நான் நாளெல்லாம் உழைக்கிறேன்
நீங்கள் என்னை கண்டு கொள்வதில்லை
ஏனெனில் என்னை நீவிர் பார்ப்பது கொஞ்சநேரம் தான்
ஆனாலும் பலனை எதிர்பாராது உழைக்கிறேன்
என் சேவை உங்களுக்கு தேவை
அதை பெற்றுக் கொள்ளும் உங்கள் பார்வை
இந்த கவிதையில் உள்ள கோர்வை
தந்துவிடமுடியாது உம் பிரச்சனைக்கு தீர்வை
என்னை நீங்கள் தினந்தோறும் பார்க்கிறீர்கள்
ஆனால் என்னால் உங்களை பார்க்க முடிவதில்லை
சூழ்நிலைகள் என்னை மாற்ற முடியாது
என் எஜமானனின் உத்தம சேவகன் நான்
நான் சோர்ந்து போகும் போது
என் வேகம் குறைந்து விடுகிறது
உடனே என் எஜமான் என்னை கரிசனையாக
நன்கு ஆராய்ந்து வேண்டியதை செய்கிறார்
அவருக்காக ஓடுவது என் பாக்கியம்
என்னை உண்டாக்கியவர் பெயர் என்மேல்
என்னை பார்ப்பவர் எனக்கு செலுத்தப்பட்ட விலையை அறிவார்
நான் பயனற்றுப் போனால் குப்பையில்
பயன்படும்போதோ நான் உயரத்தில்
என் ஓட்டத்தில் காணப்படுவது பொறுமை
நான் இன்னமும் இலக்கை அடையவில்லை
ஆனாலும் ஓடுகிறேன் ஓட்டத்தை
ஓடுவேன் தொடர்ந்து நித்தமும்
என் உயிர் இருக்கும்வரை அல்லது
இந்த உலகின் முடிவுவரை
நான் யார் ?
No comments:
Post a Comment