ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை ஆரம்ப போதனைகளில் ஒன்றாகும்.
என்றாலும் கூட வேதாகமத்தின் போதனையை விட தாங்கள் சார்ந்திருக்கிற சபையின்
கொள்கையே பெரும்பாலான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகிறது. என்னவென்றே
தெரியாமல் எதையாவது செய்யும் அப்பாவி கிறிஸ்தவர்களாக அல்லாமல்
வேதாகமத்தின்படி நிதானிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாக இருக்க பின்வரும்
குறிப்புகள் உங்களுக்கு உதவும்.
ஞானஸ்நானம் என்றால் என்ன?
ஞானஸ்நானம்
என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள அதை நாம் இன்னமும்
தெளிவாக நடைமுறை தமிழுக்கு மொழி பெயர்த்தால் நன்றாயிருக்கும் என்று
நம்புகிறேன். பழைய காலத்து பிராமண குடும்பங்களில் " என்ன இன்னைக்கு ஸ்நானம்
பண்ணினேளா?"என்று ஆற்றிலிருந்து ஆத்துக்கு குளித்து திரும்பும் நபர்களை
விசாரிக்கும் அய்யராத்து மாமிகளின் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?அட ஆமாங்க
குளிப்பதைத்தான் இந்த மாமிகள் ஸ்நானம் என்று சொல்லுகிறார்கள். நம்
பேச்சுவழக்கில் யாராவது அவசரம் அவசரமாக சும்மா தண்ணீரை தன் உடல் மீது
தெளித்து விட்டு நான் குளித்துவிட்டேன் என்று சவடாலாக கூறிக் கொண்டு
வந்தால் நாம் அவரை பார்த்து என்ன சொல்லுவோம்? யோவ் என்ன காக்கா குளியல்
செய்துவிட்டு வந்திருக்கிறீர்? என்போம் அல்லவா! This is enough to
explain,I think.
இந்த ஞானஸ்நானம் என்பது ஒருவகையில் ஞானக்குளியல்
ஆகும்.ஆம். இயேசுவை பற்றிய ஞானத்தை பெற்றபின், இரட்சிப்பை பற்றிய அறிவை
பெற்றபின்,விசுவாசித்த பின் எடுக்கும் ஒரு செயலே!ஆமா நீங்க இந்த
ஞானக்குளியலை எடுத்துவிட்டீர்களா? இது முத்துக் குளியலைக் காட்டிலும்
உயர்வானது.
(source: http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=823&start=0 )
(இன்னுமதிகமாக அறிந்து கொள்ள:http://en.wikipedia.org/wiki/Baptism
ஞானஸ்நானம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 காரியங்கள் எவை?
ஞானஸ்நானம் ஏன்? எதற்கு? யாருக்கு?
1.தேவ நீதியை நிறைவேற்ற
யோவான்
அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,
நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக:
இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு
ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
(மத்.3:14,15)
2.இரட்சிக்கப்பட
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.(மாற்கு16:16)
3.இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற
ஆகையால்,
நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன்
பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான்
உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு
உபதேசம் பண்ணுங்கள். (மத்.28:19,20)
4.ஞானஸ்நானம் என்பது தேவ ஆலோசனை
யோவானுடைய
உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம்
பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும்
நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக
தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.(லூக்கா.7:19,20)
5.பரலோகத்திற்குப் போக
ஒருவன்
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில்
பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச்
சொல்லுகிறேன்.(யோவான்3:5)
6.பாவ மன்னிப்பு பெற
நீங்கள்
மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின்
நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின்
வரத்தைப் பெறுவீர்கள்.(அப்.2:38)
7.கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணப்பட
மேலும்
பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல,
நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய
மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட
அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோமர்.6:4)
8. கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும்படி
நாம்
யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும்,
எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு,
எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். (1கொரி.12:13)
9. கிறிஸ்துவை தரித்துக் கொள்ள
உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. (கலா.3:27)
10. நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை
ஞானஸ்நானமானது,
மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின்
உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய
உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேதுரு3:21)
மேலே கண்ட
பத்துக்காரியங்களையும் நாம் வாசித்து தியானிக்கும்போது ஞானஸ்நானம் என்பது
யாரால் எப்போது எதற்காக எடுக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ள
முடிகிறது. இப்போது நம் மனதில் ஞானஸ்நானம் யாரிடம் எடுக்கவேண்டும் என்ற
கேள்வி எழலாம். இயேசுவின் மூன்றரை வருட ஊழிய காலத்தில் சீடர்கள் ஞானஸ்நானம்
கொடுத்துவந்ததை அறிகிறோம். (யோவான் 3:22,யோவான் 4:3). இவர்களுக்கு முன்பே
யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். இந்த யோவான் தாயின் கர்ப்பத்தில்
இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவன். சீடர்கள் இயேசு கூட
இருக்கும் போதே ஞானஸ்நானம் கொடுத்துவந்தனர். ஆனால் இயேசு பரமேறிய பின்னர்
அவர்கள் பரிசுத்த ஆவியை பெறும்வரைக்கும் எதையும் செய்யாமல் காத்திருக்கும்
படி கட்டளையிடப்பட்டனர். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சபையில் முதல் நாளே
மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றனர். ஆகவே தற்காலத்தில் பரிசுத்த ஆவியினால்
நிரப்பப்பட்டவர்களிடம் ஞானஸ்நானம் பெறுவதே வேதாகம ஒழுங்கு ஆகும்.
