Friday, April 30, 2021

இனிமையான ஒரு தியானம்

வாசிக்க:  1 சாமுவேல் 5, 6; சங்கீதம் 119: 89-176 ; லூக்கா 16: 19-31

வேதவசனம்: சங்கீதம் 119: 97. உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்....103. உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.

கவனித்தல்: தியானம் செய்தல் என்பது பல மதங்களில் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. பலவித உத்திகளைப் பயன்படுத்துகிற பல்வேறு விதமான தியானங்கள் இருக்கின்றன. ஆயினும், கிறிஸ்தவ தியானம் என்பது மற்ற வகை தியானங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது ஆகும். மற்றவர்கள் (கிறிஸ்தவரல்லாதோர்) ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது தங்கள் செயல்பாடுகள் மீது தங்கள் கவனத்தை தியானம் செய்யும் போது ஒருமுகப்படுத்துகையில், கிறிஸ்தவ தியானத்தில் நாம் தேவனையும் அவருடைய வார்த்தையையும் பற்றி யோசித்து, தியானிக்கிறோம். சங்கீதம் 119:97-104 ல், சங்கீதக்காரன் தன் தியான அனுபவத்தையும், அதில் இருந்து தான் பெற்றுக்கொண்ட நன்மைகளையும் பகிர்ந்து கொள்கிறார். தேவனுடைய வார்த்தை மீதான தம் அன்பை அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள்! அவர் நாள் முழுதும் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கிறார். இது எப்படி சாத்தியம் என்று நாம் நினைக்கக் கூடும். அவர் அப்படிச் செய்யக் காரணம் என்னவெனில், தேனினும் இனிமையான தேவனுடைய வார்த்தையின் இனிமையை அவர் ருசித்து பார்த்ததுதான்.

சங்கீதக்காரன் தேவனுடைய வார்த்தையை வெறுமனே வாசிக்க மட்டும் செய்யவில்லை. மாறாக, உண்மையான ஒரு அன்புடன் அவர் அதை தியானிக்கவும் செய்கிறார்.  தேவனுடைய வார்த்தையைத் தியானம் செய்தது சங்கீதக்காரன் ஞானம், அறிவு, புரிதல் மற்றும் தீய வழியில் இருந்து பாதுகாப்பு ஆகிய பல பலன்களை அவருக்குக் பெற்றுக் கொடுத்தது. அவர் தன் எதிரிகள், ஆசிரியர்கள் மற்றும் மூத்தோர்களைக் காட்டிலும் சிறந்த ஒரு மனிதராக அவர் மாறினார். கிறிஸ்தவ தியானம் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் அறிந்து கொள்வது எவ்வளவு மகத்துவமானது! தேவனுடைய வார்த்தையை வாசிப்பதும் அறிந்து கொள்வதும் எப்பொழுதுமே நல்லது. ஆயினும், தேவனுடைய வார்த்தையை தியானம் செய்வது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் நமக்குத் தரும். 

பயன்பாடு: என் வாழ்க்கைக்கான அனேக ஆசீர்வாதங்கள் தேவனுடைய வார்த்தையில் இருக்கின்றன. தேவனுடைய வார்த்தையை மதித்து அதற்கு ஒரு உயரிய ஸ்தானத்தை நான் கொடுக்கும்போது, அதை அனுதினமும் வாசிப்பதற்கு என் நேரத்தையும் நான் கொடுக்க வேண்டும். அலுவல்கள் நிறைந்த என் வாழ்க்கை நான் வேதாகமம் வாசிக்காமல் இருப்பதற்கு ஒரு சாக்குப்போக்காக இருக்கக் கூடாது. நான் தேவனுடைய வார்த்தையை தியானம் செய்யும்போது, இந்த உலகத்தில் ஒரு நல்ல மனிதனாக மாற ஞானத்தின் அனைத்து ஐசுவரியங்களையும் நான் பெற்றுக்கொள்கிறேன்.  நான் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறேன். ஆகவே அதை அனுதினமும் தியானம் செய்வேன்.

ஜெபம்: பிதாவே, என் கரங்களில் இருக்கிற வேதாகமத்திற்காக நன்றி. தேவனே, உம் வார்த்தைகளை நான்  தியானிப்பது உமக்குப் பிரியமானதாக இருப்பதாக. அனுதினமும் நான் வேதத்தை வாசிக்கும்போது, நீர் நல்லவர் என்பதை நான் ருசித்துப் பார்க்க எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

A pleasant meditation

READ: 1 Samuel 5, 6; Psalm 119: 89-176 ; Luke 16:19-31

SCRIPTURE: Psalm 119: 97 Oh, how I love your law! I meditate on it all day long...103 How sweet are your words to my taste, sweeter than honey to my mouth!

OBSERVATION: Meditation is a popular practice in many religions. There are different types of meditation with different techniques. However, Christian meditation is totally different from other forms of meditation. While others are focusing on a particular object(s) or their activities during their meditation times, in Christian meditation we contemplate on God and his word. In Psalm 119:97-104, the psalmist shares his experience of meditation and the benefits he gained from it. Notice the exclamation of his love for the word of God. Throughout a day he meditates on God's word. We may wonder how is it possible! It is because he tasted the sweetness of God's word that is sweeter than honey. 

The psalmist is not merely reading the word of God. Rather, he meditates it with a sincere love. His meditation of the word of God gave him many benefits such as wisdom, insights, understanding, and protection from any evil, to name a few. He became a better person than his enemies, teachers and elders. How wonderful is it to know about Christian meditation and its benefits! It is always good to read and to know the word of God. But meditating the word of God will give us the joy and blessings that are inexplainable in words.

APPLICATION: God's word has many blessings for my life. As I revere and have high regards for the word of God, I should give my time to read regularly. My busy life should not be an excuse for not giving proper time to God's word.  When I read the Bible, I understand God's plan for my life. When I meditate the word of God, I gain all riches of wisdom to become a better person in the world. I love the word of God, so I regularly meditate it.

PRAYER: Father, thank you for the bible in my hands. May my meditation of your words be pleasing to you, Oh God. Lord,  When I read your word everyday, help me to taste that the Lord is good, Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Thursday, April 29, 2021

பரிசுத்த வழியில் நடப்பதற்கான வழிகாட்டி

வாசிக்க:  1 சாமுவேல் 3, 4 ; சங்கீதம் 119: 1-88 ; லூக்கா 16: 1-18

வேதவசனம்: சங்கீதம் 119: 9. வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.
10. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
11. நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

கவனித்தல்: ஒருவரின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிற ஒரு தியான ஜெபமாக சங்கீதம் 119 இருக்கிறது. வாலிபருடைய பரிசுத்தத்தைப் பற்றி வேதாகமம் ஏன் பேசுகிறது? இதன் பொருள் வயதான ஒரு நபர் பரிபூரணர் என்றும், அவருக்கு இப்படிப்பட்ட பரிசுத்தம் தேவை இல்லை என்பதா? இல்லை.  “ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது”  என்று ஒரு பழமொழி சொல்கிறது. வயதான ஒருவரை திருத்திச் சரிசெய்வதைக் காட்டிலும் இளைய வயதுடைய ஒருவரை சரிசெய்வது எளிது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். "பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்" என்று நீதிமொழிகள் 22:6 கூறுகிறது. தேவனுடைய வார்த்தை தரும் ஆவிக்குரிய ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுவது ஒரு இளைஞர் பரிசுத்தப் பாதையில் நிலைத்திருக்க முக்கியமானது ஆகும். சங்கீதக்காரன் தன் ஜெபத்தில் (வ.10, 11) இது தனக்கும் இதை வாசிக்கிற அனைவருக்கும் பொருந்தக் கூடியது என குறிப்பால் உணர்த்துகிறார். 

நம்மைப் பரிசுத்தமாக காத்துக் கொள்ள இரண்டு முக்கியமான அறிவுரைகளை நாம் இங்கு காண்கிறோம். அரை மனதுடன் செய்கிற செயலானது விரும்பிய பலனைத் தராது. சில நேரங்களில் நம் வசதிக்கேற்ப அல்லது  நாம் விரும்பியபடி,  தேவனை நாம் தேடுகிறோம். சங்கீதக்காரன் சொல்வது போல, நாம் முழு இருதயத்தோடும் தேவனைத் தேட வேண்டும். மேலும், தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வதிலிருந்து தன்னைத் தடுத்துக் காப்பாற்றிம் செயல் பற்றி அவர் சொல்கிறார். அவர் தேவனுடைய வார்த்தையை தன் இருதயத்தில் வைத்து வைத்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தன் இருதயத்தில் அவர் தேவனுடைய வாக்குத்தத்தங்களை சேமித்து வைத்தார். ஒரு நபரில் இருதயத்திற்குள் பொக்கிஷமாக சேர்த்து வைக்கப்படும் தேவனுடைய வார்த்தையானது அவர் எப்பொழுதெல்லாம் தேவனுக்கி விரோதமாக பாவம் செய்யச் செல்கிறாரோ, அப்பொழுதெல்லாம் அவரைத் தடுத்து திருத்தும்

பயன்பாடு: பாவச் சோதனைகள், அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள், மற்றும் சிற்றின்ப ஆசைகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு. இக்கால உலகில், நவீன மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் தொழில்நுட்பங்களினால் முன்பை விட பாவமானது நமக்கு மிக அருகில் இருக்கிறது. ஆயினும்,  நான் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு என் இருதயத்தில் இருக்கும் தேவனுடைய வார்த்தையானது அதை விட மிக நெருக்கமானதாக இருக்கிறது. அசுத்தமானவைகளுக்கு அனேக வழிகள் இருக்கின்றன. ஒருவரின் சுய ஒழுக்கம் கூட நீண்டநாட்கள் நிலைத்து நிற்காது. ஆனால் தேவனுடைய வார்த்தையானது அதன் வேலையைச் செய்ய ஒருபோதும் தவறியது இல்லை. ஒருவரின் வயது, இனம், நிறம் மற்றும் நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அவர் தேவனுடைய வார்த்தையின் உதவியுடன் பரிசுத்தப் பாதையில் நடந்து செல்ல முடியும். இதைப் பெறுவதற்கு நான் செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில், முழு இருதயத்தோடு நான் தேவனைத் தேடி, அவருடைய வாக்குத்தத்தங்களை என் இருதயத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, பரிசுத்தப் பாதையில் நடப்பதற்கான இந்த வழிகாட்டிக்காக உமக்கு நன்றி. இதை நான் எப்பொழுதும் நினைவில் கொள்ளவும், இன்று நான் அதன் படி வாழவும் எனக்கு உதவும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Signpost for the path of purity

READ: 1 Samuel 3,4; Psalm 119: 1-88; Luke 16:1-18

SCRIPTURE: Psalm 119: 9 How can a young person stay on the path of purity? By living according to your word.
10 I seek you with all my heart; do not let me stray from your commands.
11 I have hidden your word in my heart that I might not sin against you.

