்! என்ற என் மனதின் கேள்விகள் ஒருபக்கம், இன்னொருபக்கம் உடனே மடை திறந்த வெள்ளமென சில வரிகள் என் மனதில். உடனே எதிலாவது அதை எழுத வேண்டுமே என்று பார்த்தால் என்னிடம் பேப்பர் எதுவும் இல்லை. நான் இவ்வரிகளை மறந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில், சட்டைப் பையை துலாவினால், ஒரு சிறிய சீட்டு - அந்த பேரூந்து பயணச் சீட்டு. உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அதில் எழுதத் துவங்கினேன்...
தெண்டனிட்டுப் பணிந்திடுவோம்
தேற்றிடுவார் தொழுதிடுவோம்
அண்டி வந்த யாவரையும்
அன்புடனே அரவணைக்கும்
பரலோக தேவசுதன்
பரிசுத்த இயேசு பரன்
மிகச் சிறிதாக நான் வாசிக்கக் கூடிய அளவில் எழுதி முடித்த பின்பு எனக்கே ஆச்சரியமானதாக அந்த அனுபவம் இருந்தது. ஏனெனில் நான் முறைப்படி இசைகற்றவன் அல்ல, ஆலய பாடகர் குழுவில் நான் பல ஆண்டுகள் இருந்தது உண்மைதான் என்றாலும் தாளம் தப்பாமல் பாடுவதில் எப்பொழுதுமே சிரமப் பட்டிருக்கிறேன். ஒருவேளை இதை வாசிக்கும் என் ஆலய பாடகர்குழு நண்பர்கள் இதை நன்கறிவர். வேலை முடிந்ததுமே நேரடியாக நான் பெரிதும் மதிக்கும் என் குடும்ப நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களிடம் சென்று இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நண்பர் ஜான் மிகச் சிறந்த அறிவாளி மட்டுமல்ல, நன்கு இசை நுணுக்கங்களை அறிந்தவரும் கூட. நான் பாடல் வரிகளை எழுதும்போதே அதற்கான இராகமும் தானாகவே எனக்குள் உருவாகி இருந்த படியால், அவரிடம் பாடியும் காண்பிக்கிறேன். பாட்டைக் கேட்ட உடனே அவர் ரியாக்சன் என்ன என்று அறிவதில் மிகுந்த ஆசை. என்ன வென்று கேட்டேன். பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வரியும் துவங்குவதற்கு முன் விடும் ஒரு ப்ரேக் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்கையில் என் மனதில் மிகவும் பரவசம்.
தொடர்ந்து அவர், ஒரே ஒரு பல்லவி மட்டுமே இருப்பது ஒரு முழுமையான பாடல் அல்ல, இன்னும் சில பல்லவிகள் எழுத முயற்சி செய் என்று சொன்னார். இப்படி ஒரு சவால் இருக்கிறதா, ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்ற வேண்டுதலுடன் ஒரு நோட்டு மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறேன். என்னையுமறியாமல் தொடர்ந்து புதிய வரிகள் உருவாகி பாடிக் கொண்டிருக்கிறேன்...
2. எத்தனையோ துன்பங்கள்
ஏராளம் வேதனைகள்
அத்தனையும் அற்றுப் போகும்
அன்பர் இயேசு திருமுன்
நம் இயேசு சுமந்துவிட்டார்
எல்லாமே தீர்த்து விட்டார்
3. சிலுவை நம் தியானமானால்
செழிக்கும் நம் ஜீவியம்
சோர்வுகள் மறைந்துவிடும்
சோதனைகள் ஜெயிக்கலாமே
சிலுவை சுமந்திடுவோம்
இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
ஒரே மூச்சில் பாடி எழுது முடித்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி. மறுபடியும் நண்பர் ஜான் அவர்களிடம் முழுமையாக பாடிக் காண்பித்து பாடலை பத்திரமாக மனதில் சேமித்து வைத்தேன், என்றாவது ஒரு நாள் அனைவரும் கேட்கச் செய்யலாம் என்ற விசுவாசத்துடன். 15 வருடங்கள் கழித்து இப்பொழுது இதைப் பற்றி எழுதவாவது செய்ய ஆரம்பித்திருக்கிறேன், சீக்கிரம் முறையான ஒலிப்பதிவாக பார்க்கும் விருப்பத்துடன். பார்க்கலாம்!
விரைவில் மற்றுமொரு பாடல் கதையுடன் சந்திப்போம்.

Friday, June 17, 2016
நான் சாகவேண்டும்
ஏதேனும் ஜெபக் குறிப்பு உண்டா எனக் காத்திருந்தபோது
எனக்கெதிரே இருந்த நபர், “நான் சாக வேண்டும் என்று ஜெபியுங்கள்” என்ற போது பேரதிர்ச்சியாக
இருந்தாலும்,
உடனே ஆவியானவரின் ஆலோசனையின்படி ஜெபிக்கத் துவங்கினேன், “அன்புள்ள
ஆண்டவரே, உமக்கு ஸ்தோத்திரம். நீர் இன்றும் மாறாதவராயிருக்கிறபடியால் உமக்கு
ஸ்தோத்திரம். இந்த ஜெபக் குறிப்புக்காக உம் சமூகத்தில் வருகிறோம். “நான்” என்ற எண்ணமே எங்களுக்கு வரும்
அனேக பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது. “நான்” என்ற எங்களைப் பற்றிய
சிந்தனையினாலேயே நாங்கள் அனேக வேதனைகளில் சிக்கி விடுகிறோம். ஆகவே எங்களில்
இருக்கிற அந்த “நான்” என்பது
சாகவேண்டும் என ஜெபிக்கிறோம். “நான்” என்ற
நிலையில் இருந்து, எல்லாம் “கிறிஸ்து” என்ற நிலைக்கு வந்து வாழ்கிற
கிறிஸ்தவர்களாக எங்களை மாற்றும். அதுவே உமது திருவுளச் சித்தமாக இருக்கிற படியால்
உம்மிடம் எங்களை ஒப்படைக்கிறோம். உம் சித்தம் நடைபெறுவதாக. இயேசுவின் நாமத்தில்
ஜெபம் கேளும் எங்கள் பரம பிதாவே!” என்று
ஜெபித்து, ஆமென் சொன்னதும் அங்கே நிலவிய அமைதி - தெய்வீக அமைதி.
Subscribe to:
Posts (Atom)