நீங்கள் மறுபடி பிறந்தவரா? ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவரா?
Also posted in:http://tamilchristians.com/modules.php?name=News&file=article&sid=265&mode=&order=0&thold=0
Showing posts with label இயேசுகிறிஸ்து. Show all posts
Showing posts with label இயேசுகிறிஸ்து. Show all posts
Saturday, September 1, 2018
Wednesday, July 25, 2018
ஏசுவைப் பாடுவேன் ஏனென்று கேட்காதீர்கள்
ஏசுவைப் பாடுவேன்
ஏனென்று கேட்காதீர்கள்
ஏழை என் மனதிலுள்ள
ஏக்கங்கள் அனைத்திலும்
ஏமாற்றாமலெனை மாற்றினார்
ஏசியவர்கள் மத்தியில்
ஏளனம் செய்தவர் காண
ஏற்றமுறச் செய்தாரவர்
ஏன் என்ற கேள்விகள்
ஏராளம் இருந்தன
ஏதேதோ குழப்பங்கள்
ஏவினவன் மகிழ்ந்தான்
ஏதேனினின் தொடர்ச்சி என
ஏகடியம் செய்து வீழ்த்தப் பார்த்தான்
ஏந்தினார் தம் கரங்களில்
ஏதுக்கழுகிறாய் நான் இருக்கிறேன்
ஏகாதிபதி, என் கைகளில் அதிகாரம்
ஏசாயா முதலிய தீர்க்கருரைத்தபடி
ஏறினேன், கொல்கதாவில் பாவத்தை கொன்றுபோட்டேன்
ஏனெனில் நீ என் பிள்ளை, உனக்காகவே உயிர்கொடுத்தேன்
ஏற்பாட்டில் உள்ள படி உயிர்த்தெழுந்தேன்
ஏற்ற தந்தை நானிருக்க கலங்காதே
ஏக மனதோடு என்னிடம் வா என்றவர்
ஏனையோர் விலகினாலும், எப்போதும் உடன் இருப்பேன்
ஏசுவே என்றழைத்தால், நான் பேசுவேன்
ஏன் என்ற கேள்விக்கு பதில் தருவேன்
ஏனெனில் நானே உன் பதில் என்றார், இயேசு.
- அற்புதராஜ்
#Tamil_Christian_poem
#தமிழ்_கிறிஸ்தவ_கவிதை

Tuesday, December 5, 2017
கைவிட்டவர், மறந்தவர் - யார்?
நாம் அடிக்கடி வாசிக்கிற மற்றும் கேட்கிற வேதவசனங்களில் இருந்தும் கூட தேவன் நமக்கு புதிய புரிதலைத் தரத் தவறுவதில்லை என்பதை சமீபத்தில் ஒரு வீட்டுக் கூட்டம் நடத்துகையில் உணர்ந்தேன். தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது அல்லவா!
இந்த வசனத்தை வாசிக்கையில், மூன்று முக்கியமான விசயங்களை கர்த்தர் உணர்த்தினார். முதலாவதாக, ஒரு தாய் தன் பிள்ளையை மறப்பாளா? பொதுவாக அன்பிற்கு உதாரணம் காட்ட மனிதர்களாகிய நாம், அம்மாவையே குறிப்பிடுகிறோம். “தாயிற் சிறந்த கோவிலில்லை”. எனக் கொண்டாடுகிறோம். அன்பின் மறு உருவமாக நாம் நம்மைப் பெற்று, வளர்த்தூட்டிய அம்மாவைக் காண்கிறோம். ஒரு தாய் தன் பிள்ளையை மறப்பாளோ? அதெப்படி அவள் மறப்பாள் என்று நீங்கள் சொல்லக் கூடும்.ஆனாலும் விதிவிலக்காக, சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை நாளிதழ்களிலும், சமூக நடப்புகளிலும் வாசித்து அறிகிறோம். ஆனால் நம் தேவன் சொல்கிறார், அவள் ஒருவேளை மறக்கக் கூடும். நான் உன்னை மறக்க மாட்டேன்.
தேவன் நம்முடன் பேசுகையில் நமக்குப் புரியாத மொழியில் பேசுவதில்லை. நன்றாகக் கவனித்துப் பாருங்கள். அனேக சிறு குழந்தைகள் பேசுவது சுற்றிலும் இருப்பவர்களுக்குப் புரியாது. ஆனால் உடனிருக்கும் தாய் அதை சரியாக விளங்கிக் கொண்டு, குழந்தைக்கு புரியும் மொழியில் பேசவும் செய்வார். நம் தேவனும் நமக்குப் புரியும் மொழியில் நம்முடன் பேசுவதைக் கவனியுங்கள். நாம் பேசுவதும், நம் இதயத்தின் பெருமூச்சு கூட அவருக்குப் புரியும் என்பதும் எவ்வளவு நம்பிக்கையான ஒன்று பாருங்கள். நான் உன்னை மறப்பதில்லை - என்று சொன்னவர் அதன் தொடர்ச்சியாக மேலுமிரு காரியங்களைச் சொல்கிறார்.
இரண்டாவதாக, உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன் என்று சொல்கிறார். இங்கே இரு காரியங்களை நாம் கவனிக்க வேண்டும். நாம் நம் முகத்தைக் கூடக் கண்ணாடியில் சில நாள் பார்க்கத் தவறலாம். ஆனால் நாம் அனுதினமும் உபயோகிக்கிற நம் கரங்களின் உள்ளங்கைகளை அவ்வப்போது சும்மாவேணும் நாம் பார்ப்பதுண்டு. யோசித்து, சோதித்துப் பாருங்கள். நம் எல்லா அவயவங்களையும் நாம் எளிதில் காண இயலாது. ஆனால் உள்ளங்கைகள்!!! அந்த உள்ளங்கைகளில் நம்மை தேவன் வரைந்திருக்கிறார் என வாசிக்கிறோம். இது, ஏதோ ஓவியம் வரைவது போன்ற ஒன்று அல்ல, மூல மொழி தரும் பொருளில் சொல்வதானால், write or carve as a formal or permanent record. செதுக்குதல் எனும் பதத்தை நாம் எப்போது பயன்படுத்துவோம். ஒரு சிற்பி ஒரு கல்லை செதுக்கி அதை ஒரு அழியா படைப்பாக மாற்றுகிறார். கல்வெட்டுகளில் நாம் காணும் எழுத்துக்கள் அழிக்கக் கடினமானவை. அந்தக் கல்லுக்கு ஏதேனும் நேர்ந்தாலொழிய அந்த எழுத்துக்களுக்கு எதுவதும் நடக்காது, நடக்கவும் முடியாது. நம்மையும், நம்மைப் பற்றிய, நம் வாழ்வைப் பற்றிய சித்திரத்தையும் தேவன் தம் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார். நாம் எதற்குக் கவலைப் படவேண்டும்! அதை அவரைத் தவிர எவரும் அழிக்கவோ, மாற்றவோ முடியாது. அவர் நம் வாழ்வின் தற்போதைய சூழ்நிலையை மட்டும் அல்ல, நம் வாழ்வைப் பற்றிய மொத்த வரைபடமும் அறிவார். நம் திட்டங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை அவரிடம் விட்டுவிட்டு அவருக்கு முன்னுரிமை கொடுத்தால், அனைத்தும் அவரால் சாத்தியப்படும்.
ஏசாயா 49: 15,16
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

மூன்றாவதாக, உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது என்று சொல்கிறார். என்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உங்களிடம் நான் கேட்கிறேன். மதில், அல்லது சுவர் என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது. என் அருகில் இருந்தவர்கள், அது நம் வாழ்வில் வரும் பிரச்சனைகள் என்றும், சிலர் அதுதான் நம் வாழ்க்கை என்றும் சொன்னார்கள். நீங்கள் இருக்கிற இடத்தைச் சுற்றிப் பாருங்கள். சுவர் இல்லாத வீடு எப்படி இருக்கும். பாதுகாப்பற்றதாக இருக்கும் அல்லவா!