OBSERVATION: Psalm 119 is a meditational prayer that emphasizes the importance of the word of God in a person's life. Why the bible speaks of a young person's of purity? Does it mean that an old person is perfect and so he is not in a need of such purity? NO. As the proverb goes, "Bend the tree while it is young", or "A colt you may break, but an old horse you never can." We know it is easier to discipline and correct a younger person than an old person.  Proverbs 22:6 says, "Start children off on the way they should go, and even when they are old they will not turn from it." Getting the spiritual nourishment of the word of God  is essential for  a young person to stay in the path of purity. However, in his prayer (v.10, 11), the psalmist infers that it is applicable to him and all who read it.

 Here we see two important instructions to keep ourselves pure. A half-hearted effort would not give the desired result. Sometimes, we seek God according to to our convenience or as we like it. As the psalmist says, we need to seek God with all of our heart. Further, he says of his preventive act to protect himself from sinning against God. He kept God's word in his heart. In other words, he stored God's promises within his heart. God's word that  is treasured up in a person's heart would correct him/her, whenever s/he goes against God.

APPLICATION: God's word has the power to protect me from sinful temptations, addictions, and sensual desires. In the present world, with the latest mobile phones, computers and technologies many sinful activities are near to us than ever before. However, God's word in my heart is even more closer to prevent me sinning against God. There are many ways to impurities. Even a person's self-discipline does not long last. But God's word never fails to do its job. Regardless of a person's age, race, ethnicity, and nationality, s/he can walk in the path of purity with the help of God's word. All I need to get this is to seek God with all of my heart and storing his promises within my heart.

PRAYER: Father God, thank you this signpost to walk in the path of purity. Help me to remember it always and to practice it every day. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Wednesday, April 28, 2021

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

வாசிக்க:  1 சாமுவேல் 1,2; சங்கீதம் 118; லூக்கா 15: 11-32

வேதவசனம்: சங்கீதம் 118: 24. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
25. கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.

கவனித்தல்: சங்கீதம் 118க்கு அனேக விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆயினும், அவ்விளக்கங்களில் இருக்கிற ஒரு பொதுவாக காரியம் என்னவெனில், யூதர்களின் முக்கியமான பண்டிகை மற்றும் கூடுகைகளில் அவர்களுடைய ஜெபங்களில் இந்த சங்கீதமானது நன்றியறிதலின் பாடலாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்பது ஆகும். யூதர்களின் ஆராதனை முறைமையில் ஆறு சங்கீதங்களை (சங்கீதம் 113-118) உள்ளடக்கிய "Egyptian Hallel" (எகிப்திய துதி) இல் இச்சங்கீதம் ஒரு பகுதி ஆகும். எதிரிகளிடம் இருந்து தேவன் விடுவித்ததை நினைவு கூர்ந்து, கர்த்தருக்கு தன் நன்றியறிதலை சங்கீதக்காரன் வெளிப்படுத்துகிறார். 24ம் வசனத்தில் வருகிற “நாள்” என்பது, தள்ளப்பட்ட கல்லை மூலைக்குத் தலைக்கல்லாக தேவன் மாற்றிய நாளைக் குறிக்கிறது. தகுதியற்றவர் என்று கருதப்படும் ஒருவரை தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு நபராக மாற்ற தேவனால் கூடும்.

அனுதினமும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு காரியம் என்னவெனில், ”இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்” என்பதாகும். நம் சூழ்நிலைகள், போராட்டங்கள், பிரச்சனைகள், வேலைகள், மற்றும் பதவிகள் ஆகியவை ஒருவருக்கொருவர் வித்தியாசமானவை. இன்றைய தினத்தில் மகிழ்ச்சியாக இருப்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது ஆகும். நம் வாழ்க்கைச் சூழ்நிலைகள் எப்போதும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. நம் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், அனுதினமும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இன்று நாம் மகிழ்ச்சியாக இருப்பது என்பது நாளைய தினம் நாம் பெறப்போகிற விடுதலைக்கு முன்னோடியாக இருக்கிறது. நம் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அல்ல, நாம் தேவனைச் சார்ந்து இருப்பதுதான் நம்மை மகிழ்ச்சியாக வைக்கிறது. 

பயன்பாடு: என் வாழ்க்கையில் தேவன் அனேக ஆச்சரியமான காரியங்களைச் செய்திருக்கிறார்.  நான் இப்போது இருக்கிற நிலைக்கு வரும்படி என்னை உயர்த்தின தேவனுடைய உண்மைக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். சங்கீதக்காரன் சொல்வது போல,  “நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்” (வ.17). இந்த நாள், இந்த நிமிடம், நான் சுவாசிக்கும் இந்த நொடியும் கூட தேவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஈவு ஆகும். அதை நான் தவறவிடுவேனாகில், அதை ஒருக்காலும் நான் திரும்பப் பெறமுடியாது. என் கடந்தகாலத்தைக் குறித்து நான் மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் இன்றைய தினத்திற்காக நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். என் நிகழ்கால சூழ்நிலையைப் பார்ப்பதற்குப் பதிலாக, நான் தேவனை நினைத்துப் பார்க்கையில், நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே என் பெலன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நீர் தந்த விடுதலைக்காக நன்றி. உம் மாறாத கிருபைக்காக நன்றி. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்க எனக்கு உதவும். ஆண்டவரே, நீங்கள்தான் என் மகிழ்ச்சி மற்றும் பலத்திற்கான ஆதாரம். அனுதினமும் உம்மைச் சார்ந்து வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Are you happy today?

READ: 1 Samuel 1,2; Psalm 118; Luke 15:11-32

SCRIPTURE: Psalm 118: 24 The Lord has done it this very day; let us rejoice today and be glad. 
25 Lord, save us! Lord, grant us success!

OBSERVATION: There are many interpretations for the Psalm 118. However, one common thing in all the interpretations is that this psalm was used as a thanksgiving song in Jewish prayers during their important festivals. Psalm 118 is a part  of "Egyptian Hallel," which consists of 6 psalms (Ps113-118) in Jewish liturgy. The psalmist remembers God's deliverance from his enemies and expresses his thanksgiving to the Lord. "This very day" in verse 24 alludes the day that God made the rejected stone as the cornerstone. God can make a person who is considered as unworthy to become an indispensable person. 

One thing that we need to remember everyday is "this is the day that the has made." Our situations, struggles, problems, jobs, positions etc. differ from one another.  Being happy today is very important for our life. When we remember God's past deliverance, we can thank God for today and be happy about it.  Our life situations will not be the same forever. God wants us to be happy everyday, irrespective of our life situation. Our rejoicing today is a prelude to our deliverance tomorrow. Our dependence on God keeps us happy, not our life-situations.

APPLICATION: God has done so many amazing things in my life. I thank God for his faithfulness to lift me up to the present situation. As the psalmist says, "I will not die but live, and will proclaim what the Lord has done" (v.17). This  day, this minute, and even this very second I breathe are God-given gift to me. I cannot get it back, If I miss it. I may be unhappy about my past life, but I can be happy for today. Instead of looking at my present situation, when I remember God, I can be happy. The joy of the Lord is my strength. 

PRAYER: Father God, thank you for your deliverance. Thank you for your enduring love. Help me to be happy today. Lord, you are the source of my joy and strength.  Help me to depend on you everyday. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Tuesday, April 27, 2021

தொலைந்து போனவைகளைத் கண்டடைவதில் உள்ள மகிழ்ச்சி

வாசிக்க:  ரூத் 3,4; சங்கீதம் 117; லூக்கா 15: 1-10

வேதவசனம்: லூக்கா 15: 1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

கவனித்தல்: லூக்கா 15ம் அதிகாரத்தில், பரிசேயருக்கும் வேதபாரகருக்கும் சொன்ன மூன்று உவமைகளை நாம் காண்கிறோம். சில நேரங்களில், இந்த உவமைகளை இயேசு ஏன் சொன்னார் என்பதை மறந்து விடுகிறோம். இயேசுவின் போதனையைக் கேட்பதற்காக ஆயக்காரரும் பாவிகளும் அவரிடம் வந்தனர் என நாம் இங்கு வாசிக்கிறோம். இயேசு எப்பொழுதெல்லாம் ஆயக்காரருடனும் பாவிகளுடனும் நேரம் செலவழித்தாரோ,  அவர்களிடையே ஒரு தாக்கத்தை உண்டாக்கி, அவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். ஒரு போதும் இயேசு அவர்களால் பாதிக்கப்படவில்லை. பாவிகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட அப்படிப்பட்ட மாற்றத்தைப் பற்றி சம்பவங்களைப் பற்றி நற்செய்தி நூலில் பல இடங்களில் நாம் காண முடியும். ஆயினும், தங்களை நியாயப்பிரமாணத்தின் பாதுகாவலர்கள் என்று அழைத்துக் கொண்டவர்கள் இயேசு ஏன் பாவிகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் என்ற காரணத்தை புரிந்து கொள்ள வில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அக்கால சமுதாய நடைமுறைக்கு எதிரான ஒன்றை இயேசு செய்து கொண்டிருந்தார். லூக்கா 15ல் நாம் வாசிக்கும் மூன்று உவமைகளும், இழந்து போனவைகளைத் தேடிக் கண்டடைவதில் உள்ள மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வலியுறுத்துகிறது. தொலைந்து போனதின் மதிப்பும், அதைக் கண்டடைவதில் அல்லது திரும்பப் பெற்றுக் கொள்வதில் உள்ளா மகிழ்ச்சியும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்வதை நாம் காண முடிகிறது. ஒரு பாவி மனம் திரும்புகையில்  பரலோகத்தில் தூதர்களிடையே உண்டாகும் மகிழ்ச்சி பற்றி லூக்கா 15:7, 10  ஆகிய வசனங்கள் நமக்குச் சொல்கின்றன. கெட்ட குமாரனைப் பற்றிய உவமையானது தன் மகனுடைய (மனம்) திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருந்த தகப்பனின் மகிழ்ச்சியை படம் பிடித்துக் காட்டுகிறது.

சில நேரங்களில், ஒரு மோசமான அல்லது விரும்பத்தகாத நபர் கிறிஸ்துவிடம் வர விரும்பும்போது, நாம் எதையாகிலும் தொலைத்ததைக் கண்டுபிடிக்கும்போது காட்டுகிற அதே மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அவரிடம் காட்டுகிறோமா? அவர்கள் ஆண்டவரிடம் வர விரும்புவதைக் குறித்த நம் மகிழ்ச்சியைக் காட்டுவதற்குப் பதிலாக, நாம் நம் பயங்களையும், தயக்கங்களையும் வெளிப்படுத்தக் கூடும். சமயங்களில், அவர்களுடைய நோக்கங்களையே நாம் சந்தேகப்படக் கூடும். ஆயினும், இயேசு ஒரு பாவியின் மனம் திரும்புதலில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இயேசுவின் மூன்று உவமைகளில் நாம் காண்பது போல, பரலோகத்தின், தேவ தூதர்களின் மற்றும் தகப்பனின் மகிழ்ச்சியானது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்வது நாம் இழந்து போனவைகளைத் தேடவும் ஏற்றுக் கொள்ளவும் ஆயத்தமுள்ளவர்களாக இருகக் வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.

