Friday, December 31, 2021

நாளைய தினத்தைக் குறித்து நமக்கு என்ன தெரியும்?

வாசிக்க:  சகரியா 7-8; நீதிமொழிகள் 27; வெளிப்படுத்தின விசேஷம் 17

வேத வசனம்:  நீதிமொழிகள் 27: 1. நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

கவனித்தல்:   இன்றைய வாட்சப் தலைமுறையில், மக்கள் வேகமாக ஒன்றில் இருந்து மற்றொரு காரியத்திற்கு மாறி விடுகிறார்கள். தொழில்நுட்பங்கள் மற்றும் அது தொடர்பான தேவைகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. மக்கள் தங்கள் எதிர்காலத்தைக் குறித்து திட்டமிடும் முறை மிகப்பெரிய அளவில் மாறி இருக்கிறது. மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் அல்லது கடந்த கால சாதனைகளின் அடிப்படையில் பெருமை பாராட்டிக் கொள்வதை நாம் காண்கிறோம். எதிர்காலத்தைப் பற்றிய நம் மனிதப் புரிதல் ஒரு எல்லைக்குட்பட்டது என்றாலும், அதைப் பற்றி நமக்கு எவ்வித நிச்சயமும் கிடையாது என்றாலும் கூட, அனேகர் தாங்கள் எதிர்காலத்தில் எப்படி இருப்போம் அல்லது அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொல்லி தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். பரிசுத்த வேதாகமம் எவ்வித பெருமையையும் எதிர்த்து நம்மை எச்சரிக்கிறது. இங்கே அதற்கான காரணம் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது—”ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” லூக்கா 16ஆம் அதிகாரத்தில், அனேக ஆண்டுகள் நான் உயிர்வாழ்வேன் என்று நினைத்த ஐசுவரியவானாக இருந்த மூடனைப் பற்றி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு உவமையைக் கூறினார்.  அனேகர் இந்த உலகத்தில் நீண்ட காலம் உயிர்வாழ்வோம் என்று நம்பி கொண்டு, அதிகமதிகமாக செல்வங்களையும் உலகப் பொருள்களையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறமோ, நாம் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என இயேசு நமக்கு போதித்திருக்கிறார்.

நாளைய தினத்தைக் குறித்து, மத்தேயு 6:25-34 இல், இயேசு எதற்கும் கவலைப்படவேண்டாம் என உற்சாகப்படுத்துகிறார். வாழ்க்கையின் கவலைகள் நம்மை அழுத்தும்போது, இயேசுவின் வார்த்தைகளையும் தேவன் நம் மேல் வைத்திருக்கிற கரிசனையையும் நாம் நினைத்து வாழ வேண்டும். “என் காலங்கள் உம்முடைய கையில் இருக்கிறது” என்று சங்கீதக்காரனாகிய தாவீது பாடுகிறார்.  நம் எதிர்காலமானது தேவனின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுதலுக்கு எதிராக வேதம் போதிக்கிறது என்று சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். மாறாக, வேதாகமானது நாம் தாழ்மையாக இருந்து, நம் வாழ்வில் தேவனைச் சார்ந்து நாம் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த நம்மை உற்சாகப்படுத்துகிறது. ”ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” (யாக்கோபு 4:13-16) என யாக்கோபு மிகவும் எச்சரிக்கையுடன் பேசுகிறார்.. கிறிஸ்துவில், தேவன் நம் கடந்த கால தோல்விகளை மேற்கொள்ளவும், நமக்காக மிக அழகிய எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணி இருக்கிறார். பெருமையினால் நாம் அவைகளை சுதந்தரித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். நாம் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருக்கும்போது, எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு தேவன் தம் கிருபையை தந்து நம்மைப் பெலப்படுத்துகிறார். தேவனை நம்பி, நாம் எதையும் எதிர்கொள்ளமுடியும்.  தேவனை நம்பி, நான் எதையும் எதிர்கொள்ள முடியும். எதிர்காலத்தைக் குறித்த நம் பார்வையை பிசாசு மங்கலாக்க முயற்சி செய்யும்போது, தேவன் ஆட்சி செய்கிறார் என்பதையும் எதிர்காலத்திற்கான திறவுகோல்களை இயேசு கைகளில் வைத்து இருக்கிறார் என்பதையும் பார்க்கும்படி நம் கண்களை தேவன் பிரகாசப்படுத்துகிறார். நம் எதிர்காலத்தைப் பற்றி அனைத்தும்  நமக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஏனெனில் அது வாழ்க்கையின் சுவராசியமான தன்மையை இழந்து போகச் செய்து சலிப்படையச் செய்து விடும். நம் தேவனுடைய கரங்களில்  நாமும் நம் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது நாம் நாளைய தினத்தைக் குறித்து நிச்சயமாக அறிந்திருக்கிற ஒரு காரியம் ஆகும்.

பயன்பாடு: எதையாகிலும் குறித்து பெருமை பாராட்டும்படி என் சிந்தனைகள் என்னைத் தூண்டும்போது, நான் தாழ்மையாக இருக்கும்படி தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் நான் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.  தேவன் மீது என் கவலைகள் அனைத்தையும் நான் வைக்கும்போது, அவர் என்னைக் கருத்தாய் விசாரித்தறிகிறார். நான் என் எதிர்காலத்தைக் குறித்து பேசும்போது, நான் அதைப் பற்றி அறிந்திருக்கிறவைகளை மட்டுமே பேசுவேன். இயேசு அனைத்தையும் அறிந்திருக்கிறார். தேவனுடைய சித்தத்தின்படி  நான் காரியங்களைச் செய்து வாழ்வேன்.

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,   என் எதிர்காலத்திற்காக நீர் தந்திருக்கிற அற்புதமான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் வார்த்தைகளை விசுவாசித்து, அதன்படி வாழ என்னைப் பலப்படுத்தியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவன் பார்க்கிறபடி நான் எல்லாவற்றையும் பார்ப்பதற்கும் தேவ கிருபையில்  தாழ்மையுடன் வாழ்வதற்கும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 360

What do we know about tomorrow?

READ: Zechariah 7-8; Proverbs 27; Revelation 17

SCRIPTURE: Proverbs 27: 1 Do not boast about tomorrow, for you do not know what a day may bring.

OBSERVATION: In the present WhatsApp generation, people swiftly move from one thing to another. Technologies and their corresponding demand are changing from time to time. The way people plan for their future also has been changed a lot. We see people boast about themselves based on their plans for the future or past achievements. Though the human understanding about the future is limited, and we have no assurance about it, many people boast about their future by saying how they would be or what their lives would become. The Bible warns us against any form of human pride. Here, the reason for it is given clearly—"for you do not know what a day may bring.” In Luke 16, we read a parable of our Lord Jesus in which we learn about a rich fool who thought he would live for many years. We see a lot of people accumulate more and more wealth and worldly possessions as if they are going to live here forever.  On the other hand, Jesus teaches us to store our treasures in heaven.

Concerning tomorrow, In Matthew 6:25-34, Jesus encourages us not to worry about anything. When life worries burden us, we need to remember Jesus’ words and God’s concerns for us. David sings, “My times are in your hands” (Ps.31:15). God knows our present, past, and future. Our future is in God’s hands! Some misunderstand that the bible is speaking against planning for the future. Instead, the bible encourages us to be humble and express our dependence on God in our lives. James uses a cautious expression, “you ought to say, “If it is the Lord’s will, we will live and do this or that” (James 4:13-16). In Christ, God helps us overcome our past failures and promises a beautiful future fo us. We cannot inherit them by pride, for God opposes the proud. As we walk humbly before God, he gives us his grace and equips us to face the future. Trusting God, we can face anything. When the devil tries to dim our vision about the future, God brightens our eyes to see that he is sovereign and holds the keys for our future. We may not or need not know everything about the future. For it will make our life bored. We know one thing for sure that our future and we are safe in the hands of God.