நாம் நம்மைச் சுற்றிலும் ஒரு சுவரை கட்டி வைத்திருக்கிறோம். காணக்கூடிய சுவர்கள் நாம் வாழ்கிற வீட்டிலும், கண்ணுக்குப் புலனாக சுவர்களை உறவுகளிலும் உண்டு. அருகருகில் இருந்தாலும், ப்கைமை, வெறுப்பு மற்றும் கசப்பினால் ஒரு வார்த்தை கூட பேசமுடியாதளவுக்கு நாம் ஒருவரோடுருவர் ஒரு தடுப்புச் சுவர் இருப்பதைக் காண்கிறோமல்லவா! நம் நெருக்கமான உறவுகளிடையே ஒரு அன்பின் சுவரை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் அரணாக இருக்கிறோம் என்பது உண்மைதானே! இவை காணமுடியாவிடினும், உணர முடியும். நம்மைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும் சுவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால்.... நாம் பாதிக்கப்படுவது உறுதி அல்லவா! அதுதானே பிசாசின் விருப்பமாகவும் இருக்கிறது. ஆகவேதான் அவன் நம் உறவுகளை, நம் மதில் சுவர்களை வீழ்த்த எப்போதும் விழைகிறான்.
ஆனால் ஆண்டவர் என்ன சொல்கிறார். நீ மட்டுமல்ல, உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் மதில் சுவர்கள் என் முன் இருக்கிறது. உலகப் பிரகாரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எவ்வளவு பலமுள்ளவை என்பதை இன்று வல்லரசு நாடுகளின் பயங்கள், பதைபதைப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? ஆனால் நாம் ஆண்டவரின் பாதுகாப்பில் இருக்கும் போது, பயப்படக் காரணமெதுவும் உண்டா என்ன! “உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்” என தீர்க்கன் சொல்லி வைத்திருக்கிறார். உங்கள் பாதுகாப்பைப் பற்றிய பயம் இருக்குமெனில், உங்கள் கையை உங்கள் கண்ணுக்கு நேராகக் கொண்டு சென்று, அதைத் தொட முடிகிறதா என்று பரிசோதித்துப் பாருங்கள். முடியவே முடியாது. ஏனெனில் கண்ணுக்கு அருகில் கொண்டு செல்லும்போதே இமைகள் தானாக உங்களை தடை செய்யும். கர்த்தரின் பாதுகாப்பில் நாம் இருக்கையில் நாம் எதற்கும் பயப்படவேண்டாம். சத்துரு முனைப்பாக நம் மதில் சுவரைத் தாக்கி நம்மை நெருக்க முயற்சி செய்யும்போது, தேவன் நமக்குதவ நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“அவருடைய பார்வையில் நாம்” என்பதை நினைத்தாலே தித்திப்பாக இருக்கிறதல்லவா. இன்று தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பார்வை படாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள், எதையாவது செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், நமக்காக, நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிற நம் தேவனை நாம் நோக்கிப் பார்ப்போம்.

எப்போதாவதல்ல, எப்போதும்! அதுவே நமக்குப் போதும்.
அன்புடன்
அற்புதராஜ்
9538328573
9538328573
Labels:
இயேசுகிறிஸ்து,
ஏசாயா,
கரிசனம்,
கவலை,
தேவ அன்பு,
பாதுகாப்பு
Thursday, November 30, 2017
இயேசு எல்லாவற்றிலும் புதுமையானவர்
மனிதனைத் தேடி மனிதனாக வந்தவர்
குருவைத் தேடும் மானிடரிடையே
சீடரைத் தேடித் தெரிந்தெடுத்து
“சீடராக்குங்கள்” என்றார்
சட்டம் பேசி, கட்டம் கட்டிய தலைவர்கள் நடுவிலும்
தேவன்பின் மகத்துவம் பகிர்ந்து
தேவைகள் சந்தித்து, தேவனுக்காக வாழ
தேன்மதுர வாழ்வியல் நெறிகள் உதிர்த்தார்.
ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தார்
எதிரிகளை மன்னித்தார்
துரோகிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தார்
துவண்டவர்களையோ தூக்கி நிறுத்தினார்
வீழ்ச்ச்சியால் விரிசலான உறவில்
தன்னைத் தாழ்த்தி, கிரயம் தந்து
“நானே வழி” என இணைத்து
மனிதனைத் தேடி வந்த இறைவன் அவர்
நாம் தேடுவதற்கு முன்னமே
நம்மை தெரிந்தெடுத்துவிட்டார்
எதையும் கொடுப்பதற்கு முன்னமே
தம்மையே தந்து, அன்பைக் காட்டியவர்
தனித்துவமான புதுமையானவர்
இயேசு

- Arputharaj
9538328573
Labels:
இயேசுகிறிஸ்து,
இரட்சகர்,
இரட்சிப்பு,
கிறிஸ்தவ நம்பிக்கை,
கிறிஸ்தவம்
Subscribe to:
Posts (Atom)