பயன்பாடு: ஒரு பாவியின் மனம் திரும்புதல் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும் எனில், நான் அதைக் குறித்து எவ்வளவு அதிக மகிழ்ச்சியுடன் இருகக வேண்டும்!  தொலைந்து போன ஆட்டைக் கண்டுபிடிக்க அந்த மேய்ப்பன் காட்டிய ஆர்வம், தொலைந்து போன நாணயத்தைக் கண்டுபிடிக்க அந்த பெண் காட்டிய கவனம், மற்றும் தொலைந்து போன தன் மகனை ஓடிச் சென்று அன்புடன் கட்டியணைத்து ஏற்றுக் கொண்ட தகப்பன், இவர்கள் அனைவரும் இழந்து போனவைகளைத் தேடி இரட்சித்தல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு நினைவுபடுத்துகிறார்கள். ஒரு பாவி மனந்திரும்புதலுள்ள இருதயத்துடன் தேவனிடம் வரும்போது, அது அவருடைய முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகையை உண்டாக்குகிறது. பின்பு அந்தப் பாவியின் மாற்றப்பட்ட வாழ்க்கையானது அவனுடைய குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கு அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது (உதாரணமாக, சகேயு). கிறிஸ்துவிடம் வரவிரும்புகிற ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நான் அவரை ஏற்றுக் கொள்ள திறந்த மனதுடன் இருக்க வேண்டும். ”அனைத்து பரிசுத்தவான்களுக்கும் ஒரு கடந்த காலம் உண்டு, அனைத்து பாவிகளுக்கும் ஒரு எதிர்காலம் உண்டு” என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். நான் தொலைப்பதற்கு முன்பு என்னிடம் இருந்த போது கொடுத்த மகிழ்ச்சியை விட, அதைத் தேடிக் கண்டடைவது அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இப்பொதுள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில், நான் அதன் மதிப்பை அறிந்திருக்கிறேன்.

ஜெபம்: இயேசுவே, நான் உம்மிடம் வந்த போது என்னை ஏற்றுக் கொண்டு நீர் காண்பித்த அன்பிற்காக உமக்கு நன்றி. கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியாக, உம் இரட்சிப்பு தேவைப்படுகிற மற்றவர்களுக்கு அன்பையும் கனிவையும் காண்பிக்க எனக்கு உதவும். ஆண்டவரே, இழந்து போனவர்களைத் தேடும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவும், அவர்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள மகிழ்ச்சியை உம்முடன் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

The joy of finding the lost

READ: Ruth 3,4; Psalm 117; Luke 15:1-10

SCRIPTURE: Luke 15:1 Now the tax collectors and sinners were all gathering around to hear Jesus.
 2 But the Pharisees and the teachers of the law muttered, “This man welcomes sinners and eats with them.” 
3 Then Jesus told them this parable:

OBSERVATION: In Luke 15, we see three parables that Jesus told to the Pharisees and the teachers of the law. Sometimes, we forget why Jesus said these parables. Here we read that the tax collectors and sinners came to listen Jesus' teaching. Whenever Jesus spent time with the sinners and tax-collectors, he influenced them and changed their life , it was never vice versa. The Gospel says many such stories of transformation in the life of sinners. However,  those who called themselves as guardians of the law did not understand Jesus' logic of welcoming the sinners. For them, he was doing something against the social norms of the day. The three parables we read in Luke 15 emphasis the joy and excitement in finding the lost ones. We can see a gradual increase in both the value of the lost and the joy in finding it or getting it back. Luke 15: 7, 10 tell us about the prevailing joy in the heaven and among the angels when a sinner repents. The parable of the Prodigal Son illustrates the joy of the father who was waiting for his son to return home. 

Sometimes,  when a notorious or undesirable  person wants to come to Christ, do we show the same joy and excitement that we show when we found something that we lost? Instead of expressing our happiness for their willingness to come to the Lord, we may express our fears and apprehensions. At times, we may question their motives as well. However, Jesus rejoices at the repentance of a sinner. As we see in the three parables of Jesus, the progressive expression of the joy of heaven, angels and the father reminds us that we should be ready to find and accept the lost ones.

APPLICATION: If the repentance of one sinner would cause "more rejoicing in heaven," how much more should I be happy about it! The eagerness of the shepherd to find a lost sheep, curiosity of the woman to found a lost coin, and the loving father who ran towards his lost son to accept him with a loving embrace, they all remind me that how important it is to seek and save the lost. When a sinner comes to God with a repenting heart, it brings a smile on God's face. Then, the sinner's transformed life brings more joy to his family and his society (e.g. Zacchaeus). I should be open to receive a person who wants to come to Christ, irrespective of his history. I should remember that "every saint has a past, every sinner has a future." Finding the lost gives more joy than when it was with me before I lose it. The only difference now is I  know it's value.

PRAYER: Jesus, thank you for your love to accept me when I came to you. As a sinner saved by your grace, help me to show your love and kindness to others who need your salvation. Lord, help me to be involved in the work of seeking the lost and to share the joy with you in finding them. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Monday, April 26, 2021

விலைக்கிரயம் இன்னதென்று சிந்தியுங்கள் - நீங்கள் இயேசுவின் சீடர்

வாசிக்க:  ரூத் 1,2; சங்கீதம் 116; லூக்கா 14: 25-35

வேதவசனம்: லூக்கா 14: 33. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கவனித்தல்: லூக்கா 14:25-35 ல், தன் சீடராக இருப்பதற்கு கொடுக்கவேண்டிய விலைக்கிரயம் பற்றி விளக்க இயேசு ஒரு உயர்வு நவிற்சி (hyperbole - தன் கருத்தை வலியுறுத்துவதற்காக, அதன் நேரடி அர்த்தத்தை எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை) ஒன்றைச் சொல்லி ஆரம்பிப்பதை நாம் பார்க்கிறோம். இந்த வேதபகுதியில், இயேசுவின் சீடராக இருப்பதற்குத் தேவையான மூன்று முக்கியமான காரியங்களை இயேசு அடிக்கோடிட்டு காட்டுகிறார்: 1) மற்ற எவரையும் விட இயேசுவை நேசித்தல், 2) (அனுதினமும்) சிலுவையை சுமந்து வாழ்தல், 3) கிறிஸ்துவின் நிமித்தம் அனைத்தையும் விட்டுவிட ஆயத்தமாக இருத்தல். ஒரு கோபுரம் கட்ட விரும்புகிறவன் முதலில் அதற்க்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிடுவான் என்றும், போருக்கு தன் ராணுவத்தை தயார்படுத்துகிற ராஜா தன் ராணுவத்தின் வலிமை இன்னதென்றும் சிந்திப்பான் என இயேசு சொன்னார். இங்கே, ஒருவர் தன் சீடர் ஆகுவது கடினம் என்று சொல்ல வில்லை. மாறாக, அனைவரும் அவருடைய சீடர்கள் ஆக வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறார்.  போதிய பணம் இல்லாத மற்றும் வலிமையற்ற ஒருவர்,  முறையே கட்டிட வேலையை ஆரம்பிக்க மாட்டார், போருக்கும் செல்ல மாட்டார்.  “அப்படியே”, தங்கள் பலம், சக்தி ஆகியவற்றைக் கணக்கிடுபவர் இயேசுவின் சீடர் ஆக முடியாது. தன் சீடர் ஆக விரும்புகிறவர்கள் அவரைப் பின்பற்ற எல்லாவற்றையும் விட்டுவிட ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இங்கே விலைக்கிரயம் இன்னதென்று சிந்தித்தல் என்பது, கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் தகுதியானவர்களா அல்லது இயலுமா என்பதைக் குறிப்பது அல்ல. இது நமக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது: கிறிஸ்துவுக்கு ஒரு முழுமையான அர்ப்பணிப்பைச் செய்ய நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?

பயன்பாடு: இயேசுவின் சீடனாக, வேறெதைப்பார்க்கிலும் முதலாவது தேவனையும் தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நான் தேடவேண்டும். நான் என் குடும்பம் மற்றும் உறவினர்கள வெறுக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, தேவன் மேல் உள்ள என் விருப்பத்தை இது காட்டுகிறது. இயேசுவைப் பின்பற்றுவதற்கு, நான் சிலுவை சுமக்க, அதாவது அதற்கான் விலைக்கிரயத்தைச் செலுத்த ஆயத்தமுள்ளவனாக இருக்க வேண்டும். சிலுவை இல்லாத ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையானது கிறிஸ்து இல்லாத ஒரு வாழ்க்கை ஆகும். எனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், என் அனைத்தையும் இயேசுவுக்கு முன் வைக்க ஆயத்தமுள்ளவராக நான் இருக்க வேண்டும்.பவுலைப் போல, ”எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்” என்று நான் சொல்ல, வாழ விரும்புகிறேன்.

ஜெபம்: இயேசுவே, உம் சீடர் ஆவதை எளிமையாக்கினதற்காக நன்றி. ஒரு முழுமையான அர்ப்பணிப்புடன் உம்மை நேசிப்பதன் மூலம் நான் உம் சீடர் ஆக இருக்க முடியும். அன்புடனும், மனத்தாழ்மையுடனும் உம்மை அனுதினமும் பின்பற்ற எனக்கு உதவும். ஏனெனில், இயேசுவே, நீங்கள் தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறீர். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Consider the cost - you can be Jesus' disciple

 READ: Ruth 1,2; Psalm 116; Luke 14:25-35

SCRIPTURE: Luke 14:  33 In the same way, those of you who do not give up everything you have cannot be my disciples.

OBSERVATION: In Luke 14:25-35, Jesus starts with a hyperbole (to emphasis his point, not to take it's literal meaning) to explain the cost of being his disciple.  In this passage, Jesus highlights three important things to be a disciple of Jesus Christ: 1) Loving Jesus more than any other persons, 2) Carrying the cross (daily), 3) Willingness to give-up everything for Christ' sake. Jesus says that a person who wants to build a tower would estimate the cost first, and a king who prepares his army for a battle would think about the strength of his army as compare to his enemy. Here, Jesus does not discourage a person to become his disciple. Rather, he encourages every one to be his disciple. A person who has not enough money and strength would not go for a building project and a war respectively. “In the same way,” those who consider their strengths and power cannot be Jesus' disciples. He expects that those who want to become his disciples should be ready to give up everything to follow him. Counting the cost here does not imply whether we are capable or worthy to follow Christ. It places a challenge in front of us: are we ready for an absolute surrender to Christ?

APPLICATION: As a disciple of Jesus, I need to seek first God and his kingdom than anything else. This doesn't mean that I should hate my family and relatives. It shows my priority to God. To follow Jesus, I should be ready to carry the cross i.e. to pay the price for it. A Christian life without the cross is a life without Christ. I must be willing to submit my all to Christ, keeping nothing for my own sake. Like Paul, "whatever were gains to me I now consider loss for the sake of Christ," I want to say and to live, for Christ.

PRAYER: Jesus, thank you for making it easier to become your disciple. I can be your disciple by loving you with an absolute surrender. Help me to follow you everyday with love and humility. You are my everything. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Sunday, April 25, 2021

தேவன் சாகவில்லை

வாசிக்க:  நியாயாதிபதிகள் 19-21; சங்கீதம் 115; லூக்கா 14: 1-24

வேதவசனம்: சங்கீதம் 115: 17. மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
18. நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.

கவனித்தல்: சங்கீதம் 115ன் கடைசி இரண்டு வசனங்களும் அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற வசனங்களிடம் இருந்து வித்தியாசமானவை போலத் தோன்றினாலும், அவை நமக்கு முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கின்றன. நாம் வாழும் இந்தச் சூழலில், இந்த வசனங்கள் நமக்கு மிகவும் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. மரித்துப் போன ஒரு மனிதர் எதுவும் செய்ய முடியாது என்பதை நாமனைவரும் அறிவோம். ஆயினும், நமக்கு மிகவும் பிரியமானவராக இருப்பவரை நாம் இழந்து போகும்போது, நம்மில் பலர் அதை ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுகிறேன். சிலர் தேவனைப் பற்றியும் அவரு இருக்கிறாரா என்பதைப் பற்றியும் கேள்விகேட்க ஆரம்பித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட தருணங்களில், நம் மனதிலும் புறம்பே இருந்தும் நம்மை தொந்தரவுபடுத்தும் பல கேள்விகளைக் கேட்கக் கூடும். மரித்துப் போன ஒருவரைப் பற்றி நாம் செய்யக் கூடிய ஒரு நல்ல காரியம் உண்டு எனில், அவருடைய வாழ்க்கைக்காக தேவனைத் துதிக்க வேண்டும். மரித்தவர்களால் அதைச் செய்ய முடியாது. உயிரோடிருக்கும் நாமே தேவனைத் துதிக்க முடியும். இது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா! எசேக்கியா ராஜா சாவுக்கேதுவான வியாதியிலிருந்து பிழைத்துக் கொண்ட போது, அவரும் இது போன்று ச்ன்னார். (ஏசாயா 38:18,19). நம் தேவன் சாகவில்லை, ஆகவே நாம் உயிரோடிருக்கிறோம். தேவனுடனான உறவை இழந்து, ஆன்மீக வாழ்வில் மரணமடைந்த ஒருவர் பற்றி என்ன? தேவனுடனான உறவைச் சரிசெய்யுமட்டும், அவர்களாலும் தேவனைத் துதிக்க முடியாது. உயிருள்ள ஆன்மீக வாழ்வைக் கொண்ட ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும், இப்பொழுதும் எப்பொழுதும் தேவனைத் துதித்துக் கொண்டிருப்பார்.

பயன்பாடு: தேவன் மீது உள்ள என் விசுவாசத்தை அசைக்கக் கூடிய கேள்விகளை நான் எதிர்கொள்ளும்போது, என் தேவன் சாகவில்லை என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். என் மேல் கரிசனையுள்ள உயிருள்ள தேவனை நான் ஆராதிக்கிறேன் என்பதை நான் உணர வேண்டும்.  ” இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி.13:8). அவர் சொல்கிறார்: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” (வெளி.1:18). அவர் உயிரோடிருக்கிறபடியால், நானும் பிழைத்திருப்பேன் (யோவான் 14:19). ஆவிக்குரிய மந்தநிலையினூடாக அல்லது தேவனைத் துதிப்பதற்குக் கடினமாக இருப்பதை உணரும்போது, நான் தேவனை நினைத்துப் பார்க்க வேண்டும். என் சுவாசம் முதல் இந்த உலகில் என்னிடம் இருக்கும் அனைத்தும் அவரிடம் இருந்து வந்தவை ஆகும். ”கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.” உயிருள்ள ஒரு மனிதனாக, நான் இப்போதும் எப்போதும் தேவனைத் துதிப்பேன். 

ஜெபம்: பிதாவே, நீர் எனக்குத் தந்திருக்கிற அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, நீர் என் தேவன். நீரே நித்தியப் பிதா. தேவனே, நான் உயிருள்ள நாட்களிலெல்லாம் உமக்கு நன்றியறிதலுள்ளவனாகவும், உம்மைத் துதிக்கிறவனாகவும் இருக்க எனக்கு  அருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

God's not dead

READ: Judges 19-21; Psalm 115; Luke 14:1-24

SCRIPTURE: Psalm 115: 17 It is not the dead who praise the Lord, those who go down to the place of silence;
18 it is we who extol the Lord, both now and forevermore.

OBSERVATION: The last two verses of Psalm 115, although it appears to be disconnected from the other verses of the chapter, they  convey an important message to us.  In our present scenario, these verses are very relevant to us,  We all know that a dead person cannot do anything. Nobody can escape from the death. However, when we lose a person who is dear to us, many of us find it difficult to accept it. Some people started to question God and his existence. During such times, we may hear taunting questions from within and without. One good thing we can do about a dead person is to praise God for his/her life. A dead person cannot do it. Only we who are alive could praise God. Does it make sense? When the King  Hezekiah recovered from his deadly sickness, he also said something similar to these verses ( Isaiah 38:18,19). Our God is not dead, so we are alive. How about a person who is spiritually dead and lost his relationship with God? They also cannot praise God until they set their things straight before God. A person who is spiritually alive will praise God, "both now and forevermore," irrespective of  environments.

APPLICATION: When I face taunting questions that could shake my faith in God, I should remember that my God's not dead. I need to realize that I worship the living God who concerns for me. "Jesus Christ is the same yesterday and today and forever" (Heb. 13:8). He says, " I am the Living One; I was dead, and now look, I am alive for ever and ever! And I hold the keys of death and Hades" (Rev.1:18). Because he lives, I also will live (John 14:19).If I go through a spiritual dullness or when I find it difficult to praising God, I need to remember God. From my breathing to all that I have in this world, are from him.  "What shall I return to the Lord for all his goodness to me?"  As a living person, I will praise the Lord now and forever. 

PRAYER: Father, thank you for every blessing that you have given me.  Above all, you are my God. You are the everlasting father. God, help me to be thankful and to praise you as long as I live. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Saturday, April 24, 2021

எத்தனை பேர் இரட்சிக்கப்படுவார்கள்?

வாசிக்க:  நியாயாதிபதிகள் 17,18; சங்கீதம் 114; லூக்கா 13: 18-35

வேதவசனம்: லூக்கா 13:23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

கவனித்தல்: இயேசுவைப் பின்பற்றுபவர் கேட்கிற ஒரு நல்ல கேள்வியை நாம் இங்கு காண்கிறோம். நாமும் கூட இந்தக் கேள்வியை பலமுறை வெவ்வேறு தருணங்களில் ஆண்டவரிடம் கேட்டிருக்கக் கூடும். எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டு என்று தேவன் விரும்புகிறார் என்ற வேத போதனையை நாம் அறிவோம். ஆயினும், இங்கே நாம் இயேசுவின் பதிலைப் பார்க்கும்போது, நேரடியான பதிலைச் சொல்வதற்குப் பதிலாக, அவர் வேறு ஒன்றைச் சொல்வதாகத் தோன்றுகிறது. இந்தக் கேள்வியை அது சொல்லப்பட்ட சூழ்நிலையில் வைத்துப் பார்க்கும்போது, இரட்சிக்கப்படுவது எப்படி என்று இயேசு சொல்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தேவன் தம் ஜனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் காட்டிலும் அவர்களின் தரம் பற்றி கரிசனை உள்ளவராக இருக்கிறார். இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசித்தல் என்று இயேசு சொல்வது அவர் மூலமாக பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதைக் குறிக்கிறதாக இருக்கிறது. இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார் (யோவான் 14:6).

இடுக்கமான வாசல் என்பது கொஞ்சம் பேர்தான் இரட்சிக்கப்படுவார்கள் என்பதைக் குறிக்கிறதா? கொஞ்சம் பேர்தான் இரட்சிக்கப்படுவார்கள் என்று யூதர்களிடையே அப்படிப்பட்ட ஒரு பொதுவான நம்பிக்கை இருந்தது. இந்தக் கேள்விக்கு சற்று முன்னர், இயேசு கடுகு விதை மற்றும் புளித்த மாவு பற்றிய உவமைகளை மக்களிடம் சொன்னதை நாம் காண்கிறோம். அதில் இயேசு பரலோக இராஜ்ஜியத்தை கடுகு மற்றும் புளித்த மா உண்டாக்கும் விளைவுகளுடன் ஒப்பிடுவதைக் காண்கிறோம் (லூக்கா 13:18-21).  இந்த உவமைகளானது பரலோக ராஜ்ஜியம் ஜனங்களிடையே உண்டாக்கும் மாற்றம் மற்றும் தாக்கம் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறது. 29ம் வசனத்தில், தேவனுடைய இராஜ்ஜியத்தில் நடக்கும் விருந்துக்கு உலகில் எல்லா திசைகளிலும் இருந்து ஜனங்கள் வருவார்கள் என்று இயேசு சொல்கிறார். நிச்சயமாக அனேகர் இரட்சிக்கப்படுவார்கள். இங்கே கேட்கப்படுகிற கேள்வி என்னவெனில், இடுக்கமான வாசல் வழியாக நுழைந்து செல்ல ஆயத்தமுடையவனாக நான் இருக்கிறேனா?

பயன்பாடு: இயேசுவைப் பின்பற்றுபவனாகிய நான் இடுக்கமான வாசல் வழியாக பரலோக இராஜ்ஜியத்தில் நுழைவதில் என் கவனம் இருக்க வேண்டும், எத்தனை பேர் வருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பதில் அல்ல. நான் இயேசுவைப் பின்பற்றுகையில், நான் என் சுயத்தை வெறுத்து, அனுதினமும் சிலுவையை எடுத்துக் கொண்டு இயேவைப் பின்பற்ற அர்ப்பணிப்பு உள்ளவனாக இருக்க வேண்டும். தேவனுடைய இராஜ்ஜியம் வளர்ந்து சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்த தேவனை என் வாழ்வில் நான் அனுமதிக்கும் போது, அனேகர் தேவனை அறிந்து, தேவ இராஜ்ஜியத்திற்குள் வருவார்கள். இயேசுவைக் கவனமாகப் பின்பற்ற நான் அனைத்து முயற்சிகளையும் செய்வேன். 

ஜெபம்: இயேசுவே என் இருதயத்தில் இருக்கிற கேள்விகளில் ஒன்றுக்கு நீர் பதில் தந்ததற்காக நன்றி. ஆண்டவரே, அழிவுக்கு வழிநடத்துகிற விசாலமான பாதையைத் தேர்வு செய்யாமல், நித்ய ஜீவனுக்குள் வழிநடத்தும் இடுக்கமான வழியை தெரிந்து கொள்ள எனக்கு உதவும். உம் வழியில் நடக்க உம் பரிசுத்த ஆவியானவர் எனக்கு பலம் தருவாராக. ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

How many will be saved?

READ: Judges 17,18; Psalm 114; Luke 13:18-35

SCRIPTURE: Luke 13: 23 Someone asked him (Jesus), “Lord, are only a few people going to be saved?” He said to them,
 24 “Make every effort to enter through the narrow door, because many, I tell you, will try to enter and will not be able to.

OBSERVATION: Here we see a genuine question of a follower of Jesus. We also may have asked this question several times with the Lord, on different occasions. We know the biblical teaching that God wants all people to be saved. However, when we look at Jesus' answer here, it appears that instead of giving a straight forward answer, he tells something else. When we read this question in its the context, we understand that Jesus says about how to be saved. God is concerned about the quality of his people than the quantity of their numbers. Jesus' reference to the narrow door indicates about entering the kingdom of God through him. Jesus is " the way and the truth and the life" (Jn.14:6). 

Does the narrow door mean that only a few people will be saved? Jews had a common belief that only a few will be saved. Just before this question, Jesus told the people about the parables of the Mustard seeds and the Yeast, in which Jesus compared the Kingdom of God with the mustard seed and the yeast (Lk.13:18-21). This parable gives us a glimpse of the influence and impact of the Kingdom of God among the people. In verse 29, Jesus says many people will come from all corners of the world to participate in the feast of the Kingdom of God. Certainly many people will be saved. But the question is, am I ready to enter through the narrow door. 

APPLICATION: As a follower of Jesus Christ, my focus should be on entering through the door, not on counting the number of people. while I follow Christ, I must commit myself to deny my self and to carry the cross every day. When I allow God to work in my life so that God's kingdom to grow and to permeate the society, many people will know God and will come to the Kingdom of God. I will make every effort to follow Jesus diligently.

PRAYER: Jesus, thank you for answering one of my heart questions. Lord, instead of choosing the broad road that leads to destruction, help me to take the narrow road that leads to life. May your Holy Spirit strengthen me to walk in your way. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Friday, April 23, 2021

அவனுக்குத் தெரியாது, ஆனால் உங்களுக்குத் தெரியும்!

வாசிக்க:  நியாயாதிபதிகள் 15, 16; சங்கீதம் 113; லூக்கா 13: 1-17

வேதவசனம்: நியாயாதிபதிகள் 16: 20. அப்பொழுது அவள் (தெலீலாள்): சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.
21. பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.

கவனித்தல்: சிம்சோனின் வீழ்ச்சியைப் பற்றிச் சொல்லும் சம்பவமானது நாம் எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பரிசோதிக்கும்படி நம்மை எச்சரிக்கிற  ஒன்றாக இருக்கிறது. சிம்சோனின் வாழ்க்கையில், நியாயாதிபதிகள் புத்தகத்தின் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றை நாம் காணலாம். அது என்னவெனில், தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளுக்கும் கீழ்ப்படிவதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்லுதல் ஆகும். நாம் அறிந்திருக்கிறபடி, சிம்சோனின் கதை அற்புதமான ஒரு துவக்கத்தை உடையதாக இருந்தது. ஆயினும், அவன் தன் அழைப்பை மறந்து, தன் பாவ இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக தவறான இடங்களில் தங்கினபோது,  அவன் செயல்களின் விளைவாக அவனுக்கு மரண ஆபத்து வந்தது. அவன் தன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அங்கே தொடர்ந்து தங்கிக் கொண்டிருந்தபோது, அவனுடைய எதிரிகள் அவனைப் பிடிப்பதற்கு மறைந்து பதுங்கி இருந்தனர். 

பெலிஸ்தியர்கள் அவனைப் பிடித்துக் கொள்ள வந்த போது, அதற்கு முன்பு வெற்றிபெற்றது போலவே இப்போதும் வெற்றி பெறுவேன் என்று அவன் சொன்னான். அவன் “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல்” இருந்தான். எதிரிகளிடம் இருந்து தப்பித்துச் செல்வதற்காக தான் முன்பு செய்த அனைத்தையும் செய்ய முயற்சி செய்திருக்கக் கூடும். கர்த்தர் தன்னுடனே இல்லை என்பதை அவன் உணர்ந்த தருணத்தில், தன்னைக் குறித்து மிகவும் மோசமாக உணர்ந்திருப்பார். அவன் இனிமேல் தப்பித்துச் செல்ல முடியாது. தன் வெறும் கைகளால் சிங்கத்தைக் கொன்று போட்ட ஒரு வலிமையான மனிதனாகிய சிம்சோன் மாவு அரைக்கும்படி அனுப்பப்பட்டான். ஆயினும், அத்துடன் கதை முடிந்துவிடவில்லை. சிம்சோன் கர்த்தரை நோக்கி ஜெபித்தபோது, அவன் தன் வலிமையை திரும்பவும் பெற்றுக் கொண்டான். ஆனால் அதில் வாழமுடியாமல், இறந்து போனான்.

பயன்பாடு: மற்றவர்களால் செய்யமுடியாத ஒன்றைச் செய்வதற்கான தனித்துவமான திறமைகள் அல்லது தேவ அபிசேகம் எனக்கு இருக்கலாம். ஆயினும், நான் எனக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கைகளை மறந்து, நான் விரும்பும் எந்த நேரத்திலும் எளிதாக பாவத்தை வெற்றி பெற்றுவிடுவேன் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து தவறான இடங்களில் இருந்து கொண்டிருந்தால், கர்த்தர் என்னுடன் கூட இருக்க மாட்டார். சிம்சோனின் கதையைப் படிக்கும்போது, அவனுக்கு ஏன் அவ்வாறு ஆனது என்பதை நான் அறிந்து கொள்கிறேன். அவன் தேவனுடன் இருக்கவில்லை. தனக்கு நேர்ந்ததைப் பற்றி அறியாத மற்றொரு நபரைப் பற்றி வேதாகமத்தில் பார்க்கிறோம். அது மோசே ஆவார். தேவனுடனே கூட இருந்து பேசிய பின் சீனாய் மலையில் இருந்து மோசே கீழே இறங்கி வந்த போது, அவன் தன் முகம் பிரகாசமானதைப் பற்றி அறியாதிருந்தான். ஆனால் மற்றவர்கள் அதைக் கண்டார்கள் (யாத்.34:29,30).  நான் இனிமேல் பாவம் செய்யாமல்,  தேவனுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். பாவத்தின் மடியில் படுத்து உறங்குவதற்குப் பதிலாக, என் தலையணையாக வைத்துக் கொள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எனக்கு உண்டு. இப்பொழுது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறேன்!

ஜெபம்: தேவனே, நீர் அனைத்தையும் அறிந்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் செல்ல வேண்டிய வழியை நீர் அறிந்திருக்கிறீர். ”வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று சொல்லி வழிகாட்டுகிற உம் வார்த்தைகளுக்காக நன்றி. ஆண்டவரே, உம் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க எனக்கு உதவும். பரலோக தகப்பனே, உம் வழியில் நடக்க உம் பலத்தை எனக்குத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

He did not know, but you know!

READ: Judges 15,16; Psalm 113; Luke 13: 1-17

SCRIPTURE: Judges 16: 20 And she (Delilah) said, “The Philistines are upon you, Samson!” And he awoke from his sleep and said, “I will go out as at other times and shake myself free.” But he did not know that the Lord had left him.
21 And the Philistines seized him and gouged out his eyes and brought him down to Gaza and bound him with bronze shackles. And he ground at the mill in the prison.

OBSERVATION: The story of Samson's fall is a warning for us to check where we are and what we do. In Samson's life, we can see one of the major themes of the book of Judges i.e. a gradual decline of obedience to God and his commandments. As we all know, the beginning of Samson's story was wonderful. However, when he forgot his call and stayed in the wrong places to satisfy his sinful desires, he became a victim of his own actions. When he continued to stay and sleep to gratify his desires, his enemies were "lying in ambush" to capture him. When the Philistines came to seize him, Samson told that he would win as he did before. "But he did not know that the Lord had left him." He might had tried to do all that he did before to escape from the enemies. When he realized that the Lord was not with him, he might had felt very bad about himself. It was too late to escape. A mighty man who killed a lion with his bare hands was assigned to ground at the mill. However, it was not the end. When Samson prayed to the Lord, he regained his strength. But he was no more to live in it.

APPLICATION: I may have some unique talents or special anointing of the Lord to do what others could not do. However, if I continually ignore the warnings and stay in the wrong places by thinking that I would get victory over sin easily whenever I want, the Lord would not be with me. When I read Samson's story, I know why it had happened to him. He was not with the Lord. In the bible, we read about another man who also did not know what happened to him. It was Moses. When Moses came down from the Mount Sinai after spending time with the Lord, he did not know the radiance of his face. But others saw it (Exo.34:29,30). I want to spend time with the Lord, not to sin any more. Instead of sleeping at the lap of sin, I have promises of God to keep as my pillow. Now, I know what should I do!

PRAYER: God, thank you that know everything. You know the way that I should go. Thank you for guiding words that says, "“This is the way, walk in it."  Lord, help me to listen your words. Heavenly father, give me your strength to walk in your way. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Thursday, April 22, 2021

காலத்தை நிதானித்து அறிய ஒரு அழைப்பு

 வாசிக்க:  நியாயாதிபதிகள் 13,14; சங்கீதம் 112; லூக்கா 12: 35-59

வேதவசனம்: லூக்கா 12: 54. பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.
55. தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
56. மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?

கவனித்தல்: பரிசேயர்கள், சதுசேயர்கள், வேதபாரகர்கள் மற்றும் அனேகர் இயேசுவிடம் ஒரு அடையாளம் காட்டும்படி அடிக்கடிக் கேட்டனர். அவர்கள் இயேசுவின் அற்புதங்கள், போதனைகள் மற்றும் வாழ்க்கையைப் பார்த்தாலும் கூட, அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்களாக இருந்தபடியால் ஒரு அடையாளம் வேண்டும் எனக் கேட்டனர். இங்கே, அவர்கள் ”இந்த காலத்தை” நிதானித்தறிய தவறியதைப் பற்றி இயேசு கேள்வி கேட்கிறார். அவர்கள் வானம் மற்றும் பூமியின் தோற்றத்தை வைத்து நிதானித்து அறிவதில் வல்லவர்களாக இருந்த போதிலும் , தங்கள் ஆன்மீக வாழ்க்கையில் உள்ள பிரச்சனையைப் பற்றி புரிந்துகொள்ள தயாராக இல்லை. தங்கள் மதத் தலைவர்களின் இருந்த குறைகளைக் கண்டும் காணாதவர்கள் போல இருந்தனர். தேவனுடைய வார்த்தையைக் காட்டிலும் அதிகமாக தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கத்தைப் பற்றி கவலைப்பட்டனர். மேசியா குறித்து அனைத்து தீர்க்கதரிசிகளும் கொடுத்த அடையாளங்களை கவனிக்காமல் விட்டுவிட்டனர். மாறாக, அவர்கள் மேகத்தையும் காற்றையும் குறித்து வியாக்கியானம் செய்து கொண்டிருந்தனர். ஆகவே, இயேசு அவர்களை மாய்மாலக்காரர்கள் என்று அழைத்தார். 

இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களைக் காண ஆபிரகாம் உடபட அனேக தீர்க்கதரிசிகள் வாஞ்சையாய் இருந்தனர். ஆனால், இயேசுவையும் அவருடைய ஊழியத்தையும் நேரடியாகக் கண்ட பின்னும் இந்த ஜனங்கள் அவரை வாக்குபண்ணப்பட்ட மேசியாவாக காண விருப்பம் இல்லாதிருந்தார்கள். இங்கே குறிப்பிடப்படுகிற “இந்தக் காலம்” என்பது மனித வரலாற்றில் ஒரு தனித்துவமான காலமானதாகவும், அனேக தீர்க்கதரிசினங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு காலம் ஆகும். இந்தக் காலத்தின் ஆன்மீக பிரச்சனை என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் தேவனுக்குப் பிரியமான சரியான காரியத்தைச் செய்யவும், இக்காலத்தை நிதானித்து அறிவது முக்கியமானது ஆகும். 

பயன்பாடு: தொழில்நுட்ப வசதிகள் பெருகிய நவீன உலகில், பருவ காலங்களை விளக்குதல், சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின் எதிர்காலம் பற்றி கணித்தல் ஆகியவை மனிதனுக்கு உதவிகரமாக இருக்கிற தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளினால் மிகவும் சுலபமானதாக இருக்கிறது. ஆயினும், எந்த ஒரு சூழ்நிலையிலும், அது ஆவிக்குரியதாக இருந்தாலும் சரி அல்லது உலகப்பிரகாரமானதாக இருந்தாலும் சரி, அந்தக் காலத்தில் இருக்கிற பிரச்சனைகளைக் கையாள காலத்தைப் புரிந்து கொள்ளுதல் மிக முக்கியமானதாகும். நான் அதைக் கண்டும் காணாமல் இருந்து புறக்கணித்து நிராகரிக்கக் கூடாது. நான் இந்தக் காலத்தை நிதானித்து அறியும்போது, இயேசுவை நான் காண்பேன். இப்படிப்பட்ட ஒரு காலத்தில், எனக்கு தகுதியற்ற விசயங்களில் என் நேரத்தையும் சக்தியையும் செலவிடக்கூடாது. மாறாக, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என தேவன் விரும்புகிறார் என்பதை நிதானித்தறிய என் கவனத்தைச் செலுத்த வேண்டும். அது மிகச் சிறிய ஒரு காரியமாக இருக்கலாம். ஆனால், அது இந்தக் காலத்திற்கு தேவையானதும், பொருத்தமானதாகவும் இருக்கும். இக்காலத்தில் தேவனுக்காக நான் எதையாவது செய்வது என்பது ஒரு ஆசீர்வாதமான பொறுப்பு ஆகும்.

ஜெபம்: இயேசுவே, உலகின் நடப்புகாலத்தை நிதானித்து அறிய நீர் கொடுக்கிற எச்சரிக்கைக்காக உமக்கு நன்றி. இன்றைய ஆன்மீக மற்றும் சமூகப் பிரச்சனைகளிப் புரிந்துகொள்ள எனக்கு உதவும். ஆண்டவரே, என் வாழ்வில் உம் சித்தத்தைச் செய்ய எனக்கு உம் பலத்தைத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

A call to discerning the time

READ: Judges 13,14; Psalm 112; Luke 12: 35-59

SCRIPTURE: Luke 12: 54 He(Jesus) said to the crowd: “When you see a cloud rising in the west, immediately you say, ‘It’s going to rain,’ and it does.
55 And when the south wind blows, you say, ‘It’s going to be hot,’ and it is.
56 Hypocrites! You know how to interpret the appearance of the earth and the sky. How is it that you don’t know how to interpret this present time?

OBSERVATION: Pharisees, Sadducees, Scribes and many other people often asked Jesus to show them a sign. Although they saw the miracles, teachings, and the life of Jesus, they were asking for a sign because they did not want to accept Jesus. Here, Jesus questioned about their failure in interpreting the present time. While they were good in interpreting the "the appearance of the earth and the sky," they were not ready to understand their spiritual crisis. They turned a blind eye to the corruption of their religious leaders. They were more concerned about their tradition than the word of God. They did not heed to all the signs that were given by prophets, concerning the Messiah. Rather, they were showing their interest in interpreting clouds and winds. So, Jesus called them Hypocrites. Many prophets, including Abraham, wanted to see the time when Jesus lived on earth. But here even after seeing Jesus directly, these people did not have the desire to see him as the promised messiah. The "present time" that is mentioned here was a unique time in the history of men and was a well attested period by so many prophecies. It is important to discern the "present time" in order to understand the spiritual crisis of the time, and to do the right thing that pleases God.. 

APPLICATION: In the modern technically advance world, interpreting the seasons, forecasting the future of economic and social environments are easier with the human friendly technologies and innovations. However, in any given situation, whether it is physical or spiritual, understanding the "present time" is vital to deal the issues of the time.  I should not simply ignore and reject it.  When I discern the "present time", I will see the presence of Jesus. Such a time as this, I should not spend my time and energy in unworthy things. Rather, I should focus on God to discern what he wants me to do now. It may be a small thing. However, it will be necessary and relevant to  "this present time." It is my privileged responsibility to do something for God in the "present time."

PRAYER: Jesus, thank you for your wake-up call to discern the present time of the world. Help me to understand the social and spiritual crises of today. Lord, give me your strength to do your will in my life. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Wednesday, April 21, 2021

ஞானத்தின் இரகசியம்

வாசிக்க:  நியாயாதிபதிகள் 11,12; சங்கீதம் 111; லூக்கா 12: 1-34

வேதவசனம்: சங்கீதம் 111: 10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

கவனித்தல்: இரண்டுவிதமான பயங்களைப் பற்றி பரிசுத்த வேதாகமம்  சொல்கிறது: தேவனுக்குப் பயப்படுதல், மனிதருக்குப் பயப்படுதல். கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது ஞானத்தின் ஆரம்பத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆனால், மனிதரைப் பற்றிய பயமோ ஒரு கண்ணியாக இருக்கிறது (நீதி.29:25). வாழ்க்கையின் தேவைகளுக்கேற்ற விதத்தில் ஒருவர் தன் அறிவை சரியான முறையில் பயன்படுத்த ஞானமானது உதவுகிறபடியால், ஜனங்கள் ஞானத்தைப் பெற ஆசைப்படுகிறார்கள். ஞானத்தைப் பெறுவதற்காக, அவர்கள் எந்த சாகசத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஞானம் தொடர்பாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டிருக்கின்றன. ஆனாலும், தங்கள் கல்வி, அனுபவம் மூலமாக ஞானத்தைப் பெற விரும்புகிற அனைவரும் அதைப் பெறுவதில்லை.

இங்கே ஞானத்தைப் பெறுவதற்கு நூறு சதவீத வெற்றிவீதம் கொண்ட மிக எளிமையான வழிகளில் ஒன்றைப் பற்றி, அதாவது “கர்த்தருக்குப் பயப்படுதல்” பற்றி  சங்கீதக்காரன் சொல்கிறார். கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் நாம் எப்போதும் தேவனுக்கு பயந்துகொண்டே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. மாறாக, சங்கீதம் 19:7-9ல் வாசிப்பது போல, கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது, “கர்த்தருடைய வேதம்...கர்த்தருடைய சாட்சி...கர்த்தருடைய நியாயங்கள்...கர்த்தருடைய கற்பனை” ஆகியவற்றைக் குறிப்பதாகவும் இருக்கிறது. நாம் கர்த்தருக்குப் பயப்படுதல் உள்ளவர்களாக இருக்கும்போது,  நாம் நல்ல புத்தி உடையவர்களாகவும் இருப்போம். கர்த்தருக்குப் பயப்படுதல் பற்றி பல வித்தியாசமான காரியங்களை, பெரும்பாலும் எதிர்மறையான காரியங்களை ஜனங்கள் சொல்லக் கூடும். கர்த்தருக்குப் பயப்படுதல் நமக்கு ஞானத்தை தருவது மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் பெற அது நமக்கு உதவுகிறது. இந்த ஞானத்தைப் பற்றிய ஆச்சரியமான உண்மை என்னவெனில், வயது வித்தியாசமின்றி எவரும் கர்த்தரிடம் இருந்து இதைப் பெற முடியும். 

பயன்பாடு: ”நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்று எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் இயேசு சொன்னார் (லூக்கா 12:5). தேவனைத் தவிர, மனிதர்கள் எவருக்கும்  நான் பயப்படத் தேவை இல்லை. ஏனெனில், மனிதர்களுக்குப் பயப்படுதல் என்பது தாறுமாறுகளையும் குழப்பங்களையும் உண்டாக்குகிறதாக இருக்கிறது. அது பயங்களுடன் முடிந்துவிடுகிற ஒரு காரியம் அல்ல. மனிதருக்குப் பயப்படுதல் என்பது அனேக பிரச்சனைகளையும் சிக்கல்களையும் என் வாழ்வில் வரவழைக்கிற/உண்டாக்குகிறதாக இருக்கக் கூடும். மாறாக, நான் கர்த்தருக்குப் பயப்படுதல் உள்ளவனாக இருக்கும்போது, நான் ஞானத்தைப் பெறுகிறேன். அது எனக்கு எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்பதற்கான நல்ல புத்தியைத் தருகிறது. கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது என் பலவீனங்களையோ அல்லது வாழ்க்கையின் கவலைகளைக் குறிக்கிற ஒன்று அல்ல. மாறாக, என் வாழ்க்கைக்கு தேவையான ஞானத்த்தைப் பெற நான் எடுத்த என் விருப்பத் தேர்வை அது காண்பிக்கிறது. ஆகவே, என் இருதயத்தில் கர்த்தருக்குப் பயப்படுதல் உள்ளவனாக இருக்கிறேன். ஆண்டவர் எனக்கென வைத்திருக்கிற அனைத்து ஆசீர்வாதங்களையும் நான் பெற்று அனுபவிக்க என்னை வழிநடத்துவதாக இது இருக்கிறது.

ஜெபம்: பிதாவாகிய தேவனே, என் வாழ்க்கையில் தேவபக்திக்குரிய ஞானத்தைப் பெறுவதை மிகவும் எளிமையாக்கினதற்காக உமக்கு நன்றி. நீர் எனக்கு ஞானத்தைத் தருகிறீர். நீரே அந்த ஞானமாக இருக்கிறீர். ஆண்டவரே, உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு நீர் தருகிற நல்ல புத்திக்காக உமக்கு நன்றி. எனக்கு நீர் தருகிற ஞானத்தின் வெளிச்சத்தில் உண்மையுள்ளவனாக வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

The secret of wisdom

READ: Judges 11,12; Psalm 111; Luke 12:1-34

SCRIPTURE: Psalm 111: 10 The fear of the Lord is the beginning of wisdom; all who follow his precepts have good understanding. To him belongs eternal praise. 

OBSERVATION: The bible says about two kinds of fear: fear of God, fear of men. The fear of the Lord marks the beginning of wisdom. But. the fear of men will be a snare (Pro.29:25). Since wisdom helps a person to appropriately use his/her knowledge to the needs of life, people desire to have wisdom. To acquire wisdom, they are ready to take any risks. There are thousands of books already published related to wisdom. However, all who want to get wisdom through their education, experience do not get it.  

Here, the psalmist says about one of the easiest way that has the  100% success rate to get wisdom. i.e. the fear of the Lord. "The fear of the Lord" does not mean that we should be afraid of God at all the times. Rather, as we read in Psalm 19:7-9, the fear of the Lord also refers "the law...the statutes...the precepts....the commands....(and) the decrees of the Lord." When we have the fear of the Lord, we will have good understanding. People may say different things, mostly negative things, about the fear of God. The fear of the Lord not only gives us wisdom, it helps us to get everything that we need in this life. The amazing fact about this wisdom is anyone could get this wisdom from the Lord, irrespective of age. 

APPLICATION: Jesus plainly said, "I will warn you whom to fear" (Lk.12:5). I do not need to fear any men, except God. Fearing men always leads to chaos and confusions. Because, it does not merely end with fears. Fearing men could invite/cause so many troubles and complications in my life. On the other hand, when I have the fear of God, I get wisdom. And it gives me understanding to handle any situation. My fear of the Lord does not indicate my weaknesses or worries of life. Rather, it shows my choice to get the required wisdom for my life. So, I have the fear of the Lord in my heart. It leads me to experience every blessing that the Lord has for me. 

PRAYER: Father God, thank you for making it easier to get the godly wisdom in my life.  You give me wisdom. You are the wisdom. Lord, thank you for the good understanding that you give those who fear you. Help me to live faithfully in the light of the wisdom you give to me. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Tuesday, April 20, 2021

உட்புறத்தையும் சுத்தமாக்குங்கள்

வாசிக்க:  நியாயாதிபதிகள் 9,10; சங்கீதம் 110; லூக்கா 11: 29-54

வேதவசனம்: லூக்கா 11:39. கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.
40. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?

கவனித்தல்: இயேசு ஒரு பரிசேயனின் வீட்டில் இருந்த போது, அந்த பரிசேயன் அவருக்கு உணவு பரிமாறுவதற்கு முன்பு, பரிசேயர்களின் நடைமுறை குறித்த ஒரு முக்கியமான பாடத்தை அவனுக்குக் கற்றுக் கொடுக்க இயேசு விரும்பினார். இயேசு வேண்டுமென்றே தன் கைகளைக் கழுவாமல் இருந்தார் என நினைக்கத் தோன்றுகிறது. இயேசு தன் கைகளைக் கழுவாமல் உணவருந்த இருந்ததை ஆச்சரியத்துடன் அந்த பரிசேயர் பார்த்துக் கொண்டிருந்த போது, உட்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை இயேசு அவனுக்குச் சொன்னார்.  வெளிப்புறத்தில் மட்டும் கழுவப்பட்ட ஒரு கோப்பையானது பார்ப்பதற்கு நன்றாக இருக்கக் கூடும். ஆனால் அது உள்ளேயும் வெளியேயும் நன்றாகக் கழுவப்படவிலை என்றால், அது எவ்வளவு அழகானதாக இருந்தாலும், விலைமதிப்புள்ளதாக இருந்தாலும் பயன்படுத்தத் தகுதியற்றதாக இருக்கும். பொதுவாக, ஜனங்கள் வெளிப்புறத்தை மட்டுமே பார்ப்பார்கள். ஆகவே, உலகமெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் வெளிப்புறத் தூய்மைக்கு முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் இயேசுவோ, நம் புறம்பான சுத்தத்தைப் பார்க்கிலும், தேவன் நம் இருதயத்தைத் தான் முதலாவது பார்க்கிறார் என்று தெளிவுபடுத்தினார்.

பயன்பாடு: சுத்தமாக இருப்பது என்பது கடவுளுக்கு அருகில் இருப்பதற்குச் சமமானது என்று ஜனங்கள் சொல்கிறார்கள். ஆயினும், அவர்கள் பெரும்பாலும் வெளிப்புறத்தூய்மையைப் பற்றி பேசுகிறார்கள், அகத்தூய்மை பற்றி பேச தயங்குகிறார்கள். ஆனால், இயேசுவோ எப்பொழுதும் இருதயத்தில் சுத்தமாக இருப்பது பற்றி பேசுகிறார். இயேசுவைப் பொறுத்தவரையில், இருதயத்தில் இருந்து புறப்பட்டு வருபவைகள்தான் ஒரு மனிதனை அசுத்தப் படுத்தி, தீட்டுப்படுத்தும் (மாற்கு 7:20). ஆகவே, நான் வெளிப்புற சுத்தத்தைப் பார்க்கிலும், என் இருதயத்தைச் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஜெபம்: இயேசுவே, சுத்தம் பற்றிய இந்த முக்கியமான பாடத்திற்காக நன்றி. எல்லா பாவத்தில் இருந்தும் என்னைச் சுத்திகரிக்கும் உம் இரத்தத்திற்காக, ஆண்டவரே உமக்கு நன்றி. உம் வெளிச்சத்திலும் சத்தியத்திலும் நடக்க எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Clean the inside part also

READ: Judges 9,10; Psalm 110; Luke 11:29-54

SCRIPTURE: Luke 11:39 Then the Lord said to him, “Now then, you Pharisees clean the outside of the cup and dish, but inside you are full of greed and wickedness.
40 You foolish people! Did not the one who made the outside make the inside also? 

OBSERVATION: When Jesus was in the house of a Pharisee,  before the Pharisee served him the meal, Jesus wanted to teach him an important lesson related to the practice of Pharisees. It appears that Jesus deliberately did not wash his hands. When the Pharisee was seeing him with a surprise as Jesus did not wash his hands, Jesus told him about the importance of cleaning the inside part as well. A cup that is cleaned only on the outside part may look nice. But if it is not washed thoroughly in and out, it would be unfit to use, though how costly or beautiful is it. People would notice only the outer part. So, various cultures across the globe give importance to external cleaning. But Jesus made it clear that God first sees our heart than our outward cleanliness.

APPLICATION:  People say cleanliness is next to godliness. However, they mostly speak about outward cleanliness, and reluctant to speak about inward cleanliness. But Jesus always speaks about the cleanliness of heart. For Jesus, what comes from the heart  that makes a person unclean and defiles him (Mk.7:20). So, I should give importance to keep my heart pure and clean than outward cleanliness. 

PRAYER: Jesus, thank you for this important lesson about cleanliness. Lord, thank you for your blood that purifies my heart from all sin. Help me to walk in your light and truth. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Monday, April 19, 2021

ஜெபிக்க இயேசு கற்றுத்தரும் பாடம்

வாசிக்க:  நியாயாதிபதிகள் 7,8; சங்கீதம் 109; லூக்கா 11: 1-28

வேதவசனம்: லூக்கா 11: 1. அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.

கவனித்தல்: இயேசுவின் வாழ்வில் ஜெபமானது பிரிக்க முடியாததாக இருந்தது. ஒரு முறையான ஜெபவாழ்க்கையை உடையவராக இயேசு இருந்தார். இயேசுவின் சுருக்கமான ஜெபங்களையும் (உதாரணமாக, யோவான் 11:41, 42), முழு இரவும் அல்லது தனிமையில் நீண்ட நேரம் ஜெபித்த நேரங்களைப் பற்றியும் நற்செய்தி நூல் நமக்குச் சொல்கிறது (மத்தேயு. 14:23; மாற்கு.1:35; லூக்கா 5:16, 6:12). தன் மலைப் பிரசங்கத்தில், எப்படி ஜெபிக்க வேண்டும், எப்படி ஜெபிக்கக் கூடாது என ஜெபம் பற்றி இயேசு போதித்தார் (மத்.6:5-15). இயேசுவின் ஜெப வாழ்க்கை அவருடைய சீடர்களின் வாழ்க்கையையும் பாதித்தது. அதில் ஒன்றைத்தான் நாம் இங்கு பார்க்கிறோம்.  இயேசு தன் ஜெபத்தை முடிக்க அவர்கள் எவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் இயேசுவுக்காகக் காத்திருந்த போது, இயேசு எப்படி ஜெபித்தார் என்பதைப் பார்த்திருப்பார்கள். தாங்களும் இயேசுவைப் போல ஜெபிக்க வேண்டும் என விரும்பி இருந்திருப்பார்கள். ஆகவே, சீடர்களில் ஒருவன், “ஜெபம்பண்ண...எங்களுக்குப் போதிக்கவேண்டும்” என்று கேட்டான்.  இங்கே உள்ள வேண்டுகோளைக் கவனியுங்கள்: தனக்கு தேவைப்படும் தருணங்களில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, இயேசு தனக்கு ஒரு ஜெபத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவன் கேட்கவில்லை.  மாறாக, ஜெபம் பண்ணக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டான், ஒரு ஜெபத்தை அல்ல.

ஜெபத்தில் அதிக நேரம் செலவிடுவது எப்படி அல்லது நீண்ட நேரம் ஜெபிப்பது எப்படி என இயேசு போதித்திருப்பார் என ஒருவர் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் இயேசுவோ ஒரு சிறிய ஜெபத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த மாதிரி ஜெபமானது ஜெபம் பண்ணுவதற்கான வரைபடத்தைத் தருகிறது. அதன் பின்பு, அடுத்த ஒன்பது வசனங்களில் (லூக்கா 11:5-13), இயேசு கற்பித்த ஜெபத்தின் முதல் வார்த்தை அல்லது சொற்றொடரான “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதா” பற்றி, பிதாவானவர் எவ்வளவு நல்லவர் என்றும், அவருடைய ஆவிக்குரிய ஈவுகளைப் பற்றியும் விளக்கம் கொடுத்தார். இந்த வேதபகுதியானது, இடைவிடாமல் ஊக்கமாக ஜெபிப்பதற்கும் நம்மை உற்சாகப்படுத்துவதாக, வலியுறுத்துவதாக இருக்கிறது.

பயன்பாடு: இயேசுவின் ஜெப வாழ்க்கையானது அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நல்ல முன்மாதிரி ஆகும். அவருடைய வாழ்வின் பரபரப்பான தன்மையானது  (மிகுந்த அலுவல்கள்) ஜெபம் பண்ணுவதற்கு அவரை தடை செய்ய வில்லை. நீண்ட நேரம் ஜெபிப்பது எப்படி என்று அவர் தம் சீடர்களுக்கு போதிக்கவில்லை. ஆனால், தன் ஜெப வாழ்க்கை மூலம் அதை வாழ்ந்து காட்டினார். இயேசுவின் சீடனாக, அவரைப் போல நான் ஜெபிக்க விரும்புகிறேன். என் ஜெபத்தில், பிதாவாகிய தேவன் மற்றும் அவர் அருளும் ஆவிக்குரிய ஈவுகள் என் நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி, எந்த உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களும் அல்ல. ஏனெனில் எனக்கு என்ன தேவை என்பதை நான் கேட்பதற்கு முன்னமே அவர் அறிந்திருக்கிறார். ஜெபம் என்பது நமக்குத் தேவையான உலகப் பிரகாரமான காரியங்களைக் கேட்பது அல்ல, அது தேவனுடன் நேரம் செலவிடுவது ஆகும். அப்படி இருக்குமெனில், நேரம் ஒரு பொருட்டாக இருக்காது. 

ஜெபம்: இயேசுவே, உம் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள் மூலமாக ஜெபம் பண்ணக் கற்றுக் கொடுப்பதற்காக உமக்கு நன்றி. ஜெபம் பண்ண நேரம் கண்டுபிடிப்பதற்கு சாக்குபோக்குகளைச் சொல்வதற்குப் பதிலாக, அனுதின ஜெப வாழ்க்கையை உடைய ஒரு கிறிஸ்தவராக இருக்க உம்மைப் பின்பற்ற எனக்கு உதவும். உம் பரிசுத்த ஆவியானவர்தாமே, அனுதினமும் நான் ஜெபம் பண்ண என்னைப் பெலப்படுத்துவாராக. ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Jesus' lesson on prayer

READ: Judges 7,8; Psalm 109; Luke 11:1-28

SCRIPTURE: Luke 11: 1 One day Jesus was praying in a certain place. When he finished, one of his disciples said to him, “Lord, teach us to pray, just as John taught his disciples.”

OBSERVATION: In Jesus' life, prayer was inseparable. Jesus had a regular prayer life. The Gospel tells us of the occasions of his short prayers (for e.g. Jn.11:41,42) as well as the times he spent in prayer for the whole night or alone (Mt. 14:23; Mk.1:35; Lk.5:16, 6:12). In his Sermon on the Mount, Jesus taught about prayer that how to pray and how not to pray (Mt. 6:5-15). Jesus' prayer life impacted his disciples' life. Here we see one such thing. We do not know how long they waited for Jesus to finish his prayer. But as they were waiting for Jesus, they would have seen how Jesus prayed. They also may had wanted to pray like Jesus. So, one of his disciples asked him, "Lord, teach us to pray." Notice the request here: He was not asking Jesus to teach a prayer so that he could use it in times of need. Rather, he asked Jesus to teach "to pray," not a prayer.

One may expect that Jesus would have taught how to spend more time in prayer or how to pray for a long time. But, Jesus taught them a short prayer. This model prayer gives an outline to pray. After this, in the next nine verses (Lk.11:5-13), Jesus interpreted about the first word phrase he taught, "Father"- how good the Father is and of his the spiritual gifts. This passage also emphasizes  and encourages us to pray fervently. 

APPLICATION: Jesus' prayer life is the perfect example for every Christian. His busyness of life did not prevent him to pray. He did not teach his disciples about how to spend more time in prayer. But he showed them through his life of prayer. As a disciple of Jesus, I want to pray like him. In my prayer, my focus should be on God the Father and his spiritual gifts, not any material blessings. For he knows what I need even before I ask. Prayer is not about asking worldly things we need, but spending time with God. Then, time will be no matter. 

PRAYER: Jesus, thank you for teaching me to pray, through your life and words. Instead of saying any excuses to find time to pray, help me to follow you to have a regular prayer life. May your Holy Spirit enable me "to pray" every day. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Sunday, April 18, 2021

"எனக்குப் பிறன் யார்?"

வாசிக்க:  நியாயாதிபதிகள் 5,6; சங்கீதம் 108; லூக்கா 10: 25-42

வேதவசனம்: லூக்கா 10: 29. அவன் (நியாயசாஸ்திரி) தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.

கவனித்தல்: நல்ல சமாரியன் உவமை மூலமாக இயேசு பதிலளித்த கேள்வியை நாம் இங்கு காண்கிறோம். அந்த நியாயசாஸ்திரி தன் தேவன் யார் என்பதை அறிந்திருந்தார். ஆனால், ஒரு யூதராக இருந்தபடியால் “பிறன்” என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்திருக்கலாம். “பிறன்” என்ற வார்த்தை குறிப்பாக எவரையும் சுட்டிக்காட்டாமல் பொதுவானதாக இருக்கிறபடியால், அது தெளிவற்ற ஒரு வார்த்தை என சிலர் நினைக்கக் கூடும். அந்நாட்களில், யூத சமூகத்திற்குள்ளாகவே அவர்களுடைய நம்பிக்கைகள் அடிப்படையில் பிரிவுகளும் மோதல்களும் இருந்து வந்தது. ஆகவே, ஒரு சக யூதரை அன்பு செய்வது என்பதே பல அர்த்தங்களைத் தருவதாக இருந்தது. 

இந்தச் சூழ்நிலையில், நல்ல சமாரியன் உவமை மூலமாக, “யார் பிறன் ஆக இருக்கக் கூடும்?” என்பதை அந்த நியாயசாஸ்திரிக்கு இயேசு எளிய மற்றும் வலிமையான விதத்தில் புரிந்து கொள்ள உதவினார். கள்ளர் கைகளில் அகப்பட்டு அடிபட்டுக் கிடந்த அந்த மனிதன், எருசலேமில் இருந்து எரிகோவுக்குப் போகிறவனாக இருந்த படியால், ஒரு யூதனாக இருந்திருக்க வேண்டும். ஆயினும், யூதர்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றிருந்த ஆசாரியனும் லேவியனும் அவனுக்கு உதவ மனதில்லாது போனார்கள். அவனுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் கண்டும் காணாதவர்களாக, “பக்கமாய் விலகிப்” போனார்கள். ஆனால், ஒரு சமாரியன் - யூதர்களால் வெறுக்கப்பட்ட, இழிவாகக் கருதப்பட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்தவன் - அந்த காயப்பட்ட மனிதன் மேல் மனதுருகி, இரக்கம் பாராட்டினான். அவனுடைய அன்பின் செயலானது அந்நாட்களில் இருந்த சமுதாயப் பழக்க வழக்கங்களைக் கடந்ததாக இருந்தது. நியாயாச சாஸ்திரிக்கு தன் கேள்வியின் பதிலைப் புரிந்து கொள்ள உதவிய ஒரு தெளிவான செய்தியை இயேசு சொன்னார்.

இங்கு முக்கியமாக சொல்லப்படுகிற விசயம் என்னவெனில், “யார் நம் பிறன் ஆக இருக்கக் கூடும்?” என்பதைப் புரிந்து கொள்வதல்ல. மாறாக, நாம் அந்த நல்ல சமாரியனைப் போல, நம் அயலாருக்கு (அ) பிறருக்கு அன்பைக் காட்ட வேண்டும் என்பதாகும். நாம் நினைவில் கொள்ள வேண்டியது: இது நித்திய வாழ்வைச் சுதந்தரிக்க நாம் செய்ய வேண்டிய காரியங்களில் ஒன்று ஆகும். 

பயன்பாடு: ஆண்டவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிற பல கிறிஸ்தவர்கள் உண்டு. ஆயினும், மற்றவர்களை நேசிப்பதில், உதவுவதில், அதே ஆர்வத்தை அவர்களில் பலர் காண்பிப்பதில்லை. அதற்கு  தனிப்பட்ட காரணங்கள் ஏதெனும் உடையவர்களாக அவர்கள் இருக்கக் கூடும். அது என்னவாக இருந்தாலும் சரி, இயேசு நல்ல சமாரியனாக இருக்கிறார். நல்ல சமாரியன் கதையின் செய்தி என்னவெனில், தேவை உள்ளவர்களுக்கு நான் ஒரு நல்ல சமாரியனாக இருக்க வேண்டும் என்பதே. எந்தவொரு பாகுபாடும், பிரிவினையும் இல்லாமல், என்னை நான் நேசிப்பது போல, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். மதம், இனம், சாதி, பாலினம், மற்றும் நிறம் ஆகிய எதையும் பொருட்படுத்தாமல், அனைவரிடமும் நான் தேவ அன்பைக் காட்ட வேண்டும். என்னைத் தவிர, அனைவரும் எனக்கு பிறன் ஆவர்.  

ஜெபம்:  இயேசுவே, என் பிறன் யார் என்பதையும், நான் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள உதவுவதற்காக உமக்கு நன்றி. எனக்கு அயலாராக (அ) பிறராக இருப்பவர்களிடம் கிறிஸ்தவ அன்பைக் காண்பிக்க எனக்கு அருள் செய்தருளும். ஆமென். 

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

"Who is my neighbor?"

READ: Judges 5,6; Psalm 108; Luke 10:25-42

SCRIPTURE: Luke 10: 29 But he (an expert in the law) wanted to justify himself, so he asked Jesus, “And who is my neighbor?”

OBSERVATION: Here we see the underlying question that Jesus answered through the parable of the good Samaritan. The expert of the law knew about who his God was. But as a Jew, he may had struggles to understand the term "neighbor." Since the word "neighbor" does not point out to a particular person, people may think it as an ambiguous word. In those days, even within the Jewish community there were divisions and infights based on their beliefs. So, loving a fellow Jew itself had a lot of connotations. 

In this context, Jesus helped an expert in the law in a simple but powerful way to understand "who might be a neighbor?", through the parable of the good Samaritan. The man who was severely beaten by the robbers most likely a Jew, as he was travelling from Jerusalem to Jericho. However, a priest and a Levite who had high reputation among the Jews were not willing to help him. Instead of helping the man, they simply "passed by on the other side." But, a Samaritan - he who was from a community that Jews hated and considered as low - showed mercy to the wounded man. His act of kindness went beyond the social norms of the day. Jesus conveyed a clear message that helped the expert of the law to understand the answer for his question. 

The important thing here is not about understanding "who might be our neighbor."  Rather, we need to show kindness to our neighbor, like the good Samaritan. Let us remember: this is something  that we must do to inherit eternal life.

APPLICATION: Many Christians are ready to do anything for the Lord. However, many of them do not show a similar enthusiasm in loving and helping others. They may have their own reasons for that. Whatsoever,  Jesus is the good Samaritan. The message of the  good Samaritan story is, I should be a good Samaritan to the people who are in need. Without any partiality and discrimination, I need to show love to others, just as I love myself. Irrespective of religion, race, caste, gender, and color, I should show the love of God to all people. Other than me, all others are my neighbors. 

PRAYER: Jesus, thank you for helping me to understand who my neighbor is and what I should do to him/her. Help me to show Christly love to  my neighbors. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Saturday, April 17, 2021

ASK & GO

READ: Judges 3,4; Psalm 107; Luke 10:1-24

SCRIPTURE:  Luke 10:1 After this the Lord appointed seventy-two others and sent them two by two ahead of him to every town and place where he was about to go.
 2 He told them, “The harvest is plentiful, but the workers are few. Ask the Lord of the harvest, therefore, to send out workers into his harvest field.
3 Go! I am sending you out like lambs among wolves.

OBSERVATION: Jesus' sending of seventy two with a clear instruction is exclusively recorded in the Gospel of Luke. In the previous chapter, we read that Jesus sent his twelve disciples with the similar instruction (Lk.9:1,2). When Jesus sent his disciples two by two, he restricted them to go only to the lost sheep of Israel (Mt.10:5, 6).   Here, these seventy two people had no such restrictions. They can go wherever Jesus wanted them to go. The main thing here is the emphasis on the need of more workers to go to the harvest field. So, Jesus told them to pray that the Lord of harvest may send more workers for his harvest. Finally, Jesus sent them to be the workers for the harvest.  Even today, we see the same need in the Christian mission fields. Because, this harvest is not a seasonal one. We can see it throughout a year and throughout the world. However, "the harvest is plentiful, but the workers are few." We need to realize the need of the Kingdom of God, and should pray for it. If the Lord wants  to send us to the harvest field, we should be prepared to GO without saying any excuses. This harvest field could be the area we presently live in, or a near by place, or it may be a place a far. Whatever it may be, we need to ask the Lord to send more workers, and we should be ready to do our part in it.

APPLICATION: I need to realize that there is a need for more workers to collect the harvest. Jesus wants me to pray to the Lord of the harvest to send more workers. Praying for Christian  missions, praying for the souls to be saved and to be gathered in the Church are important things to me. When I pray for the harvest, I should be ready to do what the Lord asks me, instead of finding easy alternatives. When I obey, I will see great things in and through my life. 

 PRAYER: Father, thank you for turning my attention to pray for the harvest. Lord, I realize that we need more workers for the harvest of souls. I pray for more Christian workers to go and share the Gospel to the unreached people groups. Lord, help me to understand what is my role in it. In Jesus name, I pray. Amen.


- Arputharaj Samuel
+91 9538328573