APPLICATION: When my thoughts prompt me to boast about something, I should never forget God and his words to be humble. When I cast all my anxieties on God, he takes care of me. When I speak about my future, I will speak only what I know about it. Jesus knows everything. I will live and do things as God wills.  

 PRAYER: Father God, thank you for your wonderful promise for my future. Jesus, strengthen me to believe your words and live accordingly. Holy Spirit, help me to see everything from God’s perspective and live humbly in God’s grace. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 360

(Tamil version of this devotion is posted here)


 

Thursday, December 30, 2021

பரிசுத்த வேதாகமம் கூறும் ஒரு வாழ்க்கைப் பாடம்

வாசிக்க:  சகரியா 5-6; நீதிமொழிகள் 26; வெளிப்படுத்தின விசேஷம் 16

வேத வசனம்:  நீதிமொழிகள் 26: 27. படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.

கவனித்தல்:  போட்டி நிறைந்த நம் நவீன சமுதாயத்தில், சிலர் தங்களுடைய நோக்கம் அல்லது இலக்குகளை அடைந்து தீர எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். சில நேரங்களில், மற்றவர்களை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள் அல்லது மற்றவர்களை வீழ்த்தி மேலே வருகிறவர்கள் வெற்றிகரமானவர்கள் என்று கருதப்படுவது நம்மை வேதனைப்படுத்துகிறது. இந்த உலகம் நல்லவர்களுக்கானது அல்ல என்று பலரும் சொல்வதை நாம் கேட்கிறோம். இங்கே, விலங்குகளைப் பிடிப்பதற்காக வேடர்கள் தோண்டி வைக்கும் குழியில் அவர்களே விழுந்து மாட்டிக் கொள்வதை ஒரு உருவகமாக ஆசிரியர் பயன்படுத்துகிறார். சாலமோன் தன் தந்தை தாவீதின் ஜெபத்தில் உள்ள வார்த்தைகளை நினைவுகூர்ந்து இதை எழுதி இருக்கலாம் (சங்.7:16,17).

நாம் மற்றவர்களுக்கு செய்வதுதான் நமக்கும் செய்யப்படுகிறது என்பது ஒரு பொதுவான கோட்பாடு ஆகும்.  ”மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (கலா.6:7). மற்றவர்களுக்கு தீமை செய்ய நினைத்து தாங்களே அவைகளில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய உண்மையில் நடந்த வாழ்க்கைச் சம்பவங்கள் ஏராளமானவைகளைப் பற்றி  நாம் கூற முடியும். தீமையான திட்டங்களைத் தீட்டி அதில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றி வேதாகமத்திலும் நாம் வாசிக்கிறோம். தங்களுடைய தீய திட்டங்களில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றி வேதாகமமும் நமக்குக் கூறுகிறது.  மொர்தெகாய்க்கு ஆமான் தயார் செய்து வைத்திருந்த அதே தூக்கு மரத்தில் அவன்  மரித்ததும், சிங்கங்களால் கொல்லப்பட்ட தானியேலின் எதிரிகள் பற்றிய கதையும் நமக்கு மிகவும் பரிச்சயமானவை ஆகும்.  மற்றவர்களுக்கு தீமை செய்ய நினைக்கிற மனிதர்கள் அவர்களே தங்களுடைய தீய திட்டங்களில் சிக்கி அழிவது போல, மற்றவர்களை ஆசீர்வதிக்கிற ஒருவர் ஆசீர்வதிக்கப்படுவார். ”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்” என்று நம் ஆண்டவர் இயேசு நமக்கு போதித்திருக்கிறார் (மத்.7:12).  மற்றவர்களை அன்பு செய்வதில், மன்னிப்பதில் மற்றும் கொடுத்தலில், நம் பிதாவாகிய தேவனைப் போல நாம் தாராளமானவர்களாகவும், பாரபட்சமற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என இயேசு நமக்குக் கூறுகிறார் (லூக்கா 6:36). நம் வாழ்க்கையில் சாதிக்க அல்லது முன்னேற நாம் உலகப்பிரகாரமான திட்டங்கள் எதையும் பின்பற்றக் கூடாது. நாம் கிறிஸ்துவின் முன்மாதிரியைக் கண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும்.  உலகப்பிரகாரமான திட்டங்கள் கவலைகளையும் பிரச்சனைகளையுமே தருகின்றன, நிலையான வெற்றியைத் தருவதில்லை. இயேசுவோ, இந்த உலகம் தருகிற பிரகாரம் நமக்குத் தருவதில்லை (யோவான் 14:27). கிறிஸ்து நித்திய மகிழ்ச்சியையும் தம் சமாதானத்தையும் நமக்குத் தருகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுகிறிஸ்துவை எவ்விதத்திலும் பின்பற்றி, எப்பொழுதும் அவரில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் தேவனுடைய அன்பின் பிரமாணத்தை நினைவு கூர்ந்து, அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாக  நம் உலகத்தை மாற்றுவோம்.

பயன்பாடு:  வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உலகப் பிரகாரமான கோட்பாடுகள் தேவனுடைய சட்டங்களுக்கு நேர் எதிரானவை. உலகப் பிரகாரமான திட்டங்கள் தற்காலிகமான வெற்றிகளைத் தரக் கூடும். ஆனால் அவைகளில் நிலைத்திருப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால் இயேசுவோ நித்திய வாழ்வையும் வெற்றியையும் தருகிறார். நான் எப்பொழுதும் இயேசுவைப் பின்பற்றி அவரில்   நிலைத்திருப்பேன். கிறிஸ்துவின் வார்த்தைகளையும் போதனைகளையும் பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைவுபடுத்தி, அவைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு பலத்தைத் தருகிறார். வாழ்க்கையைப் பற்றிய தேவனின் பாடமே எனக்குச் சிறந்தது ஆகும்.

 ஜெபம்நல்ல தேவனே, என் மீது பெருகுகிற உம் எல்லா அன்பு மற்றும் இரக்கங்களுக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம்மைப் போல இருக்கவும், எப்பொழுதும் எல்லா இடங்களிலும் உம்மைப் பின்பற்றவும் எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தீமையை நன்மையினால் வெல்ல எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 359

A life lesson from the Bible

READ: Zechariah 5-7; Proverbs 26; Revelation 16

SCRIPTURE: Proverbs 26: 27 Whoever digs a pit will fall into it; if someone rolls a stone, it will roll back on them.

OBSERVATION: In our competition-filled modern society, some people are ready to do anything to achieve their purposes or targets. Sometimes it hurts us when we see those who excel in deceiving others or those who come to the top by causing others to fall off are considered successful people. We hear many people saying that this world is not meant for good people. Here, the author uses a hunter’s pit as a metaphor to say how the hunter himself is trapped in the pit they dig to catch the animals. Solomon might have remembered the words of his father David’s prayer when he writes these words (Psalm 7:16,17).

It is a common principle that what goes around comes around. Apostle Paul says, “A man reaps what he sows” (Gal.6:7). We can say many real-life stories about how people who tried to harm others are trapped in their own evil plans. The bible also tells us the fate of evil-schemers who were trapped in their own evil plans. Haman’s death on the same gallows he prepared for Mordecai and the killing of Daniel's enemies by lions are familiar stories for us. Like a person who intends evil for others is trapped in his evil plans, a person who blesses others will be blessed. Our Lord Jesus teaches, “So in everything, do to others what you would have them do to you, for this sums up the Law and the Prophets” (Mt.7:12). In loving, forgiving others, and giving, Jesus tells us we need to be generous and impartial to be like God the Father (Luke 6:36). We should not follow any worldly plans to improve or achieve in our life. We need to see the example of Christ and should follow him. Worldly plans do not give permanent success but worries and problems. Jesus does not give us “as the world gives” (John 14:27).  Christ gives us eternal joy and His peace. We Christians are called to follow Jesus Christ in every way and remain in him always. Let us remember God’s law of love and make our world a better place for everyone to live.

APPLICATION: Worldly principles for success in life contrast to God’s principles for life. Worldly plans may give temporary success, but remaining in it is very difficult. But Jesus Christ gives me eternal life and victory. I will always follow Christ and remain in him. Holy Spirit reminds me of Christ’s words and teachings and gives me the strength to obey them. God’s lesson for life is the best for me.

 PRAYER: Good God, thank you for all your love and mercies that abound on me. Jesus, help me be like you and follow you always and in all places. Holy Spirit, help me overcome evil with good. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 359

(Tamil version of this devotion is posted here)

Wednesday, December 29, 2021

நான் உன்னுடனே இருக்கிறேன்

வாசிக்க:  சகரியா 3-4; நீதிமொழிகள் 25; வெளிப்படுத்தின விசேஷம் 15

வேத வசனம்:  சகரியா 4: 6 செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
7. பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

கவனித்தல்:   புத்தாண்டு ஆராதனைகளில் நாம் அந்த ஆண்டுக்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தை கேட்க விரும்புகிறோம். நாம் பிரசங்கங்களில் கேட்கிற மற்றும் வாக்குத்தத்த அட்டைகளில் பார்க்கிற பெரும்பாலான வாக்குத்தத்த வசனங்கள்  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். அவை தேவனுடைய ஜனங்கள் அல்லது தனிநபர்கள் தேவனிடம் திரும்ப அல்லது நம்புவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக முதலாவதாக சொல்லப்பட்டவைகள் ஆகும். ஒரு வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை வாசித்தறிவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவன் பேசிய வார்த்தைகளின் மூலமாக இன்று நம்முடன் பேச விரும்புவது என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு எப்போதுமே பயனுள்ளதும் அவசியமானதும் ஆகும். இங்கே, தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த செருபாபேல் சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்து தேவ ஆலயத்தை மறுபடியும் எடுத்துக் கட்ட ஆரம்பித்தார். ஆனால், யூதர்களின் எதிரிகள் அந்த வேலையை தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் செய்தனர். மக்கள் தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் பதிலாக தங்கள் வீடுகளைக் கட்ட ஆரம்பித்த படியால் இந்த எதிரிகள் சில வெற்றிகளை அடைந்தனர். ஆனால் தேவன் தம் ஜனங்களையும் அவர்களின் தலைவர்களையும் தன் தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியா மூலமாக ஆலயத்தை மறுபடியும் கட்டி முடிக்கும்படி உற்சாகப்படுத்தினார். 16 வருடங்களுக்கு முன்பாக மூலைக்கல்லை போட்ட செருபாபேல் தலைக்கல்லையும் கொண்டு வந்து வேலையை செய்து முடிப்பார் என தேவன் வாக்குப்பண்ணினார்.

செருபாபேல் தாவீதின் அரச வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு அதிகாரமோ இராணுவமோ இல்லை; அவர் அந்நிய தேச மன்னர்களால் அனுப்பப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட தேசாதிபதிகாக இருந்தான். ஆளுகை செய்கிறதற்கான அவனுடைய வலிமை  மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவும், மறுபடியும் ஆலயத்தை எடுத்துக் கட்டி முடிக்க  போதிய அளவு உதவுகிறதாகவும் இல்லை. ”பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று தேவன் செருபாபேலுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். தேவனுடைய ஆவியின் வல்லமையினால், செருபாபேல் தேவனுடைய வேலையை செய்து முடிக்க முடியும். வேலைக்குத் தடையாக இருந்த அனைத்து எதிர்ப்புகளும், அவை உயரமான ஒரு மலையைப் போல பெரிதாக இருந்தாலும், தேவனால் அபிசேகம் செய்யப்பட்டவர்களுக்கு முன்பாக ஒன்றுமில்லாமல் போகும். தேவனுடைய தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியாவின் ஊக்கமான வார்த்தைகளினால் எருசலேம் தேவாலய மறுகட்டமைப்புப் பணி துரிதமாக செய்து முடிக்கப்பட்டது. தேவன் நம் வேலையை ஆசீர்வதிக்கும்போது, நாம் தேவனுடைய பலத்தைப் பெறும்போது, நடைபெற சாத்தியமில்லாதவை என்று கருதப்படுகிற அல்லது தாமதமாகிக் கொண்டிருக்கும் வேலைகள் நடைபெறக் கூடியவைகளாக மாறுகின்றன. நாம் தேவனுடைய சித்தத்தில் வாழ்ந்து அவர் செய்ய வேண்டும் என விரும்புகிறவைகளைச் செய்யும்போது, நாம் எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. டான் மோயன் எனும் ஆராதனை வீரர் பாடுகிறது போல, “வழியே இல்லை என்று தோன்றுகிற இடங்களிலும் தேவன் பாதையை உண்டாக்குவார்.”  ஒரு மலை போன்ற பெரிய தடை முன்பாக நாம் நிற்கும்போது, தேவனை நம்பி, நாம் விசுவாச வார்த்தைகளைப் பேச முடியும்.  நம் முன் இருக்கும் மலைகளை எதிர்கொள்வதற்கான பலத்தை தேவன் நமக்குத் தருகிறார். செருபாபேலுக்கு உதவின அதே தேவன் நாம் அவருடைய சித்தத்தையும் வேலையையும் செய்யும்போது நமக்கும் உதவ முடியும். தேவனை விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். ஏனெனில், “நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று அவர் வாக்குப் பண்ணி இருக்கிறார்.

பயன்பாடு:   தங்களுடைய பலம், அறிவு, சமுதாய நிலைமை, மற்றும் கடின உழைப்பு ஆகியவை எந்த சவாலான வேலையையும் செய்து முடிக்க உதவும் என சிலர் நம்புகின்றனர். அவை எல்லாம் சற்று பலனளிக்கிறவையாக இருக்கின்றன. ஆயினும், “கர்த்தர் கட்டாவிடில்” நம் அனைத்து முயற்சிகளும் வீணாகி விடலாம். செருபாபேலைப் பலப்படுத்தின அதே தேவன் இன்று அவருடைய வேலையைச் செய்து முடிக்க எனக்கு உதவி செய்ய முடியும்.  நான் தேவனுடைய ஆவியின் வல்லமையை விசுவாசித்து, என் வாழ்வில் அவருக்கு சாட்சியாக இருக்க முடியும். தேவன் என்னுடன் இருக்கிறார்.

 ஜெபம்தந்தையாகிய தெய்வமே, உன்னதத்தில் இருந்து நீர் அருளுகிற பலத்துக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, முடிவு வரை உமக்கு உண்மையாக இருந்து உம் வேலையை செய்து முடிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 358

I am with you

READ: Zechariah 3-4; Proverbs 25; Revelation 15

SCRIPTURE: Zechariah 4: 6 “This is the word of the Lord to Zerubbabel: ‘Not by might nor by power, but by my Spirit,’ says the Lord Almighty.
7 “What are you, mighty mountain? Before Zerubbabel you will become level ground. Then he will bring out the capstone to shouts of ‘God bless it! God bless it!’”

OBSERVATION: In the New Year worship services, we love to hear God’s promise for the year. Most of the New Year promises we hear in the sermons or see in the promise cards are taken from the Old Testament prophetical books. They were first said to the people or individuals to encourage them to turn to or trust God. Reading the context of a verse is always helpful and essential to understanding what God wants to speak with us today through the verse he spoke centuries ago. Here, we see Zerubbabel, a descendant of David, who returned from exile and started rebuilding the temple of God. But, the enemies of the Jews tried everything to stop the work. These enemies got some success as people started to focus on building their homes instead of rebuilding the temple. But God again encouraged people and the leaders through his prophets Haggai and Zechariah to complete rebuilding the temple. God promised that Zerubbabel, who put the cornerstone 16 years ago, would also bring the capstone to finish the work.

Although Zerubbabel belonged to David’s royal family, he had no power or army; he was a governor sent or commissioned by foreign kings. His strength as a ruler was limited and did not fully help him complete the rebuilding task. God promised Zerubbabel that “Not by might nor by power, but my Spirit.” With the power of God’s Spirit, Zerubbabel can finish the work of God. God encouraged that all the opposition that hindered the work, even if they are as big as a tall mountain, will become none before God’s anointed. The rebuilding of the Jerusalem temple was completed quickly with God’s encouraging words through his prophets, Haggai and Zechariah. When God blesses our work, when we receive the strength of God, all things that are considered impossible or delayed works for years will become possible. When we live in God’s will and do what he wants us to do, we need not fear for anything. As Don Moen meaningfully sings, “God will make a way where there seems to be no way.” When we stand before a hindrance that is big as a mountain, trusting God, we can speak the words of faith. God gives us the strength to face the mountains before us. The same God who helped Zerubbabel can help us when we do His will and work. All things are possible for those who believe in God, for he promises, “I am with you.”

APPLICATION: Some people believe that their power, knowledge, social status, and hard work will help them complete any challenging tasks. They all have some value. However, I believe “unless the Lord builds,” all our efforts are vain. The same God who empowered Zerubbabel to complete his work can help me today. I can put my faith in the power of God’s Spirit and witness him in my life. God is with me.

 PRAYER:  Father God, thank you for the strength you give me from heaven. Lord, help me be filled in the Holy Spirit and do your work faithfully till the end. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 358

(Tamil version of this devotion is posted here)

Tuesday, December 28, 2021

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க ஒரு அழைப்பு

– நம் இருதயத்திற்கு தேவையான ஒரு செய்தி

வாசிக்க:  சகரியா 1-2; நீதிமொழிகள் 24; வெளிப்படுத்தின விசேஷம் 14

வேத வசனம்:  நீதிமொழிகள் 24: 32. அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
33. இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
34.
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.

கவனித்தல்:  முந்தின தலைமுறைகளைப் போலல்லாது, கிடைக்கக்  கூடிய தொழில்நுட்பங்கள், மற்றும் நம் வேலையை எளிதாக்கும் புது கருவிகள் நிமித்தம் மனித வாழ்க்கையானது எளிதானதாக மாறி இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து நகராமலேயே நாம் பல காரியங்களை இப்போது செய்ய முடியும். ஆயினும், இதனால் வரும் தீய விளைவு என்னவெனில், இது பல சரீர சுகம் சார்ந்த பிரச்சனைகளை நம் வாழ்வில் கொண்டு வருகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேலை அல்லது காரியங்களைச் செய்ய விரும்புதல் என்பது சோம்பேறித்தனம் ஆகும். உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின் படி, “இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேலை செய்தல் என்பது நான்காவது பெரிய உலகளாவிய பிரச்சனையாக மனிதர்களைக் கொல்லும் ஆட்கொல்லியாக மாறிக் கொண்டு வருகிறது. இது போன்ற சூழ்நிலை இனியும் தொடரக் கூடாது என பல புள்ளிவிவரக் குறிப்புகள் நம்மை எச்சரிக்கின்றன. இங்கு நீதிமொழிகள் 24:32-34 இல், சோம்பேறியின் இடத்தைப் பார்த்து சாலமோன் தான் கண்ட மற்றும் கற்றுக் கொண்டவைகளை பற்றி கூறுகிறார்.

நம் சரீரத்தின் அனைத்து புலன்களும் புதிய மற்றும் பயனுள்ள காரியங்களைக் கற்றுக் கொள்வதற்கு எப்பொழுதும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுகிறார்கள். நூலாசிரியர் இப்பொழுதுதான் முறையான பராமரிப்பு இல்லாமல், களைகளும் முட்செடிகளும் நிரம்பிய ஒரு சோம்பேறியின் திராட்சைத் தோட்டத்தை இப்பொழுது தான் பார்த்திருக்கிறார். அதன் பின்னர், அது எப்படி நடந்திருக்கும் என்பதை பகுப்பாய்வு செய்து, சாக்கு சொல்லி படுக்கையை விட்டு வெளியேறவோ அல்லது எதையும் செய்யவோ மறுக்கும் வழக்கமான சோம்பேறியின் படத்தைக் காட்டுகிறார். நீதிமொழிகள் 24:32-34 இந்த வேதபகுதியானது நீதிமொழிகள் 6:10-11 இல் உள்ளதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ஒத்திருக்கிறது. எவரும் சோம்பேறி ஆக விரும்புவதில்லை. ஆனால் எல்லா சோம்பேறித்தனமும் வேறொரு நாளில் செய்யலாம் என்று ஒத்திப் போடுவதில் அல்லது தள்ளி வைப்பதில் இருந்து துவங்குகிறது. ஒரு சோம்பேறியானவன் தன் படுக்கையில் இருந்து கீழே இறங்காமலேயே எல்லா காரியங்களையும் செய்ய முடியும் என்று நம்புகிறார் (நீதி.6:9; 26:14). சோம்பேறித்தனத்திற்கு கிடைக்கும் பரிசு வறுமையும் இல்லாமையுமே என நீதிமொழிகளின் ஆசிரியர் கூறுகிறார்.  வேறுவிதமாகக் கூறுவதானால், சோம்பேறி தன் சோம்பேறித்தனத்தினால் எதையுமே சம்பாதிப்பதில்லை. மாறாக, அவர் தீமைகளை உண்டாக்கும் பின்விளைவுகளைப் பெறுவார்கள். ஆனால், கடினமாக உழைப்பவர்களோ திருப்தி அடைகிறார்கள் (நீதி.12:11). ஒரு சோம்பேறியானவன் எறும்பினிடத்தில் இருந்து கூட கற்றுக் கொள்ள முடியும் என்றும் அவைகளைப் போல சுறுசுறுப்பாக ஞானத்துடன் இருக்க வேண்டும் என்பதை நீதி.6:6 குறிப்பிடுகிறது (நீதி.6:6). நாம் நம் சரீர மற்றும் ஆன்மீகத் தேவைகளை முறையாக கவனிக்காமல் அசட்டை செய்தால், நாம் அவைகளில் எந்தக் கனியையும் காண முடியாது. கோடைகாலத்தில் சேர்க்கிற ஞானமுள்ள மகனைப் போல நாமும் ஞானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு செடிக்கு தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படுவது போல, நம் ஆவிக்குரிய வாழ்க்கை நாம் கர்த்தரிடத்தில் உறுதியாக இருக்கவும், அவரில் வளரவும் நம் கவனம் தேவைப்படுகிறதாக இருக்கிறது. நம் சரீர மற்றும் ஆவிக்குரிய புத்துணர்ச்சி நம் அனுதின செயல்பாடுகளில் வெளிப்படுகிறது. நாம் தேவனை, அவருடைய வார்த்தையை, மற்றும் பரிசுத்த ஆவியானவரை அசட்டை செய்யக் கூடாது. நாம் அதிக கனிதருகிறவர்களாக இருக்க வேண்டுமெனில், நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். நாம் அதிக கனி கொடுக்கும்படி அவர் உரமிட்டு, சுத்திகரித்து, தேவனுடைய மகிமைக்காக அதிக கனிகொடுக்கச் செய்கிறார். நாம் தேவனுடனான நம் உறவு மற்றும் ஐக்கியத்தையும், ஆன்மீக வாழ்க்கையையும் ஒருபோதும் அசட்டை செய்யக் கூடாது.

பயன்பாடு: நான் என் வாழ்வில் சோம்பேறியாக இருக்கக் கூடாது. நான் என் சரீரத்திற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் உரிய கவனத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும். நான் என் ஆவிக்குரிய மற்றும் சரீர வாழ்க்கையை உயிர்ப்புடனும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். என் சரீர ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையானவைகளைச் செய்கிற என் பொறுப்பை நான் தட்டிக் கழிக்க கூடாது.  நான் வேதாகமத்தை வாசித்து, இயேசுவுடனான என் உறவை உறுதியானதாகவும்,  தொடர்ந்து ஜெபிக்கவும், அவரில் நிலைத்திருந்து, அவரைப் போல நான் வாழ வேண்டும்.

ஜெபம் தந்தையாகிய தெய்வமே, நான் உம்மைப் பற்றி விசுவாசிக்கிறவைகளை கைக்கொள்கிற வாழ்க்கையை வாழவும் செயல்படும் கிறிஸ்தவனாகவும் இருக்க எனக்கு உதவியருளும். என் வாழ்க்கை மிகவும் குறுகியது மற்றும் இயேசுவின் வருகை சமீபம் என்பதை உணர்ந்து, எல்லா மக்களும் தேவனை அறிந்து கொள்ளும்படி எல்லா மனிதரின் இரட்சிப்புக்காக நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரே, உண்மையுள்ளவனாகவும், சுறுசுறுப்பான கிறிஸ்தவனாக எப்பொழுதும் இருக்க பலம் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 357

A call to be active always

- An apt message for our hearts

READ: Zechariah 1-2; Proverbs 24; Revelation 14

SCRIPTURE:  Proverbs 24: 32 I applied my heart to what I observed and learned a lesson from what I saw:
33 A little sleep, a little slumber, a little folding of the hands to rest—
34 and poverty will come on you like a thief and scarcity like an armed man.

OBSERVATION: Unlike the previous generations, human life becomes easy due to available technologies and new tools that simplify our work. We can do many things/works without even moving from one place. However, it has a flip side that invites many problems to us. A sedentary or inactive lifestyle is becoming a global issue that causes many health issues today. According to the World Health Organization’s (WHO) estimate, a sedentary lifestyle is “the fourth largest global killer” in the world today. Many current Statistics give us a warning that this should not be continued. Here, in Pro.24:32-34, Solomon tells us what he observed and learned when he saw the poor condition of the field of a sluggard.

Scholars suggest that all our body senses should be open to learning new and useful things. The author just saw a lazy person's vineyard that has no proper maintenance and is full of weeds and thorns. Then, he analyses how it may have happened and shows us a picture of a typical lazy person who refuses to leave his bed or to do anything by saying excuses. Proverbs 24:32-34 literally repeats the same that we read in Pro.6:10-11. Interestingly, none wants to be a sluggard, but all laziness starts from postponing and procrastinating things to another time. A lazy person wants to do everything without getting down from bed (Pro.6:9, 26:14). The author of proverbs says that poverty and scarcity would be the reward for laziness. In other words, a sluggard will earn nothing by his laziness but will receive harmful consequences. But those who work hard will have abundance (Pro. 12:11). Proverbs 6:6 indicates that a lazy person can learn from even an ant and needs to be active and wise like them. If we neglect to give proper care to our spiritual and physical needs, we will find no fruits in them. We should be like the prudent son “who gathers crops in summer.” Like a plant needs continual care, our spiritual life requires our attention to be strong in the Lord and grow in him.  Our physical and spiritual freshness reflect in our daily activities. We should not neglect God, his word, and the Holy Spirit. If we want to bear fruits, we must remain in Christ. He prunes to bear more fruits for the glory of God. We should not neglect our relationship with God and spiritual life.

APPLICATION: I should not be a lazy person in my life. I must give proper care to my body and spiritual life. I should be careful to keep my spiritual and physical life active and refreshing. I should not neglect my responsibility in taking care of my physical and spiritual life. I will keep my relationship with the Lord Jesus intact and intimate by reading the Bible, praying regularly, remaining in him, and living like him.

PRAYER: Father God, help me be an active Christian, to practice what I believe about you. Realizing our life is short, and Jesus’s coming is near, I pray for all people to be saved. Holy Spirit, help me be faithful and be an active Christian always. Amen

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 357

(Tamil version of this devotion is posted here)

Monday, December 27, 2021

உங்கள் மனதிலே சிந்தித்துப் பாருங்கள்

வாசிக்க:  ஆகாய் 1-2; நீதிமொழிகள் 23; வெளிப்படுத்தின விசேஷம் 13

வேத வசனம்:  ஆகாய் 2: 18. இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
19. களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.

கவனித்தல்:  நாம் பல நேரங்களில் பலவிதமான வேலைகளைத் துவங்குகிறோம். ஆனால், அவைகளில் பெரும்பாலானவை நாட்கள் செல்லச் செல்ல கைவிடப்பட்டு,  ஒரு சில மட்டுமே முழுமையாக செய்து முடிக்கப்படுகிறது.  செய்து முடிக்கப்படாத சில காரியங்கள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு, ஷூபர்ட் என்பவருடைய எழுதி முடிக்கப்படாத சிம்பொனி இசையைப் போல,  முடிவு தெரியாது காத்துக் கொண்டிருக்கின்றன.  சில நேரங்களில், இது போன்ற முடித்து வைக்கப்படாத வேலைகள் என்ன நோக்கத்திற்காக செய்யப்படுகின்றன என்பதைக் கூட நாம் மறந்து விடக் கூடும். யூதர்களுடைய வரலாற்றில் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை நாம் காண்கிறோம்.  கிமு 538 இல், 70 ஆண்டுகால சிறையிருப்புக்குப் பின், கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தபடி, யூதர்கள் எருசலேமுக்குத் திரும்புவதற்கும், நேபுகாத்நேச்சரால் அழிக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கும் மன்னர் சைரஸ் அனுமதித்தார். இரண்டே ஆண்டுகளில், கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரப் பணியை செய்து முடித்தனர்.  ஆயினும், அவர்கள் எதிர்ப்பு மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டபோது, ​​அவர்களின் பணிக்கு எதிராக அரசின் உத்தரவை எதிர்கொண்டபோது, அவர்கள் தேவாலயத்தை மீண்டும் கட்டுவதை சீக்கிரமாகவே மறந்துவிட்டனர்.

சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்தவர்கள் தங்களுக்கு வீடுகளைக் கட்டுவதில் மும்முரமாகவும், ”கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை” என்று சாக்கு போக்குகளைச்சொல்லிக் கொண்டும் இருந்தனர் (ஆகாய் 1:2). அஸ்திபாரம் போடப்பட்ட பின்பு, ஆகாய் தீர்க்கதரிசி மூலமாக தேவன் ஜனங்களை தூண்டுகிற வரைக்கும் (சுமார் 16 ஆண்டுகள்) மகிமையாக ஆரம்பிக்கப்பட்ட தேவாலயப்பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஆகவே, தேவன் சிறையிருப்பில் இருந்து திரும்பினவர்களிடம் கவனமாக உங்கள் மனதிலே சிந்தித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களைப் பற்றி தேவன் சொல்கிறதை நாம் காண்கிறோம் (ஆகாய் 1:5, 7, 2:15,18.) தம் ஜனங்களின் கனியற்ற மற்றும் பயனற்ற நிலைமைக்குக் காரணம் அவர்களுடைய கீழ்ப்படியாமையே என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (உபா.28:38-39; லேவி.26:20).  ஆயினும், அவர்களுடன் தேவன் பேசியபோது, ”தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள்” (ஆகாய் 1:12). யூதர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, தேவனை முதலாவதாக வைக்கும்படி தங்கள் விருப்பங்களை மாற்றிக் கொண்ட போது, அவர்கள் மாபெரும் ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும், மற்றும் தேவனுடைய பிரசன்னத்தைக் குறித்த நிச்சயத்தையும் பெற்றார்கள். தேவனுடைய தீர்க்கதரிசிகளின் உதவி மற்றும் ஜனங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் போன்ற காரணத்தால், வரலாறு சொல்வது போல, நான்கே ஆண்டுகளில் அவர்கள் தேவாலயம் கட்டும் பணியை செய்து முடித்தனர். அது சாலமோன் கட்டியது போல பிரமாண்டமான பெரிய ஆலயம் அல்ல. ஆயினும், அந்த சிறிய இரண்டாவதாக கட்டப்பட்ட ஆலயத்தில்தான் மேசியாவாகிய நம் ஆண்டவர் இயேசு சென்று ஜனங்களுடனே பேசினார். மக்கள் தேவனையும் அவருடைய வார்த்தையையும் முதலிடத்தில் வைத்தபோது, அது பலருக்கும் ஆசீர்வாதமானதாக மாறியது. சமயங்களில், நாம் தேவனுடைய வேலைக்குப் பதிலாக நம்முடைய வேலைக்கு முதலிடம் கொடுக்கும் சூழல் வரலாம். நாம் முக்கியமானவைகளுக்கு முதலிடம் கொடுக்கும்போது, அது அனேகருக்கு ஆசீர்வாதமானதாக மாறுகிறது.  நாம் என்ன செய்ய வேண்டும் என தேவன் விரும்புகிறார் என்பதை நாம் கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் நம் வாழ்வில் தேவனை மையமாகக் கொண்டு செயல்படுகிறோமா, அவருடைய வேலைகளை கவனிக்கிறோமா என நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக.

பயன்பாடு: நான் தேவனுடைய வேலைக்கு எதிராக எதிர்ப்புகள் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகள் ஆகியவைகளை எதிர்கொள்ளும் போது,   எனக்கு முக்கியமானவைகளாக தோன்றுகிறவைகளில் கவனத்தை செலுத்தி, தேவனுடைய வேலையில் இருந்து விலகி இருப்பதற்கு சாக்குப் போக்காக அதை எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் முதலாவதாக தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேட வேண்டும். நான் தேவனை என் வாழ்வின் மையத்தில் வைக்கும்போது, அவர் எனக்குத் தேவையானவைகளை எல்லாம் தருகிறார். கர்த்தர் என்னிடம் என்னக் கேட்டாலும் நான் அதைச் செய்ய வேண்டும். நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவர் மீது என் கவனத்தை வைக்கும்போது, என் வாழ்க்கையானது அனேகருக்கு ஆசீர்வாதமானதாக இருக்கும்.

 ஜெபம்தந்தையாகிய தெய்வமே, அந்தகாரத்தில் இருந்து ஆச்சரியமான ஒளியிடம் வரும்படிக்கு உம் பிள்ளையாக என்னைத் தெரிந்து கொண்டு அழைத்தற்காக உமக்கு நன்றி.   இயேசுவே, இந்த உலகத்தை ஜெயிக்கிற விசுவாசத்தை எனக்குத் தந்து போதிக்கிறதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவி செய்து, அதன்படி வாழ என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 356

 

Give careful thought

READ: Haggai 1-2; Proverbs 23; Revelation 13

SCRIPTURE: Haggai 2: 18 ‘From this day on, from this twenty-fourth day of the ninth month, give careful thought to the day when the foundation of the Lord’s temple was laid. Give careful thought:
19 Is there yet any seed left in the barn? Until now, the vine and the fig tree, the pomegranate and the olive tree have not borne fruit. “‘From this day on I will bless you.’”

OBSERVATION: We begin various works at different times. However, many of them get dropped over a period, and only a few are fully accomplished until the end. Some unfinished works wait for long without completion, like Shubert's unfinished symphony. Sometimes, people may forget the original purpose of such unfinished works. We see such an instance in the history of Jews. In 538 B.C, after 70 years of exile, as the Lord prophesied to his people, King Cyrus allowed the Jews to return to Jerusalem and rebuild the temple destroyed by Nebuchadnezzar. Within two years, they completed the foundation work of the Lord’s temple. However, when they faced opposition and threats, and imperial order against their work, they soon forgot to rebuild the temple.

The returned exiles became busy building their houses and were saying excuses that “The time has not yet come to rebuild the Lord’s house their affairs” (Hag.1:2). After the foundation was laid out, there was no improvement in the gloriously started temple work until (about 16years) God stirred the people through prophet Haggai. So God repeatedly called the remnant people to “Give careful thought” to what he says about them (Haggai 1:5, 7, 2:15,18.) God reminded his people that their disobedience was the reason for their unfruitful work and poor harvest (Deut.28:38–39; Lev 26:20). However, when God spoke to them, they “obeyed the voice of the Lord their God and the message of the prophet Haggai” (Hag.1:12). When the Jews obeyed and changed their priorities to put God’s work first, they received great promises and God’s assurance of his presence. With God’s help through his prophets and people’s obedience to God’s words to do his work, as history says, within four years, the temple work was finished. It was not as magnificent and big as Solomon’s temple. However, our Lord Jesus visited the small second temple and spoke to the crowd. When they kept God and his work in the first place, it became a blessing for many. At times, we too may have prioritized our own works instead of God’s work. When we keep the main thing the main thing, it turns out to be a blessing for many. We need to give careful thought about what God wants us to do. Let us examine ourselves and give careful thought that whether we keep God at the centre of our life and focus on his works.

APPLICATION: When I face opposition and an unfavorable environment against God’s work, I should not take it as an excuse for abstaining from God’s work and focussing on something else that matters to me. I should seek first God’s kingdom and his righteousness. When I keep God at the centre of my life, he gives me all I need. As a Christian, I should do whatever the Lord asks of me. When I obey God and focus on his priorities, my life will become a blessing for many.

 PRAYER:  Father God, thank you for choosing me to be your child to proclaim the praises of God who called me out of darkness into his marvelous light. Jesus, thank you for teaching and giving the faith that overcomes the world. Holy Spirit, help me to obey God’s words and strengthen me to live accordingly. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 356

(Tamil version of this devotion is posted here)

Sunday, December 26, 2021

ஒழுக்கத்தில் வளர்க்கத் துணிதல்

வாசிக்க: செப்பனியா 1-3; நீதிமொழிகள் 22; வெளிப்படுத்தின விசேஷம் 12

வேத வசனம்:  நீதிமொழிகள் 22:6. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

கவனித்தல்: முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் A.P.J அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் நேரம் செலவிடுவதை விரும்பினார். பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கனவு காண வேண்டும் என அவர் ஊக்கமளித்தார், மேலும் "உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் அவைகளைப் பற்றி கனவு காண வேண்டும்" என்று அடிக்கடி கூறினார். அவரைப் பொறுத்தவரை, “கனவு என்பது நீங்கள் தூங்கும்போது காண்கிற ஒன்று அல்ல; கனவு என்பது உங்களை தூங்க விடாமல் செயல்பட வைக்கிற ஒன்று ஆகும். ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும், எதிர்காலத்தில் தாங்கள் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதைப் பற்றி உயர்ந்த லட்சியங்களுடன் ஆர்வத்துடன் பதில் அளிக்கிறார்கள். ஆனால், அவர்களில் மிகச் சிலரே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெறுகிறார்கள். இதில் பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும், எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெறுவதற்கு ஒழுக்கமான வாழ்க்கை அவசியம். நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் அவர்களுக்கு கற்பித்து பயிற்சி கொடுக்க வேண்டும் என நீதிமொழிகள் 22:6 மக்குப் போதிக்கிறது.

இன்றைய உலகில், சிறு பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் அதிகமாக பொழுது போக்கு சாதனங்கள் மற்றும் மிண்ணனு உபகரணங்களுடன் அதிக நேரம் செலவழிக்கின்றனர். அனேக பெற்றோர் பல உலகப்பிரகாரமான கருத்துக்கள் மற்றும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளினால் குழப்பமடைந்து, தங்கள்  ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள். கிறிஸ்தவப் பெற்றோராகிய நாம், தேவபக்தியுள்ள போதனையை நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்கள் பள்ளிக் கல்வியைப் பெறும் நேரத்தில், தேவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொள்ள வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தேவனுடைய நியமங்களின் படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்து அதில் பயிற்சி பெறுவது குழந்தைகளுக்கு எப்பொழுதுமே நல்லது ஆகும். பல்வேறு காரணங்களுக்காக பல பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கண்டித்து திருத்த தயங்குகிறார்கள். கிறிஸ்தவ கல்வி நிபுணர் ஹோவர்ட் ஹெண்ட்ரிக்ஸ் பின்வரும் ஞானமுள்ள ஆலோசனையைத் தருகிறார்: “பிள்ளைகள் உங்களைப் பற்றி இப்பொழுது என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல, இப்போதிலிருந்து 20 வருடங்கள் கழித்து என்ன நினைப்பார்கள் என்பதே உங்களுடைய முதல் கவலையாக இருக்க வேண்டும்.”  அன்பு செய்கிற, நேசிக்கிற பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிட்சிப்பார்கள் என வேதம் கூறுகிறது (எபி.12:5-1). பின்னர் வருத்தப்படுவதைக் காட்டிலும் , நம் குழந்தைகளை இப்பொழுதே நாம் சிட்சித்து (கண்டித்து) வளர்ப்பது சிறந்தது ஆகும். பிள்ளை வளர்ப்பு பற்றி கிடைக்கக் கூடிய எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் அதிகமாக, பரிசுத்த வேதாகமமானது அன்பைக் காண்பிக்கவும், அனைவருக்கும் பயனுள்ளவர்களாக இருக்கும்படி வளரவும் உதவும் பிள்ளை வளர்ப்பு பற்றிய கோட்பாடுகளை உடையதாக இருக்கிறது. ”எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்
; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என எபிரேயர் 12:11 சொல்கிறது.

வேதாகமத்திலும் வரலாற்றிலும் வெற்றிகரமான தேவபக்தியுள்ள பிள்ளை வளர்ப்பு பற்றி அனேக நல்ல உதாரணங்கள் உண்டு. பெற்றோரே பிள்ளைகளுக்கு முதலாவது ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்தே முதலாவதாக கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம். அனேக கிறிஸ்தவர்கள் நீதிமொழிகள் 22:6ஐ ஒரு வாக்குத்தத்தம் என கருதுகிறார்கள். ஆனால், இது நாம் தேவ பக்தியுள்ள வாழ்க்கையை வாழவும், நம் பிள்ளைகளை அதற்கேற்ப பயிற்றுவித்து வளர்க்கவுமான வேதாகம கோட்ப்பாடு மற்றும் எச்சரிக்கை ஆகும். நம் சபைகளில், மற்றும் வீடுகளில், நம் பிள்ளைகள் தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் அறிந்து, அதை உண்மையாகப் பின்பற்ற நாம் நம்மால் கூடியமட்டும் சிறந்ததைச் செய்ய வேண்டும்.

பயன்பாடு:  தேவனுடைய பிள்ளையாக நான் தேவனைப் பின்பற்றி, அவருடைய ஒழுங்குக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் மற்றவர்களுக்கு ஒன்றை சொல்வதற்கு முன்பு, நான் முறையாக தேவ ஒழுங்குகளை பின்பற்றுகிறவனாக இருக்க வேண்டும். தேவ பக்தியுள்ள ஒழுங்குகள் தேவ பக்தியுள்ள தலைமுறையை உண்டாக்குகிறது. நான் ஒரு போதும் தேவ பக்திக்கேதுவான பிள்ளை வளர்ப்பை அற்பமாக எண்ணக் கூடாது. அனைவருக்கும் ஆசீர்வாதமளிக்கும் தெய்வீக ஒழுங்குகளை நான் பின்பற்றி, பிரசங்கிக்க வேண்டும்.

 ஜெபம் அன்பின் பிதாவே, என்னை ஒழுங்குபடுத்தித் திருத்துகிற உம் அன்பிற்காக நன்றி. கர்த்தாவே, உம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிற, தெய்வீக ஒழுங்குகளில் எங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுத்து பயிற்சி கொடுக்கும் இருதயத்தை தந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவ மகிமைக்காக தேவபக்தியுள்ள ஒரு தலைமுறையை எழுப்ப எங்களுக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 355

Dare to discipline

READ: Zephaniah 1-3; Proverbs 22; Revelation 12

SCRIPTURE:  Proverbs 22: 6 Start children off on the way they should go, and even when they are old they will not turn from it.

OBSERVATION: Former Indian President A.P.J Abdul Kalam loved to spend time with children and students. He encouraged them to dream about their future and often said, “You have to dream before your dreams can come true.” For him, “Dream is not that you see in sleep; Dream is something that does not let you sleep.” All students in primary schools enthusiastically answer with high ambitions about what they want to be in the future. However, very few of them succeed in their ambition. Though various factors are involved, a disciplined life is essential for success in anything. Proverb 22:6 teaches us that we must educate and train our children for their future.

In today’s world, children spend more time with electronic gadgets than with their parents. Many parents are confused with many worldly ideas and dreams about their children's future and try to impose them on their kids. As Christian parents, we have the responsibility to give godly instruction to our children and train them to learn the word of God when they have their school education. It is always good for children to develop and train their lives with godly principles. Many parents are afraid to correct and discipline their children for various reasons. Christian educator Howard Hendricks offers a wise suggestion, "Your primary concern is not what they think of you now, but what they will think 20 years from now." The bible says that a loving father/mother would discipline their children (Heb.12:5-11). It is better to discipline them now than regret later. More than any available books on parenting, the bible offers the best parenting principles to show love and help to grow to be helpful for all. Heb.12:11 says, “No discipline seems pleasant at the time, but painful. Later on, however, it produces a harvest of righteousness and peace for those who have been trained by it.”

There are many examples of successful godly parenting in the Bible and history. Parents are the first teachers to their children. We forget that they primarily learn from their parents. Many Christians consider that Pro.22:6 is a promise. However, it is a biblical principle and warning for us to live a godly life and train our children accordingly. In our churches and homes, we must do our best for the children to help them know God and his word and follow them sincerely.

APPLICATION:  As a child of God, I must follow God and obey his discipline. I must practice self-discipline before I suggest it to others. Godly discipline brings a godly generation. I should never undermine godly parenting. I must practice and preach godly disciplines that bless all.

 PRAYER: Loving Father, thank you for your love that corrects me. Lord, give me the heart to obey your words and train our children to grow in godly discipline. Holy Spirit, help me to raise a godly generation for God’s glory. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 355

(Tamil version of this devotion is posted here) 

Saturday, December 25, 2021

தேவனுடன் ஒரு தனிப்பட்ட ஒரு உரையாடல்

வாசிக்க: ஆபகூக் 1-3; நீதிமொழிகள் 21; வெளிப்படுத்தின விசேஷம் 11

வேத வசனம்: ஆபகூக் 1: 12. கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
13. தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?

கவனித்தல்:  நம் வாழ்க்கையில் நாம் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது அல்லது அநியாயங்களைப் பார்க்கும்போது, “தேவனே, ஏன் இப்படி நடக்கிறது?” என்று அடிக்கடி கேட்கிறோம். அப்படிப்பட்ட தருணங்களில், நாம் தேவனைச் சந்தேகிக்கவோ அல்லது நம்மைச் சுற்றிலும் நடக்கிற அநியாயங்களைக் குறித்து அவரிடம் முறையிடவோ கூடும்.  ஆபகூக் தீர்க்கதரிசி தன் தேசத்தில் அநியாயத்தையும் தேவன் ஏன் எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்றும் ஆச்சரியமும் அடைகிறார். யூதா மக்களின் பாவங்களைக் குறித்து முறையிடுகையில், தன் ஜனங்களை துன்மார்க்கரான பாபிலோனியர் மூலம் தேவன் தண்டிப்பார் என்ற வரவிருக்கும் தேவ தண்டனையையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆபகூக் தீர்க்கதரிசன புத்தகத்தில், தேவனுக்கும் ஆபகூக்குக்கும் இடையிலான தனித்தன்மை நிறைந்த ஒரு உரையாடலை நாம் காண்கிறோம். ஆபகூக் தேவனிடம் தன் கேள்விகளை எடுத்துச் சென்று, தேவன் அவைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவர் தன் கேள்விகளைக் கேட்பதற்குப் பயப்படவில்லை. முதல் அதிகாரத்தில், தனது அனைத்து “ஏன்” என்ற கேள்விகளையும் வெளிப்படுத்துகிறார். அவர் தன் கேள்விகள் அனைத்திற்கும் பதில்களைப் பெறும்படிக்கு எதிர்பார்ப்புடன் தேவனுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் (ஆபகூக் 2:1). இரண்டாவது அதிகாரத்தில், ஆபகூக்கின் கேள்விகளுக்கு தேவன் தரும் பதில்களைக் காண்கிறோம். மூன்றாவது அதிகாரத்தில், ஒரு ஜெபம் மூலமாக, தேவன் மீதான தன் விசுவாசத்தை ஆபகூக் அறிக்கையிட்டு, தேவன் தன் நியாயத்தீர்ப்பை அனுப்புகையில் தான் என்ன செய்வார் என்பதை வெளிப்படுத்துகிறார்.

தேவனுக்கும் ஆபகூக்குக்கும் இடையிலான இந்த உரையாடலில், எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஆழமான நடைமுறை உண்மைகளை நாம் காண்கிறோம். தேவனைப் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் நமக்கு வரும்போது, நாம் தேவனிடம் நேரடியாக சென்று, அவரிடத்தில்  இருந்து பதில்களைப் பெற முடியும். ஏனெனில், அவர் நம் தேவன். சரியான நபரிடத்தில் நம் கேள்விகளைக் கேட்பது உரிய பதில்களைப் பெறுவதற்கு அவசியமானதாகும். ஆபகூக்கைப் போலவே, நாமும் தேவனிடம் நம் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்க முடியும். அனேக நேரங்களில், அனேகர் தேவன் பதில் கொடுக்கும் வரைக் காத்திருப்பதில்லை. தேவன் என்ன பதில் சொல்வார் என்பதைக் கவனித்துக் கேட்கும்படி நாம் அவருக்காக காத்திருக்க  வேண்டும் (ஆபகூக் 2:1). தேவன் ஆபகூக்குக்கு பதில் சொன்ன போது, தேவ ஜனங்களுக்கு எதிராக யார் வந்தாலும், “தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்பதை அவர் புரிந்து கொண்டார். அது எனக்கு என்ன நடந்தாலும், “நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” என்று ஆபகூக் பாட உதவியது (3:18). தேவன் மீதான நம் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் நாம் அவரை நன்றாக புரிந்து கொள்ளவும், நம் விசுவாசத்தை அதிகரிக்கவும் நமக்கு உதவ முடியும். கேள்வி என்னவெனில், நாம் நம் கேள்விகளை தேவனிடம் எடுத்துச் செல்கிறோமா என்பதுதான்.

பயன்பாடு:   கர்த்தராகிய தேவன் என் தேவனும் என் பரிசுத்தருமானவர். அவர் என்றென்றைக்கும் இருக்கிற நீதியுள்ள தேவன். அநியாயங்கள், வன்முறை, வேதனைகள் மற்றும் பிரச்சனைகள் என்னைச் சுற்றிலும் பெருகும்போது, என் சூழ்நிலைகள் தேவன் இல்லை என்று அவரை நம்ப மறுப்பதற்கு இடம் கொடாமல், என் கேள்விகள் அனைத்தையும் நான் தேவனிடம் கேட்பேன். அவர் என் கேள்விகள் அனைத்திற்கும் பதில்  தந்து என் சந்தேகங்கள் மற்றும் பயங்களைத் தீர்த்து வைப்பார். ”ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக் 3:19).  ஏனெனில் நான் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறேன் (2 கொரி.5:7).

 ஜெபம்  பரிசுத்தமுள்ள தேவனே, உம் முன்பாக நான் வரும்படி என்னை தகுதிப்படுத்துகிற உம் அன்பிற்காக உமக்கு நன்றி. விசுவாசத்தை துவக்குகிறவரும் அதில் என்னை நிலை நிறுத்துகிறவருமாகிய கர்த்தராகிய இயேசுவே, எல்லா காலத்திலும் நான் என் விசுவாசத்தில் உறுதியாக இருக்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, என் பலவீனங்களை ஜெயிக்கவும், விசுவாசத்தினாலே உலகத்தை ஜெயிக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 354