Thursday, April 22, 2021

காலத்தை நிதானித்து அறிய ஒரு அழைப்பு

 வாசிக்க:  நியாயாதிபதிகள் 13,14; சங்கீதம் 112; லூக்கா 12: 35-59

வேதவசனம்: லூக்கா 12: 54. பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.
55. தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
56. மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?

கவனித்தல்: பரிசேயர்கள், சதுசேயர்கள், வேதபாரகர்கள் மற்றும் அனேகர் இயேசுவிடம் ஒரு அடையாளம் காட்டும்படி அடிக்கடிக் கேட்டனர். அவர்கள் இயேசுவின் அற்புதங்கள், போதனைகள் மற்றும் வாழ்க்கையைப் பார்த்தாலும் கூட, அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்களாக இருந்தபடியால் ஒரு அடையாளம் வேண்டும் எனக் கேட்டனர். இங்கே, அவர்கள் ”இந்த காலத்தை” நிதானித்தறிய தவறியதைப் பற்றி இயேசு கேள்வி கேட்கிறார். அவர்கள் வானம் மற்றும் பூமியின் தோற்றத்தை வைத்து நிதானித்து அறிவதில் வல்லவர்களாக இருந்த போதிலும் , தங்கள் ஆன்மீக வாழ்க்கையில் உள்ள பிரச்சனையைப் பற்றி புரிந்துகொள்ள தயாராக இல்லை. தங்கள் மதத் தலைவர்களின் இருந்த குறைகளைக் கண்டும் காணாதவர்கள் போல இருந்தனர். தேவனுடைய வார்த்தையைக் காட்டிலும் அதிகமாக தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கத்தைப் பற்றி கவலைப்பட்டனர். மேசியா குறித்து அனைத்து தீர்க்கதரிசிகளும் கொடுத்த அடையாளங்களை கவனிக்காமல் விட்டுவிட்டனர். மாறாக, அவர்கள் மேகத்தையும் காற்றையும் குறித்து வியாக்கியானம் செய்து கொண்டிருந்தனர். ஆகவே, இயேசு அவர்களை மாய்மாலக்காரர்கள் என்று அழைத்தார். 

இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களைக் காண ஆபிரகாம் உடபட அனேக தீர்க்கதரிசிகள் வாஞ்சையாய் இருந்தனர். ஆனால், இயேசுவையும் அவருடைய ஊழியத்தையும் நேரடியாகக் கண்ட பின்னும் இந்த ஜனங்கள் அவரை வாக்குபண்ணப்பட்ட மேசியாவாக காண விருப்பம் இல்லாதிருந்தார்கள். இங்கே குறிப்பிடப்படுகிற “இந்தக் காலம்” என்பது மனித வரலாற்றில் ஒரு தனித்துவமான காலமானதாகவும், அனேக தீர்க்கதரிசினங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு காலம் ஆகும். இந்தக் காலத்தின் ஆன்மீக பிரச்சனை என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் தேவனுக்குப் பிரியமான சரியான காரியத்தைச் செய்யவும், இக்காலத்தை நிதானித்து அறிவது முக்கியமானது ஆகும். 

பயன்பாடு: தொழில்நுட்ப வசதிகள் பெருகிய நவீன உலகில், பருவ காலங்களை விளக்குதல், சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின் எதிர்காலம் பற்றி கணித்தல் ஆகியவை மனிதனுக்கு உதவிகரமாக இருக்கிற தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளினால் மிகவும் சுலபமானதாக இருக்கிறது. ஆயினும், எந்த ஒரு சூழ்நிலையிலும், அது ஆவிக்குரியதாக இருந்தாலும் சரி அல்லது உலகப்பிரகாரமானதாக இருந்தாலும் சரி, அந்தக் காலத்தில் இருக்கிற பிரச்சனைகளைக் கையாள காலத்தைப் புரிந்து கொள்ளுதல் மிக முக்கியமானதாகும். நான் அதைக் கண்டும் காணாமல் இருந்து புறக்கணித்து நிராகரிக்கக் கூடாது. நான் இந்தக் காலத்தை நிதானித்து அறியும்போது, இயேசுவை நான் காண்பேன். இப்படிப்பட்ட ஒரு காலத்தில், எனக்கு தகுதியற்ற விசயங்களில் என் நேரத்தையும் சக்தியையும் செலவிடக்கூடாது. மாறாக, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என தேவன் விரும்புகிறார் என்பதை நிதானித்தறிய என் கவனத்தைச் செலுத்த வேண்டும். அது மிகச் சிறிய ஒரு காரியமாக இருக்கலாம். ஆனால், அது இந்தக் காலத்திற்கு தேவையானதும், பொருத்தமானதாகவும் இருக்கும். இக்காலத்தில் தேவனுக்காக நான் எதையாவது செய்வது என்பது ஒரு ஆசீர்வாதமான பொறுப்பு ஆகும்.

ஜெபம்: இயேசுவே, உலகின் நடப்புகாலத்தை நிதானித்து அறிய நீர் கொடுக்கிற எச்சரிக்கைக்காக உமக்கு நன்றி. இன்றைய ஆன்மீக மற்றும் சமூகப் பிரச்சனைகளிப் புரிந்துகொள்ள எனக்கு உதவும். ஆண்டவரே, என் வாழ்வில் உம் சித்தத்தைச் செய்ய எனக்கு உம் பலத்தைத் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: